Tuesday 14 October 2014

யானையை அடக்கிய காமராஜர்

யானையை அடக்கிய காமராஜர்

அரசியலில் சிக்கலான பிரச்சனைகளை எல்லாம் குறுக்கிடும் போது சற்றும் நிதானமிழகாமல் அவசர உணர்வுடன் அவற்றைச் சமாளிக்கும் ஆற்றல் காமராஜிடம்  இயல்பிலேயே அமைந்திருந்தது.
இந்த மாதிரி ஆற்றல் அவர் உடன்பிறந்தே வளர்ந்து வந்திருக்க வேண்டும் என்று தோன்றுகிறது. இம்மாதிரி நாம் முடிவு கட்டுவதற்கான ஆதாரம் போன்று காமராஜின் சின்ன வயதில் ஒரு நிகழ்ச்சி நடந்தது.
குளத்தில் நீராடச் செல்வதற்காக கோவில் யானையைக்கொண்டு சென்றார்கள்.
திரும்பி வரும் சமயம் யானைக்கு மதம் பிடித்து விட்டது. அது தறிகெட்டு கண்டபடி அலைய ஆரம்பித்துவிட்டது.
மக்கள் அதுகண்டு வீறிட்டு அலறி திசைக்கு ஒருவராக ஓடி ஒளியத் தொடங்கினர்.
அந்த யானையை வழக்கமாக்க் குளிப்பதற்கு அழைத்துச் செல்லும்போது ஒரு கனத்த சங்கிலியை அதன் துதிக்கையில் கொடுத்து சுமந்து செல்லச் செய்வது வழக்கம். யானைப்பாகன் அன்று மறந்துவிட்ட காரணத்தாலோ என்னவோ யானையின் துதிக்கையில் இரும்புச்சங்கிலியைச் சுமக்கச் செய்யவில்லை.
காமராஜ் அதைக் கவனித்தார் யானையின் வெறியாட்டத்துக்கு அதுவும் காரணமாக இருக்கக்கூடுமோ என்று அவருக்ககுத் தோன்றியது.
உடனே கோவிலுக்கு ஓடினார்.அந்த இரும்புச் சங்கிலியை எடுத்து வந்தார். வெறி கொண்டு அலைந்த யானையின் துதிக்கையில் விழுமாறு சங்கிலியை வீசி எறிந்தார்.
யானை தனது துதிக்கையில் சங்கிலியைத் தாங்கிக்கொண்டது. உடனே அதன் வெறி ஆவேசம் அடங்கிவிட்டது.
அமைதியடைந்த யானையை காமராஜே கோவிலுக்குஅழைத்து சென்றார்.

No comments: