Wednesday 19 November 2014

பெருந்தலைவரும் தமிழ் ஆட்சி மொழியும்

தமிழகத்தில் தமிழ் ஆட்சி மொழி ஆனது

1954ம் ஆண்டு முதல்வராக பொறுப்பேற்றுக் கொண்ட காமராஜர் தமிழ் ஆட்சி மொழியாக வேண்டும் என பாடுபட்டார். 1956ம் ஆண்டு நவம்பர் 1ம் தேதி அன்று மொழிவாரி மாநிலங்கள் பிரிக்கப்பட்டவுடன் தமிழர்கள் மாநிலமான சென்னை மாநிலத்தில் 1957 ஜனவரி 23ம் தேதியன்று தமிழ் ஆட்சி மொழியாக அறிவிக்கப்பட்டது. 1957-57ம் ஆண்டிற்கான தமிழக அரசின் வரவு செலவு திட்டம் முதன் முதலாக தமிழில் வழங்கப்பட்டது. 24-2-1961ல் அப்போதிர்ந்த சென்னை மாகானம் என்றழைக்கப்பட்டு வந்ததை மாற்றி தமிழ்நாடு என அழைக்கப்படுமென சட்டசபையில் அறிவிக்கப்பட்டது.

ஆட்சிமொழி தகுதி அளிக்கப்பட்டாலும் அதனை நடைமுறைபடுத்துவதில் உள்ள சிக்கல்களை உணர்ந்த காமராஜர் அதனை களைவதற்கான நடவடிக்கைகளில் தீவிரமாக ஈடுபட்டார். 1957ம் ஆண்டு தமிழ் ஆட்சிமொழி அமல்படுத்தும் குழுவை ஏற்படுத்தினார். இவர்கள் மாவட்டம் தோறும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு தமிழ் ஆட்சி மொழி செயலாக்கம்பற்றி ஆய்வு செய்து அமல்படுத்துவதில் உள்ள சிக்கல்களை அறிந்து ஆய்வின் போதே அறிவுறைகளை கூறி குறைகளை களைந்து அகராதியில் இல்லாத சொற்களுக்கு இணையான தமிழ் தேவைப்படும் இடங்களில் உடனுக்குடன் எடுத்துரைத்தனர். மற்றும் தாங்கள் சொல்லுகின்ற அலுவலகங்களில் பயன்படுத்தப்படும் எளிய அலுவலகத் தமிழ்ச் சொற்களை கோர்த்து ஆட்சிச் சொல் அகராதியை ஏற்படுத்தினர்.

எல்லத் துறைகளிலும் உபயோகிக்கக் கூடிய வகையில் ஒவ்வொரு துறைக்கும் தமிழ் ஆட்சி மொழி அகராதியும் அதற்கு இணையான ஆங்கிலச் சொல் அகராதியும் வெளியிடப்பட்டு, அனைத்து அரசுத் துறைகளுக்கும் வழங்கப்பட்டது. அனைத்து அரசுத் துரகளுக்கும் தமிழ்த் தட்ட்ச்சு இயந்திரங்கள் வழங்கப்பட்டதோடு தட்டச்சர்களுக்கு சிறப்பு பயிற்சியும் அளிக்கப்பட்டது. எல்லாச் சட்டங்களும் தமிழாக்கம் செய்து வெளியிடுவதற்கான முழு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன.

No comments: