Tuesday 25 November 2014

திரு.இதயம்’’V.R.முத்து நாடார்.

‘’இதயம்’’ தமிழர் அனைவருக்கும் துடிக்கும் மனித இதயத்திற்கு அடுத்து ஞாபகம் வருவது இதயம் நல்லெண்ணெய் என்றால் அதுவே நமது மண்ணின் மைந்தர் V.R.முத்து அவர்களின் வியாபார வெற்றி.
தொழில்அதிபராக, இலக்கியவாதியாக, தலை சிறந்த பேச்சாளராக, ரோட்டரி சங்க தன்னார்வ தொண்டராக, சமூக அக்கறை கொண்ட மனிதராக அறியப்படும் திரு.முத்து அவர்களின் வெற்றி சரித்திரத்தை விருதுநகர் டைம்சில் இருந்து உங்கள் பார்வைக்கு பரிமாறுகிறேன்.




பிறப்பும்,படிப்பும்.
விருதுநகர் பிரபல வணிகர் உயர்திரு . வி.வி.வி.ராஜேந்திரன் - ஜெகதாம்பாள் தம்பதியினருக்கு 1953 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 6 ஆம் தேதி பிறந்தவர் .திரு. முத்து அவர்கள் தனது பள்ளிக்கல்வியை KVS பள்ளியிலும் , பட்ட படிப்பை திருச்சி செயின்ட் ஜோசப் கல்லூரியில் பயின்றார். மும்பை எம்.எம்.கே வணிகக் கல்லூரியில் பி.காம் ஹானர்ஸ் படித்தார். பின் சென்னை பிரபல ஆடிட்டர் கே.வி. ராமசாமி அவர்களிடம் பயிற்சி பெற்றார் .
குடும்பம் .
1978 ஆம் ஆண்டு டாக்டர் திரு..எஸ். காசிராஜன்-மனோன்மணி தம்பதிகளின் புதல்வி மலர்விழி அவர்களை திருமணம் செய்து கொண்டார். திரு.முத்து -மலர்விழி தம்பதியினருக்கு திருமதி.பூவிதழ் B .E ,டாக்டர் .திருமதி .இளந்தளிர் MBBS .,D .Diab ஆகிய இரு மகள்களும் திரு.ராஜா விக்னேஷ் முத்து B .TECH ., M .BA ., ஆகிய மகனும் உள்ளனர். இவர் மீது எத்தகைய அன்பும் ,பாசமும் கொண்டிருந்தால் சமீபத்தில் இவரது அறுபதாம் கல்யாணத்தை விருதுநகர் பெருமக்கள் தாங்களே முன்வந்து பெருவிழாவாக கொண்டாடினார்கள் .முத்து அண்ணாச்சின் தமிழ் பற்றை இவர் பிள்ளைகளின் பெயரை கொண்டே நாம் அறியலாம்.



இதயம் உருவான வரலாறு.
1978 ஆம் ஆண்டு தங்கள் குடும்ப வணிக நிறுவனமான' ஆனந்தம் நல்லெண்ணெய்' வணிகத்தில் சேர்ந்தார்..1980 ஆம் ஆண்டு ஆனந்தம் நல்லெண்ணெய் ராமநாத புரம், மதுரை , திருநெல்வேலி ஆகிய மூன்று மாவட்டங்களிலும் சென்னை நகரிலும் மட்டுமே விற்பனை செய்து வந்தது .திரு. முத்து அவர்கள் தமிழகம் முழுவதும் தம் விற்ப்பனையை சந்தைப் படுத்த வேண்டும் என்ற முனைப்புடன் செயலாற்றி ஆறு ஆண்டுகளில் ஆனந்தம் நல்லெண்ணெய் விற்ப்பனையை ஆறு மடங்காக மாற்றினார்.1980 ல் இரண்டு கோடிக்கு ரூபாய்க்கு விற்பனை ஆன ஆனந்தம் நல்லெண்ணெய் 1986 ல் ரூபாய் பன்னிரண்டு கோடிக்கு விற்ப்பனையை எட்டியது.
குடும்ப வியாபார பகிர்வின் காரணமாக 1986 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 1 ஆம் தேதி 'இதயம்' என்ற புதிய பிராண்ட் நல்லெண்ணெய் உதயமானது .முதலில் இவர்கள் தேர்தெடுத்தது “சக்தி நல்லெண்ணெய்’’ ஆனால் ஏற்கனவே இந்த பெயரில் ஒரு நிறுவனம் இயங்கிவந்த காரணத்தால் “இதயம்” என்று பெயர் இடப்பட்டது.முதன் முதலில் எண்ணைக்கு டி.வியில் விளம்பரம் செய்தது, ஜோதிகாவை இட்லியில் அரை லிட்டர் ஊற்றி சாப்பிட வைத்தது. சித்தர்கள் அருளிய ஆயில் புல்லிங் கான்செப்டை மீட்டு அதை சந்தை படுத்தியது என விளம்பரத்தின் மூலம் இதயத்தை எல்லோர் இதயங்களிலும் இடம் பெற வைத்தும் , ஆறு கோடி ரூபாய் விற்பனையில் ஆரம்பித்த இதயம் நிறுவனம் 27 ஆண்டுகளில் பல தயாரிப்புகளை நிர்வகித்து ஆண்டுக்கு 360 கோடி ரூபாய் விற்பனையை தொட்டதும் .
இதற்க்கு காரணமாக திரு. முத்து அவர்கள் கூறுவது,
இதயம் நல்லெண்ணெய்க்கு பின்னால் தன்னுடைய வெற்றிக்கு பின் மாறுபட்ட எண்ணம் மற்றும் 300க்கும் மேற்பட்ட ஊழியர்கள் உள்ளனர். அவர்களின் பரிபூரண இதய நாட்டம் உள்ளது. எமது தொழில் தாரக மந்திரம்.
"நான் ஒரு வியாபாரி,
வியாபாரம் எனது மதம்;
நான் பணிபுரியும் இடம்
என் கோயில் - வாடிக்கையாளர்களே
என் கடவுள் ,கடவுளுக்கு
நான் செய்யும் பூஜைதான்
சேவை, கடவுளின்
மன மகிழ்ச்சியே
எனக்கு பிரசாதம்" என்பதாகும்
இன்று உலக அளவில் 'இதயம் நல்லெண்ணெய் மற்றும் இதயம் குழுமப் பொருட்கள் சந்தைப் படுத்தப் படுகின்றன .வெகு விரைவில் 500 கோடி ரூபாய் விற்பனை இலக்கை எட்ட வேண்டும் என்ற உற்சாகத்துடன் இதயம் குழுமம் வீரநடை போடுகிறது.



விருதுகள்,
• இந்திய ஜேய்செஸ் இயக்கம் - சிறந்த தொழில் சாதனையாளருக்கான "கமல் பத்ரா'விருது.,
• ஜூனியர் சேம்பர் இன்டர்நேஷனல் (JCI) TOBIP".
• பாரதத்தின் தலை சிறந்த வேளாண் விஞ்ஞானி எம்.எஸ். சுவாமி நாதன் பெயரால் மத்திய அரசு ஏற்ப்படுத்தியுள்ள ஆராய்ச்சி அறக்கட்டளை என்னும் அமைப்பால் 'எள் விவசாயிகளின் பாது காவலர் 'என்னும் பட்டம் .
• ரோட்டரி சங்கத்தின் கொடையாளர் விருது. என இன்னும் பல பல விருதுகளை பெற்றுள்ளார் “”நல்லெண்ணம்”” கொண்ட “”நல்லெண்ணெய் முத்து””.
விருதுநகரில் முத்து அவர்களின் பெயர் இல்லாத பள்ளிகளோ ,திருகோவில்களோ இல்லை என்னும் அளவிற்கு கல்விக்கும் ஆன்மீகத்திற்கும் நன்கொடைகளை கொடுத்து உதவி வருகிறார். வருடம்தோறும் விருதுநகரில் சாதனை செய்யும் விளையாட்டு வீரர்களை ஊக்குவிக்கும் வண்ணம் தனது நிறுவத்தின் மூலம் பரிசுகளை வழங்கி வருகிறார்.
தன் வியாபார வெற்றியின் மூலம் மண்ணின் பெருமையை உலகுக்கு உணர்த்திய ‘’முத்து அவர்கள் நம் நாடார் இனத்தின் பெருமை” என்றால் மிகையில்லை.
நன்றி

No comments: