Thursday 25 December 2014

அட்மிரல். ஆஸ்கார் ஸ்டான்லி டாவ்சன் (நாடார்)

பிறப்பு
பர்மாவில் 13 நவம்பர் 1923ல் பிறந்த கிருத்துவ நாடாரான அட்மிரல் தனது பால்ய பருவங்களை பர்மாவிலேயே கழித்தார். 1942 மார்ச்சில் ஜப்பானின் பர்மிய படை எடுப்பின் போது இந்தியாவுக்கு வந்தனர் அட்மிரலின் குடும்பத்தினர். கல்லூரி காலத்தில் இந்தியாவுக்கு அவர்கள் குடும்பம் மீண்டும்வந்த பொழுது அவர்கள் சொந்த ஊரான நாகர்கோவில் Scott Christian College இல் படிப்பை தொடர்ந்தார்.


நேவியில்
ஜனவரி 7 1943 இல் பிரிட்டிஷாரின் "ராயல் இந்தியன் நேவியில்" தன்னை இணத்துக் கொண்டார். இதற்காக அவர் கல்லுரி படிப்பை பாதியில் தியாகம் செய்ய வேண்டியிருந்தது. கப்பற் படையில் வாழிகாட்டுதல் பிரிவான Navigation and Direction இல் சிறப்பு பயிற்சியை இங்கிலாந்தில் பெற்றார். இரண்டாவது உலகப் போரில் நேசப் படைகளின் பர்மிய மீட்பான Arakan Campaign 1944-1945 இல் பங்கேற்றார். சுதந்திரத்திற்கு பிறகுறைந்திய கப்பற்படை அவரை சுவீகாரம் எடுத்துக் கொண்டது. ஆரம்ப காலத்தில் ஜனாதிபதி இராஜேந்திர பிரசாத் அவர்களின் கப்பற்படை சிறப்பு உதவியாளராக (Naval Aide-de-Camp) பணியாற்றினார்.

இந்திய பாகிஸ்தான் போர்
பின்னர் வெளிங்டனில் உள்ள Defence Services Staff College, Wellington இல் பட்டப் படிப்பை முடித்து 1957இல் #INS_விக்ராந்த் இல் Navigating Officer ஆக பணியாற்றினார். பின்னர் Fleet Commanding Officerஆக பதவி உயர்ந்தார். Navigating Officer ஆக INS தல்வார் மற்றும் INS நீல்கிரி ஆகிய கப்பற் படை கப்பல்களில் பணியாற்றினார். 1971இல் இந்திய பாகிஸ்தான் போரின் போது இந்திய கப்பற்படை தலைமையகத்தில் Director of Naval Operations (DNO) ஆக இருந்தார். இவரது தலைமையின் கீழ்தான் பிரபலமான கப்பற்படை வெற்றி ஆபரேஷன்களான Operation Trident, Operation Python மற்றும் கிழக்கு பாகிஸ்தானில் கப்பற் படை அரன் ஆகியவை நடை பெற்றன என்பன குறிப்பிடத் தக்கது.

அட்மிரலாக
பின்னர் 1973 இல் புது தில்லி National Defence College யில் மற்றொரு பட்டப் படிப்பை முடித்தார். பிப்ரவரி 1978இல் இருந்து மார்ச் 1979 வரை Flag Officer Commanding, Eastern Fleet (FOCEF) ஆக பணி புரிந்தார். அதன் பிறகு Flag Officer Commanding-in-Chief (FOC-IN-C), Southern Naval Command பதவிக்கு உயர்த்தப்பட்டார். 1981இல் ராணுவத்தின் உயர்ந்த விருதான Param Vishisht Seva விருது வழங்கி கவுரவிக்கப் பட்டார். மார்ச் 1 1982ல் ராணுவ உயர் பதவியான நேவியின் தலைமைப் பதவியாக#அட்மிரல் பதவி அளிக்கப் பெற்றார். 30 நவம்பர் 1984இல் ஓய்வு பெற்றார் அட்மிரல். 41 வருட கப்பற்படை வாழ்க்கையில் 19 வருடத்தை கடலிலேயே கழித்திருந்தார்.

நியூசிலாந்து தூதர் - தொண்டு நிறுவனம்
ஆகத்து 1985 முதல் செப்டம்பர் 1987 வரை நியுசிலாந்தில் இந்திய தூதராக இருந்தார். பின்னர் இந்தியா திரும்பிய அட்மிரல் அவரது பின் வாழ்க்கையை பெங்களூரிலும் நாகர்கோவிலிலும் கழித்தார். இயற்கை ஆர்வலராக இருந்த அவர் சுற்றுச்சூழல் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் பல சேவை , தொண்டு நிறுவனங்களை நிறுவினார். இந்த #நேவி_காதலர் கடைசி வரை #பிரமச்சாரியாகவே இருந்தார். 23 அக்டோபர் 2011இல் மூளை ரத்த்க் கசிவால் 87ஆவது வயதில் நம்மை விட்டு பிரிந்தார் இவ் வீரர்.

No comments: