Sunday 25 January 2015

ஜம்மு காஷ்மீர் ஐகோர்ட்டு தலைமை நீதிபதியாக நாரயணன் நாடார் பால் வசந்தகுமார் அவர்கள் நியமனம்.

ஜம்மு காஷ்மீர் ஐகோர்ட்டு தலைமை நீதிபதியாக நாரயணன் நாடார் பால் வசந்தகுமார் அவர்கள் நியமனம். ஜனாதிபதி 23ம் தியதி உத்தரவு பிறப்பித்தார்





சென்னை, ஜன.23-
சென்னை ஐகோர்ட்டில் மூத்த நீதிபதியாக இருப்பவர் என்.பால்வசந்தகுமார். இவரை, ஜம்மு காஷ்மீர் மாநில ஐகோர்ட்டு தலைமை நீதிபதியாக நியமிக்க சுப்ரீம் கோர்ட்டு மூத்த நீதிபதிகள் குழு, ஜனாதிபதிக்கு பரிந்துரை செய்தது. இந்த பரிந்துரையின் அ டிப்படையில், நீதிபதி என்.பால்வசந்தகுமாரை, ஜம்மு காஷ்மீர் மாநில ஐகோர்ட்டின் தலைமை நீதிபதியாக நியமித்து, ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி ஜனவரி 23ம் தியதி மாலையில் உத்தரவினை பிறப்பித்தார்.
இந்த உத்தரவு, சென்னை ஐகோர்ட்டுக்கு அன்று இரவு வந்தது. இதையடுத்து, இந்த மாதம் இறுதியில், ஜம்முகாஷ்மீர் ஐகோர்ட்டு தலைமை நீதிபதியாக பால்வசந்தகுமார் பதவி ஏற்க உள்ளதாக கூறப்படுகிறது.
கன்னியாகுமரி மாவட்டம், மார்த்தாண்டத்தை சேர்ந்த பால்வசந்தகுமார், 1955-ம் ஆண்டு மார்ச் 15-ந் தேதி பிறந்தார். இவர், எம்.ஏ., எம்.எல். பட்டம் பெற்று, 1980-ம் ஆண்டு வக்கீலாக பதிவு செய்து, ஐகோர்ட்டில் வக்கீலாக பணியாற்றினார். கடந்த 2005-ம் ஆண்டு டிசம்பர் 10-ந் தேதி சென்னை ஐகோர்ட்டு நீதிபதியாக பதவி ஏற்றார் என்பது குறிப்பிடத்தக்கதாகும். 


செய்தி:
http://www.dailykashmirimages.com/news-justice-nn-paul-vasantha-kumar-is-new-jk-chief-justice-71573.aspx

No comments: