Wednesday 22 April 2015

பெருந்தலைவர் - நாட்டின் நல்லறமே தன்னலம்!

விருதுநகர் துணிக்கடை வியாபாரம் ... திருவனத்தபுரம் மரக்கடை வியாபாரம் என எதுவுமே கர்மவீரரின் இந்திய விடுதலை உணர்வை கட்டுப்படுத்த முடியவில்லை..கால்கட்டு ஓன்று போட்டுவிட்டால் எல்லாம் சரியாகிவிடும் என்று மாமன் மகள் ஒருவரை திருமணம் நிச்சயம் செய்ய ஏற்பாடு ஆனது .. தலைவரின் காதுக்கு எட்டியது .

"எனக்கு கல்யாண ஏற்பாடு செய்றீகளா?" என்று கேட்டார். பாட்டி தயக்கத்துடன் தலை அசைத்தார்..


"நாடு அடிமைப்பட்டுக் கிடைக்கிறப்போ , நான் எப்படிக் கல்யாணம் முடிச்சு , குடித்தனம் நடத்த முடியும் ? அதெல்லாம் இப்போ வேண்டாம்" என்றார்.

"நீ கட்சி வேலையை பாருப்பா .. ஆனா ஒரு பெண்ணை கல்யாணம் பண்ணிக்கிட்ட எங்களுக்கு துணிவா இருக்கும் , உனக்கும் ஆதரவா இருக்கும் " என்று சொல்லிப் பார்த்தார்கள்.

"எதுவா இருந்தாலும் நாடு சுதந்திரம் அடைஞ்ச பிறகுதான் பேசமுடியும் " என்று திருமணத்திற்கு முற்றுபுள்ளி வைத்தார்.

 பாட்டி பார்வதி அம்மாள், தாயார் சிவகாமி அம்மாள் திருமண பேச்சை விடுவதாக இல்லை. தொடர்ந்து பேசினால் தலையை ஆட்டிவிடுவான் என்று அக்கம் பக்கத்தினர் சொல்வதைக் கேட்டு அவ்வப்போது திருமண பேச்சை எடுத்தனர்.

"இந்த வீட்டுல இனியும் கல்யாணப் பேச்சை எடுத்திங்கன்னா, என் உயிரே போனாலும் , இங்கே வரமாட்டேன் " ஓங்கி குரல் குடுத்தார்.


அவ்வளவுதான். அதற்கு பிறகு அந்த வீட்டில் காமராஜருக்கு எதிரே கல்யாண பேச்சு எடுபடவில்லை.. தான் பெற்ற ஒரே மகனை முழுமையாக நாட்டுக்கு அர்ப்பனித்ததாக நினைத்து தன்னைத் தானே தேற்றிக்கொண்டார் அந்த தெய்வத்தாய்.


அன்பர்களே ..!
பண்ணிரண்டு வயதில் கஸ்தூரிபா கரம் பற்றிய கொண்டு விடுதலை வேள்விக்கு தனை தந்தார் - அந்த காந்தி .


இல்லறம் காணாது- நாட்டின்
நல்லறமே தனது வாழ்வென
இமயமாய் உயர்ந்து நிற்கிறார் -
இந்த கருப்பு காந்தி- இதை
இளையதலை முறைக்கு சொல்வது
நம் கடமையன்றோ ..!

No comments: