Wednesday 24 September 2014

சமூகம் சார்ந்த பொருளாதாரம் - நாடார் மகமை





சமூகம் சார்ந்த பொருளாதாரம் - நாடார் மகமை
****************************************************************
நிதிகளைச் சேர்ப்பதிலும், அவற்றைத் தொழிலுக்காக திரட்டுவதிலும், நமது மக்களின் முறை அலாதியானது. இன்றைக்கு சில்லறை வணிகம் உள்ளிட்ட துறைகளில் முன்னணியிலுள்ள நாடார் சமூகம் ஆரம்ப காலங்களில் தமது தொழில்களுக்கான நிதியை சமூகத்திடமிருந்தே திரட்டியது. அதற்கு அவர்கள் கண்டுபிடித்த முறை தான்  ‘மகமை’ என்பதாகும். அதனால் இன்று ஒட்டுமொத்த சமூகமும் பல துறைகளில் முன்னேறி உள்ளது. இந்த மாதிரி முறைகள் எல்லாம் உயிப்பான சமூகங்கள் தங்களின் கலாச்சார வழிகளை ஒட்டி ஏற்படுத்தியவை.

பொருளாதார முன்னேற்றம் இல்லாமல் தங்களால் சமுதாயத்தில் ஒருநிலையை அடைய முடியாதுபொருளாதார முன்னேற்றமே ஒருசமுதாயத்தின் முன்னேற்றம் என்பதை தெளிவாக அறிந்திருந்தநாடார்கள் தங்களில் பொருளாதார முன்னேற்றத்திற்காக எடுத்து வைத்த முதல் அடிதான்வியாபாரம். மாட்டு வண்டியில் ஊர் ஊராகசென்று கருப்பட்டிகருவாடுபருத்தி போன்ற பொருட்களைவிற்கத்தொடங்கினர்ஒவ்வொரு ஊரிலும் கீழ் ஜாதிக்காரன் இப்படி வந்து வியாபாரம் செய்வதா என பிரச்சனைகள் வந்தன. அவர்களின் வண்டிகள், பொருட்கள் களவு போயின.. அவர்களுக்கு திருப்பி அடிக்கவெல்லாம் நேரம் இல்லை. தங்களுக்கு தாங்களே பாதுகாப்பு என்பதை உணர்ந்தஅவர்கள், தங்கள்வண்டிகளை பாதுகாப்பாக நிறுத்துவதற்காக சிறிய நிலம் ஒன்றை ஒவ்வொரு ஊரிலும் வாங்கி அதற்கு “பேட்டை” என்று பெயரிட்டனர். (சிவகாசியில் இப்போதும் கூட திருநெல்வேலி தெக்ஷண மாற நாடார்சங்கத்தின் கருவாட்டுப்பேட்டை இன்றும் உள்ளது). அந்த பேட்டையைநிர்வகிக்க அவர்களுக்குப் பணம் தேவைப்பட்டது.. அப்போது தான்இந்திய வரி வரலாற்றில் புரட்சி ஏற்படுத்திய sales taxற்கு அச்சாரமானஒரு விசயம் நடந்தேறியது..

நாடார்கள் தங்கள் பேட்டையை நிர்வகிக்க “நாடார் மகமை பண்டு” என ஒன்றை ஆரம்பித்தனர்ஒவ்வொரு ஊரிலும் பேட்டையை பயன்படுத்தும் ஒவ்வொரு வியாபாரியும் தனது வருமானத்தின் ஒருபகுதியை மகமை பண்டிற்கு கொடுத்து விட வேண்டும்அந்தப்பகுதியைகடந்து செல்லும் ஒவ்வொரு மாட்டு வண்டியும் குறிப்பிட்ட அளவு மகமை நிதி கொடுத்தாக வேண்டும் என்னும் விதியும் இருந்ததுஇந்த மகமை நிதியைக் கொண்டு அந்த பேட்டையில் தங்களுக்கும், தங்கள் உடமைகளுக்கும் பாதுகாப்பை உருவாக்கிக்கொண்டனர்.. ஆனால் நாளாக நாளாக அந்த மகமை நிதி அவர்களே கற்பனை செய்யாத அளவிற்கு வளர்ந்தது.. ஒவ்வொரு ஊரிலும் உறவின்முறை மகமை பண்டு சந்திப்புக்களை மாதாமாதாம் நடத்தி அந்த நிதிகளை எப்படி முறையாக செலவிடுவது என யோசித்தனர்.. தான் கொடுக்கும்ஒவ்வொரு பைசாவும் எந்த அளவுக்கு தன் நிலையைஉயர்த்தப்போகிறது என்பது நாடார்களுக்கு அன்றே தெரிந்திருக்குமா என தெரியவில்லை.. 

அந்த மகமைப் பண்டில் ஒவ்வொரு வியாபாரியும், ஒவ்வொரு குடும்பத்தலைவனும் கட்டும் பணமானது அந்த ஊரின்அந்தசமூகத்தின் நன்மைகளுக்காகப் பயன்பட்டனவியாபாரத் திறமைமட்டும் போதாதுஅதை நிர்வகிக்க படிப்புத்திறமையும் வேண்டும் எனஅறிந்து கொண்ட நாடார் சமுதாய மக்களின் கவனம் கல்வி பக்கம் திரும்பியது.. அந்த மகமை நிதியைக் கொண்டு பல ஊர்களிலும்பள்ளிகளைத் திறந்தனர்விருதுநகரில் 1885ம் ஆண்டில் திறக்கப்பட்ட KVS என்று அழைக்கப்படும் ஷத்ரிய வித்யா சாலா பள்ளி தான் அந்தமாதிரியான முதல் பள்ளிபின் மருத்துவமனைகள்கோயில்கள் எனதங்கள் சமூகத்திற்கு தேவையான அனைத்தையும் உருவாக்கினார்கள். ஒவ்வொரு ஊரிலும் மகமை பண்டு நிதியின் மூலமாக இவை செயல்படுத்தப்பட்டன.. சமூகத்தில் நல்வுற்றோர்களுக்கு உணவும்,ஆடையும்வலிமையுள்ளோர்களுக்கு வேலையும் தரப்பட்டன.போதுமான நிதியை பயன்படுத்தி வியாபார நஷ்டங்கள் சரிசெய்யப்பட்டனசமூகத்திற்காக கிணறுகளும்பொதுக்கட்டிடங்களும்உருவாக்கப்பட்டனஆனால் அதிகமான நிதி கல்விக்கூடங்களுக்கு தான்ஒதுக்கப்பட்டதுஅனைத்து ஊர்களிலும் பள்ளிகளைத் திறந்தனர்.அதாவது எந்த ஒரு சூழலிலும் பிறரை சார்ந்தோஅரசு உதவிகளைஎதிர்பார்த்தோ அவர்கள் எதற்கும் காத்திருக்கவில்லைதங்களுக்குவேண்டியதை தாங்களே செய்து கொண்டார்கள்.

பொருளாதார முன்னேற்றம் இருந்தாலும்ஆதிக்க சாதியினரான மறவர்,வேளாளர் போன்றோர்களின் எதிர்ப்பு நாடார்களுக்கு சில ஆண்டுகளுக்குமுன்பு வரை கூட இருந்து வந்ததுஆனால் தங்களின் பள்ளி,கல்லூரிகளில் அவர்களின் பிள்ளைகளுக்கும் இடம் கொடுத்துதங்கள்நிறுவனங்களில் பிற சாதியினருக்கும் வேலை கொடுத்துஒருஇணக்கமான சூழலை உருவாக்கிக்கொண்டார்கள்இன்று சிவகாசி,விருதுநகர் போன்ற நகரங்களில் இருக்கும் பள்ளிகல்லூரிஎண்ணெய்நிறுவனங்கள்தீப்பெட்டிஅச்சு நிறுவனங்கள்,பட்டாசுத்தொழிற்சாலைகளில் இதை வெகு சகஜமாக காணலாம்.அதாவது ஜாதியால் தன்னை தாழ்ந்தவன் என்று மட்டமாக நினைத்தஉயர் ஜாதி ஆட்களைக் கூட தங்கள் ஒற்றுமையால் தங்களை சார்ந்துவாழ வைத்தது தான் நாடார்களின் வெற்றி..

No comments: