Monday 10 November 2014

பேட்டை மகமை உறவின்முறை - நாடார் சங்கங்கள்

            பேட்டை மகமை உறவின்முறை


    1900 ம் ஆண்டுக்கு முன்பு வரை சுமார் 15 இலட்சம் நாடார்கள் இலங்கை மலேசியா போன்ற வெளிநாடுகளுக்கு சென்று தங்கி விட்டனர். ஆனால் இவ்வாறு வெளிநாடுகள் சென்று திரும்பிய நாடார்கள் தாங்கள் கொண்டு வந்த பணத்தை கொண்டு கருப்புகட்டி, உப்பு மற்றும் சந்தைப்பொருட்களை விற்பனை செய்ய ஆரம்பித்தனர். அதற்காக நாடார்கள் கிராமங்களில் இருந்து நகரங்கள் நோக்கி செல்ல ஆரம்பித்தனர்.

    முதலில் திருச்செந்தூர், ஆறுமுகநேரி, தூத்துக்குடி, தென்காசி அம்பை போன்ற பகுதிகளிலும் அதன் பின் சிவகாசி, விருதுநகர், சாத்தூர், அருப்புக்கோட்டை, திருமங்கலம், பாளையம்பட்டி போன்ற ஆறு சிறப்புமிக்க நகரங்களிலும் குடியேறி தொழில் செய்தனர். இந்த ஆறு நகரங்கள் நாடார் வரலாற்றில் ஒரு திருப்புமுனையாகவே அமைந்தது. இந்த நகரங்களில் குடியேறும் போது மறவர், நாயக்கர் மற்றும் ரெட்டியார்களால் தொல்லை ஏற்பட்டது. அதை எதிர்கொள்ள நாடார்கள் ஒற்றுமை அவசியமானது. இதனால் பேட்டைகள் அமைத்து வியாபாரம் செய்தனர். பேட்டைகளை சுற்றி நாடார்கள் குடியிருப்புகள் உருவாகின. புதிய நகரங்களில் மகமைகள் உருவாக்கப்பட்டனர். மகமைக்கு வருமானமாக வரி விதிக்கப்பட்டன. ஒவ்வொரு மகமையும் ஒரு அரசு போல செயல்பட்டன. மகமையில் உறுப்பினராக உள்ள நாடார்களின் வீட்டில் உள்ள திருமணமான நாடார்கள் எல்லோரும் சேர்ந்து உறவின்முறை என்னும் அமைப்பை உருவாக்கினார்கள். இந்த உறவின் முறை மூலம் கோவில்கள் மற்றும் பள்ளிகள் கட்டினார்கள். நாடார் ஊர்த்தலைவர்கள் நாட்டாமைகள் என்று அழைக்கப்பட்டனர். ஒவ்வொரு நாடாரும் மகமைக்கு சரியான வரி செலுத்தினர். உறவின் முறை மீது மிகுந்த மரியாதை வைத்திருந்தனர். மகமை மற்றும் உறவின்முறை விதிகள் மீறுவோர், தவறு செய்வோர் தண்டிக்கப்பட்டனர். அவர்கள் திருந்தாவிடில் ஊரில் இருந்தும் உறவின் முறையில் இருந்து நீக்கப்பட்டனர். 
    பெண்கள் பெரிதும் போற்றப்பட்டனர். பெண்களை இழிவு செய்தால் ஊர் முன்னிலையில் நாவிதர்கள் வைத்து செருப்பால் அடிப்பது எனும் தண்டனை இருந்தது. நாடார்குல வளர்ச்சிக்கு அந்தந்த குடும்பத்தில் உள்ள பெண்களும் அதிகம் உழைத்தனர். அதிகாலை முதல் இரவுவரை முழு குடும்பமே உழைத்து விரைவில் அனைத்து தொழில்களிலும் ஆதிக்கம் செலுத்த ஆரம்பித்தனர். சிவகாசி சுற்றுப்புறங்களில் பட்டாசு மற்றும் தீப்பெட்டி தொழிற்சாலைகளை பெருமளவில் தொடங்கினர். அதில் பெரு வெற்றியும் பெற்றனர். அதன்பின் கோவில்பட்டி, ஸ்ரீவில்லிபுத்தூர் மற்றும் கமுதி போன்ற நகரங்களில் தொழில்களை துவங்கினர். இந்த ஊர்களை இணைக்கும் மதுரையில் மாபெரும் சங்கத்தையும் ஆரம்பித்து அங்கும் தொழில்களை செய்து குடியேறத்தொடங்கினர். நாடார்களிடம் பணம் வந்தவுடன் அவர்கள் சொந்த கிராமங்களில் அதிகமாக இடங்கள் வாங்கி விவசாயம் செய்தார்கள். மனிதன் வாழ தகுதியற்ற மணல் பாங்கான தேரியை பசுமையான விவசாயம் செய்யும் இடமாக மாற்றியது உலகிலே நாடார்களால் மட்டுமே முடியும். நாடார்களின் வெற்றியின் ரகசியம் என்னவென்று வரலாற்று ஆய்வாளர்களிடம் கேட்டால், பேட்டை – மகமை – உறவின் முறை என்று சொல்வார்கள். இன்று தமிழக அனைத்து நகரங்களிலும், இந்தியாவில் பல நகரங்களிலும் உலகின் பல்வேறு இடங்களிலும் நாடார் சமுதாய மக்கள் பல்வேறு தொழில்களை செய்துவருகின்றனர்.

    ராமநாதபுரத்தில் பனைதொழில் பாதிக்கப்பட்டதாலும், அதிக சண்டைகள் வந்ததாலும் அங்கிருந்து நாடார்கள் சேலம், கோவை பொள்ளாச்சி, நாமக்கல், கோபிசெட்டிபாளையம் போன்ற பகுதிகளுக்கு சென்று குடியேற ஆரம்பித்தனர். முன்னர் தென்பகுதியில் பழைய ராமநாதபுரம் மாவட்டம், திருநெல்வேலி மாவட்டம், கன்னியாகுமரி பகுதிகளில் நாடார்கள் மிக அதிக அளவில் இருந்தனர். இப்போது தென் தமிழகம், மேற்கு தமிழகம் மற்றும் எல்லா நகரங்களிலும் பரவலாக வாழ்கின்றனர். சென்னையில் மிக அதிக எண்ணிக்கையில் உள்ளனர்.
    இன்று நாடார்களின் பனைத்தொழில் அழிந்து வருகின்றது. நாடார்கள் வணிகத்தில் சிறந்து விளங்கி தங்களை ஓர் வணிகசமுதாயமாக அடையாளம் காட்டி வருகின்றனர். அதில் வெற்றியும் அடைந்து விட்டனர்.
      ஆனால் பனைதொழிலும் பனையும் அழிந்துவிட்டதுதான் வேதனை!!

          நாடார் சங்கங்கள்


    நாடார்களுக்கு என முதலில் சத்திரிய மகாஜன சங்கம் மதுரையில் 1895ல் தொடங்கப்பட்டது. ஆனால் வெற்றியடையவில்லை. பொறையார் ரத்தினசாமி நாடார் மிகப்பெரும் செல்வந்தர். ஆவர் பழைய சென்னை மாகாணத்தின் மதுபான விற்பனை உரிமையை பிரிட்டிஸ் அரசிடம் பெற்றிருந்தார். அக்காலத்தில் உயர்ஜாதி மற்றும் ஆதிக்க சாதிகளின் பிரதிநிதிகள் சட்டசபையில் இடம்பெறுவர். நாடார் பிரதிநிதிகள் யாரும் கிடையாது. ரத்தினசாமி நாடார் பலமுறை அரசை கேட்டும் அந்த முயற்சி பயனளிக்கவில்லை. அந்த சமயம் அரசியல் பிரதிநிதித்துவம் பெறவும், தாழ்ந்த நிலையில் இருக்கும் நாடார் சமுதாயத்தை மேம்படுத்தவும் ஓர் சங்கம் தேவை என உணர்ந்து திரு. ரத்தினசாமி நாடார் அவர்களால் 1910 ம் ஆண்டு தொடங்கப்பட்டது. தான் நாடார் மகாஜன சங்கம். அவரது காலத்தில் சொந்த செலவிலே சங்கத்தை வளர்த்தார். மிகவும் வேகமாக வளர்ந்தது சங்கம். அவரது மறைவிற்கு பின் சங்க செயல்பாடுகள் சற்று தளர்ந்தது. நாடார் சமுதாயத்தில் பிரதிநிதியாக நாடார் மகாஜன சங்கம் செயல்பட்டது. நாடு முழுவதும் உறுப்பினர்கள் சேர்க்கப்பட்டனர்.
    பட்டி வீரன் பட்டி சௌந்திரபாண்டியன் நாடார் சங்கம் மீண்டும் புத்துயிர் பெற்றது. கேரள மாநிலத்தில் வசிக்கும் ஈழவர்கள் நாடார்கள் என அறிவிக்கப்பட்டு சங்கத்தில் சேர்க்கப்பட்டனர். நாடார்களின் உட்பிரிவுகளை அரசு ஊக்கப்படுத்துவதாக ஆதங்கம் தெரிவித்தனர்.1963ம் ஆண்டு நாடார் சமூகம் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் பட்டியலில் இடம்பெற்றது .

    நாடார் மகாஜனசங்கம் போல தஷயமாற நாடார் சங்கமும் பழமையும் பெருமையும் வாய்ந்தது. இச்சங்கம் ஆறுமுகநேரியை சேர்ந்த ராஜா பலவேசமுத்து நாடார் அவர்கள் தலைமையில் பல சாதனைகளை செய்தது. பேட்டைகளில் தொழில் செய்து வந்த நாடார்களுக்கு இச்சங்கம் பக்கபலமாக இருந்தது. இச்சங்கமும் பல்வேறு இடங்களில் பள்ளிகளையும், கல்லூரிகளையும் மற்றும் வணிக வளாகங்களையும் கொண்டுள்ளது.
    மேலும் தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கி நாடார்களுக்காக நாடார்களால் தொடங்கப்பட்டது. இதற்கு டபிள்யு.பி.எ சௌந்திரபாண்டி நாடார் கடுமையாக உழைத்தார். இவர்தான் நாடார் சமூகத்தின் முதல் சட்டமன்ற பிரதிநிதி என்பது குறிப்பிடத்தக்கது.

No comments: