Showing posts with label விடா முயற்சி. Show all posts
Showing posts with label விடா முயற்சி. Show all posts

Friday, 8 May 2015

தேர்வின் தோல்வி வாழ்வின் இறுதியா??

பெற்றோர்களே மாணவர்களே தோல்வி என்பது வாழ்வின் இறுதிக்கட்டம் அல்ல, வெற்றியின் ஆரம்பம்! எல்லா வயதிலும் எல்லா துறையிலும் தோல்விகள் உண்டு! வேட்டையாடும் சிங்கம் புலிகளுக்கு கூட  நூறில் பத்து முயற்சிகளிலேயே உணவு கிடைக்கிறது!!

தோல்வி என்பதற்கு வயது வரம்புகள் எதுவும் கிடையாது. பள்ளியில் படிக்கின்ற மாணவன் தேர்வில் தோல்வியுறுவதில் துவங்கி, வானவியல் விஞ்ஞானி ஏவுகனையை சரியான வட்டப் பாதையில் நிறுத்த தவறுவது வரை அனைவரும் தம்தம் தொழிலுக்கு ஏற்றவாறு தோல்வியுறுகிறோம். இங்கு ‘தோல்வியே’ வாழ்க்கை கிடையாது. தோல்வியுறுவதின் மூலம் புதியனவற்றைக் கற்றுக் கொள்கிறோம். .  

னிதன் நிலவுக்கு சென்றதே மூன்று தோல்விகளுக்குப் பிறகுதான் .கண்களையும் காதுகளையும் திறந்து வைத்திருந்தால் ஒவ்வொரு தோல்வியும் ஒரு பாடத்தைப் புகட்டும். ஒவ்வொரு பின்னடைவும் மாறு வேடத்திலுள்ள ஆசீர்வாதங்களே. பின்னடைவுகளும் தற்காலிகத் தோல்விகளும் இல்லாமல் நாம் எவ்வாறு உருவாக்கப்பட்டிருக்கிறோம் என்பதை ஒரு போதும் அறிய முடியாது.- சரியாக சொல்லவேண்டும் என்றால் தோல்வி ஒன்றுதான் இந்த உலகத்தில் பல வரலாற்று நாயகர்களை உருவாக்கி இருக்கிறது என்றால் நம்புவீர்கலாம் . ஆம்  எத்தனை பேருக்கு தோல்விகளால் சாதனை படைத்த இவர்களைப்  பற்றி தெரியும் என்று தெரியவில்லை . தெரிந்துகொள்ளுங்கள்

ணித மேதை ராமானுஜர் குடந்தைக் கல்லூரியில் ஆங்கிலப் பாடத்தில் தோல்வியுற்றார். பின்னாலில் கணிதத்தில் உலகப் புகழ் மேதையாவதை தோல்வி ஒன்றுதான் எனக்குக் கற்றுத்ததந்து என்றார்

ந்த மனிதனை பற்றி தெரியாதவர்கள் யாரும் இருக்க இயலாது . ஆனால் இவர் கண்ட தோல்விகளின் நீளத்தை இதுவரை யாரும் எட்டவில்லை என்று சொல்லலாம் .

வியாபாரத்தை 21 வயதில் தொடங்கினார் - தோல்வி.
மாகாண சட்ட சபைக்கு போட்டியிட்டார் - தோல்வி.
நரம்புத் தளர்ச்சி அவனுள் நாட்டியம் நடத்தியது - உடலளவான தோல்வி.
மறுபடியும் தேர்தலில் குதித்தார் - தோல்வி.
முதன் முறையாக நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட்டார் - தோல்வி.
பிறகு மக்கள் மன்றத் தேர்தலில் போட்டியிட்டார் – தோல்வி.
52வது வயதில் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட்டார் - வெற்றி அவரை முத்தமிட்டது.30 வருட காலங்கள் தன் வாழ்நாளில் தோல்வி ஒன்றையே சந்தித்த மாமனிதன் இறுதியாக தன் புகழ் உலகமெங்கும் பரவும் வண்ணம் வெற்றியை சந்தித்தார். அந்த மாமனிதர் தான் அப்ரஹாம் லிங்கன்.

நாடகத்தில் மட்டுமே நடித்து வந்த சிவாஜி கணேசனைப் பார்த்து“பையனுக்கு குதிரை முகம்” என்று படத்தயாரிப்பாளர் ஒருவரால் புறக்கணிக்கப்பட்டவர் பின்னாளில் ‘நடிகர் திலகம் சிவாஜியாக’ மாறினார்.

 வ்வொரு தோல்வியிலும் ஒரு பாடத்தை கற்றுக்கொண்டதாக மகிழ்ச்சியடையுங்கள். அந்த மகிழ்ச்சியே உன்னை வெற்றிக்கு இழுத்துச்செல்ல உதவும் மிகப்பெரும் சக்தியாகமாறிவிடும்!!!

Wednesday, 11 March 2015

முயற்சிக்கு இல்லை காலவரை

ரைட் சகோதரர்கள் யார் என்று கேட்டால், சட்டென்று சொல்லி விடுவோம் விமானத்தைக் கண்டுபிடித்த வித்தகர்கள் என்று. சரி,சாமுவேல் பி. லாங்லே யார் என்று கேட்டால் என்ன செய்வோம்? விட்டத்தைப் பார்ப்போம். நெற்றியைச் சுருக்கி தலையைச் சொறிந்து அசட்டுச் சிரிப்பு சிரித்து, ‘தெரியலையே, யார் அது?’ என்போம். பாவம், அவரும் கிட்டத்தட்ட விமானத்தைக் கண்டுபிடித்தவர்தான். ஆனால், சரித்திரத்தில் அவர் பெயர் இடம் பெறவில்லை. ஆர்வில், வில்பர், ரைட் சகோதரர்களின் பெயர்கள்—தான் விமானக் கண்டுபிடிப்பாளர்கள் என்று இடம் பெற்றிருக்கிறது.

காரணம்...ரைட் சகோதரர்கள் விமானத்தை உருவாக்க சோதனைகள் செய்து கொண்டிருந்த காலத்தில்தான் பேராசிரியர் லாங்லேயும் ஆராய்ச்சிகளை மேற்கொண்டிருந்தார். சொல்லப் போனால், அவர்களைவிட லாங்லே சிறப்பாகப் படித்தவர். கணிதமும் வானவியல் சாஸ்திரமும் அவருக்கு அத்துப்படி. விமான ஆராய்ச்சிக்காக அவர் பணிபுரிந்த ஸ்மித்ஸோனியன் இன்ஸ்டிடியூட்டே பெரும் பணம் கொடுத்திருந்தது. லாங்லேயும் மிகச் சிறப்பாக ஆராய்ச்சிகள் செய்து ஏறத்தாழ ஒரு விமானத்தை உருவாக்கி விட்டார். ஆளில்லாத விமானத்தைப் பறக்க வைத்தும் காட்டினார். ஆனால், விமானியுடன் பறக்க அவர் தயாரித்திருந்த விமானம் தண்ணீருக்குள் விழுந்தது. விமானம் பறக்கப் போவதை வேடிக்கை பார்க்க வந்திருந்த மக்களெல்லாம் கேலியாய்ப் பார்க்க, பத்திரிகைகள் விமர்சனம் செய்ய... லாங்லேயால் தாங்க இயலவில்லை. இருந்தாலும் மனதைத் தேற்றிக் கொண்டு இன்னொரு முறை அதே போன்று விமானத்தை விமானியுடன் பறக்க வைக்க முயன்றார். இந்த முறையும் தோல்வி. கேலியும் விமரிசனங்களும் அதிகமாய் வர, மனம் நொந்தார் லாங்லே. பல வருடங்களாய் தான் செய்து வந்த ஆராய்ச்சிகளையெல்லாம் விமர்சனங்களுக்குப் பயந்து மூட்டை கட்டி வைத்தார். முயற்சிகளை கைவிட்டார். விமான ஆராய்ச்சியே தனக்கு வேண்டாம் என்று ஒதுங்கிக் கொண்டார்.

இந்தச் சம்பவம் நடந்து சில மாதங்களுக்குள்ளாகவே ரைட் சகோதரர்கள் விமானத்தில் பறந்து வரலாற்றில் இடம் பிடித்துவிட்டார்கள். அவர்களும் முதல் முயற்சியிலேயே வெற்றி பெறவில்லை. பல முயற்சிகள், பல தோல்விகள், பல பாடங்கள். ஆனால், தளரவில்லை; முயற்சிகளைக் கைவிடவில்லை. அதற்கு பலன், இன்று அவர்களது பெயரை உலகம் உச்சரித்துக் கொண்டிருக்கிறது.

இதில் இன்னுமொரு பரிதாபமான விஷயம் இருக்கிறது. லாங்லே தயாரித்த விமானத்தைப் போலவே சில வருடங்கள் கழித்து ஒரு விமானம் தயாரித்தார்கள். அந்த விமானம் பறந்தது. லாங்லே தரையிலிருந்து விமானத்தைப் பறக்க விட முயற்சிக்காமல் ஒரு பெரிய படகின் மேல் இருந்து பறக்க முயற்சி செய்தார். அதனாலேயே அது செயல்படவில்லை என்று ஆராய்ச்சியாளர்கள் பிறகு கூறினார்கள்.

அன்று, லாங்லே மட்டும் விடாமல் தொடர்ந்து முயற்சித்திருந்தால்... முயற்சித்திருந்தால்...?

யெஸ்... முயற்சி... வெற்றிக்கான வழிகளில் மிக முக்கியமானது.