Monday 22 September 2014

சோஷியலிசத்தை இவ்வளவு எளிமையாக யாரும் விளக்கியதில்லை

சோஷியலிசத்தை இவ்வளவு எளிமையாக யாரும் விளக்கியதில்லை
**************************************
தமிழ் நாட்டில் மூன்று முறை முதல் அமைச்சராக இருந்த காமராஜர் அவர்கள் பெரிய பேச்சாளர் அல்ல. ஆனாலும் பேசத் தெரியாவரும் அல்ல. எது சொன்னாலும் ”ஆகட்டும். பார்க்கலாமின்னேன்” – என்று ஒரு வரியில் எதற்கும் பதில் அளித்து விடுவார் என்பார்கள். காமராஜர் பேச வேண்டிய சந்தர்ப்பங்களில் பேசாமல் இருந்ததில்லை. அவர் தொண்டனாக இருந்த காலங்களில் பேச்சுக்கு முக்கியத்துவம் கொடுக்காமல் தொண்டிற்கும் உழைப்பிற்கும் முக்கியத்துவம் கொடுத்தார்.

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவரான பின்னர், காமராஜர் அளவோடு, சுருக்கமாகப் பேசினார். தமிழக கேள்விகளுக்குத் தக்க பதில் அளித்ததோடு, தேர்தல் பொதுக்கூட்டங்களில் சற்று நேரம் அதிகமாகவே, விளக்கமளித்துப் பேசினார்.

////”தண்ணீர் மழையாகப் பெய்யுது. அது ஆறாக ஓடுது. அப்படி ஓடுகிற தண்ணீரை அணைக் கட்டித் தேக்கி வைக்கிறோம். பிறகு அங்கு வாய்க்கால் வெட்டி அதன் மூலம் தண்ணீரை விவசாயத்துக்கு அனுப்புகிறோம். விவசாயத்துக்குப் பயன்பட்டபோது, மிஞ்சும் தண்ணீர் சமுத்திரத்துக்கு போகிறது.

பிறகு என்ன ஆகிறது? இந்த மழைநீர் வற்றி, ஆவியாகி, மேகமாக மேலே போய மறுபடியும் மழையாகக் கொட்டுகிறது. இப்படித்தானே அது பழையபடி சுற்றிக்கொண்டே வருகிறது. அதைத் தடுத்த நிறுத்த முடியும என்ன? அதே போல் தான் பணமும். அது நம்மைச் சுற்றித் தான் வர வேண்டும். ஒரே இடத்திலே அது தேங்கிவிடக்கூடாது.
”மழையில்லை என்றால் யாரும் வாழ முடியாது. மழைக்கு இவ்வளவு பெருமை எப்படி ஏற்பட்டதோ, அதே மாதரி தான் பணத்துக்குப் பெருமை ஏற்பட்டுள்ளது. மழையைப்போலவேதான் பணமும் சுற்றிக்கொண்டு வர வேண்டும். மழை எல்லா இடத்திலும் பெய்கிறமாதிரி, எல்லா இடத்திலேயும் செல்வம் பரவலாக இருக்க வேண்டும். ஒருவரிடத்தில் மட்டும் அது தேங்கக்கூடாது. அதை ஒருவர் மட்டுமே சொந்தமாக உபயோகிக்கக்கூடாது.”///

No comments: