Saturday 17 January 2015

தமிழன்-வரலாறு-சனநாயகம்

இதுதான் தமிழன் (என்னையும் சேர்த்துதான்!) கிட்ட எனக்கு ரொம்ப பிடிச்ச விசயம்! தன் வீட்ல எழவே விழுந்தலும் #கிரிக்கட்டையும் , #நெடுந்தொடரையும் பார்த்த உடனேயே எல்லாத்தையும் ம்றந்துடுவான். தோணி ஓய்வு பெறப் போறஹா சொன்னப்ப காட்டிய அதிர்ச்சியில் 1 சதவிகிதம் கூட #சல்லிகட்டு தடைக்கு காட்டல!! #விஜய் படம் சரியான நேரத்தில் வெளியிடப்படவில்லை என்பதில் காட்டுன ஆக்ரோசத்துல 0.5 சதவிகிதம் கூட தன் பாரம்பரிய வீர விளையாட்டான #சல்லிகட்டு நடக்காததுக்கு காட்டல. மராட்டிய #ரஜினிக்கு வக்காலத்து வாங்குன மக்கள்ல 0.25 சதவிகிதம் கூட தன் பாரம்பரிய இன மாடுகளுக்காக அழியப்போவத்ற்கு  வக்காலத்து வாங்கல.





தன் இன மீனவன் செத்தாலும்  நோ ரியாக்‌ஷன்!! தனக்கு சோறு போடும் நெற் கலஞ்சியமான தஞ்சை #மீத்தேன் திட்டத்தால் அழியப்போவதற்கும் நோ ரியாக்‌ஷன்!! தேனியில நிம்மதியா விவசாயம் பண்ணிகிட்டு இருந்தவனுக்கு ஆப்பு வைக்க #நியூட்ரினோ ஆய்வு மையம்-நோ ரியாக்‌ஷன்!! பள்ளிகூடமா திறந்த ஊர்ல #டாஸ்மாக்கா திறந்தாலும் நோ ரியாக்‌ஷன்!! தினம் வந்து போய் கிட்டு இருக்கிற தெரு குண்டும் குழியுமா இருந்தாலும் நோ ரியாக்‌ஷன்!! தினமும் பச்சைக் குழந்தைகள் பாலியல் தொல்லையால் கொலையுண்ட போதும் நோ ரியாக்‌ஷன்!! (அது டெல்லியா இருந்தா மட்டும் சமூக வலைத்தளத்தில் மட்டும் பயங்கர ரியாக்‌ஷன்!!!) காவேரில தண்ணி வரலைன்னாலும் நோ ரியாக்‌ஷன்!! ஏன்னா அது தமிழக விவசாயி பிரச்சினை. (விவசாயி இல்லைன்னா புவ்வாவுக்கு வழி இல்லைன்னு உறைக்காது மரமண்டைக்கு - நான் என்னைய சொன்னேன்!!) முல்லை பெரியாறு கொள்ளையே போனாலும் நோ ரியாக்‌ஷன்!!




நடிகனுக்கும், கிரிக்கட் வீரனுக்கும், தொலைக்காட்சி நிகழ்ச்சிக்கும் அடிமை பட்டு இருக்கும் வரைக்கும் தமிழா (என்னையும் சேர்த்துதான்!!) நீ அரசியல்வாதியையோ சமூகத்தையோ குறை சொல்வதற்கு தகுதியில்லை. தியேட்டர்ல என்னிக்கு பிளாக்ல டிக்கட் வாங்க ஆரம்பிச்சமோ அன்னிக்கே சமூகம் சீரழிஞ்சிருச்சு. வாய் கிழிய தமிழன் வரலாறு மறைக்கப் பட்டதா கூப்பாடு போடுறவங்கள்ல எத்தனை பேருக்கு அவங்க குடும்ப வரலாறு தெரியும்??!! முக்கால் வாசி பேருக்கு தன் மூதாதையர் வரலாறு, தன் குல வரலாறு, தன் ஊர் வரலாறு தெரியாது. மொதல்ல அவனவன் வரலாற அவனவன் தெரிஞ்சிகிட்டாலே போதும் தமிழன் வரலாறு தானா கண்டெடுக்கப் பட்டுடும்!! சமூகத்தையும் அரசாங்கத்தையும் குறை சொல்றதுக்கு முன்னாடி நாமளும் அதில் ஒரு அங்கம்ங்கிறத மறந்துடக்கூடாது!!

 //மன்னன் எவ்வழியோ மக்கள் அவ்வழி//ன்னு சொல்றதுக்கு நாம ஒன்னும் மன்னராட்சியில் வாழல!! மக்கள் எவ்வழியோ அரசும் அவ்வழின்னு சொல்ற சனநாயகத்தில் வாழ்கிறோம். இன்னிக்கு உன் கூட உன்னை போலவே இருப்பவன் தான் நாளை அரசியல்வாதியாகவும் தலைவனாகவும் ஆகிறான். ஒன்னு நல்லா சொல்றேன் கேட்டுக்கோங்க!! இந்த சனநாயகத்தில் மக்களுக்கு என்ன மாதிரியான மனநிலை இருக்கோ அது போலவே அரசுக்கும் இருக்கும்!! உன் போக்கு நடிகன், கிரிக்கட், தொலைக்காட்சி, குடி, இலவசம்னு செல்லும் போது மக்களுக்கு மக்களால் தேர்ந்தெடுக்கப் படும் அரசின் போக்கும் அப்படியேதான் இருக்கும். உனக்கு என்ன தகுதி இருக்கிறதோ அதற்கேற்ற தலைவனும் அரசும் தான் உனக்கு கிடைக்கும். உன் தகுதிக்கு மீறிய எதுவும் உனக்கு கிடைக்காது!! ஊதற சங்க நாம ஊதி வைப்போம்!!

No comments: