Wednesday 19 November 2014

கட்டுக்கோப்பாக வளர்ந்த சான்றோர்

உறவின்முறை-கட்டுப்பாடு
ஒரு சமூகம் அல்லது குறிப்பிட்ட இனத்தினர் முழுவதும் நல்ல நிலைமைக்கு உயர ஒற்றுமை முக்கியம் என்பதைப் போல அதை கடைசி வரைக்கும் கொண்டு செல்லப்பட வேண்டும். நாம் ஏற்கனவே நாடார்கள் படிப்படியாக தங்களை பொருளாதார ரீதியாக வளர்த்துக் கொண்டதை பார்த்ததைப் போலவே இதற்காக அவர்கள் உழைப்பிற்கு அப்பாற்பட்டு பல கொள்கைகள் மற்றும் உருப்படியான விசயங்களையும் கடைபிடித்து உள்ளனர் என்பதையும் இங்கே குறிப்பிட்டே ஆகவேண்டும். தாங்கள் வாழும் இடங்களில் அல்லது தொழில் செய்யும் இடங்களில் அந்தந்த உறவின்முறை உருவாக்கிய பேட்டைகள் மூலம் வசூலிக்கப்படும் நிதி தெளிவான முறையில் பாதுகாக்கப்பட்டது.  இது போக ஒவ்வொரு குடும்பமும் கொடுக்கும் நிதி ஆதாரம் எல்லாமே பொது நல நிதியாக மாறியது.  இந்த நிதி ஆதாரத்தை கவனிக்கும் குழுவில் ஒவ்வொரு குடும்பத்தின் தலைவரும் இருந்தனர். இதற்கு உறவின்முறை என்று பெயர். ஒவ்வொரு குடும்பத்திலும் மணமான குடும்பத்தலைவர்கள் இதில் இருந்தனர். இந்த குழுவில் இருக்கும் ஒவ்வொருவருக்கும் முறைகாரர் என்று பெயர். முக்கிய பொறுப்புகள் உள்ளவர்கள் வாரத்திற்கு ஒரு முறை மாறி மற்றவர்களுக்கு வழிவிட ஒவ்வொரு சுற்றிலும் ஒவ்வொருவரும் வந்தமர பிரச்சனைகள் உருவாகாமல் இந்த அமைப்பு முன்னேறத் தொடங்கியது 


உறவின்முறை-கணக்கு
இந்த இடத்தில் மற்றொரு ஆச்சரியம் என்னவென்றால் தொழில் ரீதியாக பொருளாதார ரீதியாக முன்னேறிக் கொண்டிருந்த நாடார் இன மக்களிடம் கல்வி அறிவு இல்லை. ஒவ்வொரு செயல்பாடுகளுமே அனுபவத்தின் அடிப்படையிலேயே உருவானது. இது போன்ற கணக்கு வழக்கு போன்ற சமாச்சாரங்களுக்கு நாடார் தவிர்த்து மற்ற இனமான வேளாளர் குலத்தில் உள்ளவர்களை கணக்கர்களாக தேர்ந்தெடுத்து மகமை தொகையை வசூலிக்க ஏற்பாடு செய்தனர். இது போன்ற சங்கங்களில் பெரும் செல்வந்தர்கள் பக்கபலமாக இருந்தனர். ஆனால் நடுத்தர வர்க்க வியாபார குடும்பத்தினர் முழு மூச்சில் செயல்பட்டனர். ஒவ்வொரு செயல்பாடுகளும் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு மகமை செலுத்தாதவர்களுக்கு தண்டனை வழங்கப்படும் அளவிற்கு கெடுபிடியாக நடந்து கொண்டனர். ஒவ்வொரு கிராமத்தில் இவர்களால் உருவாக்கப்பட்டுள்ள கோவில்களை தாங்கள் கூடுமிடமாக பயன்படுத்திக் கொண்டனர்.  இந்த இடத்தில் இன்ன நேரத்தில் கூட்டம் கூட்டப்படுகின்றது என்பது அந்த ஊரில் உள்ள நாவிதர் மூலம் அழைப்பு அனுப்பப்படும். கலந்து கொள்ளாதவர்களுக்கு அபதாரத் தொகையும் உண்டு.

உறவின்முறை-மதுரை வளர்ச்சி
குடும்பம் மற்றும் பொதுவான அத்தனை பிரச்சனைகளும் இது போன்ற கூட்டத்தின் மூலமே தீர்க்கப்பட்டு வந்தது.  வெளி ஆட்களை இது போன்ற கூட்டத்திற்குள் அனுமதிக்கப்படுவதில்லை. தலைவர் பொறுப்பில் இருந்தவர்கள் சாகும் வரைகும் அந்த பொறுப்பில் இருந்தனர். தலைவர்களுக்கு சிறப்பான மரியாதை அளிக்கப்பட்டது.  குறிப்பாக கோவிலுக்குள் இவர்கள் நுழையும் போது தனது மேல் துண்டை இடுப்பில் எடுத்து கட்டிக் கொள்ளப்பட வேண்டும்.  19 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் தான் விருதுநகர் பகுதியில் ஜனத்தொகை காரணமாக ஆறு வெவ்வேறு உறவின்முறை அமைப்பு ஏற்படுத்தப்பட்டது. இது போன்ற அமைப்புகள் அந்தந்த பகுதியில் வியாபாரத்தை அடிப்படையாகக் கொண்டு தான் உருவாக்கப்பட்டது. பஞ்சு வியாபாரிகள், மளிகைக்கடை தாங்கள் செய்து கொண்டிருக்கும் வணிகம் பொறுத்து ஒவ்வொன்றுக்கும் பின்னாலும் வெவ்வேறு காரணங்கள் இருந்தது. மதுரையில் 1831 ஆம் ஆண்டு தங்களது வியாபார அபிவிருத்திக்காக கிழக்கு மாசி வீதியில் நிலம் வாங்கினர். இதுவும் விருதுநகர், அருப்புக்கோட்டை, பாலையம்பட்டி நாடார்கள் முன்னின்று செயல்பட்டனர். 1890 ஆம் ஆண்டு குறிப்பிட்ட சில நாடார்கள் தங்கள் இருப்பிடங்களை மதுரைக்கு மாற்றினர். 20 ஆண்டு தொடக்கத்தில் தான் மதுரைக்கு பலரும் நகர்ந்து வரத் தொடங்கினர்.  அதற்கும் ஒரு காரணம் உண்டு.  வெள்ளையர்கள் உருவாக்கிய ரயில் பாதைகள் முக்கிய காரணமாக இருந்தது.. மதுரையிலிருந்து விருதுநகர், திருநெல்வேலி, தூத்துக்குடிக்கு ரயில் பாதைகள் மூலம் இணைப்பு உருவாக இரண்டு விளைவுகள் உருவாகத் தொடங்கியது. இராமநாதபுரத்தின் பல பகுதிகள் வியாபாரம் பாதிப்பாகத் தொடங்கியது.  வளர்ந்து கொண்டிருக்கும் விருதுநகர் வேகமாக முன்னேறத் தொடங்கியது. இதனால் மொத்தத்தில் சிவகாசி ரொம்பவே பாதிப்பானது. இதன் காரணமாக மதுரையில் குடியேறும் நாடார்களின் எண்ணிக்கை அதிகமாகத் தொடங்கியது.


உறவின்முறை-கல்வி
1880க்கும் 1928 ஆம் ஆண்டுக்கும் இடைப்பட்ட காலத்தில் சிவகாசியும் ரயில் பாதை இணைப்பு மூலம் எளிதாக மதுரைக்கு குடியேறுபவர்களின் எண்ணிக்கைகள் இன்னமும் அதிகமாகத் தொடங்கியது. சிலர் தங்களது நிறுவனங்களின் கிளைகளை உருவாக்கி தங்களை ஸ்திரப்படுத்திக் கொண்டனர். எந்த இடத்திற்குச் சென்றாலும் தன் ஊரின் உறவுகளை விடாமல், மகமை, உறவின் முறை போன்ற அமைப்பை சிதைக்காமல் தங்களின் பொருளாதார வாழ்வோடு தங்களின் சமூகத்தையும் விட்டுக் கொடுக்காமல் முன்னேறத் தொடங்கினர். நாடார்களின் அடுத்த கட்ட வளர்ச்சியாக 1885 ஆம் ஆண்டு விருதுநகர் உறவின் முறையால் உருவாக்கப்பட்ட கூத்திரிய வித்தியாசாலை உயர்நிலை பள்ளியாகும். இது முழுக்க முழுக்க மகமை நிதியால் மட்டுமே உருவாக்கப்பட்டது.  முதல் முறையாக நாடார் சமூகத்தால் உருவாக்கப்பட்ட பள்ளிக்கூடமும் இது தான்.  இதனைத் தொடர்ந்து தான் 1889 ஆம் ஆண்டு கமுதியில், அதன் பிறகு அருப்புக்கோட்டையில் உருவானது. கல்வி அறிவு இல்லாமல் வளர்ந்தவர்களின் தலைமுறை கல்வி அறிவோடு வளர உருவான வளர்ச்சியைப் பற்றி சொல்லவும் வேண்டுமா?

தோலாண்டியின் வருத்தம்
பொருளாதார ரீதியாக வளர்ந்த பிறகு ஒவ்வொருவருக்கும் உருவாகும் கௌரவம் நாடார்களுக்கு வந்து அதன் தொடர்பாக பல விசயங்களையும் செய்துள்ளார்கள்.  நாடார்களின் அடிப்படை வாழ்க்கை முறை பனை மரங்களை அடிப்படையாகக் கொண்டு தான் இருந்தது.  ஆனால் காலம் செல்லச் செல்ல தங்களை பனையேறிகள், சாணார்கள் என்று மற்றவர்கள் அழைப்பதை கௌரவக்குறைவாக கருதுகின்றனர்.  குறிப்பாக தங்களை ஷத்திரியர்கள் என்று அழைக்க வேண்டும் என்றனர்.  பனை ஏறுபவர்  என்பதை மிகப் பெரிய அவமரியாதையாக கருதுகின்றனர்.

2 comments:

VILMEENKODI said...

வில்லவர் மற்றும் பாணர்

பாண்டிய என்பது வில்லவர் மற்றும் பாண ஆட்சியாளர்களின பட்டமாகும்.

இந்தியா முழுவதும் பாணர்கள் அரசாண்டனர். இந்தியாவின் பெரும்பகுதி பாண ஆட்சியாளர்களால் ஆளப்பட்டது. இந்தியா முழுவதும் பாண்பூர் எனப்படும் ஏராளமான இடங்கள் உள்ளன. இவை பண்டைய பாணர்களின் தலைநகரங்கள் ஆகும்.

பாணர்கள் பாணாசுரா என்றும் அழைக்கப்பட்டனர். கேரளா மற்றும் தமிழ்நாட்டை ஆண்ட வில்லவரின் வடக்கு உறவினர்கள் பாணர்கள் ஆவர். கர்நாடகாவிலும் ஆந்திராவிலும் பாணர்கள் ஆண்டனர்.

வில்லவர் குலங்கள்

1. வில்லவர்
2. மலையர்
3. வானவர்

வில்லவரின் கடலோர உறவினர்கள் மீனவர் என்று அழைக்கப்பட்டனர்

4. மீனவர்

பண்டைய காலங்களில் இந்த அனைத்து துணைப்பிரிவுகளிலிருந்தும் பாண்டியர்கள் தோன்றினர்.
அவர்கள் துணை குலங்களின் கொடியையும் பயன்படுத்தினர். எ.கா

1. வில்லவர் குலத்தைச் சேர்ந்த பாண்டியன் சாரங்கத்வஜ பாண்டியன் என்று அழைக்கப்பட்டார். அவர் ஒரு வில் மற்றும் அம்பு அடையாளமுள்ள கொடியை சுமந்தார்.

2. மலையர் குலத்தைச் சேர்ந்த பாண்டியன் மலையத்வஜ பாண்டியன் என்று அழைக்கப்பட்டார். அவர் மலை சின்னத்துடன் ஒரு கொடியை ஏந்தினார்.

3. வானவர் துணைப்பிரிவைச் சேர்ந்த பாண்டியன் ஒரு வில்-அம்பு அல்லது புலி அல்லது மரம் கொடியை ஏந்திச் சென்றார்.

4. மீனவர் குலத்தைச் சேர்ந்த பாண்டியன் ஒரு மீன் கொடியை ஏந்திச்சென்று தன்னை மீனவன் என்று அழைத்துக் கொண்டார்.

பிற்காலத்தில் அனைத்து வில்லவர் குலங்களும் ஒன்றிணைந்து நாடாள்வார் குலங்களை உருவாக்கின.

பண்டைய மீனவர் குலமும் வில்லவர் மற்றும் நாடாள்வார் குலங்களுடன் இணைந்தது.

பிற்காலத்தில் வடக்கிலிருந்து குடிபெயர்ந்த நாகர்கள் தென் நாடுகளில் மீனவர்களாக மாறினர். அவர் வில்லவர்-மீனவர் குலங்களுடன் இனரீதியாக தொடர்புடையவர் அல்லர்.


வில்லவர் பட்டங்கள்

வில்லவர், நாடாள்வார், நாடார், சான்றார், சாணார், சண்ணார், சார்ந்நவர், சான்றகர், சாண்டார் பெரும்பாணர், பணிக்கர், திருப்பார்ப்பு, கவரா (காவுராயர்), இல்லம், கிரியம், கண நாடார், மாற நாடார், நட்டாத்தி, பாண்டியகுல ஷத்திரியர் போன்றவை.

முக்கியத்துவத்தின் ஒழுங்கு

1. சேர இராச்சியம்

வில்லவர்
மலையர்
வானவர்
இயக்கர்

2. பாண்டியன் பேரரசு

வில்லவர்
மீனவர்
வானவர்
மலையர்

3. சோழப் பேரரசு

வானவர்
வில்லவர்
மலையர்


பாணா மற்றும் மீனா

வட இந்தியாவில் வில்லவர் பாணா மற்றும் பில் என்று அழைக்கப்பட்டனர். மீனவர், மீனா அல்லது மத்ஸ்யா என்று அழைக்கப்பட்டனர்.

சிந்து சமவெளி மற்றும் கங்கை சமவெளிகளில் ஆரம்பத்தில் வசித்தவர்கள் பாணா மற்றும் மீனா குலங்கள் ஆவர்.

பாண்டவர்களுக்குஒரு வருட காலம் அடைக்கலம் கொடுத்த விராட மன்னர் ஒரு மத்ஸ்யா - மீனா ஆட்சியாளர் ஆவார்.

பாண மன்னர்களுக்கு அசுர அந்தஸ்து இருந்தபோதிலும் அவர்கள் அனைத்து சுயம்வரங்களுக்கும் அழைக்கப்பட்டனர்.

சோனித்பூரில் தலைநகருடன் அசுரா இராச்சியம் என்று அழைக்கப்பட்ட ஒரு பாண இராச்சியம் பண்டைய காலங்களில் அசாமை ஆட்சி செய்தது.

இந்தியா முழுவதும் பாணா-மீனா மற்றும் வில்லவர்-மீனவர் இராச்சியங்கள் கி.பி .1500 வரை, நடுக்காலம், முடிவடையும் வரை இருந்தன.

மஹாபலி

பாணர் மற்றும் வில்லவர் மன்னர் மகாபாலியை தங்கள் மூதாதையராக கருதினர். மகாபலி பட்டத்துடன் கூடிய ஏராளமான மன்னர்கள் இந்தியாவை ஆண்டனர்.

வில்லவர்கள் தங்கள் மூதாதையர் மகாபலியை மாவேலி என்று அழைத்தனர்.

ஓணம் பண்டிகை ஒவ்வொரு ஆண்டும் கேரளாவை ஆண்ட மகாபலி மன்னர் திரும்பி வரும் நாளில் கொண்டாடப்படுகிறது.

மாவேலிக்கரை, மகாபலிபுரம் ஆகிய இரு இடங்களுக்கும் மகாபலியின் பெயரிடப்பட்டுள்ளன.

பாண்டியர்களின் பட்டங்களில் ஒன்று மாவேலி. பாண்டியர்களின் எதிராளிகளாகிய பாணர்களும் மாவேலி வாணாதி ராயர் என்று அழைக்கப்பட்டனர்.

சிநது சமவெளியில்தானவர் தைத்யர்(திதியர்)

பண்டைய தானவ (தனு=வில்) மற்றும் தைத்ய குலங்கள் சிந்து சமவெளியிலுள்ள பாணர்களின் துணைப்பிரிவுகளாக இருந்திருக்கலாம். தைத்யரின் மன்னர் மகாபலி என்று அழைக்கப்பட்டார்.

இந்தியாவில் முதல் அணைகள், ஏறத்தாழ நான்காயிரம் ஆண்டுகளுக்கு முன்பு சிந்து நதியில் பாண குலத்தினரால் கட்டப்பட்டன.

ஹிரண்யகர்பா சடங்கு

வில்லவர்கள் மற்றும் பாணர் இருவரும் ஹிரண்யகர்பா விழாவை நிகழ்த்தினர். ஹிரண்யகர்பா சடங்கி்ல் பாண்டிய மன்னர் ஹிரண்ய மன்னரின் தங்க வயிற்றில் இருந்து வெளிவருவதை உருவகப்படுத்தினார்.
ஹிரண்யகசிபு மகாபலியின் மூதாதையர் ஆவார்.

VILMEENKODI said...

வில்லவர் பாணர்

நாகர்களுக்கு எதிராக போர்

கலித்தொகை என்ற ஒரு பண்டைய தமிழ் இலக்கியம் நாகர்களுக்கும் வில்லவர் -மீனவர்களின் ஒருங்கிணைந்த படைகளுக்கும் இடையே நடந்த ஒரு பெரிய போரை விவரிக்கிறது. அந்தப் போரில் வில்லவர்-மீனவர் தோற்கடிக்கப்பட்டு நாகர்கள் மத்திய இந்தியாவை ஆக்கிரமித்தனர்.


நாகர்களின் தெற்கு நோக்கி இடம்பெயர்வு

நாகர்களின் பல்வேறு குலங்கள் தென்னிந்தியா மற்றும் ஸ்ரீலங்காவுக்கு குறிப்பாக கடலோர பகுதிகளுக்கு குடிபெயர்ந்தனர்.

1. வருணகுலத்தோர்
2. குகன்குலத்தோர்
3. கவுரவகுலத்தோர்
4. பரதவர்
5. களப்பிரர்கள்
6. அஹிச்சத்ரம் நாகர்கள்

இந்த நாகர்கள் வில்லவர்களின் முக்கிய எதிரிகள் ஆவர். நாகர்கள் டெல்லி சுல்தானேட், விஜயநகர நாயக்கர்கள் மற்றும் ஐரோப்பியர்கள் காலனித்துவ ஆட்சியாளர்களுடன் கூடி பக்கபலமாக இருந்து வில்லவர்களை எதிர்த்தனர், இது வில்லவர் வீழ்ச்சிக்கு வழிவகுத்தது.

கர்நாடகாவின் பாணர்களின் பகை

பொதுவான தோற்றம் இருந்தபோதிலும் கர்நாடகாவின் பாணர்கள் வில்லவர்களுக்கு எதிரிகளாயிருந்தனர். கி.பி 1120 இல் கேரளாவை துளுநாடு ஆளுப அரசு பாண்டியன் இராச்சியத்தைச் சேர்ந்த பாணப்பெருமாள் அராபியர்களின் உதவியுடன் ஆக்கிரமித்தார்.

கி.பி 1377 இல் தெலுங்கு பலிஜா நாயக்கர்கள் தமிழ்நாட்டை ஆக்கிரமித்தனர். வில்லவரின் சேர சோழ பாண்டியன் இராச்சியங்கள் விஜயநகர சாம்ராஜ்யத்தின் பலிஜா நாயக்கர்களால் (பாணாஜிகா, ஐந்நூற்றுவர் வளஞ்சியர் என்னும் மகாபலி பாணரின் சந்ததியினர்) அழிக்கப்பட்டன.

வில்லவர்களின் முடிவு

1310 இல் மாலிக் கபூரின் படையெடுப்பு பாண்டிய வம்சத்தின் தோல்விக்கு வழிவகுத்தது. வில்லவர்கள் படுகொலை செய்யப்பட்டனர், மேலும் மூன்று தமிழ் ராஜ்யங்களும் முடிவுக்கு வந்தன.

கர்நாடகாவின் பாண்டியன் ராஜ்யங்கள்

கர்நாடகாவில் பல பாணப்பாண்டியன் ராஜ்யங்கள் இருந்தன

1. ஆலுபா பாண்டியன் இராச்சியம்
2. உச்சாங்கி பாண்டியன் இராச்சியம்
3. சான்றாரா பாண்டியன் இராச்சியம்
4. நூறும்பாடா பாண்டியன் இராச்சியம்.

கர்நாடக பாண்டியர்கள் குலசேகர பட்டத்தையும் பயன்படுத்தினர். நாடாவா, நாடாவரு, நாடோர், பில்லவா, சான்றாரா பட்டங்களையும் கொண்டவர்கள்.

ஆந்திரபிரதேச பாணர்கள்

ஆந்திராவின் பாண ராஜ்யங்கள்

1. பாண இராச்சியம்
2. விஜயநகர இராச்சியம்.

பலிஜா, வாணாதிராஜா, வாணாதிராயர், வன்னியர், கவரா, சமரகோலாகலன் என்பவை வடுக பாணர்களின் பட்டங்களாகும்.

பாண வம்சத்தின் கொடிகள்

முற்காலம்
1. இரட்டை மீன்
2. வில்-அம்பு

பிற்காலம்
1. காளைக்கொடி
2. வானரக்கொடி
3. சங்கு
4. சக்கரம்
5. கழுகு