Friday, 5 December 2014

பெருந்தலைவர் - படிக்காத மேதை

பெருந்தலைவர் படிக்காத மேதை என ஏன் அழைக்கப்பட்டார்? அதற்கு பல உதாரணங்கள் உண்டு. அவற்றில் இரண்டு இதோ:




முதல் சம்பவம்

இந்தியா? இலங்கை ஒப்பந்தத்தில் கையொப்ப மிட்ட பின்பு பிரதமர் லால்பகதூர் சாஸ்திரி சென்னை திரும்பினார். கவர்னர் மாளிகையில் அவரைப் பத்திரிக்கையாளர்கள் சந்தித்தனர். அகில இந்திய காங்கிரஸ் தலைவர் காமராசர்
சாஸ்திரியின் பக்கத்தில் அமர்ந்திருந்தார். இப்போது நீங்கள் இலங்கையுடன் செய்துள்ள ஒப்பந்தத்தை அடுத்து வரும் அரசியல் கட்சி ஏற்றுக்கொள்ளுமா? என ஒரு நிருபர் கேட்ட போது சாஸ்திரி என்ன பதில் சொல்வதென்று தயங்கினார்

உடனே காமராசர்...

"Don't go and print any such suggestions
In the paper this is an agreement signed
By two democratic governments just
As any democratic government in india
Would honor this agreement we expect any successor government in ceylon to honour this agreement என்றார்

இந்த பதிலை கேட்ட சாஸ்திரி
I agree with Kamaraj என்றார்

தன்னைப் படிக்காத பாமரர் என்றும் ஆங்கிலம் அறியாதவர் என்றும் தொடர்ந்து மேடைகளில் எதிர்கட்சிகாரர்கள் ஏளனம் செய்த போது ஒரு நாள் கூட தனக்கு ஆங்கிலம் தெரியும் என்று சொன்னதே இல்லை.

அடுத்த சம்பவம்
அப்போதைய ரயில்வே அமைச்சர் அனுமந்தப்பாவும், காமராசரும் எஸ்.கே.பாட்டீல் ஏற்பாடு செய்த தேநீர் விருந்தில் கலந்து கொண்டனர்

அப்போது அனுமந்தப்பா காமராசரை சோதித்து பார்க நினைத்திருப்பாரோ என்னவோ தலைவரிடம்
 இவ்வாறாக ஒரு கேள்வி கேட்டார் அவர்கள் உரையாடல்


அனுமந்தப்பா: Mr.kamaraj now a days India unemployment problem is very acute
As a president of the ruling party have you got any
Idea of solving the unemployment problem..?

பெருந்தலைவர்: Very easy...!

அனு: How...?

பெருந்தலைவர்: We must arramge to form a road from kashmir to kanyakumari
Touching all the states by which every inner part of qur country
Will be able to transport their products to other needy
Places when the trade increases employment
Opportunity will also be increased..!

பதிலை கேட்ட அனுமந்தப்பா காமராசரின் கைகளை பிடித்துக்கொண்டு மகிழ்சிப்பரவசத்தொடு

Mr.kamaraj...! You must be the prime minister and i must be your P.A என்றார்.
அதற்கு தலைவரோ


No...no..it is nothing but your magnanimity என்றார்

பக்கத்தில் இருந்த தமிழக MP களிடம் அனுமந்தப்பா
Kamaraj is the pride of tamil nadu. Our education is nothing before his practical experience...! என்றாராம்!!

இன்றைய NATIONAL HIGH-WAYகாமராசரின் கனவு திட்டம் தான்

தலைவர் GREAT தானே..!!!

நாட்டு பசுமாடும்,சல்லிக்கட்டும் உலக அரசியலும் :




நாட்டு பசுமாடும்,சல்லிக்கட்டும் உலக அரசியலும் :

செயற்கை ஹார்மோன்

இந்த பதிவு சற்றே பெரிதாக இருக்கும், ஆனால் இதன் முடிவில் தமிழர்கள் சந்திக்கப்போகும் பேராபத்தினை நிச்சயம் உணர்வீகள். ஆகையால் சிறிது நேரம் ஒதுக்கி கண்டிப்பாக படிக்கவும். நாம் அன்றாடம் பயன்படுத்தும் அடிப்படை உணவான பால் இரண்டு வகைப்படும் (2 types of protein); இவை A1 மற்றும் A2 என்று வகையருக்கப்படுகிறது. உலகிலுள்ள அனைத்து பாலூட்டிகளும் இயற்கையாக A2 வகை பாலையே சுரக்கின்றன. மனிதனின் தாய்பாலும் இந்த A2 வகை பால் தான். இயற்கையாக A2 வகை பாலை தான் மனிதர்களால் செரிக்க இயலும். ஆகவே நம் முன்னோர்கள் இதே வகை பாலை சுரக்கும் நமது பசுவினங்களின் பாலை நம் குழந்தைகளுக்கு கொடுக்க ஆரம்பித்தனர். ஆனால் பால் வியாபாரம் வர்த்தக மயமாக்கப்பட்டதற்கு பிறகு ஐரோபாவில் அதிகமாக பால் கறக்கும் மாடுகளை மட்டுமே தேர்வு செய்து அவற்றை மட்டுமே இனப் பெருக்கம் செய்ய அனுமதித்தனர் (selective breeding); இவ்வாறு செய்தமையால் இவ்வகை மாடுகளில் மரபணு மாற்றம் ஏற்ப்பட்டது(mutation). இதன் விளைவாக A1 என்ற பால் வகை உருவானது. சுவையற்ற இப்பால் உடலுக்கு தீங்கு செய்யக்கூடியது. சக்கரை நோய், புற்றுநோய் போன்ற நோய்கள் வருவதற்கு இந்த A1 வகை பாலும் ஒரு முக்கிய காரணமாகும். குழந்தைகளுக்கு இந்த A1 வகை பாலை செரிக்கும் ஆற்றல் இல்லை. இப்பால் நோய் எதிர்ப்பு சக்தியை வலுவிழக்க செய்யும்.
சரி, இது இந்த அளவுக்கு மட்டுமே தீங்கு விளைவிக்க கூடியது என்று நினைத்தால், இப்பாலை உற்பத்தி செய்யும்முறை இதைவிட கொடூரமான தீங்குகளை ஏற்ப்படுதக்கூடியது. அதாவது ஒரு மாடு பால் சுரக்க வேண்டுமென்றால் அது கன்று ஈன்று இருக்க வேண்டும். அந்த கன்றைப் பார்க்கும்போது தாய்மாட்டுக்கு இயக்குநீர்(hormone) சுரந்து அது பாலை சுரக்க தூண்டும். ஆனால் இது பல மாடுகள் இருக்கும் பண்ணையில் சாத்தியமில்லை. ஆகையால் மாட்டுப் பண்ணையாளர்கள் செயற்கையாக இயக்குநீர்களை மாட்டின் உடம்பில் ஊசியின் மூலமாக செலுத்தி பால் சுரக்க வைக்கின்றனர். 

பின்விளைவுகளும் ஆபத்துகளும்
இவ்வாறு செய்வதால் மாட்டின் பாலிலும் இந்த இயக்குநீர்களின்(hormone) அளவு அதிகமாக இருக்கிறது. இந்த இயக்குநீரின் பெயர் ஈத்திரோசன் (Estrogen). இது பெண்ணிய இயல்பை தூண்டும் இயக்குநீராகும். இந்த ஈத்திரோசன் (Estrogen) கலந்த A1 பாலை உண்ணும் பெண் குழந்தைகள் சிறு வயதிலேயே பூப்படைகிறார்கள், மற்றும் தமிழர்கள் போற்றிக் காக்கும் கற்ப்பொழுக்கத்தையும் கெடுக்கும் விதமாக பிற பாலின ஈர்ப்பு தூண்டலை இயல்பு நிலையிலிருந்து அதிகப்படுத்தும்; அதுமட்டுமின்றி ஆண் குழந்தைகளுக்கு சோம்பேரித்தனத்தையும், பாலின சம நிலை மாற்றத்தையும் (திருநங்கைகளாக மாறுதல்) ஏற்ப்படுத்தும். இது ஒரு சமுதாய பிரச்சனையே தூண்டிவிடும் அளவிற்கு கொடியது.
தமிழகத்திலுள்ள அனைத்து நாட்டு மாட்டினங்களும் A2 பாலை சுரக்கக்கூடியது. இவைகள் பாலை கம்மியாக சுரந்தாலும் அது உடலுக்கு எந்த வித தீங்கையும் உண்டாக்குவதில்லை. மனிதர்களுக்கு உகந்த பாலும் இந்த A2 பாலே. சரி, சல்லிக்கட்டுக்கும் உலக அரசியலுக்கும் என்ன தொடர்பு என்று கேட்க்கிறீர்களா? கொஞ்சம் மூச்சை இழுத்துப் பிடித்துக் கொள்ளுங்கள்! தமிழகத்திலுள்ள நாட்டு மாட்டினங்களின் சாணத்தில் இருந்து பெறப்படும் பொருட்களின் மூலத்திலிருந்தே இயற்க்கை விவசாயம் (natural farming) செய்ய பயன்படும் பூச்சுக்கொல்லி, உரம், பஞ்சகாவியா, போன்ற விவசாயத்திற்கு தேவையான பொருட்கள் செய்ய முடியும். இது சர்சி(jersey) வகை மாடுகளின் சாணத்திலிருந்து செய்தாலும் பயன்தராது. ஆகவே மோன்சண்டோ (Monsanto) போன்ற பெரிய நிறுவனங்கள் இயற்க்கை விவசாயத்தை செய்ய உதவும் மாட்டினங்ககளை அழிப்பதற்காக இந்தியா முழுவதும் வெண்மை புரட்சி என்ற திட்டத்தை செயல்படுத்தி கிராம கிராமங்களாக சென்று சர்சி(jersey) மாடுகளை வினியோகித்தனர். இது படிப்படியாக இந்தியா முழுவதும் இருந்த நாட்டு மாடுகளை அழித்தே விட்டது. நமது கிராம மக்களுக்கு கூட நாட்டு மாட்டுக்கும் சர்சி மாட்டுக்கும் வித்யாசம் தெரியாமல் போய்விட்டது. 

சல்லிக்கட்டு (ஏறு தழுவுதல்)
ஆனால் தமிழகத்தில் மட்டும் ஏறு தழுவுதல் (சல்லிக்கட்டு) என்ற வீர விளையாட்டு இருந்தமையால் நமது ஆண் மாடுகள் காப்பாற்றப் பட்டு வந்தது. ஆண் மாடுகள் தூய்மையாக இருக்க வேண்டும் என்பதற்காகவே பெண் மாடுகள் சேர்ந்தே காப்பாற்றப்பட்டு வந்தது. இது ஆரம்பத்தில் மோன்சண்டோ போன்ற பெரிய நிறுவனங்களுக்கு ஒரு தடையாக இல்லை. ஆனால் தற்போது தமிழகத்தில் வரும் இயற்க்கை வேளாண்மை சார்ந்த விழிப்புணர்வு அவர்களை கதிகலங்க செய்துவிட்டது. இந்தியா முழுவதும் காணாமல் போன நாட்டு மாடுகள் தமிழகத்தில் மட்டும் மிஞ்சி இருப்பது எப்படி என்று அவர்கள் தேடியபோதுதான் தமிழகத்தில் மட்டுமே உள்ள தமிழர்களின் வீர விளையாட்டான சல்லிக்கட்டு (ஏறு தழுவுதல்) நாட்டு மாட்டினங்களை வளர்ப்பதை ஒரு கடமையாகவே கொண்டுள்ளனர் என்பது புலப்பட்டது. இதை எப்படியாவது முடக்க வேண்டும் என்பதற்காக தான் சல்லிகட்டிற்கு தடை செய்ய முயற்சி செய்கின்றனர்.
தமிழர்களே! ஏறு தழுவுதல் என்பது நமது இனத்தின் இறையாண்மை சார்ந்தது. இது கிட்டத்தட்ட ஒரு மதம் போன்றது. ஏனெனில் மாட்டை பிடிக்கும் வீரர்கள் விரதமிருந்து அம்மாட்டினை பிடிக்கிறார்கள். ஆகவே இது ஒரு சமயம் சார்ந்த நம்பிக்கையாகவே நம் மக்களால் கருதப்படுகிறது. இதை மாற்றும் அதிகாரம் இந்தியாவிற்கே இல்லை. ஆகவே, நமது அடையாளமான எதையும் இனி இழக்க வேண்டாம். அறிவுசார் தளத்தில் ஒன்றாக நின்று நம்மினத்தை காப்போம்.
எங்கள் அமைப்பில் உங்களுக்கு செயல்பட விருப்பமென்றால் 9677913233 என்ற அலைபேசி எண்ணை அழைக்கவும்.
“தொடர்புக்கு:
பாரிசாலம்
தமிழர் உலகம்
9677913233
நன்றி: Yusuf Pt     அண்ணாச்சி

பெருந்தலைவர் படிக்காத மேதையா?

காமராஜருடன் ஒரு நாள்:மறைந்த எழுத்தாளர் சாவி


, "காமராஜருடன் ஒரு நாள்' கட்டுரையில் எழுதுகிறார்.இரண்டு மாதங்களுக்கு முன், காமராஜரை டில்லியில் சந்தித்தேன். அப்போது, முதல்வர் பதவியில் இருந்து விலகிவிட்ட வெறும் காமராஜராகவே வந்திருந்தார்.மெட்ராஸ் ஹவுசில் ரிசப்ஷன் ஆபீசர் தீனதயாளிடம் பேசியபோது, "இங்கே அவர் எல்லா வேலைகளையும் முடித்துக்கொண்டு, படுக்கப்போவதற்கு, மணி 12 ஆகிவிடும். அதற்கு மேல் அரை மணி, முக்கால் மணி நேரம் புத்தகம் படிப்பார். எவ்வளவு நேரமானாலும் படிக்காமல் மட்டும் உறங்குவதில்லை' என்றார்.


அவை என்ன புத்தகங்கள் என்பதை, எப்படியாவது தெரிந்துகொண்டு விடவேண்டுமென்ற ஆவல் அதிகரித்தது. மறுநாள் காலை, காமராஜர் அறைக்குள் எட்டிப் பார்த்தேன். சோபாவில் சப்பணமிட்டு உட்கார்ந்து, பத்திரிகை படித்துக் கொண்டிருந்தார்.மேஜை மீது அன்றைய ஹிந்து, டைம்ஸ் ஆப் இந்தியா, இந்துஸ்தான் டைம்ஸ், இண்டியன் எக்ஸ்பிரஸ் - இவ்வளவு பத்திரிகைகளும் அடுக்கி வைக்கப்பட்டிருந்தன. "தங்களை, கூடவே இருந்து கவனிக்கப்போகிறேன். இது என்னுடைய நெடுநாளைய ஆசை' என்றேன்."ஓ! தாராளமாக இருங்களேன். இப்படி வந்து உட்காருங்க...' என்று கூறிவிட்டு, பெட்டியிலிருந்த சலவைத் துணிகளை ஒவ்வொன்றாக எடுத்து கீழே வைத்தார். அந்தப் பெட்டிக்குள் என்னென்ன இருக்கின்றன என்பதைத் தெரிந்து கொள்ளும் ஆவலில் கூர்ந்து கவனித்தேன்.


ஜான் கூன்தர் எழுதிய, "இன்சைடு ஆப்ரிக்கா,' ஆல்டவுஸ் ஹக்ஸ்லி எழுதிய, "எண்ட்ஸ் அண்டு மீன்ஸ்,' டைம் மேகசின், நியூஸ் வீக், வி.ச.காண்டேகரின், "சிந்தனைச் செல்வம்' ஆகிய புத்தகங்கள் இருந்தன. தமது சட்டையைக் கழற்றி ஒழுங்காக மடித்து, அதற்குரிய இடத்தில் கொண்டு போய் வைத்தார்."ஒரு நாளைக்கு எத்தனை சட்டை மாற்றிக் கொள்வீர்கள்?'"இரண்டு மூன்று முறை குளிக்க வேண்டும். ஒவ்வொரு முறை குளித்து முடித்ததும், சலவை சட்டை போட்டுக்கொள்ள வேண்டும்' என்றார்."குளிர் காலத்தில் டில்லியிலிருக்கும்போது கம்பளி சட்டை, கோட்டு ஏதாவது போட்டுக் கொள்வதுண்டா?'"அதெல்லாம் ஒன்றும் கிடையாது. இப்போதுள்ளபடி தான். எப்பவாவது தேவையானால், சால்வை போட்டுக்கொள்வேன்!'"



தினமும் நூற்றுக்கணக்கான பேர் தங்களைத் தேடி வந்து காத்திருக்கிறார்களே... அவர்களெல்லாம் தங்களிடம் என்ன கேட்பர்?'"சிபாரிசுக்கு வருவாங்க. ஏழை, எளிய மக்கள் கேட்கிற உதவிகளெல்லாம் சுலபமாக செய்யக் கூடியதாயிருக்கும். முடிந்ததை நானும் செய்துவிடுவேன். படிச்சவங்க வந்து கேட்கிற காரியங்களில் தான் சிக்கலெல்லாம் இருக்கும். அவங்களே வக்கீலிடம் கேட்டுக்கொண்டு வந்து, இப்படிச் செய்யலாமே என்று எனக்கு ஆலோசனை சொல்வாங்க... நான், "ஆகட்டும், பார்க்கலாம்' என்பேன்."யாராவது ஒரு பையன் ஸ்கூல் அட்மிஷனுக்கு வருவான். மார்க் கொஞ்சமாக வாங்கியிருப்பான். "நீ வாங்கியிருக்கும் மார்க்கை விட குறைந்த மார்க் வாங்கியுள்ள பையன் யாருக்காவது, "அட்மிஷன்' கொடுத்திருந்தால் சொல்' என்பேன். அப்படி இருக்காது, ஒருவேளை யாருக்காவது அம்மாதிரி அட்மிஷன் கொடுத்திருந்தால் அவனிடம், "ஆமாம். நீ சொன்னது உண்மை தான்' என்று ஒப்புக்கொள்வேன். அவன் அதிலேயே திருப்பதி அடைந்து போய்விடுவான்!'- ஆனந்த விகடன் 1963.

Wednesday, 3 December 2014

பெருந்தலைவர் காமராஜர் வாழ்ந்த வீடு

விருதுநகரின் மைய பகுதியில் மிகவும் நெருக்கடி மிகுந்த இடத்தில் அமைந்துள்ளது காமராஜர் நினைவு இல்லம் . காமராஜரின் மறைவுக்கு பின்
இது நினைவு இல்லமாக அரசாங்கத்தால் மாற்றப்பட்டது. காமராஜரின் தாத்தா காலத்து வீடு இது. காமராஜர் இங்கு தான் பிறந்தார் என்று ஒரு
அறையை இங்கு காணலாம். ஆனால் காமராஜர் பிறந்தது இந்த வீட்டில் அல்ல , இரண்டு தெரு தள்ளி இருக்கும் மற்றொரு வீட்டில். அது
இப்போது யாருக்கோ சொந்தம். வரலாற்றில் ஒரு சின்ன பிழை. காமராஜர் சிறுவயது முதல் வாழ்ந்தது இந்த வீட்டில் தான். அவருடைய
வாழ்கையில் இந்த வீடு ஒரு முக்கிய இடம் பெற்று இருக்கிறது.
இந்த வீட்டில் கால் பதிக்கும் போது அவர் வாழ்ந்த வீட்டில் நாம் இப்போது
இருக்கிறோம் என்ற உணர்வு நம்மை மெய் சிலிர்க்க வைக்கும்.


 விருதுநகருக்குள் நுழையும் போதே பெரிய வழிகாட்டி போர்டு வைத்துள்ளனர்
ஆனால் காரில் உள்ளே செல்ல முடியாது. ஆட்டோ தான் சரி. வீட்டின் முன் சிறு கோயில் ஒன்று உள்ளது, கீழ் தளத்தில் ஒரு ஹால் , பெரிய சமையலறை, மற்றும் ஒரு ரூம், மாடிக்கு செல்ல பாதை ஹாலில் இருந்து செல்கிறது , கீழ் தளம் முழுவதும் டைல்ஸ் பதித்து , வூட் பாலீஸ் செயப்பட்டு இருப்பதால் அதன் பழமை முற்றிலும் அழிக்கப்பட்டு இருக்கிறது. மேல் தளத்தில் ஓரளவு பழமை மிஞ்சி இருக்கிறது.


மேல் தளத்தில் பெரிய ரூம் ஒன்று இருக்கிறது, கொஞ்சம் open space இருக்கிறது. காமராஜர் படித்த புத்தகங்கள் அங்கே காட்சிக்கு உள்ளன. பாதிக்கு மேல் ஆங்கில புத்தகங்கள். அவருடைய கதர் உடை மற்றும் ரசியா பயணத்துக்கு தைக்கப்பட்டு காமராஜர் போடாமல் ஒதுக்கிய கோட் சுட் ஒன்றும் உள்ளது. அவருடைய மின்சார அடுப்பு, பயபடுத்திய சமையல் பத்திரங்கள் கூட காட்சிக்கு உள்ளன. அவர் பயன்படுத்திய முகசவரம் செட் ஒன்றும் காட்சிக்கு உள்ளது.



ஹாலில் காமராஜர் மார்பளவு சிலை ஒன்று உள்ளது. இந்த வீட்டை காமராஜர் போட்டோ gallery என்றே சொல்ல வேண்டும் அவ்வளவு அரிய புகைப்படங்கள் காட்சிக்கு உள்ளன.


இந்த வீட்டில் யார் யார் வாழ்ந்தார்கள் என்ற விபரம்.

காமராஜருடைய தாயார் சிவகாமி அம்மாள் ,காமராஜரின் பாட்டி , காமராஜரின் தங்கை நாகம்மாள். நாகம்மாளுக்கு இரண்டு பெண் மற்றும் இரண்டு ஆண் பிள்ளைகள். சிறுவயதிலேயே விதவை ஆகி விட்டதால் நாகம்மாள் தாய் வீட்டில்


தான் வாழ்ந்தார். அவர் பிள்ளைகளை வளர்த்தது காமராஜர் தான்.
நாகம்மாளின் இரண்டு ஆண் பிள்ளைகளுக்கும் திருமணம் ஆகி பிள்ளைகள் பிறந்ததும் இந்த வீட்டில் தான். விருதுநகர் வழியே வந்தால்
கண்டிப்பாக இந்த நினைவு இல்லத்தை கண்டு செல்லுங்கள். படம் எடுக்க அனுமதி கிடையாது . கேமரா கொண்டு வந்தாலும் பலன் இல்லை.

பாடம் கற்றுக் கொள்ள மறுக்கும் மூடர்கள் - போபால் விசவாயுக் கசிவு

மனிதன் விளைத்த பேரழிவு
டிசம்பர் 2, 1984. நள்ளிரவு. கடுங்குளிர். நாய்கள் ஓலமிடுகின்றன. ஊர் பாதித் தூக்கத்தில் எழுகிறது. மூச்சுத் திணறுகிறது. காற்றுக்காகக் கதவைத் திறந்து வெளியே வருபவர்கள் காற்றில் எரிச்சலை உணர்கிறார்கள். இன்னதென்று யோசிக்கும் முன் ‘யூனியன் கார்பைடு’ தொழிற்சாலையிலிருந்து அபாயச் சங்கு ஒலிக்கிறது. ஓடுகிறார்கள். சரிகிறார்கள். சாகிறார்கள். விடிந்தபோது வீதியெங்கும் மனிதப் பிணங்களின் எண்ணிக்கைக்கு இணையாக கால்நடைகள், பறவைகளின் உடல்கள். அன்று தொடங்கி போபால் மக்கள் போராடுகிறார்கள். கிட்டத்தட்ட 20 ஆயிரம் பேர் செத்திருக்கிறார்கள். 10 லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். பிறக்கும் ஒவ்வொரு 25-வது குழந்தையும் குறைபாடுடைய குழந்தையாகப் பிறக்கிறது. ஆலையைச் சுற்றியுள்ள 3 கி.மீ. பரப்பளவுக்கு நிலத்தடி நீர் நஞ்சாகியிருக்கிறது. இன்னமும் ‘யூனியன் கார்பைடு’ விட்டுச்சென்ற 350 டன் நச்சுக் கழிவு அகற்றப்படவில்லை.

ஆரம்பமே மர்மம்
*இந்தியாவில் தொழில் தொடங்க உரிமம் கோரி, யூனியன் கார்பைடு நிறுவனம் 1.1.1970-ல் விண்ணப்பித்தது. நீண்ட நாட்களாகக் கிடப்பில் போடப்பட்டிருந்த அந்த விண்ணப்பத்தின் மீது 31.10.1975-ல் திடீரென முடிவெடுக்கப்பட்டு ஒப்புதல் தரப்பட்டது. நெருக்கடி நிலை அறிவிப்பு அமலில் இருந்த காலம் அது.
*போபால் ‘யூனியன் கார்பைடு’ ஆலை மிக அபாயகரமான ரசாயனங்களைக் கையாள்வது அன்றைக்குப் பெரும்பான்மை மக்களுக்குத் தெரிந்திருக்கவில்லை. கொள்கலன் வெடித்து விஷ வாயு கசிந்தால், எப்படி எதிர்கொள்வது என்பது அங்குள்ள மருத்துவர்களுக்குக்கூடச் சொல்லப்பட்டிருக்கவில்லை.

2ஜி பத்தி மன்மோகனுக்கு தெரியாது-போபால் பத்தி ராஜீவுக்கு தெரியாது - காங்கிரஸ்
*சம்பவம் முடிந்து நான்காவது நாள் ‘யூனியன் கார்பைடு’ நிறுவனத் தலைவர் வாரன் ஆண்டர்சன் போபால் வந்தார். மத்தியப் பிரதேச அரசு அவரையும் அவருடைய இந்திய சகாக்களையும் கைதுசெய்தது. அவருடைய ஆலையின் விருந்தினர் மாளிகையிலேயே அவர் தங்கவைக்கப்பட்டார். அடுத்த சில மணிநேரங்களில் ஆண்டர்சனை விடுவித்தார் முதல்வர் அர்ஜுன் சிங். அரசு விமானத்திலேயே டெல்லிக்கு அனுப்பி, அங்கிருந்து அமெரிக்கா செல்ல வழிவகுத்தார். அன்றைய தினம் மத்தியப் பிரதேசத்தில்தான் சாகர் என்ற ஊரில் இருந்தார் வெளியுறவுத் துறையைத் தன்வசம் வைத்திருந்த பிரதமர் ராஜீவ் காந்தி. ஆனால், ஆண்டர்சன் விவகாரம் அவருக்குத் தெரியாது எனச் சாதித்தனர் காங்கிரஸ் தலைவர்கள். இது தொடர்பான பதிவுகளே வெளியுறவுத் துறையிடம் இல்லை என்று பின்னாளில் அறிவித்தது அரசு.

அடுத்த நூற்றாண்டில்தான் தீர்ப்பு
*அமெரிக்க நீதிமன்றங்களை நாட ஆரம்பித்தார்கள் போபால் மக்கள். அமெரிக்காவில் இந்த வழக்கை நடத்தினால், பெரும் தொகையை இழப்பீடாகத் தர வேண்டியிருக்கும்; இந்தியாவிலேயே வைத்து முடித்துவிடலாம் என்று ‘யூனியன் கார்பைடு’ நிறுவனத்துக்கு ஆலோசனை சொன்னவர்கள் இந்தியாவின் புகழ்பெற்ற வழக்கறிஞர்கள். பல ஊடகங்களும் விலைபோயின. ஆலை நிர்வாகத்தின் அலட்சியத்தால் நடந்த இந்தச் சம்பவத்தை, தொழிலாளர்களின் சதியால் நடந்தது என்றெல்லாம்கூட எழுதின.



நிறுவனத்துக்குச் சட்ட ஆலோசனை வழங்கியவர்கள் காங்கிரஸ் செய்தித் தொடர்பாளரான அபிஷேக் மனு சிங்வி, பாஜகவின் இன்றைய நிதி அமைச்சர் அருண் ஜேட்லி 
இந்தியாவில் வழக்கு விசாரணை நடக்க ஆரம்பித்த பின், முதலில் இழப்பீடாக 300 கோடி டாலர்களைக் கேட்ட இந்திய அரசு, ஒருகட்டத்தில் அமெரிக்க நெருக்கடிக்கு உடன்பட்டு, 47 கோடி டாலர்களுக்குச் சம்மதித்தது. இதையும் பெற மக்கள் 20 ஆண்டுகள் போராட வேண்டியிருந்தது. உச்ச நீதிமன்றம் இறுதிக் கெடு விதிக்க வேண்டியிருந்தது. இடைப்பட்ட காலத்திலேயே ‘யூனியன் கார்பைடு’ நிறுவனத்தைக் கையகப்படுத்தியது ‘டௌ’ நிறுவனம். உலகின் மோசமான தொழிற்சாலைப் பேரழிவான இந்த வழக்கில் 26 ஆண்டுகளுக்குப் பின் தீர்ப்பளித்தது நம்முடைய நீதிமன்றம். குற்றவாளிகளுக்கு அளிக்கப்பட்ட தண்டனை: 2 ஆண்டு சிறை, ரூ. 1.01 லட்சம் அபராதம். இத்தனை அனுபவங்களுக்குப் பின்னரும், சர்வதேச நிர்ப்பந்தங்களால் மக்கள் பாதிப்படையும் வகையில் அணுசக்தி இழப்பீட்டு மசோதாவை நிறைவேற்றியது மன்மோகன் சிங் அரசு.
*‘யூனியன் கார்பைடு’ நிறுவனத்தின் சார்பிலும் ‘டௌ’ நிறுவனம் சார்பிலும் செயல்பட இங்கு பலருக்கும் எந்தத் தயக்கமும் இருக்கவில்லை. நியூயார்க் மாவட்ட நீதிமன்றத்தில் ‘யூனியன் கார்பைடு’ சார்பில் ஆஜரானவர் நானி பால்கிவாலா. ‘டைம்’ இதழுக்கு 1984-ல் அளித்த பேட்டியின்போது, “இந்தியாவில், ‘யூனியன் கார்பைடு’ நிறுவனத்துக்கு எதிராக வழக்கு தொடரப்பட்டால், அடுத்த நூற்றாண்டில்தான் தீர்ப்பு வரும்” என்று சொன்னார். காங்கிரஸ் செய்தித் தொடர்பாளரான அபிஷேக் மனு சிங்வி, பாஜகவின் இன்றைய நிதி அமைச்சர் அருண் ஜேட்லி இருவருமே ‘டௌ’ நிறுவனத்துக்குச் சட்ட ஆலோசனை வழங்கியவர்கள். 2008-ல் பாஜக ‘டௌ’ நிறுவனத்திடமிருந்து நன்கொடையைப் பெற்றது.

 துரோங்கள் தொடர்கின்றன. நாம் வேடிக்கை பார்க்கிறோம்.
*போபால் மக்கள் நீண்ட காலமாகப் போராடினார்கள், வாரன் ஆண்டர்சனைக் கைதுசெய்து இந்தியாவுக்குக் கொண்டுவர வேண்டும் என்று. பிழைப்புக்காக ஸ்வீடனிலிருந்து அமெரிக் காவுக்கு வந்த ஒரு தச்சுத் தொழிலாளியின் மகன். ‘யூனியன் கார்பைடு’ நிறுவனத்தில் ஒரு விற்பனையாளராகத் தன் வாழ்க்கையைத் தொடங்கியவர். நாசகார ரசாயனத் தொழிற்சாலைகளால் விளையும் ஆபத்தை எப்படி எதிர்கொள்வது என்று ஏகாதிபத்திய நாடுகள் யோசித்த நாட்களில், அமெரிக்கா, ஐரோப்பாவைத் தாண்டி ‘யூனியன் கார்பைடு’ நிறுவனச் செயல்பாடுகளை மூன்றாம் உலக நாடுகளான லத்தீன் அமெரிக்க நாடுகள், ஆப்பிரிக்க நாடுகள், ஆசிய நாடுகளுக்குக் கொண்டுசென்றவர். ஏகாதிபத்திய சேவையாலேயே பின்னாளில் அந்நிறுவனத்தின் தலைவராக உயர்ந்தவர். கடந்த செப்.29 அன்று இறந்தார்.
*பேரழிவின் பாதிப்பிலிருந்து இன்னும் வெளியேற முடியாமல் தவிக்கும் போபால் மக்கள் நவீன சிகிச்சைக்கும் தொடர் சிகிச்சைக்கும்கூட போதிய உதவியில்லாமல் பரிதவிக்கிறார்கள். அந்தக் கழிவுகளை எப்படி அகற்றுவது என்று நம் அரசுக்கு இன்னும் தெரியவில்லை. இதற்கென ரூ. 25 கோடி நிதி ஒதுக்கி ஜெர்மனியைச் சேர்ந்த ‘ஜி.ஐ.எஸ்.’ நிறுவனத்திடம் கழிவகற்றும் பணியை ஒப்படைத்தது. ஆனால், கழிவுகளை அகற்றுவதில் உள்ள சவால்கள், விபத்து அபாயம், அதற்குப் பொறுப்பேற்கும் சுமை உள்ளிட்ட விஷயங்களை யோசித்த அந்த நிறுவனமும் பின்வாங்கிவிட்டது. கழிவு நிலத்தையும் நீரையும் நஞ்சாக்கி மனிதர்களை முடக்கிக்கொண்டிருக்கிறது. துரோகங்கள் தொடர்கின்றன. நாம் வேடிக்கை பார்க்கிறோம்.
- சமஸ், தொடர்புக்கு: samas@thehindutamil.co.in

Tuesday, 2 December 2014

நாடார்கள் இன்று பொருளாதார ரீதியாக பலமாக நிற்கிறோம் ஆனால் இது யார் உழைப்பு?

ஆங்கிலேயர் நம் உழைப்பிற்கு இட்ட அடித்தளம்

ஆங்கிலேயர்களுக்கு ஒரு சிறப்பம்சம் உண்டு. எந்த திட்டமானாலும் அவர்களுக்கு என்ன லாபம் என்பதைவிட அது நீண்ட காலதிட்டத்திற்கு பயன் உள்ளதாக இருக்க வேண்டும் என்பதில் கவனமாக இருப்பர். காரணம் நம் இந்தியாவைப் போலவே பக்கத்தில் உள்ள ஈழத்திற்குள் நுழைந்த ஆங்கிலேயர்கள் வெறுமனே ஆட்சி அதிகாரம் என்பதில் மட்டும் கவனம் செலுத்தவில்லை. அங்கு ஏற்கனவே இருந்த டச்சு போர்த்துகீசியர்களைப் போல இல்லாமல் தொடக்கம் முதலே நீண்ட கால முன்னேற்பாடுகளில் கவனம் செலுத்தி காய் நகர்த்தினார்கள். ஆங்கிலேயர்கள் ஒவ்வொரு நாட்டுக்குள்ளும் வந்தார்கள் வென்றார்கள் இதைப் போலவே நீண்ட காலம் நிலைத்தும் நின்றார்கள்,  ஆங்கிலேயர்கள் இதன் அடிப்படையில் ஈழத்தில் உருவாக்கியதுதான் காபி மற்றும் தேயிலைத் தோட்டங்கள். இதைப் போலவே  தென் மாவட்டத்திற்குள் காலடி வைத்த போது பல அடிப்படை விசயங்களில் தான் முதன் முதலில் கவனம் செலுத்தினர்.

ஆங்கிலேயர்கள் உள்ளே நுழைந்த போது தென்மாவட்டங்களில் பல பகுதிகளின் சாலை வசதிகள் எந்த அளவிற்கு மோசமாக இருந்தது என்பதை விட அப்படி ஒரு வசதி உண்டா என்று தேடிப்பார்க்கும் நிலையில் தான் இருந்தது. . அதில் தான் முதலில் கவனம் செலுத்தினர். இது தான் இன்று நம் சான்றோர் சமூகம் காண்கின்ற தொழில் வாழ்க்கைக்கு தொடக்கத்தில் நலல ஆதார வசதிகள் உருவாக காரணமாக இருந்தது. இதே இந்த தென்மாவட்டங்களில் எல்லா இனங்களும் தான் இருந்தார்கள். ஆனால் மற்றவர்களை விட நமக்கு மட்டும் ஏன் இத்தனை சிறப்பம்சம்.  நகரத்தார்கள் முடிந்தவரைக்கும் சிங்கப்பூர், மலேசியா, பர்மா போன்ற நாடுகளில் வட்டித் தொழிலில் கவனம் செய்து அங்கங்கே பொருளீட்டத் தொடங்கினர். ஆனால் நம் இனத்தை பொறுத்தவரையிலும் உள்ளூரிலேயே வெற்றிக் கொடி நாட்டினோம். இன்று நாம் பொருளாதார ரீதியாக மிகப் பெரிய இடத்தை பெற்றுள்ளோ, என்று நாம் எளிதாக சொல்லிவிட்டு நகர்ந்து விடலாம்.  ஆனால் நம் முன்னோர்களின் உழைப்பு எங்கிருந்து எப்படி தொடங்கியது?



உற்பத்தியுடன் சந்தைபடுத்தலும் - கருப்பட்டியுடன் கருவாடும்


19 ஆம் நூற்றாண்டுகளில் திருநெல்வேலியின் கிழக்கு பகுதியில் வாழ்ந்த நம் முன்னோர்கள் அனைவருமே பனைப் பொருட்கள் மூலமே தங்கள் வாழ்க்கையை படிப்படியாக வளமாக்கிக் கொண்டனர். கருப்பட்டி என்று சொல்லப்படுகின்ற கருப்பு கட்டிகளை சேகரித்து தங்களுடைய மாட்டு வண்டி மூலம் தங்கள் வணிகத்தை வளர்த்தனர்.  ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்க நகர நகர பல பொருளாதார வாய்ப்புகளும், தொழில் ரீதியான சிந்தனைகளில் பல மாறுதல்களும் உருவானது. தொழில் ரீதியான பல வாய்ப்புகள் உருவாகத் தொடங்கியது. இத்துடன் கருவாடு, உப்பு போன்றவற்றையும் சந்தைகளுக்கு கொண்டு சென்று விற்கத் தொடங்கினர்.  

ஆனால் நம்மவர்களின் இந்த உழைப்புக்குண்டான பலன்கள் கூட அத்தனை எளிதாக கிடைத்துவிடவில்லை.  பெரும்பாலும் தாமிரபரணி ஆற்றின் வட பகுதியிலேயே இந்த வியாபார பரிவர்த்தனைகள் நடந்து கொண்டிருந்தது.  காரணம் படு மோசமான சாலைவசதிகள், அடிக்கடி சண்டை நடந்து கொண்டிருக்கும் பாளையக்காரர்கள் என்பதோடு கள்வர் பயம் படாய்படுத்திக் கொண்டிருந்தது.. ஒவ்வொரு பாளையக்காரர்களும் தங்கள் பகுதிகளுக்குள் வரும் வண்டிகளுக்கு அவரவர் உருவாக்கி வைத்திருக்கும் வரிகளை கட்டி விட்டுத்தான் நகர வேண்டும்.  இதன் காரணமாகவே உள்நாட்டு வர்த்தகம் முடங்க ஆரம்பித்தது. ஆனால் இந்த பிரச்சனைகள் அத்தனையையும் முடிவுக்கு கொண்டு வந்தவர்கள் ஆங்கிலேயர்கள்.  வரி விதிப்புகளை தடை செய்தனர். சாலை வசதிகளை மேம்படுத்தினர். 

ஒவ்வொரு பகுதியிலும் உள்ள நாடார்கள் தாங்கள் செல்லும் இடங்களில் காணும் வாய்ப்புகளை சரியாக பயன்படுத்திக் கொண்டனர்.  திருநெல்வேலியிலிருந்து நகர்ந்து அம்பாசமுத்திரம், தென்காசி என்று மெதுமெதுவாக பரவி தங்கள் ஆதிக்கத்தை உருவாக்க ஆரம்பித்தனர்.ஒவ்வொருவரும் பயன்படுத்தும் மாட்டு வண்டிகளின் எண்ணிக்கைகள் அதிகமானது. வாய்ப்புகளை தேடிப் போக ஆரம்பித்தனர். வெறும் பனைபொருட்கள் மட்டுமல்லாது திருச்செந்தூர் பகுதியில் வாழ்ந்து கொண்டிருந்த இஸ்லாமியர்கள் தயாரிக்கும் ஆடைவகைகள், இதற்கு மேலும் பருத்தி விதை, புகையிலை என்று ஒவ்வொன்றாக சேர்த்துக் கொண்டு தங்கள் வியாபாரங்களை பெரிதாக்கத் தொடங்கினர். 




பேட்டைகளின் தொடக்கம்


பேட்டை என்றொரு வார்த்தை ஒவ்வொரு சிறிய நகர்புறங்கங்களிலும் உண்டு. கிராமப்பகுதியில் வாழ்ந்து வந்தவர்களுக்கு இது குறித்து நன்றாகவே தெரியும்.  இந்த பேட்டைகளை நம் சான்றோர் இன மக்கள் தாங்கள் தொழில் ரீதியாக செல்லும் நகரங்களில் அங்கங்கே உருவாக்கியதற்கு வேறொரு முக்கிய காரணம் உண்டு. முக்குலத்தோரில் ஒரு பிரிவில் உள்ள கள்ளர்கள் அதிகம் வாழ்ந்து கொண்டிருந்த பகுதியில் எவரும் எங்கும் எளிதில் தொழில் செய்துவிடமுடியாது. வண்டி சென்றால் வண்டி மட்டும் தான் இருக்கும். சில சமயம் அதுவும் அவர்கள் கைவசம் போய்விடும். வண்டியில் உள்ள பொருட்களும் காணாமல் போய்விடும். அவர்களை எதிர்க்கவும் முடியாது.  இதன் காரணமாக அந்தந்த இடங்களில் நாடார்கள் பேட்டைகளை அமைத்தனர்.

தங்கள் மாட்டு வண்டிகளை பாதுகாப்பாக நிறுத்த ஒரு இடம் வேண்டும். இதே இடத்தில் தாங்கள் கொண்டு வரும் பொருட்களையும் விற்க இதனைச் சுற்றி அரண் போல் பல கடைகளையும் உருவாக்கி புத்தியால் ஜெயிக்கத் தொடங்கினர். இது போல உருவாக்கப்பட்ட பேட்டைகள் தான் திருநெல்வேலி தொடங்கி தென்காசி என்று இறுதியில் இராமநாதபுரம் மாவட்டம் வரைக்கும் பரவலாக உருவாகத் தொடங்கியது. இப்படித் தொடங்கியது தான் இன்று நம் சான்றோர் மக்களின் ஆறு நகரங்கள் என்றழைக்கப்படும் சிவகாசி, விருதுநகர், (இது தான் தொடக்கத்தில் விருதுப்பட்டி என்று அழைக்கப்பட்டது) திருமங்கலம், சாத்தங்குடி, பாலைய்ம்பட்டி, அருப்புக்கோட்டை ஆகிய நகரங்களை அடிப்படையாக் கொண்டு குடியேறினர்.

இதன் தொடர்ச்சியாக கமுதியைச் சுற்றியுள்ள சிறு நகர்புறங்களிலும் நம் முன்னோர்கள் குடியேறத் தொடங்கினர். 19 ஆம் நூற்றாண்டின் ஆரம்ப காலத்திலேயே தங்களை பொருளாதார ரீதியாக முன்னேற்ற சமூகமாக மாற்றத் தொடங்கினர். வர்த்தகர்களாக, வட்டிக்கு கடன் கொடுப்பவர்களாக, தரகர்களாக என்று மேலே சொன்ன ஆறு நகரங்களிலும் சொத்து சேர்த்து தனிப் பெரும்பான்மையாக மாறத் தொடங்கினர். 1821 ஆம் ஆண்டு நாடார்கள் ஆதிக்கம் செலுத்தும் நகரங்களாக ஆறு நகரங்கள் மாறத் தொடங்கின.



தொழில் விரிவாக்கம்

வியாபாரத்தில் இரண்டு விசயங்கள் முக்கியமானது.  சந்தைப்படுத்துதல், லாபம்.  இதனைத் தொடர்ந்து அப்போது நிலவும் சூழ்நிலையில் தாக்குப் பிடித்து முன்னேற வேண்டும்.

கடைசியாக ஒவ்வொரு காலகட்டத்திலும் தொழில் விரிவாக்கம். சொல்லிவைத்தாற் போல நாடார்களுக்கு இது எல்லாமே சாதகமாக இருந்தது.  உள்ளூர் சந்தைகளை குறிவைத்து செயல்பட்டுக் கொண்டிருந்தவர்கள் அருகில் உள்ள திருவாங்கூர் மாநிலத்தில் தங்களின் புகையிலைப் பொருட்களை அனுப்ப ஏராளமான மாட்டு வண்டிகளை வைத்திருந்தனர். ஏறக்குறைய இந்த காலகட்டத்தில் 2000 மாட்டு வண்டிகள் இந்த வணிகத்திற்காகவே செயல்பட்டுக் கொண்டிருந்தன. ஒவ்வொரு செவ்வாய்க்கிழமை கூடும் சந்தையில் பருத்தி, நூல், நெல், கருப்புகட்டி, கருவாடு, மூங்கில் கூடைகள், நெய்,மீன்வலைகள், பழவகைகள் போன்ற ஏராளமான பொருட்கள் இதைத்தவிர பண்டமாற்று முறையில் மண்பானைகள் போன்றவைகளும் வியாபார பரிவர்த்தனைகளில் இருந்தது.

19 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் நம் முன்னோர்களின் ஆறு நகரங்களில் பொருளாதார பலமிக்கவர்களாக வாழ்ந்து கொண்டிருந்தாலும் மறவர்கள் அதிகமாக வாழ்ந்து கொண்டிருந்த இராமநாதபுர மாவட்டத்தில் நாடார்களை எதிரிகளாக பார்க்கப்படும் சூழ்நிலையில் ஏராளமான பிரச்சனைகள் உருவாகத்தொடங்கியது.  கிறிஸ்துவர்களாக மாறிய நாடார்கள் தாங்கள் உருவாக்கிய சங்கங்கள் மூலம் ஒரே அணியில் நின்றனர்.  பொருள் சேர்க்கும் ஆர்வத்தில் வேகமாக முன்னேறிக் கொண்டுருந்தார்களே தவிர தங்களின் ஒற்றுமை இல்லாத காரணத்தால் உருவாகிக் கொண்டிருக்கும் பிரச்சனைகளை நீக்க வேண்டும் என்பதில் முனைப்பாக செயல்பட உருவானது  நாடார்களின் சங்கங்கள். நாடார்கள் பெரும்பான்மையாக வாழ்ந்து கொண்டிருந்த ஆறு நகரங்களை அடிப்படையாகக் கொண்டு சங்கங்களை உருவாக்கத் தொடங்கினர். தமது இன மக்களின் சமூக நலன்களை கருத்தில் கொண்டு அரசாங்க அதிகாரிகளோடு நல்ல புரிந்துணர்வை உருவாக்கி வளர்க்க அதுவே இவர்களின் பல புதிய செயல்பாடுகளை உருவாக்க காரணமாக இருந்தது..  மகமை என்று ஒவ்வொரு குடும்பத்திலிருந்தும் வசூலிக்கப்படும் வரி மற்றும் உறவின் முறைகளும் பல திட்டங்கள் உருவாக  ஒவ்வொன்றும் இவர்களின் பொருளாதார வாழ்க்கையை மேன்மேலும் பலமுள்ளதாக மாற்றத் தொடங்கியது. 



உழைப்புடன் ஒற்றுமையே நம் ஆதாரம்


தாங்கள் உருவாக்கிய பேட்டைகள் மூலம் வசூலிக்கப்படும் மகமைத் தொகை மூலம் புதிய பேட்டைகள் அமைத்தனர்.   ஒவ்வொரு வியாபாரியும் தங்களது வருமானத்தில் ஒரு பகுதியை அளிக்க பொதுநல நிதி உருவானது. நாடார்கள் கருவூலநிதியில் சேர்க்கப்பட்டு பல விசயங்களுக்கு உதவத் தொடங்க இவர்களின் முன்னேற்றம் முன்பை விட பலமடங்கு வேகமாகத் தொடங்கியது. இதுவே தமிழ்நாட்டிலும் திருவிதாங்கூரிலும் சேர்ந்து 96 நகரங்கள் கிராமங்களை உள்ளடக்கி நாடார்கள் பேட்டைகளை அமைத்தனர். நம்மவர்களின் உறவின் முறை அமைப்பு 20 ஆம் நூற்றாண்டில் வலிமையானதாக மாறினாலும் இதன் அடித்தளம் 19 ஆம் நூற்றாண்டில் முடிவில் ஆழ அகலமாய் வலுவாய் இருந்தது என்பது நம் முன்னோர்களின் ஒற்றுமையான உழைப்பின் ஆதாரமே. ஆனால் இந்த உழைப்பும், ஒற்றுமையும் நம்மிடையே இருக்கிறதா??

Monday, 1 December 2014

காமராஜர் ஆட்சிக் காலத்தில் நிறைவேற்றப்பட்ட மின்சாரம் மற்றும் பெரிய அணைத் திட்டங்கள்

பெரிய அணைத் திட்டங்கள் பின் வருமாறு:- 


1. கிருஷ்ணகிரி நீர்த்தேக்க திட்டம் - 1956-ஆம் ஆண்டு தொடங்கப்பட்டு 1957-ஆம் ஆண்டு (கிருஷ்ணகிரி அணைத் திட்டம்) முடிவுற்றது. பொன்னி ஆற்றின் குறுக்கே கட்டப்பட்ட இந்த அணைத் திட்டத்தால் 7500 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெற்றது. 

2. அமராவதி நீர்த்தேக்கத் திட்டம் - அமராவதி ஆற்றின் குறுக்கே (1958-ல்) கட்டப்பட்ட இந்த அணைத் திட்டத்தின் பயனாக புதியதாக 15,000 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெற்றன. 

3. சாத்தனூர் நீர்த்தேக்கத் திட்டம் - ஆற்காடு மாவட்டத்தில் பொன்னி ஆற்றின் குறுக்கே (1957-ல்) கட்டப்பட்ட இந்த அணைத் திட்டத்தால் 20,000 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெற்றன. 

4. புள்ளம்பாடி கால்வாய்த் திட்டம் - காவிரியின் மேல், அணைக்கட்டிலிருந்து 54 மைல் நீளமுள்ள கால்வாய் வெட்டப்பட்டு திருச்சி மாவட்டத்தில் உள்ள லால்குடி, உடையார்பாளையம் தாலுகாவில் 24,114 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும் வகையில், புள்ளம்பாடி கால்வாய்த் திட்டம் ஏற்படுத்தப்பட்டது. 

5. வீடுர் நீர்த்தேக்கத் திட்டம் - திண்டிவனம் அருகில் உள்ள வீடுர் கிராமத்தில் 1958-ல் உருவாக்கப்பட்ட இத்திட்டத்தினால் 3200 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெற்றன. இதில் பாண்டிச்சேரி மாநிலத்தில் உள்ள 1000 ஏக்கர் நிலமும் அடங்கும். 

6. புதிய கட்டளை மேல்நிலைக் கல்வாய் திட்டம் - 86 மைல் நீளம் கொண்ட புதிய கட்டளைக் கால்வாய் திட்டத்தின் மூலமாக 8622 ஏக்கர் தரிசு நிலங்கள் பாசன வசதி பெற்றன. 

7. கீழ்பவானி திட்டம் - பவானி ஆற்றின் குறுக்கே கட்டப்பட்ட இந்த அணைத் திட்டத்தினால் 2,07,000 ஏக்கர் நிலங்கள் பயனடைந்தன. 1957-ஆம் ஆண்டு இத்திட்டத்தின் மூலம் முழுமையான பலன்கள் மக்களைச் சென்றடைந்தன. 

8. மணிமுத்தாறு திட்டம் - இத்திட்டம் 1958-ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்டது. நெல்லை மாவட்டத்தில் தாமிரபரணி ஆற்றோடு, மணிமுத்தாறு சேரும் இடத்திற்கு முன்பாக இந்த அணை கட்டப்பட்டது. இந்த அணைத்திட்டத்தோடு, மழைநீரை நம்பி விவசாயம் செய்து வரும் 20,000 ஏக்கர் நிலங்களுக்கு பாசன வசதி அளிக்கும் விதத்தில், அணையின் வலதுபுறத்தில் 28 மைல் நீளக் கால்வாயும் வெட்டப்பட்டது. 

இந்த திட்டத்தின் மூலமாக தண்ணீர் பற்றாக்குறையால் அடிக்கடி அவதிப்படும், தாமிரபரணி ஆற்றின் மூலம் பாசன வசதி பெறும் 83,000 ஏக்கர் நிலங்களுக்கு நீர் தொடர்ந்து கிடைக்கும் வகையில் உறுதி செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கதாகும். 

9. ஆரணி ஆறு திட்டம் - ஆரணி ஆற்றின் குறுக்கே கட்டப்பட்ட இந்தத் திட்டத்தின் மூலம், புதிதாக 3,000 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெற்றதோடு, 13,600 ஏக்கருக்கு பாசன வசதி உறுதி செய்யப்பட்டது. இந்தத் திட்டம் 1958-ஆம் ஆண்டு முழுமையடைந்தது. 

10. பரம்பிக்குளம் - ஆழியாறு திட்டம் - தமிழ்நாடு கேரள மாநிலங்களின் கூட்டு திட்டமாக அன்றே 32 கோடி ரூபாய் செலவில் பல துணை திட்டங்களையும் கொண்டதாக இத்திட்டம் அமைந்திருந்தது. அதற்கான ஒப்பந்தமும் கேரள அரசோடு போடப்பட்டிருந்தது. 

இந்தத் திட்டத்தின்படி மேற்கு நோக்கி ஓடி அரபிக்கடலில் கலக்கின்ற பரம்பிக்குளம் நதி மற்றும் சாலக்குடி துணை நதிகளினுடைய நீரை பயன்படுத்தும் கூட்டுத் திட்டமாக இத்திட்டம் உருவாக்கப்பட்டது. இதன்படி சோழியாறு நதியில் இரு அணைகளும் பரம்பிக்குளம், பெரும்வாரிபள்ளம், தனுக்கடவு மற்றும் தேக்கடி ஆகிய ஒவ்வொரு நதிகளிலும் ஒரு அணைத் திட்டமாக பல திட்டங்களைக் கொண்டது இந்த திட்டம். 

இது தவிர ஆழியாறு நதியின் பல திட்டங்களைக் கொண்டது இந்த திட்டம். இதுதவிர ஆழியாறு நதியின் ஒரு நீர்த்தேக்கமும் பாலாறு நதியில் ஒரு நீர்த்தேக்கமும், இது தவிர பல மைல் நீளத்துக்கு மலைக்குடைவுகளையும் கொண்டதாக இந்த திட்டம் தீட்டப்பட்டிருந்தது. 1963 வரை இந்த திட்டம் பலமுனைகளில் முடக்கி விடப்பட்டு தீவிரமாக வேலைகள் நடைபெற்றுக் கொண்டிருந்தன. 

சோழியாறு அணை, பரம்பிக்குளம் மலைக்குடைவு பரம்பிக்குளம் அணை, ஆழியாறு அணை, ஆழியாறு மலைக்குடைவு, நவமலைமலைக் குடைவு, திருமூர்த்தி அணை, வேடைக்காரன் புதூர் கால்வாய், பரம்பிக்குளம் பிரதான கால்வாய், சேதுமடை கால்வாய், பொள்ளாச்சி கால்வாய், உடுமலைப்பேட்டை கால்வாய் என்று ஏறக்குறைய திட்டத்தினுடைய பெரும்பகுதி முடிவடையும் நிலையை 1963-ஆம் ஆண்டு எட்டியிருந்தது. 

11. வைகை நீர்த்தேக்கத் திட்டம் - மதுரை மாவட்டத்தில் வைகை ஆற்றின் குறுக்கே 1959-ஆம் ஆண்டு கட்டப்பட்ட இந்த திட்டத்தினால் புதிதாக 20,000 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெற்றது. 

12. மேட்டூர் கால்வாய் திட்டம் - 1958-ல் முழுமையாக நிறைவு செய்யப்பட்ட இந்தத் திட்டத்தினால் 45,000 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெற்றன. 




மின்சாரம்: 

காமராஜர் ஆட்சிப் பொறுப்பை ஏற்ற போது, 156 மெகாவாட்டாக இருந்த மின்சார உற்பத்தி திறன், 571 மெகா வாட்டுகளாக உயர்ந்தது. இதற்காக நீர்மின் நிலையங்களும் அனல்மின்நிலை யங்களும் புதியதாக உருவாக்கப்பட்டன. இது மட்டுமல்ல ஏற்கனவே இயங்கி வந்த நீர், அனல் மின்நிலையங்கள் திறன் அதிகரிக்கப்பட்டது. 

காமராஜர் காலத்தில் ஏற்பட்ட ஏற்படுத்தப்பட்ட மின்உற்பத்தி திட்டங்கள் பின்வருமாறு:- 

குந்தா நீர்மின்திட்டம் - பன்னாட்டு திட்டங்களோடு ஒப்பிடும்போது நம்நாட்டில் மேற்கொள்ளப்பட்ட மிகப்பெரிய நீர்மின் திட்டமாகும். 1956-ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட இந்த திட்டம் கனடா நாட்டு ஒத்துழைப்புடன் நிறைவேற்றப்பட்டது. 

1960-ஆம் ஆண்டு செயல்பட தொடங்கிய இத்திட்டத்தின் மொத்த உற்பத்தி திறன் 1,40,000 கிலோவாட் ஆகும். மோயாறு நீர்மின் திட்டம் - பைகாரா நீர்மின் உற்பத்தி திட்டத்திலிருந்து வெளியாகக்கூடிய நீரை அந்த திட்டத்திலிருந்து 10 மைல்கல் தொலைவில் உள்ள மோயாறு பள்ளத்தாக்கில் விழச் செய்து 130 அடி உயரமுள்ள நீர்வீழ்ச்சியாக செய்து நீர்மின் திட்டம் அமைக்கப்பட்டது. 

இதனுடைய மொத்த உற்பத்தி திறன் 36,000 கிலோ வாட் ஆகும். கூடலூர் நீர்மின் திட்டம் - மதுரை மாவட்டம் கூடலூருக்கு அருகில் பெரியாறு நீரை பயன்படுத்தி இந்த நீர்மின் உற்பத்தி திட்டம் அமைக்கப்பட்டது. 1955-ல் தொடங்கப்பட்டு 1958-ஆம் ஆண்டு நிறைவு பெற்ற இத்திட்டத்தின் உற்பத்தி அளவு 1,40,000 கிலோ வாட் ஆகும். 

சென்னை அனல்மின்நிலையம் - ஏற்கனவே இயங்கி வந்த சென்னை அனல்மின்நிலையத்தில் மூன்றாவது மின்உற்பத்தி பிரிவு 1958 -ஆம் ஆண்டு செயல்பட தொடங்கியது. சமயநல்லூர் அனல்மின்நிலையம் - மதுரைக்கு அருகே சமயநல்லூரில் அனல்மின் நிலையம் அமைக்கப்பட்டது. அதனுடைய உற்பத்தி திறன் 14,000 கிலோ வாட் ஆகும். 

மேட்டூர் புனல் மின்உற்பத்தி திட்டம் - மேட்டூர் அணையிலிருந்து விடப்படும் விவசாய கழிவு நீரை பயன்படுத்தி அமைக்கப்பட்ட சுரங்க நீர்மின்திட்டமாகும் இது. இந்த நீர்மின் திட்டத்தினுடைய திறானது ஒரு லட்சம் கிலோவாட் ஆகும். நெய்வேலி அனல்மின் திட்டம் - நெய்வேலியில் பெறப்பட்ட பழுப்பு நிலக்கரியை பயன்படுத்தி நான்கு லட்சம் கிலோவாட் மின்சாரம் உற்பத்தி திறன் கொண்டதாக அமைக்கப்பட்டது.

இந்த வகையில், தமிழ்நாட்டில் நிறுவப்பட்ட மின்திட்டங்கள் மூலமாக, மின்சக்தித் திறன் 1963 ஏப்ரல் 1-ஆம் தேதி அன்று 6,30,700 கிலோவாட்டாக உயர்ந்தது. இதில் நெய்வேலி அனல்மின் திட்டத்தின் மூலம் பெறப்பட்ட 70,000 கிலோ வாட்டும் அடக்கம்