Tuesday 18 November 2014

பெருந்தலைவரும் வைகை அணையும்

பெருந்தலைவர் அவர்களின் ஆட்சியில் விவசாயம் நல்ல வளர்ச்சி கண்டது வைகை அணை மணிமுத்தாறு அணை கீழ்பவானி அணை பரமிக்குளம் சாத்தனூர் அணை என்று பல அணைக்கட்டு திட்டங்கள் அசுர வேகத்தில் நிறைவேற்றப்பட்டன தொழிற்துறையிலும் முத்திரை பதித்தார் நெய்வேலி பழுப்பு நிலக்கரி சென்னை ஆவடி ராணுவ தளவாடத் தொழிற்சாலை சென்னை ஹிந்துஸ்தான் டெலி பிரிண்டர்ஸ் என பல பெரியத் தொழில்கள் தமிழகத்தில் உருவாயின அவரது மாட்சிமை பொருந்திய ஆட்சியைக் கண்டு இந்திய பிரதமர் நேரு இந்தியாவிலேயே மிகச்சிறந்த முறையில் நிர்வகிக்கப்படும் மாநிலம் தமிழ்நாடு என்று பாராட்டினார். 


மக்களின் பிரச்சினைகளை மாறுதலான கோணத்தில் பார்த்து தொலைநோக்கில் சிந்தித்து நிரந்தர தீர்வு குடுத்தவர் பெருந்தலைவர் மட்டுமே. திருட்டு கொள்ளை தொழிலில் ஈடுபட்டவர்களை கூட கருனை பார்வையுடன் அனுகி, உபதேசம் மட்டும் அளிக்காமல் அவர்களுக்கு நிரந்தர தீர்வு என்ன என்று சிந்தித்து செயலாற்றியவர் நம் ஐயா காமராசர் அவர்கள்தான். அரசியல் தலைவர், சாதி தலைவர் என்றெல்லாம் சிந்திக்காமல் உயர்ந்த எண்ணத்துடன் போற்றப்பட வேண்டிய மாபெரும் மனித குல மாணிக்கம் அவர்.


காமராஜர் முதல்வரானவுடன் மக்களை சந்திக்க தேனிக்கு சென்றார்.
எம்.எல்.ஏ., என்.ஆர். தியாகராஜன், முதல்வர் காமராஜரிடம், "ஆண்டிபட்டி மலைக்கணவாய் பகுதி வழியாக வரும் சரக்குகளை சிலர் அபகரித்து செல்கின்றனர். அதை தடுக்க ஒரு வழி செய்ய வேண்டும்,'' என்றார். யோசனையில் ஆழ்ந்த காமராஜர், ""கலெக்டர் ஐயாவை கூப்பிடுங்கள்,'' என்றார். 
கலெக்டர் வந்தவுடன், "இந்த பகுதியில் ஓடும் முல்லை பெரியாறு, வைகையை இணைத்து ஒரு அணை கட்ட வேண்டும். அதற்கான சர்வே எடுத்து அனுப்புங்கள்,'' என உத்தரவிட்டார். 
தியாகராஜன் எம்.எல்.ஏ.,வோ, நாம் திருட்டு பற்றி கூறுகிறோம், சம்பந்தமில்லாமல் அணை கட்ட சொல்கிறாரே என நினைத்து காமராஜரிடமே கேட்டுவிட்டார்.


அவரோ, ""பொருட்களை ஏன் அபகரிக்கின்றனர்?. அவர்களுக்கு வேலையும் இல்லை, கையில் பணமும் இல்லை. இதற்கு அணை கட்டினால் விவசாயம் வளரும், பொருள்களை அபகரிப்பது குறையும்,'' என்றார். கலெக்டரும் அணை கட்ட நிலம் சர்வே செய்து அறிக்கை அனுப்பினார். அணை கட்டினால் குன்னூர் என்ற கிராமம் நீரில் மூழ்கி பாதிக்கும் என்பதால், குன்னூர் கிராம மக்களை அழைத்து பேசி, அங்குள்ள குடும்பங்களுக்கு மேட்டு பகுதியில் நிலம் ஒதுக்கவும், நஷ்ட ஈடு வழங்கவும், அதை உடன் செயல்படுத்தவும் உத்தரவிட்டார்.

தேனி மாவட்டத்தில் தோன்றி மதுரையில் பாய்ந்து, மதுரைக்கு வளம் சேர்க்கும் வைகை ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள அணை வைகை அணை. இது தேனி மாவட்டத்தில் ஆண்டிப்பட்டிக்கு அருகே அமைந்துள்ளது. 1959 - ஆம் ஆண்டு ஜனவரி 21 - ஆம் நாள் பெருந்தலைவர் காமராஜர் அவர்களால் திறந்து வைக்கப்பட்டது. இதன் உயரம் 111 அடி ஆகும். இதன் மொத்த கொள்ளளவு 6,898 கன சதுர அடிகள் ஆகும். பெருந்தலைவரால் உருவாக்கப்பட்ட வைகை அணையால், இன்று லட்ணக்கான ஏக்கருக்கு பாசன வசதியும், குடிநீரும் கிடைக்கிறது.

No comments: