Thursday 2 July 2015

பொன்வண்டு கால நினைவுகள்...

அன்றைய சின்ன குழந்தைகளின் செல்லபிள்ளை...

பொதுவாக எந்த வண்டுகளுமே... நமக்கு பிடிப்பதில்லை... விதிவிலக்காக ..பொன்வண்டு மற்றும் சில்வண்டு.... இரண்டும்.... நம் மனதோடு... கலந்தவை...

முன்பு எங்கள் வீட்டில் பெரியவர்கள் வேட்டைக்கு சென்று திரும்பும்போது காடை, கவுதாரிகள், முயல்களால் வீடு நிறைந்திருக்கும். அவற்றோடு சிறுவர்களான நாங்கள் விளையாட இந்த பொன்வண்டுகளையும் பிடித்து அடடைப் பெட்டிகளில் அடைத்து கொண்டு வருவார்கள். விருதுநகர் உள்தெரு சந்தையிலும் புரட்டாசி மாசங்களில் சிறுவர்களுக்கு விற்பனைக்கு வரும்!

கொன்றை வாவை மரங்கள் செழித்து வளரும் பருவத்தில் அதிகமாக தென்படும் பொன்வண்டு பல வண்ணங்களில் பலவிதங்களில் காணப்படும். மினுமினுக்கும் வண்ணங்களில்  ஜொலிக்கும் தொட்டு பார்த்தால் வழுக்கிகொண்டு செல்லும் அளவு நேர்த்தியான வடிவமைப்பு!

வெளிநாடுகளில் ஆபரணங்கள் செய்ய பொன்வண்டு  பயன்படுத்தப்படுவதாக இணையத்தில் படித்தேன் ..

குழந்தை பருவத்தில் இவற்றை பிடித்து நூல் கட்டி விளையாடியதுண்டு அப்போது விர்ரென பறந்து ரீங்காரமிடும் பள்ளிக்கு செல்லும்போது தீபெட்டியில் அடைத்து வைத்து கொன்றை ,வாவை இலைகளை துண்டாக்கி உணவாக வைத்து பள்ளிக்கு கொண்டு செல்வோம். மாலையில் சிலவேளை சின்னதாக முட்டையும் இடப்பட்டிருக்கும்.

இவை பெரும்பாலும் புரட்டாசி மாதத்தில் வெள்வேல் மரங்களில் அதன் இலைகளைத் தின்று வாழும்.

ஆனால் சமீப காலங்களில் இது கண்ணில் காண்பதே அரிதாகிவிட்டது. எனது பிள்ளைகளுக்குக்கு விளையாடக் கொடுப்பதற்காக வெள்வேல மரங்களில் தேடிப் பார்த்துக் கிடைக்காமல் இப்போது அந்த முயற்சியைக்கூடக் கைவிட்டுவிட்டேன். 

ரசாயன உரங்ளையும் பூச்சிக்கொல்லிகளையும் பயன்படுத்தத் துவங்கியபின்பு நாம் இழந்துவரும் உயிரினங்களில் இந்தப் பொன்வண்டையும் சேர்த்துக்கொள்ள வேண்டியதுதான்! யாரேனும் பார்த்திருந்தால் சொல்லுங்கள் காதிலாவது கேட்டுக்கொள்கிறேன்!.....

மலரும் நினைவுகளுடன் .தென்படுமா என .காத்திருக்கிறேன் ..மீண்டும் பொன்வண்டு பிடிக்க

No comments: