Tuesday 3 November 2015

விரசமில்லா வரிகள் - கூட மேல கூட வச்சு

சினிமாவில் காதல் பாடல் காட்சிகளில் சிறிது கூட கவர்ச்சி இல்லாத பாடல் காட்சிகளோ, விரசம் இல்லாத பாடல் வரிகளோ அரிதாகி விட்ட சூழலில் என் மனதை தாலாட்டும் விரசமில்லாத வரிகளுடன், கண்ணுக்கு கவரச்சி மிளகாய் தூவாமல் அருமையான காட்சிப் படுத்தலுடன் இயற்கை சாரலடன் கூடிய என் உள்ளம் நிறைந்த பாடல் இது.....

படம்: ரம்மி
இசை: டி.இமான்
வரிகள்: யுகபாரதி

ஆ.... ஆ.....
கூடை மேலே கூடை வச்சு கூடலூரு போறவளே
           உன் கூட கொஞ்சம் நானு வரேன் கூட்டிக்கிட்டு போனா என்ன
           ஒத்தையிலே நீயும் போனா அது நியாயமா
           உன்னுடனே நானும் வரேன் ஒரு ஓரமா
           நீ வாயேன்னு சொன்னாலே வாழ்வேனே ஆதாரமா
           நீ வேணான்னு  சொன்னாலே போவேன்டி சேதாரமா

கூடை மேலே கூடை வச்சு கூடலூரு போறவள
           நீ  கூட்டிக்கிட்டு போக சொன்னா என்ன சொல்லும் ஊரு என்னை
           ஒத்துமையா நாமும் போக இது நேரமா
           தூவத்தலை தேச்சு வச்சா துரு ஏறுமா
           நான் போறேனே சொல்லாம வாரேனே உன் தாரமா
           நீ தாயேன்னு கேட்காம தாரேனே தாராளமா

சாதத்துள்ள கல்லு போல நெஞ்சுக்குள்ள நீ இருந்து
           சரிக்காம சதி பண்ணுற

சீயக்காயை போல கண்ணில் சிக்கிக்கிட்ட போதும் கூட
           உறுத்தாம உயிர் கொல்லுற

அதிகம் பேசாம அளந்து தான் பேசி
           எதுக்கு சடை பின்னுற

சல்லி வேர ஆணி வேரா ஆக்குற
           சட்டை பூவ வாசமா மாத்துற

நீ போகாத ஊருக்கு பொய்யாக வழி சொல்லாத      

கூடை மேலே கூடை வச்சு கூடலூரு போறவளே 

நீ  கூட்டிக்கிட்டு போக சொன்னா என்ன சொல்லும் ஊரு என்னை

எங்க வேணா போயிக்க நீ என்னை விட்டு போயிடாம

           இருந்தாலே அது போதுமே

தண்ணியதான் விட்டுப்புட்டு தாமரையும் போனதினா

           தரை மேலே தலை சாயுமே

மறைஞ்சு போனாலும் மறந்து போகாதே

           நெனைப்பு தான் சொந்தமே

பட்டை தீட்ட தீட்டத்  தான் தங்கமே

           உன்னை பார்க்க பார்க்கத் தான் இன்பமே

நீ பார்க்காது போனாலே கிடையாது மறு சென்மமே

ஆ......ஆ.....

கூடை மேலே கூடை வச்சு கூடலூரு ஹ...கூடலூரு போறவளே 

நீ  கூட்டிக்கிட்டு போக சொன்னா என்ன சொல்லும் ஊரு என்னை

ஒத்தையிலே நீயும் போனா அது நியாயமா

           உன்னுடனே நானும் வரேன் ஒரு ஓரமா

நான் போறேனே சொல்லாம வாரேனே உன் தாரமா

           நீ தாயேன்னு கேட்காம தாரேனே தாராளமா

ஆ... ஆ...

1 comment:

Unknown said...

பட்டை தீட்டப் படுவது வைரம் தானே.,பின் எதற்காக தங்கமே என்று எழுதப்பட்டது., காரணம் இருப்பின் கூறுக.