Friday 21 November 2014

பன்மொழிப் புலவர் திரு. சாத்தூர் சேகரன் அவர்கள்

நமது திரு.சாத்தூர் சேகரன் அவர்கள் 120 மொழிகளை அறிந்தவர்; 200 மொழிகளை ஆய்வு செய்தவர். அவரது பட்டங்கள் எம்.ஏ. (தமிழ்), எம்.ஏ. (ஆங்), எம்.ஏ. (வரலாறு), எம்.ஏ. (சமூகம்), எம்.ஏ. (அரசியல்), எம்.ஏ. (வரலாறு), எம்.பில். (வரலாறு), எம்.ஏ. (பொருளாதாரம்), எம்.ஏ. (மொழி) ஆகியன. அவருடைய "எம்மொழியும் எம் மொழி" என முழங்கும் 'அகிலமொழி' அமைப்பைத் தொடர்பு 
கொள்ள : திரு.கோ, கைப்பேசி எண் : +91 94436 94745, மின்னஞ்சல் முகவரி :ahilamolhi@gmail. 

இது மட்டுமில்லாமல் உலகமெங்கும் பயணம் செய்து அந்தந்த நாடுகளில் தங்கியிருந்து அங்கு வாழும் மக்களிடம் பேசி, பழகி, ஆய்வு செய்திருப்பதால் உலக மொழிகள் 120 தெரியும். மேலும் இலக்கணப் பூர்வமாகவும், விதிமுறைப்படியும் 200 மொழிகளில் ஆய்வு செய்து வரும் சாத்தூர் சேகரன் அய்யா 200 மொழி நூல்களும் எழுதியிருக்கிறார். பல நூறு ஆய்வுக் கட்டுரைகள் எழுதியிருக்கிறார்".


"உலக அரங்கங்களிலும். பல்கலைக்கழகங்களிலும், மொழி ஆய்வுக் கூடங்களிலும், புதிய மொழி கொள்கைகளை முழங்குகின்ற தமிழ் மொழி ஆய்வாளர் சாத்தூர் சேகரன் இதுவரை 10,000 பாடல்கள், 400 நவீனங்கள், 40 காப்பியங்கள், 200 சிறுகதைகள் எழுதியிருப்பதோடு, 50 நாடகங்களையும் இவரே எழுதி இயக்கியும் இருக்கிறார். பல்வேறு இதழ்களிலும் இவரது கதைகள், கட்டுரைகள், கவிதைகள் வெளியாகியுள்ளன. இன்னும் இவரது எழுத்துக்களில் 40 நூல்கள் வெளிவர இருக்கிறது.


தமிழ்மொழி அறிஞர் சாத்தூர் சேகரன் மதுரைக்கு வரும்போதெல்லாம் இவரது குரல்  //அகிலமொழி// பயலிரங்கத்தில் ஒலிக்கிறது.

தமிழ்மொழியைப் பற்றி, தமிழ் மொழியின் ஆதி, அந்தம், ஆச்சர்யங்களையும் சொல்லும்போது பிரமிடுகளை தாண்டிய பிரமிப்பை ஏற்படுத்துகிறது.

தமிழ் மொழிக்காகவே தன் உடல், பொருள், ஆவி, அனைத்தையும் அர்ப்பணித்திருக்கும் தமிழ்மொழி ஆய்வாளர் சாத்தூர் சேகரன், தான் அடுத்தடுத்து தமிழ்ச்சங்கங்கள், பள்ளி, கல்லூரி, பல்கலைக்கழகங்கள் என்று அழைத்தவர்களின் இடம் நோக்கி... தன் கையோடு கொண்டு செல்லும் தமிழ் மொழியைப் போல கணத்த சூட்கேஸ்-உடன் தமிழோடு தானும் சேர்ந்தே பயணிக்கிறார்.


""தமிழ்தான் என் மூச்சு, தமிழர்களுக்காக என் உயிரையும் கொடுப்பேன்"" என்று உரக்க பேசுகின்ற எத்தனையோ தலைவர்களுக்குக்கிடையில் தமிழ் மொழி மற்றும் கலாச்சாரம், பண்பாடு, குறித்த முழு பார்வையை வளரும் இளம் தலைமுறையினர்க்கு வாரி வழங்குவதற்காக ஒரு சப்தமில்லா சாம்ராஜயத்தையே நடத்தி வருகிறார்.


அதே நேரத்தில் சாத்தூர் சேகரன் அய்யாவின் 40 வருட உழைப்பைச் சிந்தாமல் சிதறாமல் மாணவ - மாணவியர்களிடம் கொண்டு செல்ல வேண்டும் என்பதற்காகவும், அவர்களைச் சாத்தூர் சேகரனின் தமிழ் வாரிசுகளாகவும் உருவாக்கி, அவர்கள் பல்வேறு இடங்களுக்கும் சென்று பேசக்கூடிய ஊக்கத்தையும் தந்து உலக நாடுகளில் போய்ப் பேசுகின்ற தனித்தன்மையை எம்மொழியும் எம் மொழி என்ற கொள்கை முழக்கத்துடன் //அகிலமொழி// எனும் அமைப்பை தமிழ்நாட்டில் மாநகர் மதுரையில் துவங்கி அதற்கு வேராகவும் நீராகவும் விளங்குகின்ற  அவருக்கு உறுதுணையாய் இருக்கும் தமிழ் நெஞ்சங்களையும் பாராட்டியே ஆகவேண்டும்.

உலகின் பல்வேறு நாடுகளில் இயங்கும் தமிழ்ச் சங்கங்கள் தமிழ்மொழி ஆய்வாளர் சாத்தூர் சேகரன் அய்யாவையும் அகிலமொழி-யின் மாணவர்களையும் உற்று நோக்க வேண்டும். தமிழைச் செழிக்கச் செய்ய நாமனைவரும் அரும்பாடு படவேண்டும்.                                                          

உலக அறிஞர்கள் இவரை பற்றி சிலாகிக்கும் விசயங்கள்:
"தமிழைப் பற்றமிது காறும் இத்தனை விரிவாக ஐரோப்பாவில் கூறப்படவில்லை. எனவே சமஸ்கிருதம்தான் இந்தியாவின் தாய்  மொழி என்ற ஐரோப்பியர்களின் பார்வை இன்றளவும் மாறவில்லை. உங்கள் உரையாடல் எங்களுக்கு அதிர்ச்சி அளித்த போதிலும் தமிழே உலக மொழிகளின் தாய் மொழி என்ற தங்களின் கருத்தை நம்பத் தூண்டுகிறது"
-சமஸ்கிருத துறைத்த் தலைவர்,லன்டன் பல்கலை கழகம், லன்டன்

"பிரமிட் கட்டியவர்களான எங்கள் முன்னோர்கள் தமிழர்களா??! தமிழர்கள்தான் உலகம் முழுக்க பரவி இருந்தார்களா??! வியப்புக்குரிய செய்திகளை சொல்கிறீர்கள்!!"
-தலைவர், கெய்ரோ அருங்காட்ச்சியகம், கெய்ரோ.

"இந்திய மொழிகளை மட்டுமல்ல உலக மொழிகளை எல்லாம் அறிந்திருப்பதுடன், அவற்றின் வெர்ச்சொற்களை எல்லாம் கட கடவென கூறுவதை வியக்கிறேன்!! நான் சீன மொழி அறிந்தவன். ஆனால் நீங்கள் சீன மொழி தமிழ் மொழி உறவு பற்றி கூறியது கேட்டு மலைத்து நிற்கின்றேன்!!"
-முனைவர். அருனாபாரதி, வாரனாசி பல்கலைக்கழகம், காசி

அன்னாரை தமிழ் சமூகம் 2015 சனவரி 2ம் தியதி இழந்து தவிக்கிறது!!

1 comment:

MEIYARIVU KARPPOM said...

ஜயா உங்களைப் மன்றாடி கேட்டு கொள்கிறேன் சாத்தூர் சேகரன் ஜயாவின் புத்தகங்கள் கிடைக்குமா