Wednesday 12 November 2014

வணிகப் பேட்டைகள் கண்ட சான்றோர்கள்

பாண்டிய குல சான்றோர்கள்


பாண்டிய நாடு வணிகத்திலும், கடல் கடந்த வணிகத்திலும் சிறந்து விளங்கியதற்கான சான்றுகள் நிறைய உள்ளன. 
தொண்டி (முத்தூர்க்கூற்றம்)பொ.பி. 875க்கு முன் - 1310திருவாடானை வட்டம்-
காயல்பட்டினம்பொ.பி. 875க்கு முன் - 1310திருவைகுண்டம் வட்டம்தாமிரபரணி ஆறு
மானவீரப்பட்டினம் (மானவீரவளநாடு)பொ.பி. 875க்கு முன்மருதூர், சாத்தான்குளம் வட்டம்கருமானியாறு
பாசிப்பட்டினம் (முத்தூர்க்கூற்றம்)பொ.பி. 875 - 1090திருவாடானை வட்டம்பாசியாறு
உலகமாதேவிப்பட்டினம் (செவ்விருக்கை நாடு)பொ.பி. 875 - 1368இளங்கோமங்கலம்,திருவாடானை வட்டம்-
நானாதேசிப்பட்டினம் (முத்தூர்க்கூற்றம்)பொ.பி. 875 - 1368வீரகேரளபுரம், திருவாடானை வட்டம்-
பவித்ரமாணிக்கப்பட்டினம் (கீழ்செம்பில்நாடு)பொ.பி. 875 - 1368இராமநாதபுரம் வட்டம்கப்பலாறு
மேன்தோன்றிப்பட்டினம் (கீழ்செம்பில்நாடு)பொ.பி. 875 - 1090இராமநாதபுரம் வட்டம்-
கேரளாந்தகபுரம் (குரங்குடிநாடு)பொ.பி. 875 - 1090பட்டினமருதூர், விளாத்திக்குளம் வட்டம்மலட்டாறு
குலோத்துங்கச்சோழப்பட்டினம்(மிழலைக்கூற்றம்)பொ.பி. 1090 - 1271மணமேல்குடி,ஆவுடையார்கோயில் வட்டம்வெள்ளாறு
பெரியபட்டினம் (கீழ்செம்பில்நாடு)பொ.பி. 1090 - 1368இராமநாதபுரம் வட்டம்கப்பலாறு
குலசேகரப்பட்டினம் (மானவீரவளநாடு)பொ.பி. 1090 - 1368சாத்தான்குளம் வட்டம்கருமானியாறு
ஆவுடையார்பட்டினம் (மிழலைக்கூற்றம்)பொ.பி. 1271 - 1368ஆவுடையார்கோயில் வட்டம்வெள்ளாறு
சுந்தரபாண்டியன்பட்டினம் (முத்தூர்க்கூற்றம்)பொ.பி. 1271 - 1368திருவாடானை வட்டம்பாம்பாறு
நீர்ப்பட்டினம் (முத்தூர்க்கூற்றம்)பொ.பி. 1271 - 1368கண்ணங்குடி, திருவாடானை வட்டம்-
புதுப்பட்டினம் (செவ்விருக்கைநாடு)பொ.பி. 1271 - 1368திருவாடானை வட்டம்-
சீவல்லபப்பட்டினம் (செவ்விருக்கைநாடு)பொ.பி. 1271 - 1368புறக்குடி, திருவாடானை வட்டம்-
நினைத்ததை முடித்தான் பட்டினம் (கீழ்செம்பில்நாடு)பொ.பி. 1271 - 1368கீழக்கரை, இராமநாதபுரம் வட்டம்குண்டாறு
இருவரைவென்றான் பட்டினம் (கீழ்செம்பில்நாடு)பொ.பி. 1271 - 1368இராமநாதபுரம் வட்டம்-
வல்லபப்பட்டினம் (கீழ்செம்பில்நாடு)பொ.பி. 1271 - 1368ஏறிக்கிட்டூர், இராமநாதபுரம் வட்டம்-
தத்தையார்ப்பட்டினம் (கீழ்செம்பில்நாடு)பொ.பி. 1271 - 1368இராமநாதபுரம் வட்டம்-
முடிவீரன்பட்டினம் (கீழ்செம்பில்நாடு)பொ.பி. 1271 - 1368இராமநாதபுரம் வட்டம்-
கோதண்டராமன்பட்டினம் (கீழ்செம்பில்நாடு)பொ.பி. 1271 - 1368இராமநாதபுரம் வட்டம்-
ஏறிவீரப்பட்டினம் (அளற்றுநாடு)பொ.பி. 1271 - 1368இடைவழி, முதுகுளத்தூர் வட்டம்-
வென்றுமுடிசூடிய சுந்தரபாண்டியப்பட்டினம் (பராந்தகவளநாடு)பொ.பி. 1271 - 1368ஸ்ரீவைகுண்டம் வட்டம்-
காயல்பட்டினம் (குடநாடு)பொ.பி. 1271 - 1368திருச்செந்தூர் வட்டம்தாமிரபரணி
சோனாடுகொண்டான்பட்டினம் (குடநாடு)பொ.பி. 1271 - 1368திருச்செந்தூர் வட்டம்பாம்பாறு
வீரபாண்டியன்பட்டினம் (குடநாடு)பொ.பி. 1271 - 1368திருச்செந்தூர் வட்டம்பாம்பாறு
முத்துராமலிங்கப்பட்டினம் (முத்தூர்க்கூற்றம்)-திருவாடானை வட்டம்பாசியாறு
அம்மாப்பட்டினம்


மேலே குறிப்பிட்டுள்ள துறைமுகங்கள் முற்கால மற்றும் பிற்கால பாண்டிய்ர்களின் வணிக துறைமுகங்கள். முற்கால மற்றும் பிற்காலப் பாண்டியர்களின் ஆட்சியில் உருவாக்கப்பட்ட துறைமுகப் பட்டினங்கள் பற்றி அறிய தொண்டி, பெரியபட்டினம், பழைய காயல், போன்ற பல இடங்களில் செய்யப்பட்ட அகழாய்வுகளும், அல்பருனி, மார்க்கோபோலோ, இபின்தூதா போன்ற பல்வேறு நாட்டவர் குறிப்புகளும், கல்வெட்டுகள், இலக்கியங்கள், அகழாய்வில் கிடைத்த நாணயங்கள் போன்றவையும் துணைபுரிகின்றன. இந்தத் துறைமுகங்களிலிருந்து நெல்அரிசிஉப்புஅவிழாகட்டுபயித்தம் பருப்புஅவரைதுவரைஆமணக்குஎள்கடுகு,சீரகம்வெங்காயம்புளிகருப்பட்டிமஞ்சள்பாக்குமிளகுசுக்குதேன்சந்தனம்அகில்பன்னீர்கற்பூரம்சாந்துபுனுகு,கஸ்தூரிசவ்வாதுபுடவைபருத்திப் புடவை, நூல் புடவை, நொய் புடவை, பரும்புடவை, பட்டுநூல்கொடிகணபம்,இரும்புசெம்புவெண்கலம்குதிரையானைஒட்டகம், சவுரி மயிர், முத்துசிப்பிமணிகள் போன்றவை ஏற்றுமதி இறக்குமதி செய்யப்பட்டுள்ளதாகத் தமிழகக் கல்வெட்டுகளில் உள்ளது. 


சான்றோர்களின் பேட்டைகளின் தேவை (500 ஆண்டு பழமையான மதுரை நெல்பேட்டை)


இதற்கெல்லாம் ஆதாரமாய் விளங்கியது சாத்து வணிகமே (சாத்து வணிகம் = பொதி வண்டியில் சரக்கு எடுத்து செல்லும் வணிகம்). பாண்டியர்கள் காலத்தில் பாண்டிய நாட்டில் வணிகம் இவ்வளவு சிறந்து விளங்கி இருந்தாலும் மாற்றார் ஆட்சியில் அப்படி இல்லை. வழிப்பறிக்கொள்ளை வன்முறைகளால் வணிகம் முற்றாக சிதைந்தது.  இதனால் பொது மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர். மக்களோடு மக்களாய் வணிகமும் மாண்டு போக ஆங்காங்கே பற்றாக்குறை நிலவி பஞ்சமும் பட்டினியும் ஏற்படக் காரணமாயிற்று. இதனால் சான்றோர்கள் திரை கடலோடி திரவியம் தேடினர். குடும்ப சுக துக்கங்களை மறந்து சான்றோர்கள் சாத்து வணிகத்தில் நெடுந்தூரம் பயணம் செய்து வணிகத்தில் ஈடுபட வேண்டியிருந்தது. இது போன்ற சாத்து வணிகத்தில் சந்தை படுத்துதலில் மதுரை ஈடு இனையற்று விளங்கியது. சான்றோர்கள் தத்தம் பொருளை சந்தைப் படுத்துவதற்கு ஆங்காங்கே சந்தைப் பேட்டைகளை அமைக்கலாயினர். இதில் நெல்லை மாவட்டது சான்றோர்களே முன்னோடியாக இருந்துள்ளனர். தெட்சிணமாற நாடார் சங்கம் என்ற பெயரில் தாங்கள் பான்டியர் வழி வந்தவர் என்றதை நிரூபித்து உள்ளனர். மதுரை கீழவெளி வீதியின் வடகிழக்கு மூலையில் தெட்சிணமாற நாடார் சங்கப் பேட்டை. அமைந்துள்ளது.  500 ஆண்டுகள் பழமையான இந்த வணிகப் பேட்டை தொடக்கக் காலத்தில் 3 ஏக்கர் பரப்பளவில் அன்றைய வைகைக் கரை யோரம் அமைந்திருந்துள்ளது. காலப் போக்கில சுருங்கி இன்றைக்கு ஒரு ஏக்கர் பரப்பளவில் சுருங்கி நெல்பேட்டை என அழைக்கப் பெற்று வருகிறது. 

தெட்சிணமாற நாடார் சங்கம்


தூத்துக்குடியில் இருந்து உப்பும், கருவாடும், நெல்லையில் இருந்து கருப்பட்டியும் தெட்சிணமாற நாடார் சங்க பேட்டைக்கு கொண்டுவரப்பட்டு விற்பனையாகி உள்ளன.  வழியில் இளைப்பருவதற்காக வழி நெடுகிலும் உள்ள பெருங் கிராமங்களிலும் சிறு நகரங்களிலும் வண்டி பேட்டைகள் அமைக்கப் பட்டிருந்துள்ளன. கோவில்பட்டி, சாத்தூர், விருதுநகர், நாகலா புரம், புதூர், அருப்புக்கோட்டை, காரியாபட்டி, ராமநாதபுரம், உச்சிப்புளி, தேனி, சின்னமனூர், திண்டுக்கல், பழனி என பல ஊர்களில் இந்த வண்டிப் பேட்டைகளை இன்றும் காணலாம். மதுரை நெல்பேட்டை தொடக்க காலத்தில் கருவாடு, உப்பு, கருப்பட்டி சந்தையாக இருந்த போது எங்கும் வேப்ப மரங்கள் நிறைந்து வேப்பந் தோப்பாக இருந்துள்ளது அன்றைய வணிகர் களுக்கு வாய்ப்பாக இருந்துள்ளது. இந்த பேட்டையை போலவே பின்னாளில் வெற்றிலைப் பேட்டை, வாழைக்கய் பேட்டை என இன்ன பிற பேட்டைகள் தொடங்கப் பட்டன. வணிகர்கள் தம் குடும்பங்களை மாதக் கணக்கில் பிரிந்து வணிகம் செய்ய நேர்ந்ததால் பேட்டைப் பகுதியிலேயே தமக்குரிய உணவை தாங்களே சமைத்து உண்டனர். ஆரம்ப காலத்தில் பழனி, சின்னமனூர், தேனி, ஆண்டிபட்டி, நிலக்கோட்டை, உச்சிப்புளி என 6 ஊர் வணிகர்கள் வந்து கூடி வணிகம் புரிந்ததால் 1943-ம் ஆண்டு ஒருங்கிணைந்த சந்தையாக நெல்லையைத் தலைமை இடமாகக் கொண்ட தட்சிணமாற நாடார் சங்கத்துடன் நிர்வாக ரீதியில்  இணைக்கப் பெற்றது. 

விருதுநகர்-அருப்புக்கோட்டை-பாளையம்பட்டி நாடார் சங்கம்


மதுரையில் இருந்து தூத்துக்குடி, திருச்செந்தூர் செல்வதற்கான நேர் வழி அருப்புக்கோட்டை பாளையம்பட்டி  வழியேஎனவே கள்வர் தொல்லைக்கு அஞ்சிய விருதுநகர் வணிகர்கள் அருப்புக்கோட்டைக்கு வந்து அங்குள்ள வணிகர்களுடன் இணைந்து பாளையம்பட்டிக்கு வருவார்கள். ஆயுதம், ஆள்பலம் கொண்ட பாளையம்பட்டி வணிகர்கள் வண்டி முன்னாலும் பின்னாலும் அணிவகுத்து செல்ல நடுவில் அருப்புக்கோட்டை விருதுநகர் வணிகர்களுடன் பொதி மாட்டு வண்டிகள் அணிவகுத்துச் செல்லும்.  இந்த வகையில் ஒரே சமயம் இருநூற்றுக்கும் மேற்பட்ட வணிகசாத்து வண்டிகள்  மதுரை நோக்கி வந்து கொண்டிருக்கின்றன. பின்னாட்களில் விருதுநகராகிய  முந்தைய விருதுபட்டியிலும் வணிக சாத்தர்கள் மல்யுத்தம் கற்றும் சிலம்பப் பயிற்சிக் கூடங்கள் அமைத்ததின் பேரில் விருதுநகர் ஆறுமுக நாடார் மல்யுத்த வீரரானார். நாகலாபுரத்தைச் சேர்ந்த நல்லதம்பி நாடார் மதுரையில் பின்னாட்களில் நடந்த பெரிய மல் யுத்தப் போட்டிகளில் வட நாட்டவரையும் வென்று மாவீரராகி மதுரை கீழ் வெளிவீதியில் தொழில் அதிபரானார். விருதுநகர், அருப்புக்கோட்டை பாளையம்பட்டி வணிகர் ஒரே அணியில் பாதுகாப்பு கருதி மதுரைக்கு வந்தாலும் தனித்தனியே வணிகத்தில் ஈடுபட்டதால் சொக்கநாதர் கோவில் வடபுரம் இருக்கும் மனையைத் தங்களூர் சந்தையாக்கிக் கொண்டனர். அது தான் இன்று மொட்டை பிள்ளையார் கோவிலாகவும், விருதுநகர் அருப்புக்கோட்டை பாளையம்பட்டி இந்து நாடார்கள் உறவின் முறை கட்டிடமாகவும் உள்ளது. அங்கு மாட்டுவண்டிகள் நிற்கவும் தங்கள் எதிர்காலத்திற்கு உகந்ததாகவும் வசதிகள் செய்து கொண்டனர்.  கிணறு வெட்டி நந்தவனம் அமைத்து வணிகர் பொருட்களின் வைப்பிட மாகவும், விற்பனை சந்தையாகவும் பயன்படுத்தினர். இதே சமயம் விருதுநகர் அருப்புக்கோட்டை வணிகர்கள் கீழ மாசி வீதியில் தங்கள் சந்தைப் பேட்டைகளை ஒன்றாகவே அமைக்க இந்த இடத்திலும் பாளையம்பட்டி வணிகர்கள் வந்து தங்கி வணிகம் புரிந்தனர். இந்தப் பேட்டைகளில் உள்ள பெரும் சிறப்பு என்னவெனில் மரங்கள் வளர்ப்பது, எந்த வகை மரங்கள் எத்தனை எத்தனை உள்ளன என்பதை அதையும் கணக்கிட்டு பராமரித்து வந்துள்ளனர். மதுரை கீழமாசி வீதியில் உள்ள கீழப் பேட்டை இடம் 1823-ம் ஆண்டு தனியாரிடம் இருந்து பாளையம்பட்டி, அருப்புக்கோட்டை, விருதுநகர், சாத்து வணிகர்களால் விலைக்கு வாங்கப்பட்டது. எனினும் இந்த மூன்று ஊர்களிலும் தனித்தனி உறவின் முறைகள் ஏற்கெனவே ஏற்படுத்தப்பட்டு இருந்ததால் உறவின்  முறைகளுக்கு சொந்தமான தாக பத்திரப்பதிவு செய்யப்பட்டது. இங்கு அமைந்த மொட்டை வினாயகர் கோவிலுக்கு தனி அறக்கட்டளை அமைக்கப்பட்டு பராமரிப்பு நடக்கிறது. பாளையம்பட்டி பழைய நந்தவனம் பின்னாளில் உடற் பயிற்சிக் கூடமாக்கப்பட்டு அதன் பின் பகுதி வணிக வளாகமாகி உள்ளது. இதே போல மூன்று ஊர் உறவின் முறைக்கு சொந்தமான கீழப்பேட்டையும் வணிக வளாகமாக உருவாகி இதன் உட்புறம் திருமண மண்டபமாகி உள்ளது. 

திருமங்கலம் சாத்தாங்குடி நாடார் சங்கம்

திருமங்கலம் மற்றும் சாத்தங்குடி வணிகர் களும் சாத்து வணிகம் புரிந்துள்ளனர்.  மதுரைக்கு வரும் வழியில் திருப்பரங்குன்றத்தில் 1904-ம் ஆண்டில் பாண்டிய சத்திரியகுலத்து திருமங்கலம் நாடார்களுக்கு பாத்தியப்பட்ட பேட்டை என்ற  முகவரியிட்ட கருங்கற்களைக் கொண்டு பேட்டை கட்டினார்.  இது தற்போது திருமண மண்டப மாக செயல்படுகிறது. இது தவிர்த்து மதுரை யானைக்கல் பகுதி யிலும் கீழமாசி வீதியிலும் திருமங்கல வணிகர் பேட்டை அமைந்துள்ளது. இது போல் உயிர் கொடுத்து உதிரம் சிந்தி நம் முன்னோர்கள் நமக்கு அருளிய பேட்டைகளையும் மகமைகளையும் சொத்துக்களையும் முறையாக பராமரிக்க அதை கண்காணிக்க வேண்டியது நம் இளைய சான்றோர்களின் கடமை. 

No comments: