Tuesday 7 July 2015

பெருந்தலைவர் - அரசர்க்கெல்லாம் அரசர்!


காமராஜர் எப்போதுமே ஒரு கடவுள் பக்தராக இருந்ததில்லை. ஆனால் அரசியல் பக்தர்கள் லட்சக்கணக்கில் அவரைஏ வணங்கினார்கள்.
என்ன காரணம்?
தொண்டராக வாழ்வை தொடங்கி அரசியலில் தலைவராக உயர்ந்த போதும் தொண்டராகவே வாழ்ந்து தொண்டராகவே மறைந்ததால் இனறவனே இத் தொண்டர் தம் உள்ளத்தில் ஒடுங்கிவிட்டார்.
ஏழைகளுக்காக இரங்கி, அவர்களின் துயர்நீக்க எல்லோருக்கும் கல்வியை இலவசமாக்கிய ஏழைப்பங்களான். உயர்ந்த உள்ளம் உடையவர் அவர்தான்.
எனவே,
உயர்ந்த உள்ளம் ஒவ்வொருவருக்கும் இருந்தால் வாழ்வில் உயரவும் புகழில் உயரவும் முடியும் என்பதை பெருந்தலைவரின் வாழ்க்கை உணர்த்துகிறது.
இது படிக்காத மேதையிடம் படிக்க வேண்டிய முதல் பாடமாகும்.

அரசியல் நாகரிகம்
********************

அரசியல் நாகரிகத்தை அவரிடமிருந்து கற்க வேண்டும்.
திட்டமிடுதலும், செயல்படுத்தலும், செய்து முடித்தலும் அவர் செயல் வீரர் என்று காட்டின. ஆனால் அவர் செய்யும் முன்பும் கூறியதில்லை; செய்து முடித்த பின்பும் பேசியதில்லை.
அரசுப் பணிகள் அரசின் பணியே தவிர அரசியல்வாதியின் பணியல்ல என்பதை நன்கே உணர்திருந்தார். அது போல் அரசுப் பணியாளர்களையும் மதிக்கும் பண்புடையவர்.
அரசுப் பணியாளர்களை முக்கிவிடும் பணியைச் செய்யக் கூடாது. இந்த உயர்ந்த அரசியல் நாகிகத்தை கர்மவீரர் காமராஜரிடமிருந்து கற்க வேண்டும்.
அரசு ஒரு இயந்திரம், அது இயக்குபவர்களைப் பொறுத்து இயங்கும் என்பதை நாம் இன்று உணர்வதற்குக் காரடமாயிருந்தது அவரது அரசியல் நாகரிகம்தான்.
நேர்மையும், தூய்மையும் சேர்ந்துவிட்டால் அரசியல் தெளிவாகவே இருக்கும் என்பதை உலகுக்குக் காட்டியவர் அவர். கடமைஆனது பேச்சில் இருந்து எதற்கு? செயலில் வேண்டும். அப்படி கடமையைச் செய்யும் அதிகாரிகளைக் கண்ணியப்படுத்த வேண்டும்.
பெருந்தலைவர் அரசியல் பிரவேசத்தின் பிற்பகுதியை விட்டு விட்டு, அவர் முதலமைச்சராய இருந்த காலத்தை மீள்பார்வை செய்து பார்ப்போமானால் அரசியல் நடத்தும் அரிச்சுவடி தொடங்கி அத்ததனை அந்தரங்களையும் அவரிடம் கற்கலாம்.
அப்போது-பெருந்தலைவர்தான் முதலமைச்சர் பல்வேறு அலுவல்களை முடித்து விட்டு காலதாமதமாக வந்தாலும் காமராஜர் மறுநாள் பணிளை ஒழுங்கு படுத்திவிட்டுத்தான் தூங்குவார்..
இத்தகைய பணிக்காக ஒரு நாள் தனது தனி அலுவலரை அழைத்து ஐ.ஏ.எஸ். அதிகாரி ஒருவரைத் தொலைபேசியில் அழைக்கச் சொன்னார். காமராஜரின் தனி அலுவலர் உடனே போன் செய்து அந்த ஐ.ஏ.எஸ் அதிகாரியை அழைத்தார். மறுமுனையில் பேசியதோ ஐ.ஏ.எஸ். அதிகாரி அல்ல; அவரது செயலாளர் (P.A).
உடனே, முதலமைசைசரின் தனி அலுவலர் என்ற தோரணையில் ஐ.ஏ.எஸ். அதிகாரியை காமராஜரோடு பேசச் சொன்னார். அந்தச் செயலாரோ ஒரே வரியில் முடித்து விட்டார். ஐ.ஏ.எஸ். அதிகாரி தூங்குகிறார் இப்போதைக்கு எழுப்பமுடியாது.
இவருக்கோ கோபம். ”நான் முதலமைச்சரின் தனி அலுவலர் பேசுகிறேன் என்று கடுகடுத்தார்.மறுமுனையில் அவரும் விடவில்லை. ‘நான் ஐ.ஏ.எஸ்ஸின் செயலாளர் பேசுகிறேன்’ என்றார்.
இருவருக்குள்ளும் வாதம் தொடர்ந்ததே தவிர, ஐ.ஏ.எஸ். அதிகாரி முதலமைச்சரிடம் பேச வரவே இல்லை.
”நான் நாலரை கோடி மக்களின் நாயகனுடைய பி.ஏ. பேசுகிறேன். அவர் அழைக்கிறார் ஐ.ஏ.எஸ்ஸை எழுப்புங்கள். மறுமுனையிலிருந்து பதில் இப்படி வந்தது. – நல்லது. நீங்கள் நாலரை கோடி நாயகரின் பி.எ. பேசலாம்… நான் ஐ.ஏ.எஸ்ஸின் பி.ஏ. பேசுகிறேன்…-அவர் எக்காரணம் கொண்டும் தன்னைத் தூக்த்திலிருந்து எஉப்ப லேண்தாம் என்று கூறிவிட்டுத்தான் தூங்கச் சென்றார். எனவே எனது கடமையைத்தான் செய்கிறேன்”.
முதலமைச்சரின் பி.ஏ. கோபத்தோடு பெருந்தலைவரிடம் சென்று, ”தாங்கள் அழைப்பதாக் கூறியும் தொலைப்பேசிக்கருகே காத்திருப்பதாக கூறியும் அந்த ஐ.ஏ.எஸ். அதிகாரியின் பி.ஏ. அவரை எழுப்ப மறுத்துவிட்டார். அவர் தூங்கப்போகும்போது யார் அழைத்தாலும் எழுப்ப வேண்டாம் என்று கூறினராம்” என்று கூறினார்.
இது போன்றதொரு சம்பவம் இந்தியாவின் எந்த மாநிலத்தில் நடந்தாலும் சரி, என்ன நடக்கும் என்று எண்ணிப்பாருங்கள். மறுநாள் காலையே எங்கோ ஒரு காட்டுக் கிராமத்திற்கு மாற்றப்படுவார். ஐ.ஏ.எஸ். அதிகாகியோ ஏதோ ஒரு சுமாரான ஒரு வாரிஅத்தின் மேலாளராக்கித் தண்டிக்கப்படுவார். ஆனால் மக்கள் தலைவர் காமராஜர் என்ன செய்தார் தெரியுமா? மறு நாள் விடிந்ததும் தானே அந்த ஐ.ஏ.எஸ். அதிகாரியை அழைத்தார். அவரோ காலையில் விஷயத்தை கேள்விப்பட்டு ஆடிக் கொண்டிருந்தார். தனக்கு என்னாகுமோ தனது பி.ஏ.வுக்கு என்னாகுமோ?” என்று வருந்தினார்.
காமராஜரோ, அந்த ஐ.ஏ.எஸ்.ஸிடம் அந்த பி.ஏ.வைப் பற்றிய முழு விபரங்களையும் கேட்டறிந்தார். ஐ.ஏ.எஸ் வருந்தியவாறே என்ன நடக்குமோ என்ற கவலையில் பதில் சொல்லிக்கொண்டிருந்தார்.
பெருந்தலைவர் திடீரென ”உங்க பி.ஏ.வை எனக்குப் பி.ஏ வாக அனுப்பித் தாங்க” என்று கூறி அதிர்ச்சிக்குள்ளாக்கிவிட்டார்.
அப்போதும் ஐ.ஏ.எஸ் அதிகாரிக்குப் புரியவில்லை. தலைவர் விபரமாகவே கூறினார். ‘யார் அழைத்தாலும் எழுப்ப மறுத்த கடமை உணர்ச்சிமிக்கவர்தான் பி.ஏ. வாக இருக்கவேண்டும். அதனால்தான் அவரை எனக்குப் பி.ஏ.வாக அனுப்பி வையுங்கள் என்றார்.
ஒரு சாதாரண அரசுப் பணியாளரின் கடமை உணர்வு முதலமைச்சருக்கு எதிராக நடந்த பின்பும் அதே முதலமைச்சர் பாராட்டினார் என்றால் இதுதான் அரசியல் நாகரிகம். இத்தகைய அரசியல் நாகரிகத்தை நாம் அவரிடம் இருந்துதான்படிக்க வேண்டும்.
இப்படி கடமையை பாராட்ட முற்பட்டால் எல்லோருக்குமே கடமை செய்யும் மனநிலை தானாக ஏற்படும் என்பதை நாம் உணரவேண்டும்.
எதிர்கட்சிக்காரர்களை எதிரிகளாக நினையாமல் அரசுப் பணியாளரை அடிமைகளாகக் கருதாமல் கடமையாற்றும் நாகரிக அரசியலை நாம் படிக்காத மேதையிடமிருந்துதான் படிக்கவேண்டும்.

அரசர்களை உருவாக்கிய அரசர்
***********************************
காலமும் மாறுகிறது; கருத்தும் மாறுகிறது. எது மாறினாலும் அரசியலின் அடிப்படை மரியாதை மட்டும் மாறவேகூடாது. அரசியல்வாதிக்ள் எல்லாமும் தெரிந்தவராக இருக்கவேண்டுமே தவிர எல்லோருக்கும் தெரிந்தவராக மட்டும் இருக்கக்கூடாது.
வந்ததார்கள், போனார்கள், வருவார்கள் போவார்கள். ஆனாலும் யார் வர வேண்டும்? எது வர வேண்டும்? இதை தீர்மானிக்கும் திறன் நமக்கிருந்தால் யாரும் வந்துவிட முடியாது. அவர்களும் எதையும் செய்துவிட முடியாது.
விழிப்புணர்வற்ற வாக்காளர்கள் நிறைந்தால், அக விழிகளற்ற வேட்பாளர்களே அதிகம் வெற்றி பெறுவார்கள் எனவேதான் கல்விக் கண்ணைத் திறந்து கற்றவர் மலியக் காரணமானார் காமராஜர்.
திட்டமிட்டு ஒரு சமூகத்தைக் கூர்மைபடுத்தியவர் பெருந்தலைவர்.
தலைமை ஏற்பவருக்கு இருக்க வேண்டிய தகுதிகள் பல.
தன்னலமின்மை, பதவி ஆசையின்மை, தியாகம், நேர்மை, நாணயம், நம்பிக்கை, திட்டமிடல், தீர்மானித்தலை, வழி காட்டல், வி நடத்தல் இவை போன்று பல பண்புகள் இருக்கவேண்டும்.
எல்லாம் இருந்தாலும் தியாகம் மட்டுமே மிக முக்கியமான பண்பாக எல்லோராலும் ஏற்றுக்கொள்ளப்பட்டது.
ஏனெனில் தியாக உணர்வு இருப்பரிடம்தான் விட்டுக் கொடுத்தல், தோலவியை ஏற்றுக் கொள்ளுதல், பதவியை விட பதவியளித்தவர்களை மதித்தல, பதவியைத் துறக்கும் துணிவு ஆகியவை இருக்கும்.
இந்திய அரசியலைப் பொறுத்தவரை ஏணிகளாக இருந்தவர்கள் இருவர்தான். பலர் பதவிகளை அடையத் தங்களை படிக்கட்டுக்ளாக்கிக் கொண்டவர்களுள் முதலாமவர் பாரதத் தந்தை மகாத்மா காந்தி, இரண்டாமவர் பெருந்தலைவர். காந்தியும், கருப்புக் காந்தியம் தங்களை ஏணிகளாக்கித் தலைவர் பதவியடைய விரும்புவோர் ஏறிச் செல்ல ஏதுவாயிருந்தனர்.
அரசராக இருப்பதற்கு ஆளும் தலைமை என்கின்ற தகுதி போதும். அரசர்களை உருவாக்குவதற்கோ பெருந்தலைமை எனும் தகுதி வேண்டும்.
அத்தகுதி பெற்றதால்தான் காமராஜர், பெருந்தலைவர் என்னும் பெருமை பெற்றார்.
காந்தி மகாத்மாவானார். அதுபோல் தலைவர் பெருந்தலைவர் ஆனார்.
தாமே பெரும் பதவிகளை அடைய வேண்டுமென்று துடிப்பவர்கள்தாமே அதிகம். அதிகார வெறிபிடித்து அலைபர்க்ள்தானே அதிகம். ஏறிய நாற்காலியை விட்டு இறங்க மறுப்பவர்கள்தானே அதிகம். இறங்கினாலும் மறுபடியும் ஏறத் துடிப்பதுதானே இப்போது காணப்படும் இயற்கை.
ஆனால் முதலமைச்சர் பதவியை உதறிவிட்டு இறங்கியதால்தான் பிரதமர் பதவி பின்னால் வந்தது. எந்த எதிர்ப்பும் இன்றித்தானே ஏற்றுக் கொள்ளும் நிலை இருந்தபோதும் அதை ஏற்க மறுத்தார், காமராஜர் அதற்குக் காரணங்கள் உண்டு.
‘முதியோர்கள் இளைஞர்களுக்கு வழிவிட்டு பதவி விலக வேண்டும்’ என்று முதல்வர் பதவியையே விட்டுவிட்டவர் பெருந்தலைவர்.
அதேநேரம், பிரதமர் பதவி தயாராக இருந்தபோது தானே ஏறி அமர்ந்து கொண்டால் அது கொள்கைக்கு விரோதமல்லவா? எனவே ஏணியாக மாறினார்.
லால் பகதூர் சாஸ்திரி அவர்களும் இந்திரா காந்தியவரகளும் அரசர்களானார்கள் (பிரதமர்கள்) என்றால் அந்த அரசர்களை உருவாக்கிய அரசர் காமராஜர்தான்.

No comments: