Thursday 9 April 2015

பெருந்தலைவர் - சீரிய பண்பாளர்

சிவகாசியில் பள்ளி ஒன்றின் ஆண்டு விழா. விழாவில் சிறப்பு விருந்தினராக முதலமைச்சர் காமராஜர் அவர்கள் அழைக்கப் பட்டிருந்தார். மாணவ மாணவிகளுக்கு பரிசுப் பொருட்கள் வழங்க ஏற்பாடாகி இருந்தது.

எதையும் ஆராய்ந்து செய்யும் பழக்கம் உடையவர் பெருந்தலைவர். காமராஜர் பேனாவை பரிசாக வழங்கும் போது பேனாவை திறந்து பார்த்தார்.  அந்த பேனாவில் ‘நிப்’ இல்லாமல் இருந்தது.  உடனே அருகில் இருந்தவரை அழைத்து “ஏம்பா! என்ன” என்று கேட்டார்.  பரபரப்புடன் அருகே நின்றவர்கள் பார்த்தார்கள். பெருந்தலைவர் கையிலிருந்த பேனாவில் ‘நிப்’ இல்லை.


உடனே பெருந்தலைவர் அவர்களிடம் ‘பாவம் சின்னப் புள்ளைங்க, பரிசுன்னு பேனா வாங்கிட்டுப் போனா நிப்பு இல்லாம இருக்கப் போகுது! முதலில் பேனாக்களை சரிபாருங்கள்’ என்று கூறியிருக்கிறார். எவ்வளவு பெரிய தலைவர் சின்ன விஷயங் களில் கூட கவனமாக இருந்திருக்கிறார்!


ஒரு காரியம் செய்யும் போது அது சிறிய காரியமாக இருந்தாலும் சரி, சிறிய பொருளாக இருந்தாளும் சரி, சம்பந்தப் பட்டவர் சிறியவராக இருந்தாலும் சரி, அது செம்மையாக செய்யப்பட வேண்டும் என்றிருந்தவர் பெருந்தலைவர்.


அதனால்தான் அவர் கர்ம வீரர்!!

No comments: