Saturday 10 January 2015

மதுரையில் ஜல்லிகட்டு

ஜல்லிகட்டு பெயர் காரணம்

ஜல்லி என்பது விழாவின் போது புளியங் கம்பினால் வளையம் செய்து காளையின் கழுத்தில் மாட்டப்படும் வளையத்தினைக் குறிக்கிறது. எனவே ஜல்லியை கட்டுதல் என்ற பொருளில் ஜல்லிக்கட்டு என்று பெயர் வந்ததாக சொல்லப்படுகிறது. அதேபோல 50 ஆண்டுகளுக்கு முன்பு புழக்கத்தில் இருந்த 'சல்லிக் காசு' என்னும் இந்திய நாணயங்களை துணியில் வைத்து மாட்டின் கொம்புகளில் கட்டிவிடப்படும் பழக்கம் இருந்தது. அவ்வாறு மாட்டை அடக்கும் வீரருக்கு அந்த பணமுடிப்பு சொந்தமாகும். இந்த பழக்கம் பிற்காலத்தில் 'சல்லிகட்டு' என்று மாறி பின்னர் 'ஜல்லிக்கட்டு' என்று ஆனதாக ஒரு கருத்து நிலவுகிறது. இதுதவிர தனித்தமிழில் ஏறுதழுவல் அல்லது ஏறுதழுவுதல் என்றும் ஜல்லிக்கட்டு குறிப்பிடப்படுகிறது. அதாவது ஏறு எனும் காளை மாட்டை ஓடவிட்டு அதை மனிதர்கள் அடக்குவது அல்லது கொம்பைப் பிடித்து வீழ்த்துவதான விளையாட்டு என்பதால் இப்பெயர் பெற்றது. தமிழகத்தை பொருத்தவரை மதுரை மாவட்டத்தில் ஆண்டு தோறும் முதலில் அவனியாபுரத்திலும், அதன் பிறகு பாலமேட்டிலும், பின்னர் அலங்காநல்லூரிலும் ஜல்லிக்கட்டு அடுத்தடுத்து நடத்தப்படுகிறது.

ஜல்லிகட்டு வகைகள்

தமிழ்நாட்டில் ஜல்லிகட்டு ஒவ்வொரு பகுதியிலும், ஒவ்வொரு விதமாக நடத்தப்படுகிறது. அதாவது மதுரை அலங்காநல்லூர் போன்ற இடங்களில் வாடிவாசல் வழியாக வெளியேறும் காளைகளை இளைஞர்கள் விரட்டிச் சென்று அதன் திமில் மீது தொங்கியபடி குறிப்பிட்ட தூரம் செல்ல வேண்டும். அதுவே ஒரு சில பகுதிகளில் 'வேலி மஞ்சுவிரட்டு' என்ற பெயரில் ஒரு திடலில் காளைகள் அவிழ்த்துவிடப்படுகின்றன. அவை எந்தக் கட்டுப்பாடும் இல்லாமல் ஓடுவதும் அவற்றை இளைஞர்கள் விரட்டி அடக்குவதும் நடைபெறுகிறது. அதேபோல வட தமிழகத்தில் 'வடம் மஞ்சுவிரட்டு' என்ற பெயரில், 20 அடி நீளக் கயிற்றால் காளையைக் கட்டி, இருபுறமும் காளையை ஆண்கள் இழுத்துப் பிடிக்க, ஒரு சிலர் மட்டும் அதன் முன்னே நின்று கொம்பில் உள்ள பரிசுப் பணத்தை எடுக்க முயல்கிறார்கள்.

No comments: