Monday 5 January 2015

தக்கனபிழைத்துவாழ்தல் - Survival Of The Fittest

முன்னுரை
இது அனிமல் பிளானட், நேஷணல் ஜியாக்கிரஃபி விசயம் அல்ல. முதலில் வரும் காடுகளும் மிருகங்களும் அனைத்தும் உதாரணங்களே. முக்கியமான விசயங்கள் அனைத்தும் கீழே வருகின்றன.
காடுகள்
அடர்ந்த மரங்களும் செடிகளும் மிருகங்களும் வாழ்வதுதான் காடா? காடு என்பதன் பொருள் என்ன? காடுகளின் வகைகளுல் நாம் வாழும் கட்டிட உலகையும் காடு என்றே கூறலாம். காடுகள் எனும் போது அங்கு உள்ள உணவு போராட்டம் நம் கண் முன் நிற்கும். ஆனால் காட்டு வாழ்க்கை நாம் நினைப்பது போல் இல்லை என்பதே உண்மை!! பெரும்பாலும் நாம் நினைப்பதெல்லாம் காட்டில் வாழும் இரை மிருகங்களான (Prey) மான்கள், மாடுகள், போன்ற தாவர உண்ணிகளின் வாழ்க்கையே கஷ்டம் என கருதுகிறோம். ஒரு முக்கியமான உண்மை தெரியுமா??! இந்த இரை மிருகங்களை வேட்டையாடி உன்னும் கொன்று திண்ணிகளான (Predator) சிங்கம் புலிகளின் வாழ்க்கைகளே கடினமானது!! மான், வரிக்குதிரை, காட்டு மாடுகள் போன்ற மேய்ந்து உண்ணும் இரை மிருகங்கள் மழை மேகங்களை பின் தொடர்ந்து சென்று புல் காட்டில் மேய்ந்து மழை பருவத்தில் குட்டியும் ஈன்று விடுகின்றன. இவற்றிற்கு எல்லை கிடையாது, எங்கு வேண்டுமானாலும் சென்று மேயலாம்! ஆனால் கொன்று தின்னிகளின் வாழ்க்கை அப்படி அல்ல!! புலி சிங்கம் போன்றவற்றின் குட்டிகளில் ஆறில் ஐந்து ஒரு வயது ஆகும் முன்னரே இறந்து விடுகின்றன!! அவற்றில் நாலு சாவது போதிய உணவின்மையாலேயே!!



வேட்டையில் சிங்கங்களின் வெற்றி சதவிகிதம் (Success Rate) 17-19% தான்!! அதாவது நூறு வேட்டை முயற்சியில் 17 - 19 முயற்சிதான் வெற்றி!  புலி 10% தான்!! சிறுத்தை புலி (Leopard) 15%, சிறுத்தை (Cheetah) 50%. இதிலும் இவை தங்கள் வேட்டையாடிய உணவை பொறுக்கி திங்கும் மிருகங்களான (Scavengers) கழுதைப் புலிகள் போன்றவற்றிடம் இருந்து காப்பாற்றுவது பெரும் விசயம்!! இதில் உணவுச் சங்கிலியின் முதலிடத்தில் இருப்பதும் அவசியம். எல்லா கலைகளிலும் தேர்ச்சி பெரும் மிருகங்களே முழு ஆயுளை எட்டும்!! இதைதான் தக்கனபிழைத்துவாழ்தல் (Survival Of the Fittest) என்பார்கள். இவ்வளவு நேரம் சொன்னது எல்லாமே உவமைகள்தான் இனிமேல் முக்கியமான விசத்துக்கே வரப் போகிறேன்!!




கட்டிட காடுகள்
நாம் வாழ்வதும் காடுதான். காடுகள் மரம் செடி அடர்ந்து இருக்கும் போது நாம் கட்டிடங்கள் அடர்ந்த காடுகளில் வாழ்கிறோம். மனிதனும் இயற்கையிலேயே கொன்று தின்னிதான். அதனால் தான் நமக்கு கண்கள் முன்புறம் அமைந்துள்ளன. வேட்டைக்கான தூரத்தை கணக்கிடுவதற்கான முப்பரிமானம் இரண்டு கண்களும் முன்புறம் இருந்தால் தான் கிடைக்கும்! ஆனால் இப்போது மனிதன் தனக்குள் இரை, கொன்று தின்னி, பிடுங்கி தின்பவர், பொறுக்கி தின்பவர் என பிரித்துக் கொண்டான். இதில் பயனாளர்கள் (Consumers) அனைவரும் இரைகள் தான்!! இப்போதெல்லாம் காசு வாங்கிக் கொண்டு ஓட்டு போடுவதால் வாக்காளனும் பயனாளிதான்!! நம்மிடம் தொழில் பண்ணும் அனைவரும் கொன்று தின்னிகள்தான். கார்ப்பரேட் நிறுவணங்கள் அனைத்துமே பிடுங்கி தின்னிகள்தான். அரசியல்வாதிகளே பொறுக்கி தின்னிகள். உணவு சங்கிலியின் முதலிடத்தில் உற்பத்தியாளனும், வியாபாரியும் இருந்தாலும் பிடுங்கி தின்னும் கார்ப்பரேட் நிறுவனங்களே வெற்றி விகிதத்தில் முதலிடத்தில் இருக்கின்றன, இருவரிடமும் பொறுக்கி தின்னும் அரசியல்வாதியும் எந்த குறையுமில்லமல் இருக்கிறான். காட்டில் வாழும் சிங்கம் புலி போன்ற கொன்று தின்னிகளும் சரி, கழுதை புலி போன்ற பிடுங்கி தின்னிகளும் சரி, நரி போன்ற பொறுக்கி தின்னிகளும் சரி, மான் போன்ற இரை மிருகங்களும் சரி யாரும் ஒருவரும் ஒருவர் குறை சொல்வதில்லை!! போராடி ஜெயிக்கின்றன் இல்லை சாகின்றன. 





தக்கனபிழைத்துவாழ்தல்
சிறந்த போராளி மிருகம் நின்று வாழ்கிறது. மனிதனுக்கும் அதுவே. சும்மா அவன் ஏமாற்றினான், துரோகம் செய்தான் என்று புலம்புவதை விட்டுவிட்டு அவரவர் தோல்விகளிலும் வெற்றிகளிலும் பாடம் கற்றுக் கொள்ளுங்கள். உங்கள் தோல்வியை அலசும் அதே பார்வையோடு உங்கள் வெற்றியையும் அலசுங்கள். நீங்கள் இரையா, கொன்று தின்னியா, பிடுங்கி தின்னியா இல்லை பொறுக்கி தின்னியா என்பதை உங்கள் திறமைகளை கொண்டும் இடத்தை கொண்டும் தீர்மானியுங்கள். பின்னர் அந்த திறமையை வளர்த்துக் கொள்ளுங்கள். உங்களால் இரை மிருகமாகத்தான் வாழ முடியும் என்றால் மழை மேகங்களை பின் தொடர்ந்து புல்வெளிக்கு செல்லுங்கள். விழிப்புடன் இருந்து இரையாகாமல் தப்பியுங்கள். கொன்று தின்னி (வியாபாரி என்றால்) இரையை வீழ்த்த அனைத்து உத்தியையும் கடை பிடியுங்கள்! உங்கள் இரையை பிடுங்கி தின்னிகள் பிடுங்கி செல்லாமல் தற்காத்துக் கொள்ளுங்கள். பிடுங்கி தின்னிகளும், பொறுக்கி தின்னிகளும் தங்கள் வேலையை செவ்வனே செய்து கொண்டுதான் இருக்கின்றன!!! மிருகங்கள் தங்கள் வாழ்க்கைகாக இறைவனையோ தாய் தந்தையரையோ, உறவினரையோ நொந்து கொள்வதில்லை. தங்கள் திறமைகளை வளர்த்துக் கொள்கின்றன. இரை மிருகமாக பிறந்துவிட்டோம் என்றோ, கஷ்டப்பட்டு வேட்டையாட உண்ண வேண்டிய கொண்று தின்னி ஆகிவிட்டோம் என்றோ வருத்தப் படுவதில்லை. அது அது தன் தேவைக்கேற்ற திறமையை வளர்த்துக் கொண்டு வாழ்நாளை அதிகமாக்கிக் கொள்கின்றன. 




இது மனிதருக்கும் பொருந்தும் விதியையோ, கடவுளையோ நோவதை விட்டு விட்டு போராடுங்கள் தங்கள் பாத்திரம் அறிந்து விழிப்புடன் இருங்கள். இரையாகாமல் இருக்கவும், வேட்டையாடவும், இரையை காப்பற்றிக் கொள்ளவும் விழிப்புணர்ச்சி அவசியம். தக்கனபிழைத்துவாழ்வோம் நன்பர்களே.

1 comment:

Unknown said...

விரிவாக உணர்த்தியதுக்கு நன்றி