Monday 22 September 2014

தொழில்-தொழிலதிபர்-தொழிலாளி

தொழில்-தொழிலதிபர்-தொழிலாளி
**************************************
விருதுநகரில் முன்பெல்லாம் ஒரு பழக்கம் உண்டு. ஆண் பிள்ளைகள் படிப்பை முடித்துவிட்டு வந்தவுடன் பஜாரில் ஏதாவது ஒரு கடையில் சம்பளத்துக்கு சேர்த்துவிட்டு விடுவார்கள். இத்தனைக்கும் அந்த பையனின் தகப்பனாருக்கு சொந்தமாக கமிசன் மண்டியோ, கடையோ இல்லை கம்பெணியோ இருக்க கூடும். பையன் படிப்பை முடித்தவுடன் நேரடியாக தங்கள் நிறுவனத்தில் பதவி குடுக்காமல் அடுத்த கடைகளில் சம்பளத்திற்கு விட்டு விடுவார்கள். இது தொழில் பழகுவதற்காக மட்டும் இல்லை, நேரம் தவறாமை, ஒழுக்கம், பணிவு, பணியாளர்களின் கஷ்ட நஷ்டங்கள் போன்ற விசயங்களை கற்றுக்கொள்ளத்தான். அந்த பையன் குறந்த பட்சம் ஓராண்டிலிருந்து ஈராண்டு வரை சம்பளத்திற்கு வேலை பார்த்து விட்டு தன் நிறுவனத்திற்கு வருவான். அவன் வரும் பொழுது தான் முதலாளி என்ற என்னமே அவன் மனதை விட்டு அகன்று இருக்கும். 20 வருடத்திற்கு முன் ஏர்னாடிக்ஸ் படித்து விட்டு இது போல் சம்பளத்திற்கு வேலை பார்த்துவிட்டு நிறுவனத்திற்கு வந்தவர்கள் எல்லாம் விருதுநகரில் எனக்கு தெரியும். ஆனால் இன்று விருதுநகரிலேயே இந்த வழக்கம் வழக்கொழிந்து விட்டது. :(

தொழில் என்பது தனி மனித சாதனையோ இல்லை தோல்வியோ அல்ல. கண்டிப்பாக அது கூட்டு முயற்சியாகத்தான் இருக்க வேண்டும். கூட்டு முயற்சிக்கு பணியாளர்கள் அவசியம் இல்லை நமக்கு சரக்கு அனுப்புபவராகவும் இருக்கலாம், நம்மிடம் கொள்முதல் செய்பவராகவும் இருக்கலாம். நமது நிறுவனத்திற்கு நாம் தான் முதலாளி என்ற எண்ணம் இல்லாமல் நமக்கு சரக்கு அனுப்புபவரும், நம்மிடம் கொள்முதல் செய்பவரும் நம் முதலாளிகள் என்ற எண்ணம் வேண்டும். அவர்களது பணத்தை மட்டுமல்ல அவர்களது நேரத்தையும் நாம் மதிக்க வேண்டும். நம்மிடம் பணிபுரிபவர்களையும் நமது சக ஊழியராக கருத வேண்டுமே ஒழிய நம் அடிமைகள் அல்ல என்ற எண்ணம் வேண்டும். இன்று பல முதலாளிகள் தொழிலாளர்களின் சொந்த பிரச்சினைகளை கண்டு கொள்வதில்லை, சம்பளம் தருவதுடன் தங்கள் கடமை முடிந்து விட்டதாகவே கருதுகின்றனர். பணியாளர்கள் சொந்த பிரச்சினையை வைத்துக் கொண்டு நம் நிறுவனத்தின் நிம்மதியாக மட்டுமல்ல சிறப்பாகவும் வேலை பார்க்கமுடியாது. அவர்கள் உடல் இங்கு வெலை செய்து கொண்டிருந்தாலும் மனம் அவர் பிரச்சினையை சுற்றியே ஓடி கொண்டிருக்கும். அப்புறம் எப்படி அவரிடம் சிறப்பான அல்லது கவணத்துடன் கூடிய உழைப்பை எதிர்பார்க்க முடியும்? தொழிலாளர்களிடமோ, பணியாளர்களிடமோ பேசி பிரச்சினைகளுக்கு தீர்வு தர முயல்பவரே சிறந்த தொழில்முனைவராக இருக்க முடியும்!

இன்று உள்ள பொருளாதார சூழ்நிலையில் வாக்கு தவறாமல் செயல்படுவது கடினமாகவே உள்ளது! குறித்த நேரத்தில் பணமோ இல்லை சரக்கோ தொழில் செய்பவர்களால் குடுக்க முடியவில்லை. இதற்கு நம்மவர்கள் இப்போது வைத்துள்ள தீர்வு என்ன தெரியுமா மொபைல சுவிட்ச் ஆப் செய்வது அல்லது போனை எடுக்காமல் விடுவது! இது நம் நாணயத்தையே கேள்விக்குறி ஆக்கவிடும் செயல். நாம் அவரை ஏமாற்றப் போவதில்லை நமக்கு பன வருமிடத்தில் தாமதம் ஆகியிருக்கலாம் அல்லது நமக்கு சரக்கு அனுப்புபவர் தாமதம் செய்திருக்கலாம். எவ்வளவு தாமதம் ஆனாலும் போனுக்கு பதில் அளித்து பொறுமையாக பதில் கூறி அவரின் திட்டுக்களை பெற்றுக் கொள்வதே தொழில்செய்பவருக்கு நல்லது! இதனால் வரும் நன்மைகள் ஒன்று நம் மேல் அவருக்கு இருந்த ஆத்திரம் தீர்ந்துவிடும், இரண்டு நம் நாணயம் கெடாது, மூன்று அவரே நமக்கு உதவ முனையக் கூடும்! ஒருத்த்ருக்கு நாம் கண்டிப்பாக பணத்தி குடுக்க வேண்டும் என்று முனையும்போதே நாம் சம்பாதிக்க தொடங்கி விடுவோம். சரக்கு வாங்குபவரோ இல்லை சரக்கு குடுத்தவரோ அழைக்கும் போது கன்டிப்பாக பதில் அளியுங்கள்.

இன்று தொழில் செய்பவருக்கும் சரி பணியில் இருப்பவருக்கும் சரி.... பிரைவசி நேரம் என்ற ஒன்று இல்லாமல் ஆக்கிவிட்டது செல்போன். முன்பெல்லாம் ஒருவரை தொடர்பு கொள்ள லேன்ட் லைன் போன் மட்டுமே உண்டு. அதுவும் அவரது அலுவலக தொடர்பு மட்டுமே தொழில் தொடர்பில் இருப்பவருக்கு தெரியும் எனும்போது அவரை அலுவலக நேரங்களில் மட்டுமே தொடர்பு கொள்ள முடியும். ஆனால் செல் போனும், லேப் டாப்பும் இப்போது நாம காலைக் கடன் கழிக்க போகும் போதே நம் பணி நேரத்தை தொடக்கி வைத்து விடுகிறது. ஆனால் ஒரு முதலாளியும் சரி, நிர்வாக பொறுப்பில் உள்ள பணியாளரும் சரி தனக்கு கீழ் உள்ளவரோ அல்லது சப்ளையரோ அல்லது நமக்கு பனம் தர வேண்டியவரோ அவரது பிரவசியை நாம் மதித்தே ஆகவேண்டும். அவர்களது பணி நேரம் அல்லாத நேரங்களில் அவரை அழைப்பதை கூடுமான வரை தவிர்ப்பதே சிறப்பு. கண்டிப்பாக அழைத்தே தீரவேண்டும் என்ற காட்டாயம் இல்லாத சூழலில் அவரை பணியில் இல்லாத நேரங்களில் கண்டிப்பாக அழைக்க கூடாது.

இன்று உள்ள பொருளாதார சூழ்நிலை முன்பு போல இல்லை. குறைந்த லாபத்தில் நிறைந்த செலவுகளுடன் தொழிலை சந்தித்து வருகிறீர்கள் தொழில் அதிபர்களே. ஆகவே முடிந்த வரை தேவை இல்லாத செலவுகளை குறையுங்கள். அதற்காக பணியாளர்களுக்கு செய்யும் அவசிய செலவுகளில் கை வைத்து விடாதீர்கள். முடிந்த வரை அலுவலகத்தில் உங்கள் செலவுளை குறையுங்கள்! வீட்டில் உங்கள் வசதியை சவுகரியமாக பார்த்துக் கொள்ளுங்கள் ஆனால் அலுவலகமோ தொழிர்க்கூடமோ அங்கு பணியாளர்களின் சவுகரியத்திற்கு ஏற்றார் போல் இடத்தை அமைத்துக்  கொள்ளுங்கள். அலுவலகத்தில் முதலாளிகளின் டாம்பீக செலவுகளை கண்டிப்பாக குறைத்துக் கொள்ளலாம்! முடிந்த வரை பஸ்சிலோ அல்லது டிரைனிலோ செல்லக் கூடிய இடங்களுக்கு காரில் செல்வதை தவிர்க்கலாம்!

அதே போல் கல்லா பெட்டியில் உள்ள பணமோ அல்லது பாங்க் பாலன்ஸோ நமது காசு இல்லை என்ற என்ணம் வேண்டும். அதில் உள்ள லாபத்தொகை மட்டுமே நம்மை சார்ந்தது. அதிலும் பணியாள்ர்களுக்கும் நிறுவன செலவுகளுக்கும் பங்கு இருகின்றது என்பதை மறந்து விடக்கூடாது. கல்லா பெட்டியிலும், பாங்க்கிலும் உள்ள தொகையை வைத்தளுங்கள் இருப்பை தீர்மானிக்காதீர்கள். அது உங்கள் பணம் அல்ல!!

நேர்மையாக சிறப்பாக வள்மாக தொழில் செய்ய வாழ்த்துவது
-உங்கள் Kumaran NB Tholandi
நன்றி

No comments: