Wednesday 7 January 2015

சான்றோர் எழுச்சியும்-சங்கங்களும்

தமிழகத்தில் நாயக்கர்களின் ஆட்சி நாடார்  மக்களுக்கு ஒரு பெரிய இருண்ட காலம் என்றுதான் கூற வேண்டும். நாடாண்ட மக்களை இருண்ட காலத்திற்குள் செலுத்திய பெருமை வடுகர்களுக்கு உண்டு. வெள்ளாளர்களிடமும், கள்ளர்களிடமும் பிற உயர் சாதியினரிடமும் இருந்து பல பெரிய இன ஒழிப்பு கலவரங்களை எல்லாம் கடந்து வந்திருக்கிறார்கள் நம் முன்னோர்கள். இதில் இருந்து மீண்டு பெரும் தொழில் சாம்ராஜ்ஜியங்களை படைக்க நாடார் பெருமக்கள் பட்ட பாடுகளும் அவமானங்களும் அவஸ்தைகளும் கஷ்டங்களும் கொஞ்ச நஞ்சம் அல்ல. அன்று அவர்கள் கஷ்ட்டப்பட்டு மீட்டு குடுத்ததை நாம் மீண்டும் இழந்து விடுவோமோ என்ற அச்சத்தில் பதிகிறேன் இதை!! உண்மை உணருங்கள் நாடார் மக்களே. 
திருச்செந்தூர் கோவிலில் நாடார்கள் உள்ளே நுழைய முடியாது. வெளியில் இருந்துதான் தேங்காய் உடைத்து சாமி கும்பிட வேண்டும். 1872இல் இதை மீறி ஏழு நாடார்கள் உள்ளே நுழைந்தனர். கோவில் நிர்வாகம் இவர்கள் மீது வழக்குத் தொடுத்தது. சவரம் செய்பவர், துணி வெளுப்பவர் போன்ற இதர கீழ்ஜாதியினர் கொடிமரம் வரை செல்ல அனுமதியிருக்கும்போது நாடார்கள் உள்ளே நுழைந்ததால் கோவில் புனிதம் கெட்டுவிடாது எனக்கூறி விடுதலை செய்தது. இதனால் நாடார்கள் கொடிமரம் வரை செல்ல முடிந்தது.


1874இல் மூக்க நாடார் மதுரை மீனாட்சியம்மன் கோவிலுக்குள் கிளி மண்டபம்வரை சென்றுவிட்டார். அடையாளம் கண்டுகொண்ட கோவில் பணியாளர்கள் அவரைக் கொன்றுவிட்டனர். நாடார்கள் பணியாட்கள் மீது வழக்குத் தொடுத்தனர். கோவிலுக்குள் நுழைய நாடார்களுக்கு உரிமையில்லை என நீதிபதி தீர்ப்பளித்து விட்டார்.
1876_78இல் ஷ்ரீவில்லிபுத்தூர் தாலுகா திருத்தங்கலில் கோவில் உள்ளே நுழைய நாடார்கள் போராட்டம் நடந்தது. மாவட்ட நீதிபதி தடை உத்தரவு பிறப்பித்து கோவிலைச் சுற்றியுள்ள தெருக்களில் ஊர்வலம் செல்ல அனுமதி அளித்தார்.
1885இல் கமுதி கோவிலுக்குள் நுழைய அனுமதி கேட்டனர். கோவில் நிர்வாகம் காணிக்கையை உயர்ஜாதியினர் மூலம் கொடுத்துவிடச் சொன்னது. நாடார்கள் மறுத்துவிட்டனர். கோவில் நிர்வாகம் அனைத்து ஜாதியினரையும் நாடார்களைப் ஒதுக்கி வைக்க வைத்தது.
1890இல் திருச்சுழி கோவிலுக்குள்ளும், மதுரை கோவிலுக்குள்ளும் நாடார்கள் செல்ல முயன்றபோது அபராதம் விதிக்கப்பட்டது.
1897இல் இருளப்ப நாடார் தலைமையில் ஐந்தாறு நாடார்கள் காவடி எடுத்துக்கொண்டு இரவில் கோவிலுக்குள் நுழைந்தனர். பூசாரி பூசை செய்ய மறுத்தார். அவர்களே தேங்காய் உடைத்து வழிபாடு நடத்தினர். கோவில் நிர்வாகம் வழக்குத் தொடுத்தது. கோவிலில் நுழைய நாடார்களுக்கு உரிமையில்லை. கோவிலைச் சுத்தம் செய்ய ரூ.500/- நாடார்கள் தரவேண்டும் என கீழ்க்கோர்ட்டில் தீர்ப்பளிக்கப்பட்டது. உயர் நீதிமன்றத்திலும், இங்கிலாந்து பிரிவி கவுன்சிலும் இதையே உறுதி செய்தது.
1895இல் சிவகாசி கோவில் தர்மகர்த்தா தன் பதவியை ராஜினாமா செய்தார். அந்தப் பதவியை நாடார்கள் கேட்டனர். சிருங்கேரி சங்கராச்சாரியின் ஆணைப்படி மறுக்கப்பட்டது.
1896இல் கோவிலுக்குள் நுழைய முயன்றனர். கோவில் கதவுகள் மூடப்பட்டன. பூட்டை உடைத்து உள்ளே போய் தரிசனம் செய்தனர். மோதல்கள் நடந்தன. 1899இல் கலவரம் வெடித்தது. பல உயிர்கள், சொத்துகள் நாசமாயின.
இப்படிப் பல்வேறு சூழல்களால் 1910இல் நாடார் மகாஜன சங்கம் உருவாக்கப்பட்டது.


நாடார்களுக்கு என முதலில் சத்திரிய மகாஜன சங்கம் மதுரையில் 1895ல் தொடங்கப்பட்டது. ஆனால் வெற்றியடையவில்லை. பொறையார் ரத்தினசாமி நாடார் மிகப்பெரும் செல்வந்தர். ஆவர் பழைய சென்னை மாகாணத்தின் மதுபான விற்பனை உரிமையை பிரிட்டிஸ் அரசிடம் பெற்றிருந்தார். அக்காலத்தில் உயர்ஜாதி மற்றும் ஆதிக்க சாதிகளின் பிரதிநிதிகள் சட்டசபையில் இடம்பெறுவர். நாடார் பிரதிநிதிகள் யாரும் கிடையாது. ரத்தினசாமி நாடார் பலமுறை அரசை கேட்டும் அந்த முயற்சி பயனளிக்கவில்லை. அந்த சமயம் அரசியல் பிரதிநிதித்துவம் பெறவும், தாழ்ந்த நிலையில் இருக்கும் நாடார் சமுதாயத்தை மேம்படுத்தவும் ஓர் சங்கம் தேவை என உணர்ந்து திரு. ரத்தினசாமி நாடார் அவர்களால் 1910 ம் ஆண்டு தொடங்கப்பட்டது. தான் நாடார் மகாஜன சங்கம். அவரது காலத்தில் சொந்த செலவிலே சங்கத்தை வளர்த்தார். மிகவும் வேகமாக வளர்ந்தது சங்கம். அவரது மறைவிற்கு பின் சங்க செயல்பாடுகள் சற்று தளர்ந்தது. நாடார் சமுதாயத்தின் பிரதிநிதியாக நாடார் மகாஜன சங்கம் செயல்பட்டது. நாடு முழுவதும் உறுப்பினர்கள் சேர்க்கப்பட்டனர்.

    பட்டி வீரன் பட்டி சௌந்திரபாண்டியன் அவர்களால் நாடார் சங்கம் மீண்டும் புத்துயிர் பெற்றது. அவர், அப்பதவியில் 1920 ஆம் ஆண்டிலிருந்து 1930 ஆம் ஆண்டு வரை செம்மையாக செயல்பட்டு, நாடார்களுக்காக பல நலத்திட்டங்களும், உதவிகளும் செய்து வந்தார். கேரள மாநிலத்தில் வசிக்கும் ஈழவர்கள் நாடார்கள் என அறிவிக்கப்பட்டு சங்கத்தில் சேர்க்கப்பட்டனர். நாடார்களின் உட்பிரிவுகளை அரசு ஊக்கப்படுத்துவதாக ஆதங்கம் தெரிவித்தனர்.1963ம் ஆண்டு நாடார் சமூகம் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் பட்டியலில் இடம்பெற்றது .
    நாடார் மகாஜனசங்கம் போல தெட்சிணமாற நாடார் சங்கமும் பழமையும் பெருமையும் வாய்ந்தது. மதுரை கீழவெளி வீதியின் வடகிழக்கு மூலையில் தெட்சிணமாற நாடார் சங்கப் பேட்டை. அமைந்துள்ளது.  500 ஆண்டுகள் பழமையான இந்த வணிகப் பேட்டை தொடக்கக் காலத்தில் 3 ஏக்கர் பரப்பளவில் அன்றைய வைகைக் கரை யோரம் அமைந்து கால வெள்ளத்தில் கரைந்து இன்றைக்கு ஒரு ஏக்கர் பரப்பளவில் சுருங்கிய நெல்பேட்டையாய் பெயர் நிலவி வருகிறது. அப்படியானால் இதன் பழமையை புரிந்து கொள்வீர்கள் என கருதுகிறேன்.  இச்சங்கம் ஆறுமுகநேரியை சேர்ந்த ராஜா பலவேசமுத்து நாடார் அவர்கள் தலைமையில் பல சாதனைகளை செய்தது. பேட்டைகளில் தொழில் செய்து வந்த நாடார்களுக்கு இச்சங்கம் பக்கபலமாக இருந்தது. இச்சங்கமும் பல்வேறு இடங்களில் பள்ளிகளையும், கல்லூரிகளையும் மற்றும் வணிக வளாகங்களையும் கொண்டுள்ளது.

    நாடார் மகாஜனங்களே இது போல் பல கஷ்டங்களையும் பெருமைகளையும் கொண்டது நம் வரலாறு. தயவு செய்து நமக்கு உதவாத மதங்களின் பெயரால் பிரிவினை வேண்டாம்.

No comments: