Tuesday 2 February 2016

பெருந்தலைவரின் 'ஜனம்'நாயகம்!


ஒருமுறை நெல்லை மாவட்டத்தில் காமராஜர் சுற்றுப்பயணம் செய்து கொண்டிருந்தார். அப்போது ஒரு கிராமம் வழியாகச் சென்றார். தெரு ஓரமாகத் திடீரென வண்டியை நிறுத்தச் சொல்லிவிட்டு அங்கு வேலை செய்து கொண்டிருந்த விவசாயிகளிடம் போய், ""இந்த ஊருல பள்ளிக்கூடம் இருக்கா?'' என்று கேட்க, அவர்கள் ""இல்லை'' என்று கூறினார்கள்.

 உடனே சுற்றுப்பயணத்தில் உடன்வந்த கட்சித் தொண்டர்கள், ""ஐயா, தேர்தல்ல நம்ம கட்சிக்கு ஓட்டுப் போடாத ஊரய்யா இது!'' என்று கூறினார்கள்.

 காமராஜர் முகத்தில் கோபம் பொங்கியது. அவர்களைப் பார்த்து, ""தேர்தல்ல நமக்கு ஓட்டுப் போட்டாலும் போடாவிட்டாலும் இது நம்ம ஜனங்கய்யா.

அவங்க விரும்புறவங்களுக்கு வாக்களிக்கிற உரிமைக்குப் பெயர்தான் ஜனநாயகம்!'' என்று கூறியதோடு தனது கட்சிக்கே வாக்களிக்காத அந்த ஊருக்குப் பள்ளிக்கூடம் கட்ட உடனே உத்தரவிட்டார்.

No comments: