Thursday 28 April 2016

கொடிக்காய்ப் புளியும் தோலாண்டியும்...

சமீபத்தில் மதுரை சென்றிருந்த பொழுது சிம்மக்கல்லில் #கொடிக்காய்புளி விற்றுக் கொண்டிருந்ததை பார்த்தேன். நாம் சிறு பிராயத்தில் அடிக்கடி சாப்பிட்ட பழம், நம் பிள்ளகைளுக்கு அரிய பொருளாயிற்றே! வாங்கிக் குடுப்போம் என நினைத்து விலை கேட்டால், கால் கிலோ 50ரூ சொன்னார்! அதாவது கிலோ 200 ரூபாய்!! இதையெல்லாம் எனது சிறு பிராயத்தில் காசு குடுத்து வாங்கி சாப்பிட்ட நினைவே இல்லை! எங்கள் வீட்டிலும் சரி, பாட்டி வீட்டிலும் சரி இந்த மரம் உண்டு. தொரட்டி கொண்டு நன்கு பழுத்ததாய், பருத்தாய் பறித்து உண்போம்!

கொடிக்காய்ப்புளி மரத்திலே பழுத்து காய்த்திருக்கும் நிலையில் மழை, காற்று அதிகம் அடித்தாலும், கீழே விழாமல் தொங்கி கொண்டிருக்கும். இதனால் இந்த மரத்தினை "உதிரா மரம்' என அழைப்பர். மார்ச்,ஏப்ரல், மே, ஜூன் மாதம் இதன் சீசனாகும். கொடிக்காய்புளி வறட்சியை தாங்கி நிற்பதோடு, மரம் வளர்ந்து இருக்கும். இதன் மரம், பூக்கள், காய்கள் அனைத்தும் உடல் ஆரோக்கியத்திற்கு பயன் உள்ளது

சிறு வயதில் இதன் விதையை வீட்டு சன்னலில் வைத்தால், விருந்தினர் வருவர் என நம்பிய காலமும் உண்டு! நம் வாழ்க்கையை மட்டும் ரீவைண்ட் செய்ய முடிந்தால்.......
ஆகா....