Tuesday 25 November 2014

கல்விக் கொடை தந்த மகான் - காமராஜர்

கர்ம வீரர்

தன் பணியை பிறரிடம் பணி செய்யச் சொல்வது, தன் சுமைகளை அடுத்தவரிடம் சுமத்துவது, தன் பொறுப்பை பிறரிடம் ஒப்படைப்பது என என்றுமே இருந்ததில்லை பெருந்தலைவர்!! ஹலோ எஃப்.எம்மில் ஒரு முறை காமராஜர் பற்றி திரு.குமரி ஆணந்தன் அவர்கள் சொல்லியது:

காமராஜர் இரவு தூங்கும்முன்பு தனது உதவியாளர்களிடம் பேசிவிட்டு, அவர்களை வழி அனுப்பும்போது அனைவரும் சென்ற பின்னர் தானே மின்விளக்கு, மின்விசிறி ஆகியவற்றை அணைத்து விட்டு செல்வது வழக்கம். குமரி அனந்தன் தினமும் இதை கவனித்து விட்டு “ஐயா, உங்களிடம் ஒரு ஐந்து நிமிடம் பேச மாட்டோமா என்று பல முதலமைச்சர்கள் காத்துக்கொண்டிருக்க, நீங்கள் நாங்கள் செல்லும் வரை காத்திருந்து, இந்த மின்விளக்கு, மின்விசிறி ஆகியவற்றை அணைத்து விட்டு தான் செல்லவேண்டுமா? நாங்களே இதை செய்ய மாட்டோமா?” என்று கேட்டார். அதற்கு அவர் “நீங்க மறந்துட்டு போயிட்டீங்கன்னா, இரவு முழுதும் மின்சாரம் வீணாகும். அந்த மின்சாரத்தை ஒரு விவசாயிக்கு கொடுத்தால் அவனாவது பயன்படுத்திக்கொள்வான் அல்லவா?” என்று திருப்பி கேட்டார்.




                                      ----------------------------------------------------------------------------------------

கல்விக் கண் திறந்தவர்

ஐயா இல்லாமல் தமிழகம் மட்டுமல்ல ஒட்டு மொத்த உலக தமிழ் சமூகமே பல அறிஞர்களை இழந்திருக்கும். அறிஞர்களையும், விஞ்ஞானிகளையும், மேதைகளையும் கல்வி மூலம் உலகிற்கு அருளியவர் கல்விக் கண் திறந்த காமராசர். காமராஜர் ஐயா பற்றி இணையத்தில் பிராண்ஸ் தமிழ்ச் சங்கத்தின் நிறுவனத்தலைவர் "பாரீஸ் ஜமால்" அவர்கள்:

வறுமையின் காரணமாக கர்ம வீரர் காமராசர் அவர்களிடம் ஒரு சிபாரிசு கடிதத்துடன் போய் 10 ஆம் வகுப்பு பாஸ் ஆகி விட்டு வேலைகேட்டேன். அரசு, மற்றும் உறவினர் உதவியில்
மேற்கொண்டு படின்னேன். என்று சொல்லி என்னை அனுப்பி விட்டார். அவர் ஆசியோடு அவர் சொல் படி பலர் உதவியோடு படித்து பாரிஸ் பல்கலை கழகத்தில் முப்பது ஆண்டுகள் பணி யாற்றி பிரான்ஸ் தமிழ் சங்கம் அமைத்து நல்ல நிலையில் வாழ்கிறேன், என் வாழ்வில் யாரை மறந்தாலும் கர்ம வீரரை மறக்க இயலாது




No comments: