Thursday 2 July 2015

என்னை கவர்ந்த நான்கு எளிமை சக்கரவர்த்திகள்! (இரண்டாமவர் லிங்கன்)

 நாம் முன்னர் பார்த்த நெப்போலியன் குள்ளமானவர் என்றால், "ஹானஸ்ட் ஆப்" என செல்லமாக அழைக்கப் படும் லிங்கன்தான் அமெரிக்காவின் உயரமான அதிபர்! ஆறு அடி நான்கு அங்குலங்கள்!!

 இவரது வரலாறு மிக துன்பமானதும் வித்தியாசமானதும் ஆகும்! சோதனைகளை கடந்து சாதனைகளை படைத்த எளிய, மிக எளிய அமெரிக்க அதிபர் இவராகத்தான் இருக்க முடியும்!

01. 1831 ல் வியாபாரத்தில் தோல்வி.

02. 1832 ல் சட்டசபைத் தேர்தலில் தோல்வி.

03. 1834 ல் வியாபாரத்தில் மீண்டும் தோல்வி.

04. 1835 ல் அவரது காதலி மரணம்.

05. 1836 ல் அவருக்கு நரம்பு நோய் வந்தது.

06. 1838 ல் தேர்தலில் தோல்வி.

07. 1843 ல் காங்கிரஸ் தேர்தலில் தோல்வி.

08. 1848 ல் மீண்டும் காங்கிரஸ் தேர்தலில் தோல்வி.

09. 1855 ல் செனட் தேர்தலில் தோல்வி.

10. 1856 ல் துணை அதிபர் தேர்தலில் தோல்வி.

11. 1858 ல் செனட் தேர்தலில் மீண்டும் தோல்வி.

12. 1861 ல் அமெரிக்க அதிபர் தேர்தலில் வென்று அமெரிக்க ஜனாதிபதியானார்.

அதிக தோல்விகள், அதிக பாடங்கள், இவையே லிங்கனின் வெற்றியின் இரகசியம்...!

கடந்த இரு நூற்றாண்டுகளில் உலகிலேயே அதிக பலம் வாய்ந்த நபர் யார் என்று கேட்டால் பெரும்பாலோர் அந்தந்த காலகட்டத்தின் அமெரிக்க அதிபர்களைக் குறிப்பிடுவர். ராணுவ பலமும் பொருளியல் வளப்பமும் அமெரிக்க அதிபர்களுக்கு அப்படியொரு தகுதியைத் தந்திருக்கின்றன. உலகம் இதுவரை கண்டிருக்கும் 44 அமெரிக்க அதிபர்களும் வெவ்வேறு விதங்களில் தங்கள் முத்திரையைப் பதித்திருந்தாலும் அவர்களில் ஒரு சிலர்தான் உலகுக்குத் தேவைப்பட்ட முக்கிய மாற்றங்களைக் கொண்டு வந்தனர்; மனுக்குலத்துக்கு மகிமையைத் தேடித் தந்தனர். அவர்களுள் தலையாயவர் ஆப்ரஹாம் லிங்கன்.

ஆப்ரஹாம் லிங்கன் எளிய குடும்பத்தில் பிறந்து, சுயமாகக் கல்வி கற்று, வழக்கறிஞராகப் பட்டம் பெற்று மாநில, மத்திய சட்ட சபையில் உறுப்பினராகி இறுதியில் 16 ஆவது அமெரிக்க ஜனாதிபதியாகத் தேர்தெடுக்கப் பட்டவர். அவரே அமெரிக்காவின் உன்னத ஜனாதிபதியாக வரலாற்று அறிஞர் பலரால் கருதப்படுபவர்.

எல்லோரும் செய்கிறார்கள் நாமும் செய்து விட்டுப் போவோம் அல்லது கண்டு கொள்ளாமல் இருப்போம் என்று லிங்கன் நினைத்திருந்தால் அவர் சரித்திரத்தில் இடம் பிடித்திருக்க முடியாது. ஒன்பது வயதில் அவருடைய தாய் நான்ஸி இறந்துவிட்டார். அதன்பிறகு சாரா என்கிற விதவையை மணந்துகொண்டார் ஆப்ரஹாமின் தந்தை தாமஸ். உறுதியும் அன்பும் நிறைந்த சாராவுடன் மிக எளிதாக ஒட்டிக்கொண்டான் சிறுவன் ஆப்ரஹாம். தாமஸ், சாரா இருவருமே படிப்பு வாசனையற்றவர்கள் என்றாலும் தன் மகனைப் படிக்கச் சொல்லி உற்சாகமூட்டினார் சாரா.

அந்தக் காட்டுப் பகுதியில் புத்தகங்கள் கிடைப்பதே அரிதாக இருந்தது. பல மைல்கள் நடந்து சென்று புத்தங்களை இரவல் வாங்கிப் படித்தார் ஆப்ரஹாம். ராபின்சன் க்ரூசோ, பில்கிரிம்ஸ் ப்ராக்ரஸ், ஈசாப் கதைகளை விரும்பிப் படித்தார். அவர் New Orleans-ல் வசித்த போது அடிமைகள் என்ற பெயரில் கறுப்பினத்தவர் விலைக்கு விற்கப்படுவதையும், இரும்புக் கம்பிகளால் கட்டப்பட்டிருப்பதையும், சாட்டையால் அடிக்கப்படுவதையும், ஒட்டுமொத்தமாகக் கொடுமைப் படுத்தப் படுவதையும் கண்டார். அப்போது அவருக்கு வயது பதினைந்துதான். அந்த கணமே இந்த அடிமைத் தனத்தை எப்படியாவது ஒழிக்க வேண்டும் என்று முடிவு செய்தார்.

தமது 22வது வயதில் அவர் ஓர் அலுவலகத்தில் குமாஸ்தாவாக வேலைக்குச் சேர்ந்தார். பின்னர் கடனுக்கு ஒரு கடையை வாங்கி வியாபாரத்தில் தோற்றுப் போனார். அடுத்து தபால்காரரானார். தாமாகவே படித்து வழக்கறிஞரானார். 1834ம் ஆண்டு தமது 25வது வயதில் Illinois மாநில சட்டமன்றத்துக்காகப் போட்டியிட்டு வெற்றி பெற்றார். 1833ல் Ann Rutledge என்ற பெண்ணைக் காதலித்து மணந்து கொண்டார். ஆனால் இரண்டே ஆண்டுகளில் Ann விஷக் காய்ச்சலால் மரணம் அடைந்தார். 33வது வயதில் mary todd என்ற பெண்ணை மறுமணம் செய்து கொண்டார்,  பின்னர் இவருக்கு நான்கு குழந்தைகள் பிறந்தன. மூன்று குழந்தைகள் சிறுவயதிலேயே மரணமடைந்தார்கள். மனைவிக்கு மனநோய் இருந்தது. இத்தனைத் தோல்விகளையும் மன உறுதியோடு கொண்டார்.

அமெரிக்காவில் உள்நாட்டு கலவரம் மூண்டபோது, இல்லினாய்ஸ் பகுதி மக்கள் தங்கள் தலைவராக லிங்கனை முன்னிறுத்தினார்கள். அதுதான் அவரது அரசியல் நுழைவுக்கான முதல் துருப்புச்சீட்டாக அமைந்தது. அதன் பிறகு நடந்த சட்டமன்றத் தேர்தலில் வெற்றிபெற்றார். அடிமைத்தனத்துக்கு எதிரான தனது குரலைப் பதிவு செய்தார். அவருடைய இந்த அரசியல் பார்வை, மற்றவர்களிடம் இருந்து லிங்கனை வித்தியாசப்படுத்தியது.

1834-லிருந்து எட்டு ஆண்டுகள் Illinois சட்டமன்றத்தில் உறுப்பினராக இருந்தார். லிங்கன். அதன் பிறகு அரசியலை விட்டு விலகி ஐந்து ஆண்டுகள் அவர் தனியார் துறையில் வழங்கறிஞராகப் பணியாற்றினார். 1854ல் அவரை அரசியல் மீண்டும் அழைத்தது. குடிப்பழக்கம், புகைக்கும் பழக்கம் எதுவும் இல்லாத லிங்கன் அரசியலில் கடுமையாக உழைத்தார். 1859ம் ஆண்டு “நீங்கள் ஏன் அமெரிக்க அதிபர் பதவிக்குப் போட்டியிடக்கூடாது” என ஒரு நண்பர் கேட்ட போது “அந்தத் தகுதி எனக்குக் கிடையாது” என்று பணிவாகப் பதில் கூறினார் லிங்கன். ஆனால் அப்படிக் கூறியவர் அடுத்த ஆண்டே அமெரிக்காவின் பதினாறாவது அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

பதினைந்து வயதில் தாம் எடுத்த தீர்மானத்தை நிறைவேற்றும் தருணம் வந்து விட்டதாக அப்போது அவர் எண்ணியிருக்கக் கூடும். ஏனெனில் பதவியேற்ற இரண்டே ஆண்டுகளில் அதாவது 1862ல் அவர் “அடுத்த ஆண்டு ஐனவரி முதல் தேதியிலிருந்து அனைத்து அடிமைகளும் விடுவிக்கப்படுவர், அதன் பின் அமெரிக்காவில் அடிமைத் தனம் இருக்கக் கூடாது” என்று பிரகடனம் செய்தார். அமெரிக்காவின் தெற்கு மாநிலங்கள் விவசாயத்தை நம்பியிருந்ததால் பொருளியல் வளர்ச்சிக்கு அடிமைகள் தேவை என்று அடம் பிடித்தன. மேற்கு மாநிலங்களோ தொழிலியல் பகுதிகளாக இருந்ததால் தங்களுக்கு அடிமைகள் தேவையில்லை என்று கருதின. இவையிரண்டுக்கும் இடையே இருந்த கருத்து வேறுபாடு உள்நாட்டுக் கலகமாக வெடித்தது. அடிமைத் தளையை அறுத்தெறியவும் அமெரிக்காவை ஒன்றுபடுத்தவும் போர் அவசியம் என்று துணிந்தார் லிங்கன். நான்கு ஆண்டுகள் நீடித்த உள்நாட்டுப் போரில் தென் மாநிலங்கள் தோற்கடிக்கப்பட்டன. லிங்கனின் உயரிய சிந்தனைக்கு வெற்றி கிடைத்தது

1864 ஆம் ஆண்டு நிகழ்ந்த தேர்தலில் 400,000 ஓட்டுகள் மிகையாகப் பெற்று இரண்டாம் தடவைப் போர் ஜனாதிபதி ஆப்ரஹாம் லிங்கன் தேர்ந்தெடுக்கப் பட்டு வெள்ளை மாளிகை வேந்தராக நீடித்தார். அடுத்த ஒரு மாதத்தில் போர் நின்றது. உள்நாட்டுப் போரில் மகத்தான் வெற்றி பெற்று தென்பகுதி மாநிலங்களின் போர்த் தளபதி ராபர்ட் லீ (Robert Lee) வடப்பகுதி இராணுவத் தளபதி கிரான்ட் (General Grant) முன்பு சரணடைந்த ஐந்தாம் நாள், ஆப்ரஹாம் லிங்கனை வாஷிங்டன் நாடகத் தியேட்டரில் ஜான் வில்கிஸ் பூத் (John Wilkes Booth) சுட்டுக் கொன்றான். பிரிந்து போன வடதென் அமெரிக்க மாநிலங்கள் மீண்டும் ஒன்று சேர்ந்தன ! தென் பகுதி அமெரிக்க அடிமைக் கறுப்பருக்கு எல்லாம் விடுதலை கிடைத்தது ! ஆனால் வரலாற்று முக்கியத்துவம் உள்ள அந்த மகிழ்ச்சிகரமான வெற்றியைக் கண்டுகளிக்க அவற்றின் ஆக்க மேதை ஆப்ரஹாம் லிங்கன் அப்போது உயிரோடில்லை !

ஜனவரி 1865ல் அமெரிக்காவில் அடிமைத்தனத்தை ஒட்டுமொத்தமாக ஒழிக்க வேண்டும் என்ற தீர்மானம் அமெரிக்க மக்களவையில் மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மையுடன் நிறைவேற்றப்பட்டது. அதே ஆண்டு இரண்டாவது தவணைக்கு அமெரிக்க அதிபராகத் தேர்வு பெற்றார் லிங்கன். இரண்டாவது முறை அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட அதே ஆண்டு, அதாவது 1865ம் ஆண்டு ஆக்ஸ்ட் 14ம் தேதி பெரிய வெள்ளிக்கிழமையன்று தனது மனைவியுடன் Our American Cousin என்ற நாடகம் பார்க்கச் சென்றிருந்தார் ஆப்ரஹாம் லிங்கன். அவர் நாடகத்தை ரசித்துக் கொண்டிருந்த போது John Wilkes Booth என்ற ஒரு நடிகன் அதிபரைக் குறிவைத்துச் சுட்டான். மறுநாள் காலை அதிபரின் உயிர் பிரிந்தது. அப்போது அவருக்கு வயது ஐம்பத்து ஆறுதான்.

இரண்டாவது தவணை முழுமைக்கும் அவர் அதிபராக இருந்திருத்தால் அமெரிக்கா மேலும் அமைதி பெற்றிருக்கும்; உலகம் மேலும் உய்வு கண்டிருக்கும். ஆனால் வரலாற்றின் நோக்கம் வேறாக இருந்தது.

No comments: