Friday 26 September 2014

புனிதமும் மனிதமும்

புனிதமும் மனிதமும்
***********************




ந்து, இசுலாம், கிருத்துவம், பௌத்தம், சமனம் என மதங்கள் பல மனிதனுக்கு! கீதை, குர்ரான், பைபிள், டிபிடகா, கல்ப சூத்ரா என பல புனித நூல்கள். இவைகளால் மனிதன் அடைந்த நன்மைகள் என்ன?? கடவுளை பூஜிக்கும் மனிதர்கள் அனைவரும் இறைவனுக்கு பயந்தா? இல்லை மரியாதையாலா?? சிறு வயதிலேயே சாமி கண்ண குத்திவிடும் என்று பயம் ஏற்படுத்தி தானே பக்தியே உண்டாக்கினோம்!! சாமி கண்ண குத்திவிடும் என்று பயந்தவனாவது தவறு செய்யாமல் இருக்கிறானா?? மனிதனுக்கு நன்மை செய்யத்தான் கடவுள் என்றால் இன்று நடக்கும் அத்தனை தீமைகளும் எதனால் நடக்கின்றன? தீமைகள் நடக்க காரணம் விதியோ அல்லது கர்மாவோ அல்லது முன்விணையோ என்றால், ஒருவன் செய்த முன்விணைக்கும், விதிக்கும், கர்மாவுக்கும் யார் பொறுப்பாவது? ஒருவன் முன் செய்த வினை எவ்வாறு நேர்ந்தது? அந்த வினைக்கும் அதற்கு முன் செய்த வினைதான் காரணமா?? அப்போ அந்த வினைக்கு யார் பொறுப்பேற்பது? இப்படியே எத்தனை ஜென்மங்கள் ரீவைண்ட் செய்வது? சாத்தானே தீமைக்கு பொறுப்பு என்றால் அந்த் சாத்தானை படைத்தது யார்? இன்று நடக்கும் அக்கிரமங்களை பார்க்கும் போது கடவுளை விட சாத்தான் சக்திவாய்ந்ததா?? இந்த உலகில் சாத்தானின் ரோல் என்ன?? சாத்தானை கட்டுப்படுத்த கடவுள் ஏன் தவறுகிறார்??

டவுள்-சாத்தான், நன்மை-தீமை, புனிதம்-தீங்கு, புண்ணியம்-பாவம் இதெல்லாம் எங்கும் இல்லை. மனிதனுக்குள்ளேயே உள்ளது. இதை வெளியே தேடி நாசமாகிறான் மனிதன். சக மனிதனோ ஜீவராசியோ அல்லல் படுவதை பார்த்து உதவத் துடிக்கும்போது  மனிதனுள் இருக்கும் கடவுள் வெளிப்படுகிறார். இலங்கையில் படுகொலை நடந்த போதும், ஆப்பிரிகாவில் தினம் தினம் ப்சியாலும், இனப்படுகொலையாலும், வல்லரசுகளின் வல்லூறு ஆசைகளினாலும் கொத்து கொத்தாக சாகும் போதும் கடவுள் போய் சாத்தான் வந்தது. பெட்ரோலுக்கும், எண்ணைக்கும், நிலத்துக்கும், அதிகாரத்துக்கும் நடக்கும் அக்கப் போர்களை கடவுள் பெயரை சொல்லி புனிதப் போராக்கும் போது நம் உள்ளே இருக்கும் கடவுள் மறைந்து சாத்தான் வெறியாட்டம் போடுகிறான். கங்கையில்  முங்கினால் பாவ விமோசனம் என்றால் கங்கை கரையில் ஒரு மிகப் பெரிய டோல் கேட் போட்டிருக்கும் நம் அரசு! பாவத்தை கழுவுவதும் ஒரு பித்தலாட்டம் என்று அவர்களுக்கே தெரியும். அப்படி இல்லாவிட்டால் அதற்கும் ஒரு அறநிலையத்துறை முளைத்திருக்க வேண்டாமா இந்நேரம்?! அதே போல் பாதிரியாரால் பாவ விமோசனம் குடுக்கமுடியும் என்றால் ஆப்கானிஸ்தானில் எண்ணைக்காக வெறியாட்டம் போட்ட கிருத்துவ ரஷ்யனும், வெறியாட்டம் போட்டுக் கொண்டிருக்கும் கிருத்துவ அமெரிக்கனும் பாவ மண்ணிப்பு வாங்கி சொர்க்கத்துக்கு சென்று விடுவானா?!  வெறித்தன்மாக புத்த மதத்தை பின் பற்றும் புத்த பிக்குகள் இலங்கையில் செய்ததைத்தான் கௌதமர் போதித்தாரா?

டவுளும், புனிதமும் மதமும் என்னதான் சொல்கின்றன? மனிதனை தன்னுள் இருக்கும் சாத்தானை விரட்டி விட்டு கடவுளை வெளிக்கொண்ர சொல்கின்றன. மனிதன் என்ன செய்கிறான்? கடவுள், மதம், புனிதம், பெயரை சொல்லி கடவுளை விரட்டிவிட்டு சாத்தானோடு வெறியாட்டம் போடுகின்றான்!! குஜராத் கலவரத்தின் போது ஒவ்வொருவர் மனதிலும் இருந்த கடவுள் மறைந்து சாத்தான் தலைதூக்கி விட்டான்!! தவறு செய்பவனை விட தவறுக்கு உடந்தையாய் இருப்பவனும், அதை வேடிக்கை பார்ர்ப்பவனும்தான் பெருங்குற்றவாளி. அந்த வகையில் நாம் அனைவரும் குற்றவாளியே. முகநூலில் இசுரேலையும், பாலஸ்தீனத்தையும் மாறி மாறி ஆதரிக்கும் அனைவரும் குற்றவாளிகளே. அங்கு நடக்கும் போர் மண்ணுக்காக நடக்கும் போர் அதை புனிதப் போராக மாற்றிய புன்ணியம் நம்மையே வந்துசாரும். கடவுளையும் மதத்தையும் மனிதன் என்று வளைக்க தொடங்கினானோ அன்றே புனிதம் மட்டுமல்ல மனிதமும் மறைந்துவிட்டது!  தொழில் தர்மம், வாழ்வில் நேர்மை. சத்தியம், சக உயிர் பால் கருனை என எல்லாவற்றையும் மறந்து விட்டு மதம் போதித்து  என்ன பிரயோசனம்? கடவுளையும், தன் புனித நூலையும் மதிக்காத மனிதன் தன் மதத்தை தூக்கி ப்டித்து சாதித்தது என்ன?

ழிப் பேரலையோ, புயலோ, பூகம்பமோ, ஒரு மத்த்தானை மற்றும் காப்பாற்றிவிட்டு இன்னொரு மத்த்தானையா காவு வாங்கியது?? இல்லை பாவம் செய்தவை கொன்று விட்டு புண்ணியஸ்த்தனை காப்பாற்றியதா?? இயற்க்கைக்கு அதெல்லாம் தெரியாது! ஆக கடவுள் மதம் என்று இயற்க்கைக்கு புறம்பான காரியத்தை செய்து கொண்டிருக்கிறான் மனிதன்!! இயற்கைக்கு மதமும் கடவுலும் தெரியவில்லை அதற்கு தெரிந்ததெல்லாம் தன்னை பாலன்ஸ் செய்து கொள்வதே. இயற்கையின் நிலையை மனிதன் மீறும்போது இயற்கை கோர தாண்டவம் ஆடி விடுகிறது!! கடவுளும், புனிதமும் குடுக்க முடியாத படிப்பினையையும் தண்டனையையும் இயற்கை குடுத்து விடுகிறது!! மனித்ம் கடந்த புனிதம் இல்லை!! அதையும் தான்டி புனிதமானது என்று ஒன்று இல்லவே இல்லை!! சக மனித, சக உயிர் பற்றிய சிந்தனை மட்டுமே மனிதம் காக்கும். கண்ணுக்கு தெரியாத கடவுளை பற்றி சிந்திக்கவோ வருந்தவோ தெரிந்த மனிதனுக்கு கண் முன்னே பரிதாபமாய்  நிற்கும் மனிதனை தெரிவதில்லை!! கண்ணுக்கு தெரியாத கடவுள் காப்பாற்றுவார் என்றாலோ இல்லை அவரே வந்து தண்டிப்பார் என்றால் இங்கே உள்ள நாமெல்லாம் என்னாத்தை புடுங்க வாழ்கிறோம்!!!!

No comments: