Sunday 28 May 2017

முழித்துக் கொண்டே தூங்கும்....

தமிழர்கள் தூக்கத்திலும் காலாட்டிக் கொண்டே தூங்குகிறோம்.... ஏன் எனறால் இந்த ஒன்றியம் நாம் உறங்கும் நேரத்தில் நம் முதுகில் குத்த தயாராய் இருக்கிறது!

தமிழனுக்கு மட்டுமா இந்த நிலை???!!

குதிரைகள் உறங்கும் போதும் கால் மூட்டை "லாக்" செய்து நின்று கொண்டே உறங்கும் தன்மையுடையது! மிகுந்த உடல் நலமில்லாமல் இருக்கும் போதோ, இறந்த பிறகோ தான் அவை படுக்கும்! அப்பொழுதும் உட்காராது!

அதே போல் டால்பின், திமிங்கலம் போன்ற நீர் வாழ் பாலூட்டிகள். இவை ஐந்து நிமிடத்திற்கு ஒரு முறை நீருக்கு மேல் வந்து மூச்சு விடா விட்டால் அவை இறந்து விடும். ஆகையால் அவற்றின் ஒரு பக்க மூளை மட்டுமே ஒரு சமயத்தில் உறங்கிக் கொண்டு மற்றொரு பக்க மூளை இயங்கிக் கொண்டிருக்கும்!

மீன் வகைகளில் சுறாக்களின் செவுள்கள் தனித்து இயங்காது. அதாவது மூச்சு விட செவுள்கள் திறந்து நீரை உள் வாங்கி வெளி விடாது! அவை நீருக்குள் மூச்சு விட எப்பொழுதும் நீந்திக் கொண்டே இருக்க வேண்டும். ஆக சுறாக்கள் உறங்கும் போதும் நீந்திக் கொண்டே இருக்க வேண்டும்!!

தமிழன் உள்பட அனைத்துமே...

#பாவப்பட்ட_சென்மங்கள்....