Friday 26 December 2014

வியட்நாமில் முதலைப் பண்ணையாம்...??!!


கோழிப் பண்ணையும், இறால் பண்ணையும், ஈமு கோழிப் பண்ணையுமே இங்க படாத பாடு படுது!! வியட்நாமில் முதலைப் பண்ணையாம்...??!!

முதலைப்பண்ணைகள் இப்போது வியட்நாமில் பெரும் பிரச்சினையாக தலை எடுத்துள்ளது. முதலைகள் நல்ல பணம் கொழிக்கும் விசயமாக படுவதால் இந்த் முதலைப்பண்ணை பிரச்சினை வியட்நாமில் தலைவிரித்தாடுகிறது!!




அங்கு 150 குடும்பங்களுக்கு மேல் குடும்பத்துக்கு 50லிருந்து 1000ம் வரை முதலைகளை பண்ணைகளில் வளர்க்கிறார்களாம். தோறாயமாக பண்ணைகளில் வளர்க்கப்படும் முதலைகளின் எண்ணிக்கை 94,000 தான்டலாம் என்கிறார்கள். இது போல் பண்ணைகளில் வளர்க்கப்படும் முதலைகள் பண்ணைகளிலிருந்து தப்பித்து வெளியே குட்டைகளுக்கும் சதுப்புகளுக்கும் சென்று விடுவதே பிரச்சினையாக உள்ளதாம்.

இந்த படத்தில் உள்ள முதலை 32 கிலோ எடையும் 2 மீட்டர் நீளமும் (உத்தேசமாக 7 அடி) கொண்டது. இது ஒரு விவசாயியின் வீட்டின் அருகின் இருந்த குட்டையில் அவரால் பிடிக்கப்பட்டது. இது ஏதாவது அருகில் உள்ள பண்ணையில் இருந்து தப்பித்திருக்கலாம் என்கிறார் அவர். சில பண்ணைகளில் 500 சதுர மீட்டர் பரப்பளவில் 300 முதலைகள் வளர்க்கப் படுகின்றன என்கிறார்கள். முதலை பண்ணையின் உரிமையாளர்கள் த்ங்கள் விலை மிகுந்த முதலைகளை தப்பிக்க விடமாட்டார்கள் என்றாலும் சமீபத்தில் வியட்நாமில் முதலைகளின் நடமாட்டம் குடியிருப்பு பகுதிகளில் அதிகரித்து விட்டதாக மக்கள் தெரிவிக்கன்றனர். இதற்கு காரணம் எல்லாம் முதலைக் கறியின் விலையேற்றம்தான்.

வியட்நாமில் நம்மூர் கோழிக்கறி ஆட்டுக்கறி போல் முதலைக்கறியும் ஒரு முக்கிய உணவாகிவிட்டது!! சமீப காலங்களில் வியட்நாமிய விவசாயிகள் பெரும்பாலும் முதலை வளர்ப்பில் கவணம் செலுத்த ஆரம்பித்து விட்டனர். அதற்கு காரணம் முதலைக்கறியின் விலையேற்றம் தான். இந்திய ரூபாயின் மதிப்பில் ஒரு கிலோ கறி கிட்டதட்ட 390 ரூபாய் இருந்தது தற்பொழுது 650 ரூபாய் ஆகிவிட்டது!! பண்ணைகளில் இருந்த வரை பிரச்சினை இல்லாத விசயம் வெளியில் வந்ததால்தான் பிரச்சினை ஆகிறது. வெளிநாட்டு உல்லாச பயணிகளுக்கு ஆபத்தாகிவிடக்கூடாது என்பதுதான் இப்போது பெரும் தலைவலியாகி உள்ளது வியட்நாமிற்கு!! 

வியட்நாமை பொருத்தவரை முதலைகள் அருகி வரும் பாதுகாக்கப்படும் மிருகங்களின் பட்டியலில்தான் உள்ளது. அவைகளை வெளிநாட்டுக்கு கொண்டு செல்லவோ, தோலையோ அல்லது கறியையோ ஏற்றுமதி செய்யவோ தடை உள்ளது. ஆனால் உள்நாட்டில் பண்ணைகளில் வளர்க்கவோ, மாமிசங்களை விற்கவோ தடைச் சட்டம் ஏதும் இல்லை என்கின்றனர் வன பாதுகாவலர்கள்.
தகவல்: Environmental News and Media

No comments: