Friday 26 September 2014

மனிதம் அற்றுப் போன மனிதர்கள்!!

மனிதம் அற்றுப் போன மனிதர்கள்!!
***************************************



முகநூலில் அடிக்கடி ஒரு நகைச்சுவை படம் வருவதுண்டு. அதாவது ஒரு மனிதன் மூழ்குவது போலவும் அதை பலர் கைபேசியில் புகைப்படம் எதுப்பது போலவும். அதை பார்க்கும் போதெல்லாம் நகைச்சுவையாக தெரிந்தது (24-9-2014) அன்று வேதனையாக தெரிகிறது!!! டில்லி மிருகக்காட்சி சாலையில் புலியின் இருப்பிடத்துக்குள் தவறியோ அல்லது தெரிந்தோ விழுந்த 19 வயது சிறுவனின் பரிதாபமாக புலியிடம் இரைஞ்சுகிறான். ஆனால் சுற்றி இருந்தவர்களின் முட்டாள்தனத்தாலும், பணியாளர்களின் கவனக்குறைவாலும் அவன் புலியிடம் பலியாகிறான். கிட்டதட்ட 15 நிமிடத்திற்கு மேல் நடக்கும் இந்த கொடுமையான காட்சியை எந்தவித பதட்டமோ சலனமோ இன்றி ஒரு பண்ணாடை படம் பிடித்திருக்கிறது. அதை விட பெரிய கொடுமை அந்த காணொளியில் மேலும் சில கேமராக்கள் தெரிகின்றன!!


புலி ஒரு கொன்று தின்னி (Predator). ஆக்ரோசம் அதன் இயற்குணம். ஆனால் அந்த சிறுவனை காப்பாற்ற ஒரு துரும்பையும் கிள்ளிப் போடாமல் வேடிக்கை பார்த்தது மட்டுமன்றி அதை படமும் எடுத்தவர்களின் கொடூரம் எத்தகையது என்று எண்ணும் போது எனக்கு புல்லரிக்கின்றது! இதுதான் நாம் பள்ளியிலும் வீட்டிலும் கற்றுக் குடுக்கும் மனிதமா?? அல்லது நாம் மனிதமே கற்றுக் குடுப்பதில்லையா?? சமஸ்கிருதத்தை  கட்டாய பாடமாக்க்கலாமா என்று யோசிக்கும் அரசு ஏன் மனிதம் கற்றுக் குடுப்பதை பற்றி சிந்திக்க கூடாது? நடனம், பாட்டு கற்றுக் குடுக்கலாமா என யோசிக்கும் பெற்றோர்களும் ஏன் பிள்ளைகளுக்கு மனிதம் கற்றுக் குடுக்க கூடாது? ஏனென்றால் நாளை நீங்கள் புலியின் பிடியில் இருந்தாலும் உங்கள் பிள்ளைகள் படம் எடுக்கக் கூடும்!!! மதத்தலைவர்களே நீங்கள் மதம் பரப்பியது போதும் மனிதம் பரப்புங்கள். உங்கள் கடவுள் சக்தி வாய்ந்தவர் அவர் அவரை காப்பாற்றிக் கொள்வார், ஆனால் இந்த அப்பாவியை போன்றவர்களை காப்பாற்ற (மனிதம் கொண்ட) மனிதர்கள் வேண்டும்!! எந்திரததனமாக காலை எழுந்தவுடன் படிப்பு, பள்ளியில் படிப்பு, வந்தவுடன் படிப்பு, சாப்பிட்டுவிட்டு படிப்பு, பின்னர் படித்துக்கொண்டிருக்கும் போதே வளாக தேர்வில் வேலை என எந்திர வாழ்க்கையின் இடையில் கொஞ்சம் மனிதம் வேண்டும். இல்லையேல் பெற்றோர்களே நீங்கள் புலிக்குழிக்கு பதிலாக முதியோர் இல்லத்தில் தஞ்சம் புக நேரிடும்!!

நேஷனல் ஜியாக்ரஃபி சேணலிலும், அனிமல் பிளானட்டிலும் புலியோ சிங்கமோ இன்னொரு சைவபட்சினியை கொன்று தின்பதையே காண சகிக்காது. ஆனால் இந்த் பண்ணாடை முண்டங்கள் புலி ஒரு சிறுவனை துன்புறுத்துவதை படம் பிடித்திருக்கின்றன. இதை பற்றி எந்த மீடியாவும் கவலைப் படவில்லை. அந்த மீடியா முன்டங்களும் இந்த காட்சியை மீண்டும் மீண்டும் ஒளி பரப்பு டிஆர்பி ரேட்டை உயர்த்துவதிலேயே இருந்தன!! நீங்க் புகை பிடிக்கிறவன பத்தி வருத்தப்பட்டதெல்லாம் போதும். கொஞ்சம் மனிதம் இல்லாத மனித சமூகத்தை மாற்ற முடியுமா என யோசிங்கள் மீடியா பண்டாரங்களா!! நானும் யாராவது இதை பற்றி பேசுவார்கள்ஏன்று பார்த்தேன்... ஊம்ஹூம் யாரும் கவலைப் பட்டதாகவெ தெரியவில்லை!! மனிதம் இல்லாவிட்டால் நாமெல்லாம் வெறும் பிண்டங்கள்தான்!!

No comments: