Tuesday 23 September 2014

கர்மாவும் - எங்க பிரவுனியும்


கர்மாவும் - எங்க பிரவுனியும்
****************************************
1988ஆம் வருடம் நான் பத்தாம் வகுப்பு முடிந்து +1க்கு நுழைந்த சமையம் நன் நன்பர் ஒருவர் மூலம் எனக்கு அழகிய வெள்ளை நிற ராஜபாளையம் நாய் குட்டி ஒன்று கிடைத்தது! வீட்டில் வேண்டாம் என்று கூற கேட்காமல் தூக்கி வந்து விட்டேன். அதற்கு பிரவுனி என்று பெயரும் வைத்தாகி விட்டது. தூக்கி வந்தது என்னமோ நான் என்றாலும் உயிரை குடுத்து வளர்த்தது என் அம்மாதான். அதை முதன் முதலில் தடுப்பூசி போட ஒரு கால்நடை மருத்துவரிடம் அழைத்து சென்ற போது, அவர் தடுப்பூசி எல்லாம் போட்டு விட்டு அதன் வளர்ப்பு பற்றி அறிவுரை வளங்கினார்! தம்பி நாய்கள் மிகவும் சென்சிடீவ் ஆன பிரானிகள். நம் உணர்வுகள் அதற்கு தெளிவாக புரியும். இந்த குட்டி இன்றும் சரி வளர்ந்த பின்பும் சரி அது தவறு செய்தால் அந்த கணத்திலேயே கண்டியுங்கள். தவறு செய்து வெகு நேரமோ, வெகு நாளோ கழித்து அதை கண்டித்தால் அதற்கு தான் ஏன் கன்டிக்க ப்டுகிறோம் என்பதே தெரியாமல் குழம்பி அது அதே தவறை மீண்டும் மீண்டும் செய்யும் என்றார்.

என் பெண் பிறந்தது 2008ஆம் ஆண்டு. அவளுக்கு 1 வயது பூர்த்தி ஆன நிலையில் அவள் சேட்டையும், பிடிவாதமும் கட்டுக்கடங்காமல் போனது. அப்போது குழந்தைகள் மருத்துவர் எங்களிடம் கூறியது தாயும் தந்தையும் குழந்தை தவறு செய்யும் போது அந்த கணமே தண்டியுங்கள், குழந்தை புரிந்து கொள்ளும். வெகு நேரமோ அல்லது வெகு நாளோ கழித்து தண்டிக்கும் போது குழந்தைக்கு விவரம் புரியாமல் செய்த தவறையே மீன்டும் மீண்டும் செய்யும் என்றார்.

ஒரு கால்நடை மருத்துவருக்கும், குழந்தைகள் மருத்துவருக்கும் தெரிந்த விசயம் எப்படி கடவுளுக்கு தெரியாமல் போனது? முந்தைய ஜென்மத்தில் செய்த பாவத்திற்கு (கர்மா!) இந்த ஜென்மத்தில் தன்டிக்கிறார்???!! மனுசன் பாவம் ஏன் தண்டிக்க படுகிறோம் என்பதே தெரியாமல் செய்த தவறையே மீன்டும் மீண்டும் செய்கிறோம்!! என் ஜென்ம பகைவனுக்கு கூட (ராஜபக்‌ஷே போல்) தவறு செய்த இந்த ஜென்மத்தில் த்ன்டனை கிடைக்காமல், ஒரு பாவமும் அறியாத அடுத்த ஜென்மத்தில் தன்டனை கிடைப்பதை என்னால் ஏற்றுக் கொள்ள முடியாது! இப்போ தவறு கடவுளிடம் உள்ளதா? இல்லை அவர் பேரை சொல்லி புரோக்கரேஜ் பார்க்கும் புரோக்கரிடம் உள்ளதா??!!

சத்தியமா விவரம் தெரியாமதான் கேக்குறேன்!!!

No comments: