Saturday 27 September 2014

ஜெயலலிதா தீர்ப்பு அரசியல்வாதிகளுக்கு பாடமா?

ஜெயலலிதா தீர்ப்பு அரசியல்வாதிகளுக்கு பாடமா?
********************************************************



கிட்டதட்ட 18 வருடங்களுக்கு பிறகு நாடகத்தின் முதல் கட்டம் முடிவுக்கு வந்திருக்கிறது! ஆமாம் முதல் கட்டம்தான் அதை பிறகு பார்ப்போம். கிட்ட தட்ட 18 வருட போராட்டத்திற்கு பிறகு சட்டம் வென்றிருப்பதாக தெரியலாம். 66.5 கோடி சொத்து குவிப்பு வழக்கில் குற்றவாளி என தீர்ப்பு கூறப்பட்டு 4 வருட சிறை தண்டனை பெற்றுள்ளார் முதல்வர் ஜெ.ஜெயலலிதா. 100 கோடி ரூபாய் அஅராதமும் விதிக்கப்பட்டுள்ளார். மூன்று ஆண்டுகளுக்கு மேல் தண்டனை பெற்றுள்ளதால் பிரதிநிதித்துவ சட்டப்படி தானாகவே முதல்வர் பதவியையும் சட்டமன்ற உறுப்பினர் பதவியையும் இழக்கிறார் ஜெயலலிதா. இது தான் முடிவா? இது அரசியல்வாதிகளுக்கு கூறும் படிப்பினை என்ன?

ழல் வழக்கில் முதல் முறையாக சிறை செல்லும் முதல்வரா இவர் என்றால் இல்லை! ஏற்கனவே இவரே ஒரு முறை சென்றிருக்கிறார்! மாட்டு தீவன ஊழல் வழக்கில் 17 வருடங்களுக்கு முன் லல்லு பிரசாத் யாதவ் நீதிமன்ற காவலில் சிறை வைக்கப்பட்டார். மீண்டும் 2013ல் 37 கோடி ரூபாய் ஊழல் வழக்கில் குற்றவாளி என நிரூபிக்கப்பட்டு சிறை சென்றுள்ளார். இதற்கு இடையில் மத்திய ரயில்வே கேபிணட் அமைச்சராக இருந்து அதை லாபகரமாக இயக்கி சாதனை படைத்தார்.  14 வருடங்களுக்கு முன் தில்லி நீதிமன்றத்தால் தீர்ப்பு கூறப்பட்டு சிறை சென்றார் முன்னாள் பிரதமராக இருந்த நரசிம்மராவ் அவர்கள். அவரது அந்திம காலம் மிக மோசமாக இருந்தது. அவருடன் துணைக்கு சென்றது அவரது கேபிணட் அமைச்சராக இருந்த பூட்டா சிங். 2006ல் ஜார்க்கன்ட் முதல்வராக இருந்த சிபு சோரன். அவரது வாரிசாக அடுத்து வந்த முதல்வர் மது கோடா அவர்களும் 2009ல் ஊழல் வழக்கில் சிறை சென்றார்.

வையெல்லாம் இந்திய அரசியலிலும் மாநில அரசியலிலும் என்ன விதமான பாதிப்புகளை ஏற்படுத்தி இருக்கின்றன? சத்தியமாக எந்தவிதமான நல்ல பாதிப்புகளையும் ஏற்படுத்த்வில்லை என்றே என்ணுகிறேன். இதற்கு அப்புறம் சவப்பெட்டி ஊழல், மஹாராஷ்டிராவில் ராணுவ வீரர்களின் வீடு கட்டுவதில் ஊழல், கர்நாடக ரெட்டி சகோதர்களின் ஊழலும், எடியூரப்பா ஊழல்களும் பிரசித்தி. ஒலிம்பிக் மெகா ஊழல்கள், 3ஜி ஊழல், நிலக்கரி சுரங்க ஊழல் என்று அடுத்தடுத்து வருபவை எல்லாம் ஒன்றுக்கு ஒன்று எந்த குறையும் இல்லாமல் நிறைவாகவே வருகின்றன! அப்போ இந்த் தண்டனைகளும் தீர்ப்புகளும் குடுக்கும் படிப்பினை என்று ஏதும் இல்லையா?? இல்லை கோடிகளை செய்திகளில் பார்த்து மண்டை காயும் நம் போன்ற சாமானியர்களுக்கு அவர்கள் தரும் குச்சி ஐஸ்சா?? தமிழ்நாட்டிலுமெ அடுத்து வந்தவை எல்லாம் ஒன்றும் குறை இல்லாதவைதான். மேம்பால ஊழல், தலைமைச் செயலக் ஊழல் என்று எதுவும் குறையில்லை!

ஜெயலலிதாவுக்கு இது முடிவா என்றால் இல்லை!! இப்போது தீர்ப்பு கூறி இருப்பது சிறப்பு நீதிமன்றம்தான். அடுத்து உயர் நீதி மன்றம், உச்ச நீதிமன்றம் என்று நாடகங்களின் பாகங்கள் தொடரும். அவர் இனி தேர்தலில் நிற்க முடியாதா?? இது அவரது அரசியல் அந்திமமா? இல்லை என்று கூறலாம்! மேல் முறையீடு செய்யும் போது உயர் நீதிமன்றத்தால் சிறப்பு நீதிமன்றத்தின் தீர்ப்பை நிறுத்தி வைக்க (Stay) முடியும்! ஆனால் அதற்கான் வாய்ப்புகள் அரிதே என்றாலும் வாய்ப்பு இருக்கிறது என்றே கூறவேண்டும். அப்படி தீர்ப்பு நிறுத்திவைக்கப் பட்டால் அவரால் தேர்தலில் போட்டியிட முடியும்!! எல்லா அரசியல்வாதிகளுக்கும் வரும் தீர்ப்பினோஃபோபியாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் (முன்னாள்) முதல்வர்! நாடகத்தின் இரண்டாம் பாகம் தொடங்கிவிட்டது. நான் நாடகம் பார்க்க கிளம்பிவிட்டேன்!!! நீங்கள்???

No comments: