Sunday 12 April 2015

பெருந்தலைவர் - நாடு பார்த்ததுண்டா இந்த நாடு பார்த்ததுண்டா...

"எழுத்தறிவித்தவன் இறைவன் ஆவான்'’-என்று நம் முன்னோர்கள் சொன்னார்கள். குக்கிராமங்களிலும் கல்விக் கூடங்களை நிறுவச் செய்து தமிழக மக்களின் கல்விக் கண் திறந்த  காமராஜரை, "கருப்புக்கடவுள்' என அழைக்கலாமே. முகத்துக்கு நேராக சிலர் இப்படி துதி பாடியதை உயிரோடு இருந்த காலத்திலேயே  அவர் ஏற்றுக் கொண்டதில்லை.

ஆனால் வாலி அவர்கள் நம் கல்விக் கடவுள் பற்றி பாடிய இந்த பாடலை கேளுங்கள்! சத்தியமாக கண்ணீர் முட்டிக் கொண்டு வரும்! உங்களை போல் ஒரு உத்தமரை இனி நாங்கள் எங்கே தேடுவோம் ஐயா???

இசையமைத்துப் பாடியவர்: இளையராஜா
பாடல்: வாலி
ஊருக்கு உழைத்தவனே உறங்குகிறாயோ
உழைத்தது போதுமென்று உறங்குகிறாயோ
ஊராருக்கு அழுதவனே உறங்குகிறாயோ
ஊராரை அழ வைத்து உறங்குகிறாயோ
நாடு பார்த்ததுண்டா இந்த நாடு பார்த்ததுண்டா
நாடு பார்த்ததுண்டா இந்த நாடு பார்த்ததுண்டா
தன் வீடு பார்க்காமல் வாழ்வு பார்க்காமல்
நாடு முன்னேற நாளும் உழைத்தவனை
நாடு பார்த்ததுண்டா இந்த நாடு பார்த்ததுண்டா
நாடு பார்த்ததுண்டா இந்த நாடு பார்த்ததுண்டா
பள்ளி அறியாத பிள்ளை பல பேரின் முகத்தைப் பார்த்தானடா
அது ஊரு சுற்றாமல் சோறு தான் போட்டுப் படிக்க வைத்தானடா
மாடு பிடித்த கையில் ஏடு கொடுத்த மகராஜன் இவன்தானடா
ஊரு உலகெங்கும் தேடி பார்த்தாலும் ஈடு எவந்தானடா
இத்தனை தவம் தான் என்று வருந்த வைக்கிறானே
திரும்ப வர வேண்டுமே எங்கள் கருப்பு காந்தி இவனே
நாடு பார்த்ததுண்டா இந்த நாடு பார்த்ததுண்டா
நாடு பார்த்ததுண்டா இந்த நாடு பார்த்ததுண்டா
தன் வீடு பார்க்காமல் வாழ்வு பார்க்காமல்
நாடு முன்னேற நாளும் உழைத்தவனை
நாடு பார்த்ததுண்டா இந்த நாடு பார்த்ததுண்டா
நாடு பார்த்ததுண்டா இந்த நாடு பார்த்ததுண்டா
பதவி இருந்தாலும் பதவி போனாலும் உதவி புரிவானடா
தனைப் பெற்ற தாயை விடப் பிறந்த நாடு தான் பெரிது என்பானடா
ஆற்று நீரையே அணைகள் கட்டியே தேக்க வைத்தானடா
கண்கள் ஊற்றும் நீரைத் தடுக்க இயலாமல் ஏங்க வைத்தானடா
வலிமை இருந்த போதும் மிக எளிமையோடு இருந்தான்
வெள்ளை உள்ளம் கொண்ட எங்கள் கருப்பு காந்தி இவனே

No comments: