Friday 2 January 2015

தமிழ் என்ற ஒரு மொழி இருந்தது!!! தமிழன் என்ற இனமும் இருந்தது!!!


முறுக்கிய மீசைகளை முற்றும் வழித்துவிட்டு மனத்தில் உள்ள வீரத்தை,மானத்தை அடியோடு ஒழித்துவிட்டு வரலாற்றைப் பற்றி பேசும் கூடமாக மாறிவிட்டார்கள்!!! வேறு யாரும் அல்ல... நம்மைப் பற்றி புறம் பேசும் "நண்பர்கள்"... ஆம் நம்மை நெஞ்சில் ஏறி மிதித்தாலும் நட்பு பாராட்டுவதுதான் தமிழன் புதிதாகக் கற்றுக்கொண்ட பாடமோ??
மற்ற கண்டங்களில் மனிதன் கூட இல்லாத காலக்கட்டத்தில், நாகரீகமாக வாழ்ந்து இந்த உலகையே ஆண்டோம் என்ற பெருமையுடைய நாம் இப்போது தண்ணீர் என்று கேட்டால் தனிநாடு கேட்பதுபோல் கண்டனம் விடும் அளவுக்கு வெறுமையாகி விட்டோமா!!
இன்று மேல்நாட்டவர்கள் ஸ்கை ஸ்க்ராப்பர்ஸ் என்று பெருமிதம் தட்டுகிறார்கள் ஆனால் அந்த மேல் நாட்டவர்களை திரும்பிப் பார்க்க வைத்த கல்லணையை கட்டியவன் கரிகாலப் பெருவளத்தான்.


நம் சகோதரத் தமிழனை யாராவது அடித்தால் அதை கேட்கக்கூட நேரமில்லாமல் மரத்துப்போன நாம் தமிழ் மறவர் வழித்தோன்றல் என்பதை மறந்துவிடக்கூடாது...
தமிழகத்தை பகுதி பகுதியாக ஆண்ட பேரரசுகளும், சிற்றரசுகளும் இன்று சாதி என்ற அரை வட்டத்தினுள் ஆட்சி செய்கிறது.அன்று மட்டும் எம் முப்பாட்டன்கள் சேர சோழ பாண்டியன் நிலத்துக்காக ஒருவரையொருவர் போர் புரியாமல் இருந்திருந்தால் இன்று நாம் மிகப்பெரிய சாம்ராஜ்யமாக விளங்கியிருக்கலாம்... சீனா மட்டும் இப்போது செய்தது போல அன்று நம்மிடம் செய்திருந்தால் மறுநாளே அவன் சிரசை துண்டித்து நம் வீரத்தை காட்டியிருப்பான். ஆனால் இன்றோ அரை குவளை மது உள்ளே சென்றால் வருவது தான் வீரம் என்று நினைக்கும் கூட்டமாக மாறிவிட்டோம்.மிகப்பெரிய கட்டிடக்கலைகளை கடலுக்கு தாரை வார்த்துவிட்டு செங்கற்களை வீடு என்று சொல்லிக்கொண்டிருக்கும் கூட்டமாக மாறிவிட்டோம்..


உன் குடும்பத்தில் உன் முன்னோர்கள் போர்க்கலையில் சிறந்தவர்கள் என்பதை மறந்து விடாதே!!! உன்னுள்ளும் வீரம் ஒளிந்திருக்கும்,நேரம் வரும் வெளிக்கொணரு!!உன்னிடம் இருந்து பிரிந்து போன கூட்டங்கள் உன் முதுகில் குத்த ஆரம்பித்து விட்டன...
இன்று கடவுளாக கும்பிடும் சிவனும் பார்வதியும் நம் பாட்டன் பாட்டி தான் என்பதை மறக்காதே!!
நீதியில் மனுநீதிச் சோழனாயிரு
வீரத்தில் மருது பாண்டியனாயிறு
ஆட்சியில் ராச ராச சோழனாயிறு
கொடையில் கடையெழு வள்ளல்களாக இரு
தமிழ் என்ற ஒரு மொழி இருந்தது!!! தமிழன் என்ற இனமும் இருந்தது!!!இப்படி உன்னை உலகம் கூறுவதற்குள் உன் தமிழ்ச் சொந்தங்களை எழுப்பி விடு..
நன்றி: thiyagarajan ganesan
பதிவு: thiyagarajan ganesan

No comments: