Tuesday 23 September 2014

கர்ம வீரரும் - நடிகரும்



கர்ம வீரரும் - நடிகரும்
********************************
தேனி, உசிலம்பட்டி, இராமநாதபுரம், கமுதி, மதுரை விருதுநகர் போன்ற ஊர்களில் அடிக்கப் படும் போஸ்டர்கள், வாழ்த்துக்கள், அழைப்பு பத்திரிக்கைனு எல்லாவற்றிலும் நடிகர் கார்த்திக்கையும், முத்துராமலிங்க தேவரையும் இணைந்து பார்க்கலாம். அப்புறம் அதே மாவட்டங்கள்ல பிரசாந்தையும், இமானுவேல் சேகரனையும் ஒன்னா பார்க்கலாம்!! நடிகர் கார்த்திக் கட்சி ஆரம்பிச்சுட்டு போய் தூங்கினதை தவிர அவர் சமூகத்திற்கு என்ன விதமான முன்னேற்றத்தை குடுத்தார்னு சத்தியமா இது வரைக்கும் புரியாத புதிர்!!! அதே போல பிரசாந்த் அவர் சமூகத்துக்கு செய்த புன்னியங்கள் என்னான்னு அந்த புன்ணியவான்கள் தான் சொல்லனும். இப்போ புதுசா சசி குமார் கோண் அப்படின்னு ஒரு சமூகம் ஆரம்பிச்சிருக்கு! இவரும் எல்லாரையும் செய்த்ததை தான் செய்வார் என்று நம்புவோம்!!

இப்போ நம்ம சமூகத்திற்கு வருவோம். தென் மாவட்டங்கள்ல தான் இதை நான் அதிகம் பார்க்கிறேன். நடிகரும் சரத்குமாரும் பெருந்தலைவரும் இணைந்து சிரிக்கும் போஸ்டர்களும், ஃபிளெக்ஸ் போர்டுகளும். நடிகர் சரத்குமார் நம்ம சமூகத்துக்கென்று இல்லை ஒட்டு மொத்த தமிழகத்துக்குமே என்ன நன்மையை செய்திருக்கார்னு யாராவது பட்டியலிட முடியுமா??? பெருந்தலவர் நம் சமுதாயத்திற்கு என்று தனியாக எதுவும் செய்யவில்லை என்றாலும் ஒட்டு மொத்த தமிழ்நாட்டுக்கும், இந்த தேசத்திற்கும் பல நல்ல காரியங்களை செய்து நம்மை பெருமை பட வைத்திருக்கிறார். பட்டிவீரன்பட்டி சவுந்திரபான்டியன் அண்ணாச்சி போன்றோர் நம் சமுதாயத்திற்கும், சமூகத்திற்கும் ஆற்றியிருக்கும் பணிகள் எவ்வளவோ.

சரத்குமார் என்ன செய்திருக்கிறார் நாடார்களுக்கு? என்ன செய்திருக்கிறார் நாடார்கள் பெருமைப்பட?? முதல் மனைவி சாயாதேவி கூட வடவர்தான்! அவர் கூடவாவது ஒழுங்காக வாழ்ந்தாரா என்றால் இல்லை!! அவர் இருக்கும் போதே முதலில் நடிகை ஹீரா, அப்புறம் நக்மா!! பின்னர் சாயாதேவியை விவாகரத்து செய்து விட்டு நடிகை ராதிகாவை திருமணம் செய்துள்ளார்!! இவருக்கு அவர் நாலாவது, அவருக்கு இவர் எத்தனாவது என்பது ஆண்டவனுக்கே வெளிச்சம்!! இப்போது இவரது பாணியை இவரது பெரிய மகள் பின்பற்றுகிறார். இது தான் இவர் நம் சமுதாய இளைஞர்களுக்கும் இளைய தலைமுறைக்கும் வழிகாட்டும் முறையா???! அவரது தனிப்பட்ட வாழ்க்கையை நான் விமர்சிக்க கூடாதுதான் ஆனால் தான் பிறந்த சமுதாய்த்திற்கு ஏதோ நன்மை செய்ய வந்த அவதாரம் போல் படம் காட்டுவதால் தான் நான் இதெல்லாம் பேச வேண்டி உள்ளது!! சரி அவரது தனிப்பட்ட வாழ்க்கையை விடுவோம். இது வரை நம் சமுதாய மக்களுக்கு இவர் அரசியலுக்கு வந்து என்ன நன்மையை செய்து விட்டார்??? பூலித்தேவனுக்கு மாலை மரியாதை செய்த இவருக்கு நம் குல மாவீரர் அனந்த பத்மனாப நாடாருக்கு மரியாதை செய்ய நேரமில்லை!!! காமராஜருக்கு விருதுநகரில் மணிமண்டபம் கட்ட இவர் அடிக்கல் நட்டு 8 வருடம் ஆகிவிட்டது!! அத்ற்கப்புரம் ஒரு துரும்பை கூட கிள்ளி போடவில்லை!!!

அவருக்கு ஓட்டு போட்ட தென்காசி தொகுதி மக்களுக்கும் ஒன்னும் செய்த அல்லது செய்கின்ற வழியை காணோம். அங்கும் இவருக்கு ஓட்டு போடு ஜெயிக்க வைத்த நம் சமுதாய மக்களுக்கு பட்டை நாமம்தான். இதுக்கெல்லாம் மேல் இவர் நாடார் என்பதெல்லாம் இவர் அடிக்கும் கூத்துக்களை எல்லாம் கண்மூடி தனமாக ஆதரிக்க வேண்டும் என்றால் நம்மையும் கோமாளிகள் என்றுதான் கூறவேண்டும். அப்படி கோமாளித்தனம் செய்வதாக இருந்தால் அவர் படத்தை தனியாக போட்டு செய்யுங்கள்!! அவர் படத்துடன் தயவு செய்து காமராஜர் அவர்களின் படத்தையோ இல்லை சவுந்திரபாண்டியனார் போன்ற நாடார் பெருந்தலைவர்களின் படங்களையோ போட்டு அவர்களை அவமதிக்காதீர்கள். இந்த பதிவை போட்டதால் நான் நாடார் இன துரோகி என்றால். ஆம் நான் துரோகிதான்!!!!

No comments: