Monday 22 September 2014

அடுத்தடுத்து சாகித்ய அகாடமி விருது பெற்ற நாடார்கள்


அடுத்தடுத்து சாகித்ய அகாடமி விருது பெற்ற நாடார்கள்
**********************************************************

திரு.பொன்னீலன் அவர்கள் (இயற் பெயர்: ஸ்ரீகண்டேஸ்வர பக்தவத்ஸலன்) நாகர்கோவில் அருகே உள்ள மணிகட்டி பொட்டலில் பிறந்தவர். மிகவும் வசதியான நாடார் குடும்பத்தில் பிறந்து ஆசிரயராக பணியை தொடங்கியவர் இவர். 1994ல் "புதிய தரிசனங்கள்" என்ற நாவலுக்காக சாகித்ய அகாடமி விருது பெற்றார். இவரது "உறவுகள்" சிறுகதை இயக்குனர் திரு.மகேந்திரன் அவர்களால் "பூட்டாத பூட்டுகள்" என்ற பெயரில் 1980ல் திரையிடப்பட்டது. "வைகுண்டர் காட்டும் வாழ்க்கை நெறி" என்ற பெயரில் வைகுண்டர் ஐயா பற்றி சிறப்பான படைப்பை குடுத்துள்ளார் இவர்.

திரு.பிரபஞ்சன் அவர்கள் (இயற் பெயர்: சாரங்கபாணி வைத்தியலிங்கம்) புதுவையில் பிறந்தவர். இவரும் வசதியான நாடார் குடும்பத்தில் பிறந்தவரே. இவர் தந்தை ஒரு பிரபல சாராய வியாபாரி ஆவார்! இவரும் ஆசிரியராகவே பணி தொடங்கினார்!! 1995ல் "வானம் வசப்படும்" நாவலுக்காக சாகித்ய அகாடமி விருது பெற்றார். இவர் மேலும் பெற்ற விருதுகள் //கோயம்புத்தூர் கஸ்தூரி ரங்கம்மாள் விருது - மகாநதி//, //இலக்கியச் சிந்தனை விருது - மானுடம் வெல்லும்//, //சி.பா. ஆதித்தனார் விருது - சந்தியா// ஆகியவைகள் ஆகும். இவரது நாடகமான முட்டை டெல்லி பல்கலைக்கழகப் பாடத்திட்டத்திலுள்ளது. இவரது சிறுகதைத் தொகுப்பான நேற்று மனிதர்கள் பல கல்லூரிகளில் பாடப்புத்தகமாக்கப் பட்டுள்ளது.

இலக்கியத்தில் மேலும் நம் நாடார்கள் சாதனை புரிய வேண்டும்

No comments: