Thursday 11 December 2014

காஞ்சிபுரத்தில் அமைந்திருக்கும் Foxxconn மொபைல் உதிரி பாகங்கள் தயாரிக்கும் தைவான் நிறுவனம் மூடப்படும் அபாயம்:

வெளிநாட்டு நிறுவனங்கள் உள்ளே வந்தால் கட்டுங்கடங்காத அளவுக்கு வேலை வாய்ப்பு பெருகி விடும். வெளி நாட்டு பணம் எல்லாம் கட்டு கட்டாக உள்ளே வந்து விழுந்துவிடும் என்று அன்டப்புழுகு ஆகாசபுழுகுகளை அவிழ்த்துவிட்டுக் கொண்டிருக்கின்றன முந்தைய காங்கிரசு அரசும் சரி, தற்போதைய பி.ஜே.பி அரசும் சரி!! Nokia நிறுவனம் முதலில் சத்தமில்லாமல் மூடப்பட்டது, இப்போது Foxconn அதற்கான பேச்சுவார்த்தையில். தங்களுக்கு சிக்கல் எனும்பொழுது அதை சரி செய்வதற்கு எந்த முயற்சியும் எடுக்காமல் நோகாமல் நொங்கு தின்று விட்டு தப்பிக்கும் இது போன்ற நிறுவனங்களால் நம் அரசுகளுக்கு என்ன வருமானம் என்பது குறித்த நேர்மையான தகவல்கள் தேவை! (அரசுக்கு வருமானம் என்ன என்பதுதான் கேள்வி, கையூட்டு பெற்ற விவரங்கள் அல்ல!!) இவர்கள் இங்கு கடை திறப்பது ஒன்றும் நம் சமூகத்துக்கு சேவை பண்ண அல்ல என்பது தின்ணம்!! இந்தியன் இழிச்ச வாயன் குறைந்த சம்பளத்தில் நிறைந்த வேலைகளை பெற்று விடலாம் என்ற எண்ணம் தான். அப்புறம் கையூட்டு குடுத்து மற்ற நாடுகளில் சாதிக்க முடியாதவைகளை இங்கு சாதித்து விடலாம். அடுத்தது இங்கு எப்பேற்ப்பட்ட வழக்காக இருந்தாலும் நிறுவன டைரக்டர்களின் கொள்ளுப் பேரன் சாகும்வரை இழுத்துக் கொள்ளலாம்!!!
இதில் வேதனையான விசயம் என்ன தெரியுமா, மின் வெட்டு காலங்களில் ஒழுங்காக லாபகரமாக நியாயமாக் உள்ளூர் மக்களுக்கு வேலை வாய்ப்பளித்து அரசுக்கு பயந்து வரி, வங்கிக்கு நியாயமாக வட்டி, உள்ளூர் நிர்வாகத்திற்கு தீர்வை என்று கட்டிக் கொண்டிருந்த உள்ளூர் சிறு குறுந்தொழில் நிறுவனங்களுக்கு குடுக்க வேண்டிய மிண்சாரத்தை இந்த‪#‎ஓடுகாலி‬ நிறுவனங்களுக்கு குடுத்துத் தொலைத்ததுதான்!!! இந்த பண்ணாட்டு பண்ணாடைகளுக்கு வரி விளக்கு, தடை இல்லா மிண்சாரம் எல்லாம் குடுத்து நம் நாட்டுக்கும் நாட்டு மக்களுக்கும் இவர்கள் மூலம் கிடைத்த நன்மை குறித்து நியாயமான விளக்கம் அரசுகள் குடுக்க வேண்டும்!! இவர்கள் வைத்து விட்டு போகப் போகும் வரி பாக்கி, தீர்வை நிலுவை போன்ற விவரங்களும் வேண்டும். எந்த எந்த தேசிய வங்கிகளை மொள்ளை போட்டிருக்கிறார்கள் விவரமும் குடுக்க வேண்டும்!! செய்யுமா அரசுகள்!! கண்டிப்பாக செய்யமாட்டார்கள். அதே போல் இந்த "ஃபாக்ஸ்கான்" நிறுவனம் மூடப்ப்டப் போவதால் 1000க்கும் மேற்பட்ட ஊழியர்கள் வேலை இழக்கப் போகிறார்கள். இவர்களுக்கு என்ன சம்பள பாக்கி வைத்துவிட்டு போகப் போகிறார்கள் என்பதும் நமக்கு தெரியப்போவதில்லை. இவர்களது வாழ்வாதாரமும் இப்போது கேள்விக்குறியாகி நிற்கப்போகிறது!!
இது போன்ற நிறுவனங்களை அரசு எடுத்து நடத்தலாம் என வாதங்கள் எழுகின்றன, இதனால் பல ஆயிரம் ஊழியர்கள் பயன் பெறுவர் என்பதும் உண்மைதான், ஆனால் இதனால் உள்நாட்டு பொருளாதாரத்துக்கு கேடும், வெளிநாட்டு நிறுவனங்களுக்கு காவடியும் தூக்கும் நிலமை வந்துவிடாதா??! இந்த வெளிநாட்டு நிறுவனங்களுக்கு வழங்கிய சலுகைகளையும் உத்திரவாதங்களையும் தடை இல்லா மின்சாரத்தையும் உள்நாட்டு நிறுவனங்களுக்கு வழங்கினால் அவர்களால் உற்பத்தியையும் வேலை வாய்ப்பையும் பெறுக்க முடியாதா. நம்மூர் மனித வளங்களை ஏன் வெளிநாட்டிலும், வெளிநாட்டு நிறுவனங்களிடமும் அடகு வைக்க வேண்டும். நம் நாட்டு இளைஞர்களும் ஏன் குடும்பம் குட்டிகளை விட்டுவிட்டு வெளிநாட்டில் வேலை செய்ய வேண்டும்??! உள்நாட்டு சிறு குறுந்தொழில்களை வளப்படுத்த வேன்டும் அரசு. மூன்று பக்கமும் கடல் சூழ்ந்திருக்கும் நாட்டில் மீன் வளத்திற்கு குறை இல்லை. அது சார்ந்த துறைகளிலும் கவணம் செலுத்தலாம். முதலில் மீனவர்களுக்கு பாதுகாப்பையும், அவர்களுக்கு நல்ல வாழ்வாதாரத்தையும் ஏற்படுத்தி குடுக்க வேண்டும்.
அதே போல் இந்த பண்ணாட்டு பண்ணாடைகளுக்கு குடுத்த மின்சாரத்தை முறையாக நம் விவசாயிகளுக்கு குடுத்திருந்தால் விளைநிலங்களும் விளைபொருள் உற்பத்தியும் பெருகி இருக்குமே! விலை வாசியும் வெகுவாக குறந்திருக்குமே!!
/// என்ன வளம் இல்லை இந்த திருநாட்டில்....
ஏன் கையை ஏந்த வேண்டும் வெளிநாட்டில்.....///
திருவோட்டை கீழே போட்டு விட்டு திருநாட்டை காக்குமா அரசுகள்???!!!!

No comments: