Saturday 4 October 2014

தூய்மை படுத்தல்-மங்கள்யானும்-மலம் அள்ளுபவரும்

தூய்மை படுத்தல்
******************

சில நாட்களாய் இணையத்திலும், செய்திகளிலும் பரவலாய் அடிபட்டு கொண்டிருக்கும் செய்தி நம் பிரதமர் திரு. நரேந்திர மோடி அவர்கள் தெருக்களை சுத்தம் பண்ணுவது போல் காட்சிகள்! தினசரி தெருக்களை சுத்தம் பண்ணும் மக்களை பற்றி எந்த அக்கறையும் இல்லாமல் இது போல் விளம்பரம் தேடிக் கொள்வதாக விமர்சனங்கள் ஒரு பக்கம் எழுந்த வண்ணம் உள்ளன. இதற்கு நடிகர் கமல்ஹாசனுக்கும், சல்மான்கானுக்கும் அழைப்பு விடுத்துள்ளாராம். அவரும் 90 லட்சம் ரசிகர்களை களம் இறக்க போவதாக அறிவித்துள்ளார். இது சரியான விசயம்தானா? இதனால் நாடு சுத்தமாகிவிடுமா?




மங்கள்யானும்-மலம் அள்ளுபவரும்
--------------------------------------------------------------

450 கோடியில் மங்கள்யானை நிலை நிறுத்திவிட்டோம் என்று பீற்றிக் கொள்ளும் நம் நாட்டில் இன்னும் மனித கழிவுகளை மனிதனே அள்ளிக் கொண்டிருக்கிறான். இத்தனை கோடி செலவு பண்ணி செவ்வாய்க்கு விண்கலம் அனுப்பிய நம்மால் இன்னும் நம் கழிவுகளை சுத்தம் செய்ய தொழில்நுட்பம் கண்டு பிடிக்க முடியவில்லை! வீட்டு கழிவுகளில் இருந்து தெரு கழிவுகள் வரை அத்தனையும் அள்ளுவது சக மனிதனே. சாக்கடை அடைப்பு, பாதாள சாக்கடை வரை சுத்தம் செய்ய மனிதனே. மாங்கள்யான் செவ்வாய் போய் சேர்ந்தால் என்ன இல்லை சேராவிட்டாலும் அவனுக்கு என்ன மாற்றம் வரப்போகிறது??!  நம் நாட்டின் பெரும் மனித வளம் நம் மலங்களை சுத்தம் செய்வதில் வீணாகிறது. இது பற்றிய எந்த விதமான் குற்ற உணர்வும் நமக்கு இருப்பதாய் தெரியவில்லை. நமக்கு முதலில் இருந்தால் தானே அரசுக்கு வரும். நம்மை போல் சாமான்யன்தானே பின்னாள் அரசியல்வாதி! வீட்டில் அவரவர் பிள்ளைகளின் மலம் அள்ளவே நிறைய பேர் சங்கடப்படுவதை பார்த்திருக்கிறேன். தன் தாய் தந்தையரின் வயோதிக காலத்தில் சிரமப்படும் போது அவர்களின் கழிவுகளையும் யாரும் சீண்டுவதில்லை. நம் பிள்ளைகளின், பெற்றோர்களின் கழிவுகளை சுத்தப் படுத்த சங்கடப்படும் நாம், நம் கழிவுகள் இன்னொரு சக மனிதனால் அள்ளப் படுவதை பற்றி கவலையே படுவதில்லை. ரயிலில் தெளிவாக போட்டிருப்பார்கள் ரயில் நிலையங்களில் கழிவறைகளை உபயோகப் படித்த வேண்டாம் என்று ஆனால் நாம் ரயில் நிலையங்களில் தான் கழிவறைகளையே உபயோக படுத்துவோம். அதே போல் பொது இடங்களில் கழிவறை சென்று வந்த பின் கோப்பைகளில் நன்கு தண்ணிர் ஊற்றிவிட்டு வருவதில்லை.  நமக்கு கழிவு அள்ளுபவரை பற்றிய கவலை இல்லை நம் சௌகர்யம் நமக்கு முக்கியம்!! என்று நம் கழிவுகளை அள்ள வேறு ஒரு மனிதனை உபயோகப்படுத்தாமல் இருக்கிறோமோ அன்றுதான் நாம் வல்லரசு!! 

குப்பை பொறுக்க வேண்டுமா? இல்லை சுத்தம் வேண்டுமா?
------------------------------------------------------------------------------------------------------

ற்கனவே தசாவதாரம் பட பிரமோசன் விழாவின் போது சீன நடிகர் ஜாக்கி சான் அவர்கள் நமக்கு செவிட்டில் அறைந்தாற் போல் ஒரு விசயத்தை சொல்லி குடுத்துவிட்டு போனார். விழா மெடையில் எல்லோரும் புளகாங்கிதம் அடைந்து இருந்த பொழுது ஜாக்கி சான் அவர்கள் மட்டும் கீழே குனிந்து குப்பைகளை பொறுக்கிக் கொண்டிருந்தார். அந்த மேடையில் இன்று நாட்டுக்கு ஏதோ நல்ல காரியம் பன்ணப் போவதாக கூறும் கமல்ஹாசனும் இருந்தார். கீழே கிடக்கும் குப்பைகள் குறித்த பிரஞ்சையே இல்லாமல் விழா மேடையில் நம் உள்ளூர் பிரபலங்கள் இருந்த பொழுது எல்லோரையும் செவிட்டில் அறைவதை போல் குனிந்து குப்பைகளை பொறுக்கினார் அந்த உலக பிரபலம்! அந்த உலக பிரபலத்துக்கு வந்த என்ணம் ஏன் நம் உள்ளூர் பிரபலங்களுக்கு வர வில்லை? இப்போது மோடியின் தொன்டர்களும் கமல்ஹாசன் ரசிகர்களும் வந்து சுத்தம் பண்ணி குடுத்ததும் நாடு சுத்த்மாகி விடுமா? சிங்கார சென்னை இன்னும் சிங்கபூராகவில்லை, இந்த சாக்கில் அரசியல்வாதிகளும் அதிகாரிகளும் சிங்கப்பூர் சுற்றுப்பயணம் போய் வநந்துதான் மிச்சம்!! சரி நீ என்னதான்டா சொல்ல வர்ற என்று கேட்கிறீர்களா? ரைட்டு இப்போது வேண்டுமானால் கமல்ஹாசன் ரசிகர்களும், மோடி தொன்டர்களும் சுத்தம் பண்னிவிட்டு போகலாம்! அடுத்து சேரும் குப்பைகளை யார் சுத்தம் பண்ணுவது??

குப்பைகளை பொறுக்க சொல்லித் தருவதை விட குப்பைகளே சேராமல் வாழ மக்களுக்கு கற்று குடுக்கலாமே, நாம் அனைவரும் சுத்தம் பற்றிய பிரஞ்சையே இல்லாமல் வாழ்கிறோம் என்பதே உண்மை அதைத்தான் மாற்ற வேண்டும்! எல்லா விசயத்திலும் விளம்பரம் தேடுவதை விட்டு விட்டு மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். தன் வீடு வரைக்கும் சுத்தம் இருந்தால் போதும் என்று நினைக்கிறோம். நாம் கூட்டி பெருக்கி தெருவில் போடும் குப்பை காற்றடித்தால் நம் வீட்டுக்கு திரும்ப வரும் என்பதை அறியாமலே இருக்கிறோம். குப்பை சேராமல் பார்த்துக் கொள்வது எளிதா? இல்லை சேர்ந்த குப்பைகளை சுத்தப்படுத்துவது எளிதா? இப்பொது 18 வயதிற்கு மேல் உள்ள தலைமுறை மக்களை மாற்ற முடியாது ஆனால் அடுத்த தலைமுறையை மாற்ற முயற்சிக்களாமே. பள்ளிகளில் இது குறித்து பாடப் பிரிவே உண்டாக்கலாம். பெரியவர்களை மாற்றுவது கடினம் சிறு குழந்தைகள்தான் முதலில் மாற்றப் பட வேண்டியவர்கள். பொது இடங்களில் குப்பைகளை சரியாக குப்பை தொட்டிகளிலும் அதற்கு உரிய இடங்களிலேயே போட வேண்டும் என்று சொல்லி குடுக்க வெண்டும். நம் வீடு மட்டுமல்ல பொது இடங்களும் நாம் வசிக்கும் இடம்தான் என்பதை உணர்த்த வேண்டும், நம் வ்சிப்பிடங்களை விட நாம் பொது இடங்களில் தான் அதிகம் புழங்குகிறோம்! அதனால் நம் வீட்டை விட பொது இடங்களை மிகவும் சுத்தமாக் வைக்க நம் பிள்ளைகளை பழக்க வேண்டும். பள்ளிகளில் சுத்தம் குறித்தும், நல்ல பழக்க வழக்கங்கள் குறித்தும், தூய சுற்றுச்சூழல் குறித்தும் பாடங்களை கட்டாய பாடமாக்கலாம். எந்த பழக்கமும் குழந்தை பழக்கமானால்தான் மனதில் பதியும்.

சுத்தம் சோறு போடும்
--------------------------------------

தில் அரசை மற்றும் குறை கூறுவதற்கில்லை. குறைந்த பட்சம் குழந்தைகள் முன்னிலையிலாவது நாம் குப்பைகளை கீழே போடாமல் இருக்க வேண்டும். பேருந்தில் பயணிக்கும் போது குப்பைகளை தூர வீசுவது, காலி பாட்டில்களை தூக்கி கிடாசுவது, கீழே யாரும் இருக்கிறார்களா என்று பார்க்காமலே கை கழுவுவது போன்ற அநாகரிகமான பழக்கங்களை குழந்தைகள் முன்னிலையில் தவிர்க்கலாம். ரயில்கள் சுத்தமாக இல்லை என்று குறை சொல்லும் நம்மில் எத்தனை பேர் ரயிலை சுத்த்மாக வைத்துக் கொள்கிறோம். ரொட்டி சாப்பிட்டுவிட்டு ரொட்டி பாக்கெட்டை ரயிலுக்குள்ளேயே கிடாசுவது, தண்ணீர் குடித்துவிட்டு காலி பாட்டிலை கீழே போடுவது, பாக்கு போட்டு துப்புவது, பாலிதீன் பைகளை வீசுவது என எல்லா அழிச்சாட்டியங்களையும் நாம் பண்ணிவிட்டு ரயிலை சுத்தமாக நிர்வாகம் பார்த்துக் கொள்ளவில்லை என குறை கூற நமக்கு ஏது உரிமை? சிறுவர்கள் நாப்கினை கூட நம்மவர்கள் சரியான இடத்தில் போடுவதில்லை. அதை சுத்தம் செய்பவரும் நம்மை போன்ற மனிதர்கள்தான் என்ற எண்ணம் நமக்கு வருவதில்லை! நன்கு படிக்க, பேர் வாங்க, சம்பாதிக்க என கற்று தரும் நாம் நம் பிள்ளைகளை சுற்று புறத்தை சுத்தமாக வைக்க கற்று தருகிறோமா? சுத்தமாக் வைத்துக் கொள்ளுதலும் நல்ல பழக்க வழக்கங்களில் ஒன்று என்பதை புரிந்து கொள்ளுங்கள் பெற்றோர்களே!! "சுத்தம் சோறு போடும்" என நம் பெரியோர்களே கூறியுள்ளனர்.

ரசியல்வாதிகள் வேண்டுமானால் விளம்பரம் தேடிக் கொள்ளட்டும் நாம் நிதர்சனத்தை பிள்ளைகளுக்கு ஊட்டுவோம். படிப்பு சொல்லி குடுக்கும் போது சுத்தமான சுற்று சூழல் குறித்தும் மலம் அள்ளும் நம் சகோத்ரனை பற்றியும் நம் பிள்ளைகளுகு சொல்லி குடுப்போம்!

No comments: