Tuesday 9 December 2014

பெருந்தலைவர்-எளிமையின் சிகரம்

சுமார் 72 – ஆண்டு காலம் காமராஜர் இந்த மண்ணிலே வாழ்ந்தார். தனது பெர்ம்பாலான வயிதனை எல்லாம் அவர் விடுதலைப் போராட்டத்திலும், சத்தியாக்கிரகம், மற்றும் வெள்ளையனே வெளியேறு என்ற பற்பல போராட்டங்களிலும் செலுத்தியதால் சிறைச்சாலைகளில் கழித்தார்.
12 – ஆண்டுகள் காமராஜர் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவராக இருந்து செயலாற்றித் தமிழ் நாட்டில் காங்கிரஸ் வேரூன்றவும், காங்கிரஸ் ஆட்சி ஏற்படவும் பாடுபட்டார்.
9 – ஆண்டுகளுக்கு மேல் காமராஜர் தமிழ் நாட்டின் முதலைமைச்சராக இருந்து, கல்விக்கும் விவசாயத்துக்கும் தொழில்களுக்கும் முக்கியத்துவம் கொடுத்து நாட்டை முன்னேற்றினார்.
சுமார் 2 1\2 ஆண்டுகாலம் காமராஜர் அகில இந்தியக் காங்கிரஸ் கமிட்டியின் தலைவராக இருந்து இந்தியாவிலுள்ள எல்லா மாநிலங்களுக்கும் சுற்றுப் பயணம் செய்து காங்கிரஸ் கட்சிக்காகப் பெரும்பாடுபட்டார்.
‘கிங் மேக்கர்’ என்று எல்லோரும் கூறும்படி, பிரதமர்களைத் தான் நினைத்த வண்ணமே தேர்ந்தேடுத்து ஆட்சி செய்ய வைத்தார்.காமராஜர் புகழ் இந்தியா மட்டுமின்றி உலக மெங்கும் பரவியது. அமெரிக்காவும், ருஸ்யாவும் அவரைத் தங்கள் நாடுகளுக்கு அரசு விருந்தாளியாக வரவேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தன்.

1966 – ஆம் ஆண்டில் காமராஜர் சோவியத் நாட்டுக்குச் சென்றார். சிறப்பான் வரவேற்பு அளித்து சோவியத்து அரசு காமராஜருக்கு மரியாதை செலுத்தியது. ருஸ்யச் சுற்றுப் பயணத்தை முடித்துக் கொண்டு காமராஜர், அமெரிக்கா செல்லத் தான் நினைத்திருந்தார். இந்தியாவில் பொதுத் தேர்தல் நடக்க விருந்ததால் காமராஜர் அமெரிக்கா செல்லம் திட்டத்தைக் கைவிட்டு விட்டார். இது அவருக்கு மட்டுமல்ல அமெரிக்காவிற்கும் ஏமாற்றமாகவே இருந்தது.
கிழக்கு ஜெர்மனி, ஹங்கேரி, செக்கோஸ்லெவியா, யூகோஸ்லேவேக்கியா, பல்கேரியா போன்ற ஐரோப்பிய நாடுகளுக்குச் சென்று சுற்றிப் பார்த்தும விட்டு இந்தியா திரும்பினார்.எப்போதும் தான் அணியும் கதர் நான்கு முழ வேட்டி, அரைக் கைக்கதர் சட்டை, ஒரு கதர் துண்டு, காலில் தோல் செருப்பு – இவைகளுடனேயே அவர் வெளிநாடுகளுக்குச் சென்று திரும்பினார். இப்படி வெளிநாடு சென்று திரும்பியவர்கள் தமிழ் நாட்டில் இரண்டே இரண்டு பேர்கள்தான்.
ஒன்று பெருந்தலைவர் காமராஜர் மற்றொருவர் விஞ்ஞானி ஜி.டி. நாயிடு.காமராஜரைப் படிக்காத மேதை என்று அவர் என்னென்ன படிக்கிறார் என்பதனை எல்லாம் பார்த்திராதவர்கள் தான் அப்படிக் கூறுவார்கள். காமராஜர் பள்ளியில் படித்தது கொஞ்சம் தான் என்றாலும் நண்பர் ஒருவரின் உதவியால் ஆங்கிலம் கற்றுக்கொண்டார். காமராஜர் அனுபவப் பள்ளியில் அநேகம் கற்றுக்கொண்டவர்.
அவருக்குக் கல்வி ஞானம். சுயமுயற்சிகளால் வந்தது.”தமிழே இவருக்கு தகராறு. இவர் எப்படி எப்பொழுது ஆங்கிலமும் இந்தியும் கற்றுக் கொண்டார்?” என்று கூடச் சிலர் தங்களுக்குள் கேட்டுக் கொள்வதுண்டு.
பிரிட்டிஷ் இளவரசியும், அவரது கணவன் எடின்பரோ கோமகனும் சென்னைக்கு வந்திருந்தபோது காமராஜர் தமிழகத்தின் முதலமைச்சர் அவர்களோடு ஆங்கிலத்தில் பேசியிருக்கிறார்.
பாரதி பக்தர் காமராஜர். எப்போதும் தன்னோடு பாரதியாரு கவிதைகள் நூலை வைத்திருப்பார். பாரதி கவிதைகளை ஓய்வு கிடைத்தபோதெல்லாம் படித்து ரசிப்பார். அதனால் தான் அவருத் ரஷ்யப் பயணத்தின் போது மாஸ்கோ வரவேற்பில் காமராஜர் பாரதியின் ”ஆகவெறன்றெழுந்தது பார் யுகப் புரட்சி” என்ற பாடலைப் பாடி ரஸ்ய மக்களின் பாராட்டுக்களைப் பெற்றார்.
காமராஜர் காலையில் எழுந்து குளித்து முடித்ததும் அன்றாடச் செய்தித் தாள்களைப் பிரித்துப் படித்து நாட்டின் அரசியல் சூழ்நிலைகளைத் தெரிந்து கொள்வார். தமிழில் வெளியாகி வந்திருந்த செய்தித் தாள்கள் மட்டுமின்றி அவர், ”ஹிந்துஸ்தான் டைம்ஸ், இன்டியன் எக்ஸ்பிரஸ்” போன்ற ஆங்கிலச் செய்தித் தாள்களையும் படிப்பார்.
காமராஜர் எப்போதும் தனது பிரீப்கேஸில் வைத்திருந்த ஆங்கில நூல் மற்றும் இதழ்கள்.
1. Inside Africa
2. Endand Means
3. Time Magazines
4. News weak – போன்றவைகள் ஆகும். இவைகளுடன் பாரதியார் கவிதைகளும் கட்டாயமாக்க் காமராஜர் வைத்திருப்பார்.
அவர் முதலமைச்சராக இருந்த காலத்தில் ஆங்கிலத்தில் தயாரித்த கோப்புகளில் கையொப்பம் வாங்க வரும் ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் அவர் கவனமாகப் படித்து, சந்தேகப்பட்ட இடங்களில் அதைப் படித்துக் கேள்விகள் கேட்டு அந்த அதிகாரிகளை அசரவைத்து விடுவாராம். ஆகவே காமராஜரின் கல்வி அறிவை யாரும் குறை கூறவே முடியாது.

No comments: