Friday, 12 December 2014

இன்றைய தலைவர்களுக்கு காமராஜர் பற்றி பாடம் நடத்த வேண்டும்! - பாரதிராஜா

இன்றைய அரசியல் தலைவர்களுக்கு பெருந்தலைவர் காமராஜர் பற்றி பாடம் நடத்த வேண்டும் என்று இயக்குநர் பாரதிராஜா கேட்டுக் கொண்டார்.
வேலூர் மாவட்டம் திருப்பத்தூரில் செயல்பட்டு வரும் காமராஜர் நூற்றாண்டு நினைவு அறக்கட்டளை சார்பில், காமராஜரின் 112 - வது பிறந்த நாள் விழா ராமகிருஷ்ணா மேல்நிலைப் பள்ளியில் நடந்தது. அதில் பெருந்தலைவர் குறித்து இயக்குனர் பாரதிராஜா பேசியது:
, "பெற்ற தாய், தந்தை பற்றி பேசுவதற்கு குறிப்பு எடுக்க வேண்டிய அவசியம் இல்லை. அதுபோலத்தான் என் தலைவன் காமராஜரை பற்றி பேசுவதற்கும் குறிப்பு எடுக்க வேண்டிய அவசியம் இல்லை.
அவர் வாழ்ந்த காலத்தில் அவரை என்னால் பாராட்ட முடியவில்லை. அவரை முழுமையாக பாராட்ட இங்கு ஒரு மேடை கிடைத்திருப்பது மிகவும் சந்தோஷம்.
காமராஜருக்கு பிறகு எத்தனையோ அரசியல் கட்சிகள், தலைவர்கள் வந்தார்கள். ஆனால் காமராஜரைப் போல யாரும் இதுவரை வரவில்லை.
மேடை நாகரீகத்தை காமராஜரிடம்தான் கற்றுக்கொள்ள வேண்டும். அவரது பேச்சில் தனி மனித விமர்சனம் இருக்காது. ஆனால் இன்றைய அரசியலில் அப்படி இல்லை. சாதி, மதம், பொருளாதார ஏற்றத்தாழ்வுகளை அகற்றுவதற்காக பள்ளிகளில் சீருடை பழக்கத்தை கொண்டு வந்தவர் காமராஜர். மதிய உணவை கொண்டு மாணவர்களின் வயிற்றைக் குளிர வைத்தவர் பெருந்தலைவர்.
தான் படிக்கவில்லை, இந்த சமுதாயமாவது படித்து முன்னேற வேண்டும் என நினைத்து பல ஆயிரம் பள்ளிகளைத் திறந்தவர். மண்ணுலகில் வாழ்ந்த ஒரு மாமனிதர். சமுதாய நோக்கம் கொண்ட ஒரே தலைவர்.
உடம்புதான் கறுப்பு, மனசு வெள்ளை. கோபம் வந்தால் கொட்டி தீர்த்து விடுவார். மனதில் வைத்துக் கொள்ளமாட்டார். பொய்மை இல்லாதவர். தூய்மையான தலைவர். இங்கு நடக்கும் நிகழ்வுகள் அனைத்தும் அவரது ஆன்மா எங்கோ இருந்து கேட்டுக் கொண்டுதான் இருக்கும். கேட்ட பிறகு அந்த ஆன்மா என்னை (பாரதிராஜா) ஆசீர்வதிக்கும்.
இன்றைய அரசியல்வாதிகளுக்கு காமராஜர், கக்கன் பற்றி பாடம் நடத்த வேண்டும்.
தமிழ் சமுதாய மக்கள் படித்து மேலே வந்ததற்கு காரணம் காமராஜர்தான். ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். அதிகாரிகளை வேலையில் புரட்டி எடுப்பதில் வல்லவர். நேர்மையான தமிழன், தொண்டன். எல்லாவற்றையும் காட்டிலும் நேர்மையான மனிதன்," 

Thursday, 11 December 2014

காஞ்சிபுரத்தில் அமைந்திருக்கும் Foxxconn மொபைல் உதிரி பாகங்கள் தயாரிக்கும் தைவான் நிறுவனம் மூடப்படும் அபாயம்:

வெளிநாட்டு நிறுவனங்கள் உள்ளே வந்தால் கட்டுங்கடங்காத அளவுக்கு வேலை வாய்ப்பு பெருகி விடும். வெளி நாட்டு பணம் எல்லாம் கட்டு கட்டாக உள்ளே வந்து விழுந்துவிடும் என்று அன்டப்புழுகு ஆகாசபுழுகுகளை அவிழ்த்துவிட்டுக் கொண்டிருக்கின்றன முந்தைய காங்கிரசு அரசும் சரி, தற்போதைய பி.ஜே.பி அரசும் சரி!! Nokia நிறுவனம் முதலில் சத்தமில்லாமல் மூடப்பட்டது, இப்போது Foxconn அதற்கான பேச்சுவார்த்தையில். தங்களுக்கு சிக்கல் எனும்பொழுது அதை சரி செய்வதற்கு எந்த முயற்சியும் எடுக்காமல் நோகாமல் நொங்கு தின்று விட்டு தப்பிக்கும் இது போன்ற நிறுவனங்களால் நம் அரசுகளுக்கு என்ன வருமானம் என்பது குறித்த நேர்மையான தகவல்கள் தேவை! (அரசுக்கு வருமானம் என்ன என்பதுதான் கேள்வி, கையூட்டு பெற்ற விவரங்கள் அல்ல!!) இவர்கள் இங்கு கடை திறப்பது ஒன்றும் நம் சமூகத்துக்கு சேவை பண்ண அல்ல என்பது தின்ணம்!! இந்தியன் இழிச்ச வாயன் குறைந்த சம்பளத்தில் நிறைந்த வேலைகளை பெற்று விடலாம் என்ற எண்ணம் தான். அப்புறம் கையூட்டு குடுத்து மற்ற நாடுகளில் சாதிக்க முடியாதவைகளை இங்கு சாதித்து விடலாம். அடுத்தது இங்கு எப்பேற்ப்பட்ட வழக்காக இருந்தாலும் நிறுவன டைரக்டர்களின் கொள்ளுப் பேரன் சாகும்வரை இழுத்துக் கொள்ளலாம்!!!
இதில் வேதனையான விசயம் என்ன தெரியுமா, மின் வெட்டு காலங்களில் ஒழுங்காக லாபகரமாக நியாயமாக் உள்ளூர் மக்களுக்கு வேலை வாய்ப்பளித்து அரசுக்கு பயந்து வரி, வங்கிக்கு நியாயமாக வட்டி, உள்ளூர் நிர்வாகத்திற்கு தீர்வை என்று கட்டிக் கொண்டிருந்த உள்ளூர் சிறு குறுந்தொழில் நிறுவனங்களுக்கு குடுக்க வேண்டிய மிண்சாரத்தை இந்த‪#‎ஓடுகாலி‬ நிறுவனங்களுக்கு குடுத்துத் தொலைத்ததுதான்!!! இந்த பண்ணாட்டு பண்ணாடைகளுக்கு வரி விளக்கு, தடை இல்லா மிண்சாரம் எல்லாம் குடுத்து நம் நாட்டுக்கும் நாட்டு மக்களுக்கும் இவர்கள் மூலம் கிடைத்த நன்மை குறித்து நியாயமான விளக்கம் அரசுகள் குடுக்க வேண்டும்!! இவர்கள் வைத்து விட்டு போகப் போகும் வரி பாக்கி, தீர்வை நிலுவை போன்ற விவரங்களும் வேண்டும். எந்த எந்த தேசிய வங்கிகளை மொள்ளை போட்டிருக்கிறார்கள் விவரமும் குடுக்க வேண்டும்!! செய்யுமா அரசுகள்!! கண்டிப்பாக செய்யமாட்டார்கள். அதே போல் இந்த "ஃபாக்ஸ்கான்" நிறுவனம் மூடப்ப்டப் போவதால் 1000க்கும் மேற்பட்ட ஊழியர்கள் வேலை இழக்கப் போகிறார்கள். இவர்களுக்கு என்ன சம்பள பாக்கி வைத்துவிட்டு போகப் போகிறார்கள் என்பதும் நமக்கு தெரியப்போவதில்லை. இவர்களது வாழ்வாதாரமும் இப்போது கேள்விக்குறியாகி நிற்கப்போகிறது!!
இது போன்ற நிறுவனங்களை அரசு எடுத்து நடத்தலாம் என வாதங்கள் எழுகின்றன, இதனால் பல ஆயிரம் ஊழியர்கள் பயன் பெறுவர் என்பதும் உண்மைதான், ஆனால் இதனால் உள்நாட்டு பொருளாதாரத்துக்கு கேடும், வெளிநாட்டு நிறுவனங்களுக்கு காவடியும் தூக்கும் நிலமை வந்துவிடாதா??! இந்த வெளிநாட்டு நிறுவனங்களுக்கு வழங்கிய சலுகைகளையும் உத்திரவாதங்களையும் தடை இல்லா மின்சாரத்தையும் உள்நாட்டு நிறுவனங்களுக்கு வழங்கினால் அவர்களால் உற்பத்தியையும் வேலை வாய்ப்பையும் பெறுக்க முடியாதா. நம்மூர் மனித வளங்களை ஏன் வெளிநாட்டிலும், வெளிநாட்டு நிறுவனங்களிடமும் அடகு வைக்க வேண்டும். நம் நாட்டு இளைஞர்களும் ஏன் குடும்பம் குட்டிகளை விட்டுவிட்டு வெளிநாட்டில் வேலை செய்ய வேண்டும்??! உள்நாட்டு சிறு குறுந்தொழில்களை வளப்படுத்த வேன்டும் அரசு. மூன்று பக்கமும் கடல் சூழ்ந்திருக்கும் நாட்டில் மீன் வளத்திற்கு குறை இல்லை. அது சார்ந்த துறைகளிலும் கவணம் செலுத்தலாம். முதலில் மீனவர்களுக்கு பாதுகாப்பையும், அவர்களுக்கு நல்ல வாழ்வாதாரத்தையும் ஏற்படுத்தி குடுக்க வேண்டும்.
அதே போல் இந்த பண்ணாட்டு பண்ணாடைகளுக்கு குடுத்த மின்சாரத்தை முறையாக நம் விவசாயிகளுக்கு குடுத்திருந்தால் விளைநிலங்களும் விளைபொருள் உற்பத்தியும் பெருகி இருக்குமே! விலை வாசியும் வெகுவாக குறந்திருக்குமே!!
/// என்ன வளம் இல்லை இந்த திருநாட்டில்....
ஏன் கையை ஏந்த வேண்டும் வெளிநாட்டில்.....///
திருவோட்டை கீழே போட்டு விட்டு திருநாட்டை காக்குமா அரசுகள்???!!!!

Tuesday, 9 December 2014

பெருந்தலைவர்-எளிமையின் சிகரம்

சுமார் 72 – ஆண்டு காலம் காமராஜர் இந்த மண்ணிலே வாழ்ந்தார். தனது பெர்ம்பாலான வயிதனை எல்லாம் அவர் விடுதலைப் போராட்டத்திலும், சத்தியாக்கிரகம், மற்றும் வெள்ளையனே வெளியேறு என்ற பற்பல போராட்டங்களிலும் செலுத்தியதால் சிறைச்சாலைகளில் கழித்தார்.
12 – ஆண்டுகள் காமராஜர் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவராக இருந்து செயலாற்றித் தமிழ் நாட்டில் காங்கிரஸ் வேரூன்றவும், காங்கிரஸ் ஆட்சி ஏற்படவும் பாடுபட்டார்.
9 – ஆண்டுகளுக்கு மேல் காமராஜர் தமிழ் நாட்டின் முதலைமைச்சராக இருந்து, கல்விக்கும் விவசாயத்துக்கும் தொழில்களுக்கும் முக்கியத்துவம் கொடுத்து நாட்டை முன்னேற்றினார்.
சுமார் 2 1\2 ஆண்டுகாலம் காமராஜர் அகில இந்தியக் காங்கிரஸ் கமிட்டியின் தலைவராக இருந்து இந்தியாவிலுள்ள எல்லா மாநிலங்களுக்கும் சுற்றுப் பயணம் செய்து காங்கிரஸ் கட்சிக்காகப் பெரும்பாடுபட்டார்.
‘கிங் மேக்கர்’ என்று எல்லோரும் கூறும்படி, பிரதமர்களைத் தான் நினைத்த வண்ணமே தேர்ந்தேடுத்து ஆட்சி செய்ய வைத்தார்.காமராஜர் புகழ் இந்தியா மட்டுமின்றி உலக மெங்கும் பரவியது. அமெரிக்காவும், ருஸ்யாவும் அவரைத் தங்கள் நாடுகளுக்கு அரசு விருந்தாளியாக வரவேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தன்.

1966 – ஆம் ஆண்டில் காமராஜர் சோவியத் நாட்டுக்குச் சென்றார். சிறப்பான் வரவேற்பு அளித்து சோவியத்து அரசு காமராஜருக்கு மரியாதை செலுத்தியது. ருஸ்யச் சுற்றுப் பயணத்தை முடித்துக் கொண்டு காமராஜர், அமெரிக்கா செல்லத் தான் நினைத்திருந்தார். இந்தியாவில் பொதுத் தேர்தல் நடக்க விருந்ததால் காமராஜர் அமெரிக்கா செல்லம் திட்டத்தைக் கைவிட்டு விட்டார். இது அவருக்கு மட்டுமல்ல அமெரிக்காவிற்கும் ஏமாற்றமாகவே இருந்தது.
கிழக்கு ஜெர்மனி, ஹங்கேரி, செக்கோஸ்லெவியா, யூகோஸ்லேவேக்கியா, பல்கேரியா போன்ற ஐரோப்பிய நாடுகளுக்குச் சென்று சுற்றிப் பார்த்தும விட்டு இந்தியா திரும்பினார்.எப்போதும் தான் அணியும் கதர் நான்கு முழ வேட்டி, அரைக் கைக்கதர் சட்டை, ஒரு கதர் துண்டு, காலில் தோல் செருப்பு – இவைகளுடனேயே அவர் வெளிநாடுகளுக்குச் சென்று திரும்பினார். இப்படி வெளிநாடு சென்று திரும்பியவர்கள் தமிழ் நாட்டில் இரண்டே இரண்டு பேர்கள்தான்.
ஒன்று பெருந்தலைவர் காமராஜர் மற்றொருவர் விஞ்ஞானி ஜி.டி. நாயிடு.காமராஜரைப் படிக்காத மேதை என்று அவர் என்னென்ன படிக்கிறார் என்பதனை எல்லாம் பார்த்திராதவர்கள் தான் அப்படிக் கூறுவார்கள். காமராஜர் பள்ளியில் படித்தது கொஞ்சம் தான் என்றாலும் நண்பர் ஒருவரின் உதவியால் ஆங்கிலம் கற்றுக்கொண்டார். காமராஜர் அனுபவப் பள்ளியில் அநேகம் கற்றுக்கொண்டவர்.
அவருக்குக் கல்வி ஞானம். சுயமுயற்சிகளால் வந்தது.”தமிழே இவருக்கு தகராறு. இவர் எப்படி எப்பொழுது ஆங்கிலமும் இந்தியும் கற்றுக் கொண்டார்?” என்று கூடச் சிலர் தங்களுக்குள் கேட்டுக் கொள்வதுண்டு.
பிரிட்டிஷ் இளவரசியும், அவரது கணவன் எடின்பரோ கோமகனும் சென்னைக்கு வந்திருந்தபோது காமராஜர் தமிழகத்தின் முதலமைச்சர் அவர்களோடு ஆங்கிலத்தில் பேசியிருக்கிறார்.
பாரதி பக்தர் காமராஜர். எப்போதும் தன்னோடு பாரதியாரு கவிதைகள் நூலை வைத்திருப்பார். பாரதி கவிதைகளை ஓய்வு கிடைத்தபோதெல்லாம் படித்து ரசிப்பார். அதனால் தான் அவருத் ரஷ்யப் பயணத்தின் போது மாஸ்கோ வரவேற்பில் காமராஜர் பாரதியின் ”ஆகவெறன்றெழுந்தது பார் யுகப் புரட்சி” என்ற பாடலைப் பாடி ரஸ்ய மக்களின் பாராட்டுக்களைப் பெற்றார்.
காமராஜர் காலையில் எழுந்து குளித்து முடித்ததும் அன்றாடச் செய்தித் தாள்களைப் பிரித்துப் படித்து நாட்டின் அரசியல் சூழ்நிலைகளைத் தெரிந்து கொள்வார். தமிழில் வெளியாகி வந்திருந்த செய்தித் தாள்கள் மட்டுமின்றி அவர், ”ஹிந்துஸ்தான் டைம்ஸ், இன்டியன் எக்ஸ்பிரஸ்” போன்ற ஆங்கிலச் செய்தித் தாள்களையும் படிப்பார்.
காமராஜர் எப்போதும் தனது பிரீப்கேஸில் வைத்திருந்த ஆங்கில நூல் மற்றும் இதழ்கள்.
1. Inside Africa
2. Endand Means
3. Time Magazines
4. News weak – போன்றவைகள் ஆகும். இவைகளுடன் பாரதியார் கவிதைகளும் கட்டாயமாக்க் காமராஜர் வைத்திருப்பார்.
அவர் முதலமைச்சராக இருந்த காலத்தில் ஆங்கிலத்தில் தயாரித்த கோப்புகளில் கையொப்பம் வாங்க வரும் ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் அவர் கவனமாகப் படித்து, சந்தேகப்பட்ட இடங்களில் அதைப் படித்துக் கேள்விகள் கேட்டு அந்த அதிகாரிகளை அசரவைத்து விடுவாராம். ஆகவே காமராஜரின் கல்வி அறிவை யாரும் குறை கூறவே முடியாது.

பெருந்தலைவர் - ஏன் பெருந்தலைவர்

“இப்போதுள்ள அரசியல் தலைவர்களோடு ஒப்பிடுகையில் காமராஜர் எப்படிப்பட்ட தலைவர்?”
“இப்போதுள்ள அரசியல் தலைவர்களிடம் இருந்து முற்றிலும் வேறுபட்டவர் காமராஜர். அரசியல்வாதி என்றால் மக்களுக்கு சேவை செய்பவர் என்பதுதான் அவரது கருத்தாக இருந்தது. ஒரு பத்திரிக்கையாளர் காமராஜரிடம், “நீங்க முதல்வரா இருக்கீங்களே. உங்களுக்கு அந்தப் பதவி பிடித்திருக்கிறதா” என்று கேட்டுள்ளார். அதற்கு காமராஜர், “யாருக்குப்பா வேணும் அந்த பதவி? தொரட்டி பிடிச்ச வேலை அது. எவன் பார்ப்பான் அதை. ஒரே தொந்தரவு. என்ன, இல்லாதவர்களுக்கு ஏதாவது செய்ய முடியுது. அதனால் மட்டுமே அந்த வேலையில் இருக்கேன்” என்று கூறியுள்ளார்.
காமராஜர் என்றைக்குமே பதவியைத் தேடிப் போனதில்லை. அவர் ஒரு கட்சியின் அடையாளம் அல்ல, சாதியின் அடையாளம் அல்ல. தூய்மையின் அடையாளம். அவரிடம் காங்கிரஸ்காரர், தமிழன் இப்படி எந்த அடையாளத்தை வேண்டுமானாலும் எடுத்து கொள்ளலாம்.
தூய்மையான அரசியலின் வடிவம்தான் காமராஜர். இனி வரும் அரசியல்வாதிகளும் அவரைப் பற்றி தெரிந்துகொள்ள வேண்டும். மக்கள் பணிக்காக உருவாக்கப்பட்டதுதான் முதல்வர் பதவி என்பதை புரிந்துகொள்ள வேண்டும்”  – ‘காமராஜர்’ திரைப்பட இயக்குனர் திரு.பாலகிருஷ்ணன் ஒரு பேட்டியில் கூறியது இது.


மின்சிக்கனம் முதல்வரிடம் தொடங்க வேண்டும்
ஹலோ fm.இல் ஒரு முறை திரு. குமரி அனந்தன் அவர்கள் பேசியதை கேட்கும் வாய்ப்பு கிடைத்தது. அவர் கூறியதில் ஒரு பகுதியை தொகுத்து இருக்கிறேன்.
காமராஜர் இரவு தூங்கும்முன்பு தனது உதவியாளர்களிடம் பேசிவிட்டு, அவர்களை வழி அனுப்பும்போது அனைவரும் சென்ற பின்னர் தானே மின்விளக்கு, மின்விசிறி ஆகியவற்றை அணைத்து விட்டு செல்வது வழக்கம். குமரி அனந்தன் தினமும் இதை கவனித்து விட்டு “ஐயா, உங்களிடம் ஒரு ஐந்து நிமிடம் பேச மாட்டோமா என்று பல முதலமைச்சர்கள் காத்துக்கொண்டிருக்க, நீங்கள் நாங்கள் செல்லும் வரை காத்திருந்து, இந்த மின்விளக்கு, மின்விசிறி ஆகியவற்றை அணைத்து விட்டு தான் செல்லவேண்டுமா? நாங்களே இதை செய்ய மாட்டோமா?” என்று கேட்டார். அதற்கு அவர் “நீங்க மறந்துட்டு போயிட்டீங்கன்னா, இரவு முழுதும் மின்சாரம் வீணாகும். அந்த மின்சாரத்தை ஒரு விவசாயிக்கு கொடுத்தால் அவனாவது பயன்படுத்திக்கொள்வான் அல்லவா?” என்று திருப்பி கேட்டார்.

சேவைக்காகவே முதல்வர் பதவி, அறிவுறை கூறும் முன் தான் முன்னுதாரணம் ஆவது, மக்கள் பணத்தில் எக்கணமும் சிக்கனம், சீரான தலைமை!!  இனி நான் எங்கே போவேன் இப்படி ஒரு வெள்ளந்தி தலைவருக்கு?? 

Monday, 8 December 2014

பெருந்தலைவர் - சாதனையும், வேதனையும்

காமராஜரின் சாதனைத் துளிகள்!!
* காமராஜர், ஒருவரை ஒரு தடவை பார்த்து பேசி விட்டால் போதும், அவரை எத்தனை ஆண்டுகள் கழித்து பார்த்தாலும், மிகச் சரியாக சொல்வார். அந்த அளவுக்கு அவரிடம் ஞாபகசக்தி மிகுந்திருந்தது.
* காமராஜரிடம் பேசும் போது, அவர் “அமருங்கள், மகிழ்ச்சி, நன்றி” என அழகுத் தமிழில்தான் பேசுவார்.
* காமராஜரின் ஆட்சி இந்தியாவின் மற்ற மாநிலங்களுக்கு முன்னோடியாய் இருக்கிறது என்று முன்னாள் குடியரசுத் தலைவர் பாபு ராஜேந்திர பிரசாத் சொல்லி இருக்கிறார்.
* காமராஜருக்கு கோபம் வந்து விட்டால் அவ்வளவுதான், திட்டி தீர்த்து விடுவார். ஆனால் அந்த கோபம் மறுநிமிடமே பனி கட்டி போல கரைந்து மறைந்து விடும்.
* தமிழ்நாட்டில் எந்த ஊர் பற்றி பேசினாலும், அந்த ஊரில் உள்ள தியாகி பெயர் மற்றும் விபரங்களை துல்லியமாக சொல்லி ஆச்சரியப்படுத்துவார்.
* கதர்துண்டுகள் அணிவித்தால் காமராஜர் மிக, மிக மகிழ்ச்சியுடன் ஏற்றுக் கொள்வார். ஏனெனில் அந்த கதர் துண்டுகள் அனைத்தையும் பால மந்திர் என்ற ஆதரவற்றோர் இல்லத்துக்கு கொடுத்து விடுவார்.
* 1966ம் ஆண்டு ஜெய்ப்பூரில் நடந்த காங்கிரஸ் மாநாட்டில் பேசிய காமராஜர், “மக்களுக்கு குறைந்த விலையில் பொருட்களை வழங்கும் தொழில்களை நிறைய தொடங்க வேண்டும்” என்றார். இந்த உரைதான் இந்திய பொருளாதார துறையில் மாற்றங்களை ஏற்படுத்தியது.
* காமராஜருக்கு “பச்சைத்தமிழன்” என்ற பெயரை சூட்டியவர் ஈ.வெ.ரா.பெரியார்.
* பிரதமர் நேரு, காமராஜரை பொதுக் கூட்டங்களில் பேசும் போதெல்லாம், “மக்கள் தலைவர்” என்றே கூறினார்.
* தமிழ்நாட்டில் காமராஜரின் காலடி தடம் படாத கிராமமே இல்லை என்று சொல்லும் அளவுக்கு அவர் எல்லா கிராமங்களுக்கும் சென்றுள்ளார். இதனால்தான் தமிழ்நாட்டின் பூகோளம் அவருக்கு அத்துப்படியாக இருந்தது.
* காமராஜர் திட்டத்தின் கீழ் காமராஜரே முதன் முதலாக தாமாக முன் வந்து 2.10.1963ல் முதல் அமைச்சர் பதவியை ராஜினமா செய்தார்.
* காங்கிரஸ் கட்சியை மிக, மிக கடுமையாக எதிர்த்து வந்தவர் ராமசாமி படையாச்சி, அவரையும் காமராஜர் தன் மந்திரி சபையில் சேர்த்துக் கொண்ட போது எல்லோரும் ஆச்சரியப்பட்டனர்.
* சட்டத்தை காரணம் காட்டி எந்த ஒரு மக்கள் நல திட்டத்தையும் கிடப்பில் போட காமராஜர் அனுமதித்ததே இல்லை. “மக்களுக்காகத்தான் சட்டமே தவிர சட்டத்துக்காக மக்கள் இல்லை” என்று அவர் அடிக்கடி அதிகாரிகளிடம் கூறுவதுண்டு.
* தவறு என்று தெரிந்தால் அதை தட்டி கேட்க காமராஜர் ஒரு போதும் தயங்கியதே இல்லை. மகாத்மா காந்தி, தீரர் சத்தியமூர்த்தி உள்பட பலர் காமராஜரின் இந்த துணிச்சலால் தங்கள் முடிவை மாற்றியது குறிப்பிடத்தக்கது
* காமராஜர் எப்போதும் “முக்கால் கை” வைத்த கதர்ச் சட்டையும், 4 முழு வேட்டியையும் அணிவதையே விரும்பினார்.
* காமராஜர் அவர்கள் திருநெல்வேலி மக்கள் மீது அளவு கடந்த பாசம் வைத்திருந்தார்
* காமராஜரின் எளிமை நேருவால் போற்றப்பட்டிருக்கிறது. `எனக்குத் தெரிந்து இவருடைய சட்டைப் பையில் பணம் இருந்ததில்லை’ என்று நேரு குறிப்பிட்டதுண்டு.
* காமராஜர் நாளிதழ்களை படிக்கும் போது எந்த ஊரில் என்ன பிரச்சினை உள்ளது என்பதை உன்னிப்பாக படிப்பார். பிறகு அந்த ஊர்களுக்கு செல்ல நேரிடும் போது, அந்த பிரச்சினை பற்றி மக்களுடன் விவாதிப்பார்.
* காமராஜர் ஒரு தடவை தன் பிரத்யேக பெட்டிக்குள், இன்சைடு ஆப்பிரிக்கா, என்ட்ஸ் அண்ட் மீனஸ், டைம், நியூஸ்வீக் ஆகிய ஆங்கில இதழ்களை வைத்திருப்பதை கண்டு எழுத்தாளர் சாவி ஆச்சரியப்பட்டார்.
* எந்தவொரு செயலையும் எடுத்தேன் கவிழ்த்தேன் என்று செய்து விட மாட்டார். நிதானமாக யோசித்துத்தான் ஒரு செயலில் இறங்குவார். எடுத்த செயலை எக்காரணம் கொண்டும் செய்து முடிக்காமல் விட மாட்டார்.
* காமராஜருக்கு மக்களுடன் பேசுவது என்றால் கொள்ளைப் பிரியம் உண்டு. தன்னைத் தேடி எத்தனை பேர் வந்தாலும் அவர்கள் எல்லாரையும் அழைத்து பேசி விட்டுத்தான் தூங்க செல்வார். அவர் பேசும் போது சாதாரண கிராமத்தான் போலவே பேசுவார்.
* 1953-ல் நேருவிடம் தமக்கு இருந்த நட்பை பயன்படுத்தி, நாடாளுமன்றத்தில் பிற்படுத்தப்பட்ட மக்களுக்காக முதல் சட்டத் திருத்தம் கொண்டு வந்தவர் பெருந்தலைவர் காமராஜர் என்பது குறிப்பிடத்தக்கது.
* வட இந்திய மக்கள் காமராஜரை `காலா காந்தி’ என்று அன்போடு அழைத்தார்கள். `காலா காந்தி’ என்றால் `கறுப்பு காந்தி’ என்று அர்த்தம்.
* சட்ட சபையில் சமர்ப்பிக்கப்படும் வரவு செலவு திட்டத்தை முதல் முறையாக தமிழில் சமர்ப்பித்த பெருமை காமராஜரையே சேரும்.
* 12 ஆண்டுகள் காமராஜர் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவராக இருந்து தமிழ்நாட்டில் காங்கிரஸ் வேரூன்றவும், காங்கிரஸ் ஆட்சி ஏற்படவும் பாடுபட்டார்.
* 1953-ல் ஒரே கிளை நூலகம் மட்டும் இருந்தது. ஏழை மாணவர்கள் பொது அறிவு பெறுவதற்காக 1961-ல் 454 கிளை நூலகங்கள் ஆரம்பிக்கப்பட்டது. ஆரம்பித்து வைத்தவர் பெருந்தலைவர் காமராஜர்.
* காமராஜர் ஆட்சியில் தமிழ்நாட்டில் சுமார் 33,000 ஏரி, குளங்களை சீர்படுத்த சுமார் ரூ.28 கோடி செலவிடப்பட்டது.
* காமராஜரால் அறிமுகப்படுத்தப்பட்ட இலவசக் கல்வி முதன் முதலாக திருச்செந்தூரில் ஆரம்பிக்கப்பட்டது..
* காமராஜர் ஆட்சி காலத்தில் மின்சாரம் வழங்குவதில் இந்தியாவிலேயே தமிழகமே முதலிடம் வகித்தது. விவசாயத்திற்கு மின்சாரத்தை பயன்படுத்துவதிலும் தமிழகமே முதல் மாநிலமாக காமராஜர் ஆட்சியில் திகழ்ந்தது.
* பெருந்தலைவர் காமராஜரின் கல்வி புரட்சியால் 1954-ல் 18 லட்சம் சிறுவர்கள் மட்டுமே படித்துக் கொண்டிருந்த நிலை மாறி 1961-ல் 34 லட்சம் சிறுவர்கள் படிக்கும் நிலை ஏற்பட்டது.
* கேரளா மாநிலத்துடன் இணைக்கப்பட்டிருந்த நாகர்கோவில், செங்கோட்டை, சென்னையில் ஒரு பகுதியையும் தமிழ்நாட்டுடன் இணைத்த பெருமை காமராஜரையே சேரும்.
காமராஜரின் சாதனை சமுத்திரத்தின் ஒரு சில துளிகளே இங்கு நீங்கள் கண்டது. மக்கள் தலைவனின் பெருமையை பேச ஒரு பதிவு போதுமா என்ன?
இந்த வையம் உள்ளவரை காமராஜரின் புகழ் நிலைத்திருக்கும்.


இப்படி தமிழ்நாட்டை முன்னேற்ற பாதையில் கொண்டு சென்ற காமராஜரின் தங்கை வயிற்றுப் பிள்ளைகள் தற்போது படும்பாடு தெரியுமா?
காமராஜரின் ஒரே தங்கையான நாகம்மாளுக்கு இரண்டு பெண்கள், இரண்டு ஆண்கள். இதில் கடைசி மகன் மோகன். இவர் பத்திரிகை ஒன்றுக்கு அளித்த பேட்டியில் வறுமை மற்றும் நோயில் வாடுவதாக தெரிவித்திருந்தார். மோகன் அடையார் புற்று நோய் மருத்துவமனையில்  பெற்றுவருகிறார். இவர் காமராஜரின் தங்கை மகன் என்று தெரிந்து, அடையார் புற்றுநோய் மருத்துவமனையின் தலைவர் டாக்டர் சாந்தா இலவச சிகிச்சை அளித்துவருகிறார். தமிழ்நாட்டை ஆண்ட தலைவன், தமிழ்நாட்டை செதுக்கிய படிக்காத மேதையின் வாரிசுகள் படும் வேதனைகள், தமிழ்நாடே வருந்தகூடிய வெட்கித் தலைகுனியக்கூடிய செயலாகும். ஒரு சில நாடார் சங்கங்கள் அவர்களுக்கு உதவ முன்வந்து உதவியுள்ளனர் என்பது ஆறுதலான விஷயம்.
தனியே எனக்கோர் இடம் வேண்டும் – தலை
சாயும் வரை நான் அழ வேண்டும்.
வானகம் போய்வர வழி வேண்டும் – எங்கள்
மன்னனை நான் பார்த்து வரவேண்டும்
தாயே எனக்கொரு வரம் வேண்டும்- என்
தலைவனை மீண்டும் தர வேண்டும்.
தமிழே எனக்கொரு மொழி வேண்டும் – அவன்
தன்மையைச் சொல்லிநான் தொழவேண்டும்.
இருப்பேன் பலநாள் என்றானே – எம்மை
ஏய்த்தது போல் இன்று சென்றானே – அவன்
சிரிக்கும் அழகைப் பார்ப்பதற்கே – அந்தத்
தேவன் அருகினில் அழைத்தானோ?
பறக்கும் பறவைக் கூட்டங்களே – எங்கள்
பாரத வீரனைக் காண்பீரோ – இங்கு
துடிக்குங் கோடி உள்ளங்களை – அந்தத்
தூயவனிடம் கொண்டு சேர்ப்பீரோ!
- காமராஜர் மறைந்தது பற்றி கண்ணதாசன்

Sunday, 7 December 2014

பெருந்தலைவர் - அதிகாரத்திலும் நேர்மை

ஒருவரை பற்றிய சுயம் தெரிய வேண்டுமா அவர் கையில் அதிகாரத்தை குடுத்து பாருங்கள் என்பார்கள்!! எதிர்க்கட்சியின் சாதாரண வட்டச் செயலாளர் கூட இன்று ஆட்சியர்களை மிரட்டும் காலமிது!! ஆனால் அதிகாரத்தின் உச்சியில் (தேசத்தை ஆளும் கட்சியின் தேசிய தலைவர்) இருந்தும் நேர்மையை காட்டியவர் பெருந்தலைவர். அவர் நேர்மையின் மற்றொரு சான்று இதோ கீழே படியுங்கள்:



பெருந்தலைவர் காமராஜர் அவர்கள் முதல்வராக இருந்தபோது நாங்குநேரி தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராக இருந்த திரு சங்கையா ரெட்டியார் அவர்களுக்கு சொந்தமான திருநெல்வேலி நகரில் அமைந்திருந்த ஒரு திரையரங்க திறப்பு விழாவிற்கு சென்றாராம்... ஆனால் அன்றைய தினம் அந்த திரையரங்கம் திறப்புவிழாவிற்கு தயாராக இல்லை... என்ன காரணம் என்று கேட்க.. வேலைகள் சரிவர முடியாத காரணத்தான் திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் அவர்கள் அனுமதிகொடுக்கவில்லை என்று தகவல் சொல்லப்பட்டதாம்...

கூடவே... " முதல்வர் திறந்துவைக்கப்போவதாக நாங்கள் சொல்லியும் கூட அந்த கலெக்டர் அனுமதி தரவில்லை அய்யா... அதுமட்டுமல்லாமல் "நான் நினைத்தால் முதல்வர் ஆகி விடுவேன்... ஆனால் உங்கள் முதல்வர் நினைத்தாலும் கலெக்டர் ஆக முடியாது... எனவே என்னுடைய வேலையை முதல்வருக்காக நான் சமரசம் செய்துகொள்ள முடியாது " என்று அந்த கலெக்டர் சொல்கிறார்" என்றும் தகவல் சொன்னார்களாம்...

மிக சத்தமாய் சிரித்த காமராசர்.. "அவர் சரியாகத்தானே சொல்லி இருக்கிறார்... நான் எப்படி கலெக்டர் ஆக முடியும்.. அவர் நினைத்தால் ஒரு கட்சியில் சேர்ந்து முதல்வர் ஆக வாய்ப்பு இருக்கிறது.. அவர் சரியாகத்தான் சொல்லி இருக்கிறார்.. என்று சொன்னாராம்...

அதோடு மட்டுமல்லாமல் மறுநாள் நேரடியாக அந்த கலெக்டரின் வீட்டிற்கே சென்று "நீங்க எல்லாம் இப்படி நேர்மையா இருந்தாதான் நாடு நல்லா இருக்கும்.. உங்கள மாதிரி ஆளுங்க வரணும்னுதான் நாங்க எல்லாம் கஷ்டப்பட்டோம்" என்று சொல்லி பாராட்டிவிட்டு, கலெக்டர் மனதில் எதுவும் சலனம்/பயம் வந்துவிட கூடாது என்பதற்காக ஒரு காபி கொடுங்கள் என்று கேட்டு வாங்கி குடித்துவிட்டு வந்தாராம்...

மேற்கண்ட செய்தியை படித்துக்கொண்டிருந்தபோது தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பாளர் சகாயமும் சகாயத்திற்கு வாக்கு மூலம் தர வருபவர்களும் மிரட்டப்படும் விசயத்தை சொல்லிக்கொண்டிருந்தார்... 

Saturday, 6 December 2014

விருதுநகர் வியாபாரிக்கு சின்னக் கண்ணு... நீயும் வித்து போட்டு பணத்தை எண்ணு செல்லக் கண்ணு...

மக்களை பெற்ற மகராசி படத்தில் கவிஞர் மருதகாசி அவர்களின் பிரபலமான வரிகள் இவைகள். இன்றும் மும்பை ஸ்டாக் மார்க்கட் நிலவரம் போல் மளிகை பொருட்களில் விருதுநகர் சந்தை நிலவரம் மிகவும் பிரபலம்.  இவை வந்த விதம் சுருக்கமாக பார்ப்போம்:

வணிகத்தில் விருதுநகர் நாடார்கள்
கல்லடைக்குறிச்சி கல்வெட்டின்படி சோழர், பாண்டியர் காலத்தில் நாடார்கள் உயர் பதவிகளை வகித்து பொருளாதாரத்தில் உயர்ந்து இருந்தனர். நாயக்கர்களின் காலத்தில் நாடார்களின் பொருளாதாரம் மிகவும் பின்னடைவு அடைந்தது. ஆனால் பத்தொன்பதாம் நூற்றாண்டின் முற்பகுதியில் வியக்கத்தக்க வகையில் விருதுநகர் மக்களின் பொருளாதாரம் வளர்ச்சி அடைந்தது. கி.பி 19ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் காசுக்காரச் செட்டியார் சமுகத்தினரும் நாடார் சமுகத்தினரும் வணிகத்தில் ஈடுபட்டு வந்தனர்.1825ஆம் ஆண்டு முதல் விருதுநகருக்கு எல்லாப் பொருட்களும் விளையும் இடங்களில் இருந்து கொணர்ந்து விற்பனை செய்யப்பட்டது.வணிகத்தில் போட்டி காரணமாக விருதுநகர் நாடார்கள் பல ஊர்களில் தங்கள் நிறுவனங்களை நிறுவி வணிகம் செய்யத்தொடங்கினர். ஆங்கிலேயர் ஆட்சிக்கு உட்பட்டு இருந்த எல்லா நாடுகளுக்கும் சென்று வணிகம் செய்துள்ளனர்.


விருதுநகர் நாடார் பெருமக்கள் காபி, ஏலக்காய் எஸ்டேட்களை ஏற்காடு, பட்டிவீரன்பட்டி ஆகிய இடங்களில் நிறுவியுள்ளனர். 1940ஆம் ஆண்டு வரை விருதுநகர் தென் பிராந்தியங்களின் விளைபொருள்களுக்கு வணிக மையமாக இருந்தது. “பஞ்சு” ஆங்கிலேயர் ஆட்சிகாலத்தில் இங்கிலாந்து நாட்டிற்கு ஏற்றுமதி செய்யப்பட்டது. பஞ்சு வணிகத்தில் விருதுநகர் நாடார்கள் சிறப்பான இடம் வகித்தனர். 150 ஆண்டுக்கு முன்னர் விருதுநகர் பாக்கு வணிகத்தின் பெரிய சந்தையாக இருந்தது. இலங்கையில் இருந்து பாக்கு கொள்முதல் செய்யப்பட்டது. புகையிலையும் இங்கிலாந்து, இலங்கைக்கு ஏற்றுமதி செய்யப்பட்டது. காபி வணிகத்தில் அகில இந்திய அளவில் இன்றும் விருதுநகர் நாடார்கள் சிறப்பிடம் வகிக்கிறார்கள். சிக்கரி வணிகத்தில் விருதுநகர் நாடார்கள் இந்தியா முழுவதற்குமான உரிமம் பெற்றுள்ளனர். ஏலக்காய் விருதுநகரில் இருந்து பிற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது. மல்லி மற்றும் மிளகாய் வற்றல் வணிகத்திலும் அகில இந்திய அளவில் முன்னணியில் உள்ளனர் விருதுநகர் மக்கள்.


 நாடார் பெருமக்கள் எண்ணெய் வணிகத்திலும் ஈடுபட்டனர். இன்று மாநில அளவில் 75% எண்ணெய் விருதுநகரில் தயார் செய்யப்படுகிறது. எண்ணெய் ஏற்றுமதியிலும் சிறப்பிடம் வகிக்கிறது. பருப்பு வணிகம் 1857ஆம் ஆண்டு முதல் நடைபெற்று வருகின்றது.இங்கு தயாராகும் பருப்பு இந்தியா முழுவதும் விற்பனை செய்யப்படுகிறது.


வணிகத்தில் நாடார் பிரபலங்கள்:

1. M.S.P. குடும்பத்தினர் காப்பி ஏற்றுமதி செய்வதில் அகில இந்திய அளவில் முதலிடம் வகிக்கிறது.

2. சிக்கரி வணிகத்தில் P.M.A.NarayanaNadar குடும்பத்தினர் தென்னிந்தியாவில் முன்னனியில் உள்ளனர். 1975ஆம் ஆண்டு ஏற்றுமதியில் இந்திய அளவில் பெரும்பங்கு அம்பாள்காபி நிறுவனத்தினருடையதாகும்.

3. இந்திய அரசின் சிறந்த ஏலக்காய் ஏற்றுமதிக்கான விருதுனை ஒன்பது முறை பெற்றுள்ளனர் S.P.G. இராமசாமி நாடார் வணிக நிறுவனம்.

4. அகில பாரத அளவில் மிளகாய் வற்றல் ஏற்றுமதியில் முன்னனியில் இருந்து வருகின்றனர் V.P.S.A. நிறுவனமாகும். V.P.S.A.ஜெயகர் சைனாவுக்கு மிளகாய் வற்றல் ஏற்றுமதி செய்யும் முதல் விருதுநகர்காரர்.

5. P.C. கண்ணன் & கோ நிறுவனம் மல்லி ஏற்றுமதியில் அகில இந்திய அளவில் முதன்மையான ஏற்றுமதியாளர் விருதினை பெற்றுள்ளனர்.