Sunday 25 January 2015

மிலிட்டரியும்-வெளிநாடும்

(இந்த பதிவில் வரும் கதாபாத்திரங்கள் அனைத்தும் கற்பனையே. யாரையும் புண்படுத்தும் நோக்கம் அல்ல)

அவர் அப்படி...இவர் இப்படி !
வெளிநாட்டுக்கு வேலைக்குப் போன இளைஞனும் மிலிட்டரிக்குப் போன இளைஞனும் விடுமுறையில் ஊருக்கு வருகிறார்கள். அவர்கள் என்ன ரவுசு பண்ணுவார்கள் என்பதுதான் இந்தக் கலகல லகலக...


வெளிநாடு
சென்ட் பாட்டில் எடுத்து வருவார் (ஊர்ல பாதிப் பேர் குளிக்காம இருக்கிறதுக்கு இவங்கதான் காரணம்).
பகல் 12 மணிக்கு வாசல் திண்ணையில் கட்டில் போட்டு படுத்துக்கொண்டு போவோர் வருவோரிடமெல்லாம் 'இங்கே இப்போ பகல்னா, ஃபாரீன்ல ராத்திரி. இந்த டைமுக்கு அங்கே தூங்கிட்டு இருப்பேன், அதே பழக்கம்தான் வருது’ என்பார்.
கத்திரி வெயிலில் ஜீன்ஸ், ஜெர்கின் வகையாறாக்களை அணிந்துகொண்டு அதற்கு மேல் தங்கச் செயின்கள், மோதிரங்கள், வாட்ச், பிரேஸ்லெட் அணிந்து வருவார்.
ஆங்கிலம் கலந்த தமிழ் பேசுவார் (அடிக்கடி ஓகே என்பார்).


மிலிட்டரி
சரக்கு பாட்டில் எடுத்து வருவார் (டாஸ்மாக் லீவு விட்டா, இவர் குடும்பம் 'குடி’மகன் சேவையைத் தொடங்கிடுவாங்க). (நம் ஊர் ஆளுங்க ரொம்ப விவரம். மிலிட்டரி சரக்கு அடிச்சிட்டு, அது தெரியாம இருக்க ஃபாரீன் சென்ட் இஸ்க் இஸ்க்).
விடிகாலை நான்கு மணிக்கு ரன்னிங் போவார் (மிலிட்டரியில ஓடாம ஏமாத்தினா லும் ஊர்ல விடாம ஓடுவார். 'இதென்ன சிம்பிள். அங்கே மணல் மூட்டை தூக்கிட்டு மலை மேல ஏறணும்’ என்பார்).
கத்திரி வெயிலிலும் மிலிட்டரி டிரெஸ், பூட்ஸ், பெல்ட் அணிந்துகொண்டு வலம் வருவார்.
இந்தி கலந்த தமிழ் பேசுவார் (அடிக்கடி டீக்ஹை என்பார்).



இருவருக்கும் பொதுவான சில அட்டகாசங்கள்:
இருவரும் கூலிங் கிளாஸ் அணிவார்கள். வெயில் தாங்கலையாம்.
இருவரின் பின்னாடியும் சுற்றுவதற்கு நான்கைந்து பேர் இருப்பார்கள்.
'இந்த ஊரு இன்னும் அப்படியே இருக்கு. எப்பதான்டா மாறும்?’ என்ற டயலாக்கை இருவருமே அடிக்கடி உச்சரிப்பார்கள்.

ஒவ்வொரு விடுமுறைக்கு வரும்போதும் பெண் பார்க்கும் படலத்தைத் தொடங்குவார்கள். வரன் அமைவதற்குள் விடுமுறை முடிந்துவிடும்.
மாசாமாசம் அனுப்பிவெச்ச காசையெல்லாம் என்ன பண்ணீங்க என்று அப்பாவிடமோ, அண்ணனிடமோ கணக்கு கேட்டு, கடைசி நேரத்தில் சண்டை பிடிப்பார்கள்.
லீவு முடிந்து போகும்போது ஊரில் எல்லோருடைய போன் நம்பரையும் வாங்கிப் போவார்கள். அவர்களும் போன் பண்ண மாட்டார்கள். இவர்களும் போன் பண்ண மாட்டார்கள்!

No comments: