Monday 29 September 2014

யதார்த்த சினிமாவும் மெல்லிய உணர்வுள்ள திரைப்படங்களும்

யதார்த்த சினிமாவும் மெல்லிய உணர்வுள்ள திரைப்படங்களும்
**********************************************************************



நேற்று மாலை கே டிவியில் "ரிதம்" படம் ஓடிக்கொண்டிருந்தது! "பூவே உனக்காக", "ரிதம்" போன்ற மெல்லிய உணர்வுகள் கொண்ட படங்களை பார்த்து வெகு நாட்களாகிவிட்டது! வண்முறை, சாதி, சதி, வில்லன், விரசம் ஆபாசம் என எதுவும் இல்லாம் உணர்வுகளை மட்டுமே காட்டும் படங்களை இப்பொழுதெல்லாம் பார்க்கமுடிவதில்லை! நான் ஒன்றும் டாகுமென்ட்ரி படங்களோ இல்லை குறும்படங்களோ பார்க்கும் அறிவு ஜீவி இல்லைதான். காஞ்சனா விரும்பி பார்க்கும் சராசரிதான். வசூல்ராஜா எம்.பி.பி.எஸ்சை ரசிக்கும் விசிலடிச்சான் குஞ்சுதான்!! ஆனால் பூவே உனக்காக ரிதம் போன்ற படங்களுக்காக மனம் ஏங்கவே செய்கிறது. இந்த படங்கள் ஒளிபரப்பப் படும்போது பார்க்க துடிக்கிறேன். வெகு நாள் கழித்து மொழி மற்றும் அபியும் நானும் படங்களை பார்த்த பொழுது அந்த உணர்வு தெரிந்தது ஆனால் அதற்கு பிறகு அப்படி ஒரு படம் பார்த்ததாக நினைவே இல்லை!! வசந்த், விக்ரமன், சேரன். ராதா மோகன் போன்ற இயக்குனர்களால் கண்டிப்பாக மறுபடி அப்படி படங்களை மீண்டும் குடுக்க முடியும்.

ல்லோரையும் போல் புலம்புகிறேன் என்று நினைக்காதீர்கள். மூன்று குழந்தைகளின் தகப்பனாக சத்தியமாக சொல்கிறேன் தொலைகாட்சியை கூட உயிர்ப்பிக்க முடியவில்லை. ஏதோ பெரிதாக சீரயலில் மட்டும்தான் அழுகை என்றில்லை விஜய் டிவியில் எந்த நிகழ்ச்சியை பார்த்தாலும் யாரையாவது அழ வைக்கிறார்கள் இல்லையென்றால் அவர்களே அழுகிறார்கள்! அதை விட கொடுமை டான்ஸ் ஷோக்கள் அந்த காலத்து ரிக்கார்ட் டான்ஸ் பரவாயில்லை என்றாகிவிட்டது! மற்ற நிகழ்ச்சிகளை பார்க்கும் போது குழந்தைகளின் "சோட்டா பீம்" பர்ர்க்கலாம் போல. "டாம் & ஜெர்ரி"யும் வயது பாராமல் அனைவரையும் எக்காலமும் ரசிக்கவைக்கும் நல்ல கார்ட்டூன்!! திரைப்படங்களை பொறுத்த வரையில் இப்போதெல்லாம் குழந்தைகள் படத்தில் கூட ஒரு குத்து டான்ஸ் வருகிறது. சமீபத்தில் நாம் நல்ல படங்கள் என்று தேர்வு செய்து பார்க்கும் படங்களை கூட குழந்தைகளுடன் பார்க்கமுடியவில்லை! அவ்வளவு வண்முறை, விரசம்.

பியும் நானும் படத்தை பார்க்கும் போது நானும் பிரகாஷ்ராஜ் கேரக்டராக மாறிவிடுவதை தவிர்க்க முடியவில்லை! அந்த படம் பார்க்கும் போது இறுதி காட்சிகளில் என்னையும் அறியாமல் கண் கலங்கி விடுகிறது, இத்தனைக்கும் அது சோகப் ப்டம் இல்லை. அதுதான் மெல்லிய உணர்வுள்ள கதைகள் ஏற்படுத்தும் பாதிப்பு! இயக்குனர் திரு.ம்கேந்திரன் அவர்கள் படங்களில் சோகம் இழையோடினாலும் வன்முறை இருக்காது. முள்ளும் மலரும், உதிரிப்பூக்கள், ஜானி, நெஞ்சத்தை கிள்ளாதே, என எந்த படங்களிலும் வன்முறையோ இல்லை விரசமோ பார்க்க முடியாது. இயக்குனர் K.பாலசந்தர் அவர்கள்தான் யதார்த்த சினிமா என்ற பெயரில் ஆபாசத்தையும் விரசத்தையும் முதலில் சினிமாவில் தெளித்தவர்!! அதற்கு பிறகு வந்த பாலுமகேந்திரா அவர்களும், பாரதிராஜா அவர்களும் இந்த காரியங்களை யதார்த்த சினிமா என்ற பெயரில் செவ்வனே தொடர்ந்தனர். பள்ளியில் படிக்கும் குழந்தைகள் ஜாதி மாறி, மதம் மாறி காதலித்தால் புரட்சி என்று கூறி பெரும் புரட்சியை "அலைகள் ஓய்வதில்லை"யில் ஏற்படுத்தியவர் பாரதிராஜா அவர்கள்."எனக்கு பிடித்தது உன்னை அல்ல உன் 16வயது" என்பது போன்ற சிறப்பான வசனங்களை 16 வயதினிலேவில் வெளிப்படுத்தியவர்!!

மூகத்தை யதார்த்த சினிமா என்ற பெயரில் சீரழித்த பங்கு இந்த மூவரையுமே சாரும். மதுரை "சிடி சினிமா": தியேட்டரில் போடும் ஆபாச படங்களை விட மோசமாக படம் எடுத்தவர் பாலசந்தர். இவரின் "அரங்கேற்றம்" படம் எனது பள்ளி மற்றும் கல்லுரி காலங்கள் வரை விரச சினிமா என்ற பெயரில் புகழ பெற்றது. அப்புறம் "மன்மத லீலை" என பல படங்களை சொல்லலாம்!! இவர்கள் ஏற்படுத்திய புரட்சியும் யதார்த்தமும் பெண்களை இழிவு ப்டுத்தியதே ஒழிய சமூகத்தில் ஒன்றையும் புரட்டி போடவில்லை என்பதே யதார்த்தம். அப்புறம் மெதுவாக வந்து அதே யதார்த்த சினிமா என்ற பெயரில் சீரழிவுகளை தொடர்ந்தவர் இயக்குனர் மணிரத்திணம். இப்போது இவர்கள் அனைவருமே காலாவதி ஆகிவிட்டாலும் சினிமா உலகில் ஒரு கேவலமான புரட்சியை தொடக்கி வைத்த பெருமை இவர்களை சாரும்!! இப்போதும் யதார்த்தம் மற்றும் ஹாலிவுட் பாணி என்ற பெயரில் வன்முறை மற்றும் விரசங்களோடு படம் எடுக்கும் இயக்குனர்கள் நிறைய இருக்க்றார்கள். இதில் முக்கிய இடம் கௌதம் மேணன் அவர்களுக்கு உண்டு.

வர்கள் அனைவருமே சமூகத்தை மிக மோசமாக சீரழித்துக் கொண்டிருக்கிறோம் என்ற பிரஞ்சையே இல்லாமல் செய்தவர்கள். கல்லா கட்டுவதும் பேர் எடுப்பதும் மட்டுமே இவர்கள் பிரதானம். இன்றைய இயக்குனர்களில் பாண்டியராஜ் அவர்கள், ராதாமோகன் அவர்கள் போன்றவர்கள் தான் தரமான படங்களை தருபவர்கள் என்று கூறுவேன். நேற்றைய சமுதாயத்தையும், இன்றைய சமுதாயத்தையும் நீங்கள் மாற்ற முடியாது இயக்குனர்களே ஆனால் நாளைய தலைமுறை களிமண் போன்றது எப்படி மாற்றினாலும் மாறும். அவர்களை சரியான வழியில் கொண்டு செல்லும் கடமை நமக்கு இருக்கிறது. அவர்களை கருத்தில் வைத்து படம் எடுங்கள்!

No comments: