Showing posts with label சே குவேரா. Show all posts
Showing posts with label சே குவேரா. Show all posts

Friday, 9 October 2015

சே என்றொரு மாமனிதர்.....


வரலாற்றில் ஏழை மக்களின் கல்வியைப் பற்றி கவலைப் பட்டவர்கள் எனக்குத் தெரிந்து இருவர் மட்டுமே.

 ஒருவர் கல்விக் கண் திறந்த மகாத்மா பெருந்தலைவர் காமராசர் அவர்கள்.

  இன்னொருவர் சே என உலக மக்களால் பிரியமுடன் அழைக்கப்படும் மாவீரன் சே குவேரா...
இன்று அந்த மாவீரனின் நினைவு நாள்....

1966 ஆம் ஆண்டு, அக்டோபர் 8 ஆம் நாள். ஒட்டிய கன்னத்துடன், தாடியுடன், முகமெல்லாம் சோர்வுடன், ரத்தம் வடிவ வடிய நின்று கொண்டிருக்கிறார். காலில் துப்பாக்கிக் குண்டுகள் துளைத்திருக்கின்றன. ராணுவத்தினர் அவரைச் சுற்றி வளைத்து விட்டனர்.

   ஒரு பள்ளிக் கூடத்தின் அறையில் அவரை சிறை வைக்கின்றனர். அது ஒரு அசுத்தமான அறை. அறையின் ஒரு ஓரத்தில் படுக்க வைத்திருந்தார்கள். அவரது கைகள் பின்புறம் கட்டப்பட்டிருக்கின்றன. பரட்டைத் தலை. பிய்ந்து போன காலனிகள். அழுக்கேறிய உடைகள்.    

அந்த அறைக்குள் நுழைகிறார் ஜீலியா கோர்ட்ஸ். இவர் அந்தப் பள்ளியின் ஆசிரியர். சங்கிலியால் கைகள் கட்டப்பட்டுப் படுத்துக் கிடந்த அவ்வீரன் மெல்ல கண் திறக்கிறார்.

யாரது?

தங்களுக்கு உணவு கொண்டு வந்திருக்கிறேன். மெதுவாக அச்சத்துடன் பதில் கூறுகிறார் ஆசிரியர்.

இது எந்த இடம்?

பள்ளிக் கூடம்.

இத்தனை மோசமாக இருக்கிறதே. இங்கே எப்படி வகுப்புகள் நடத்துகிறீர்கள்? சிரம்மாக இல்லையா?

     அந்த நிமிடம். அந்த நொடி அப்படியே உறைந்து போகிறார் ஆசிரியர். இவரால் இந்தச் சூழ்நிலையில் எப்படி, இப்படி ஒரு கேள்வியைக் கேட்க முடிகிறது. வார்த்தைகள் இன்றி மலைத்து நிற்கிறார் ஆசிரியர்.

    கவலை வேண்டாம். ஒரு வேளை நான் பிழைத்திருந்து, புரட்சியும் வெற்றி பெற்றுவிட்டால், உங்களுக்கு ஒரு நல்ல பள்ளிக் கூடம் கட்டித் தருகிறேன்.

     கொண்டு வந்த உணவை, கீழே வைத்துவிட்டு, அழுதபடியே வெளியே ஓடுகிறார் ஆசிரியர்.

     நண்பர்களே, இவர்தான் சே குவேரா. மரணத்தின் வாயிலில் நின்ற போதுகூட, பள்ளிக் கூடம் பற்றிக் கவலைப் பட்டவர்தான் சே.

கியூபாவில் பாடிஸ்டா அரசை அகற்றியவுடன், பிடல் காஸ்ட்ரோவும், சே குவேராவும் தோற்றுவித்த முதல் இயக்கம், எழுத்தறிவு இயக்கம்.

///தெரியாதவர்கள் கற்றுக் கொள்ளுங்கள்
தெரிந்தவர்கள் கற்றுக் கொடுங்கள்///
இதுதான் எழுத்தறிவு இயக்கத்தின் தாரக மந்திரம்.

உலகில் இவர் போல் இனி ஒருவர் பிறக்கவே மாட்டார் என நான் உறுதியாக நம்புவது இருவரை! ஒருவர் பெருந்தலைவர், இன்னொருவர் சே...