Tuesday 23 September 2014

சத்தியத்தின் நிழல் - காமராசர்

சத்தியத்தின் நிழல்
*************************
இன்னிக்கு க்ண்டவங்க எல்லாம் ஒரு வசனம் பேசுறாங்க, ஆனால் அந்த வசனத்தின் உண்மையான சொந்தக்காரர் "கர்ம வீரர் மட்டுமே!!

அந்த வசனம் //நாங்க சொல்றததான் செய்வோம், செய்யுறதைதான் சொல்வோம்//! என்றைக்கும் பொய் வாக்குறுதிகளை குடுத்ததில்லை பெருந்தலைவர்.

காமராசர் மேடையில் இருக்கும் போதே ஒரு பேச்சாளர்,

”காங்கிரஸ் ஆட்சிக்கு வருமானால், உழுபவனுக்கு நிலம் சொந்தமாகும்” என்று பேசினார்.

அடுத்துப் பேசிய காமராஜர்,

” நடக்கிறதைச் சொல்லணும். நாங்கள் நம்புகிறதைச் சொல்லணும். உழுபவனுக்கு நிலம் சொந்தமாகனுமின்னு சொல்லுறீங்க. சரி… காங்கிரஸ் ஆட்சிக்கு வந்ததும், அப்படியே தந்து விடுவதா வச்சுக்குவோம்.

அப்புறம் நெல் அறுக்கிறவன், அறுக்கிறவங்களுக்கே நெல் சொந்தம் என்பான். அதை அரைக்கிறவன், அரைக்கிறவனுக்கே அரிசி சொந்தம்னு சொல்லுவான்” – என்றார்.

‘உழுபவனுக்கே நிலம் சொந்தம் என்று பேசியவரும், ஏன் கேட்டுக் கொண்டு இருந்த பொது மக்களும் அசந்து போனார்கள். இது கூடக் காமராஜரின் தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் பேசிய பேச்சுத்தான்.

No comments: