![]() |
புதிதாய் தேர்ந்தெடுக்கப்பட்ட நிஜலிங்கப்பாவுடன் பெருந்தலைவர் |
இலக்கணம் பாராமல் கருத்தில் மட்டும் கவணம் கொள்ள வேண்டிய பக்கம் இது!! சுட்டிகாட்டப்படும் பிழைகள் கவணத்தில் கொள்ளப்படும். கருத்துக்கள் என்னுடையதே. பயணிப்போம்!!!
Tuesday, 30 June 2015
பெருந்தலைவரும் - இந்திராவின் துவேசமும். (பாகம் மூன்று)
இந்தியாவும், இந்திராவும், நெருக்கடி நிலையும்! (ஐந்தாம் பாகம்)
ஐம்பது வயதுக் குட்பட்டவர்களுக்கு, இந்த இருண்ட காலத்தின் சமூக, அரசியல் நடப்புகள் இன்று தெரியாது. சட்டமன்றத்தில் 183 உறுப்பினர்களைக் கொண்ட தனிப் பெரும்பான்மைப் பெற்ற கட்சியான திமுக, நெருக்கடி நிலையை ஆதரிக் காமல், எதிர்க்கிறது என்பதற்காக, 356-ஆவது பிரிவின் கீழ் ஆட்சி கலைக்கப்பட்டது. மிசா சட்டத்தை பயன்படுத்தி, பலரும் கைது செய்யப்பட்டனர். சிறையில் இருந்த திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி, முரசொலிமாறன், மு.க. ஸ்டாலின், ஆற்காடு நா. வீராசாமி போன்றோர் கடுமையாக தாக்கப் பட்டனர். சிட்டிபாபு, சாத்தூர் பாலகிருஷ்ணன் ஆகிய இருவரும், சிறையில் கடுமையாக தாக்கப்பட்டு, சிறையில் மாண்டனர். வட நாட்டில் பல தலைவர்கள் கைது செய்யப்பட்டாலும், அவர்களுக்கு இத்தகைய தாக்குதல்கள் நடந்ததாக செய்திகள் இல்லை. பல தலைவர்கள் உடல் நலம் கருதி, பிணை பெற்று வந்துவிட்டார்கள்.
அப்போதைய மகாராட்டிர சட்டமன்ற நடவடிக்கைகளின் குறிப்புகளில் இந்த செய்திகள் இருக்கின்றன என ஆதாரத்துடன் சொன்னவரும் சாட்சாத் சுப்ர மணியன் சுவாமிதான். ஆதாரம் வேண்டுவோர், ஆங்கில இந்து பத்திரிக்கையில் ஜூன் 13, 2000 அன்று அவர் எழுதிய கட்டுரையைப் படித்து தெரிந்து கொள்ளலாம். எந்த தருணத்தில் சுப்ரமணியன் சுவாமி இந்த கட்டுரையை எழுதினார் தெரியுமா? நெருக்கடி நிலைப் பிரகடனம் செய்து இருபத்தைந்து ஆண்டுகள் ஆகிய நிலையில், அதை பாஜக நினைவுபடுத்தி நிகழ்ச்சி ஒன்றுக்கு ஏற்பாடு செய்ததைக் கிண்டல் செய்து, சுவாமி இந்த கட்டுரையை எழுதினார். இவ்வாறு வாஜ்பாயும், ஆர்.எஸ்.எஸ். தலைவர்களும் மன்னிப்பு கோருவது ஒன்றும் புதிதல்ல. இதே பாரதரத்னா வாஜ்பாய், 1942 வெள்ளையனே வெளியேறு போராட்டத்தில் கலந்து கொண்ட தியாகி என பீலா விட்டு, அது வடிகட்டின பொய் என்றும், எதேச்சையாக நான் கலவரம் நடந்த பகுதியில் இருந்தேன்; என்னை கைது செய்து விட்டார்கள் என நீதிமன்றத்தில் கடிதம் கொடுத்ததை, பிரண்ட் லைன் ஆங்கில பத்திரிகை (பிப்ரவரி 7-20, 1998) வெளியிட்டு, முக மூடியை கிழித்து விட்டது. அதேபோல், காந்தி படுகொலைக்குப் பின் ஆர். எஸ்.எஸ். இயக்கம் ஒரு முக்கிய காரணம் என்ற அடிப்படையில் பிப்ரவரி 2, 1948-இல் தடை செய்யப்பட்டது. இனி அரசியல் நடவடிக்கை எதிலும் கலந்து கொள்ள மாட்டோம்; எங்கள் அமைப்பு ஒரு கலாச்சார அமைப்பு என்று ஒரு சட்ட விதி உருவாக்கி, மத்திய அரசுக்கு கடிதம் கொடுத்ததற்குப் பின் தான், ஜூலை 11, 1949-இல் ஆர்.எஸ்.எஸ். மீதான தடை நீக்கப்பட்டது.
நெருக்கடி நிலைக் காலத்தில் அதை எதிர்த்து இறுதி வரை நின்றவர்கள் யார்? அதற்காக ஆட்சியை இழந்தவர்கள் யார்? அதை எதிர்க்காமல் கட்சியை நடத்தியவர்கள் யார்? கைது செய்யப் பட்டதும் மன்னிப்புக் கடிதம் எழுதிக் கொடுத்து வெளியே வந்து இன்றைக்கு ஜனநாயகக் காவலர்களாக காட்டிக் கொள்பவர்கள் யார்? இதற்கான வரலாற்று நிகழ்வுகளை பதிவு செய்ய வேண்டியது நம் கடமை. இதை நாம் சரியாக செய்யாததினால்தான், மன்னிப்பு கேட்டவர்கள் இன்றைக்கு ஜனநாயகக் காவலர் வேடம் போடுகிறார்கள்.
Monday, 29 June 2015
இந்தியாவும், இந்திராவும், நெருக்கடி நிலையும்! (நான்காம் பாகம்)
அறுபதுகோடி வயிறு நிறைந்திட இருபதம்சத் திட்டம் வந்ததம்மா என்ற பாட்டு ஊரெங்கும் ஒலித்துக் கொண்டிருக்க, எளிய மக்கள் மீது கட்டவிழ்த்துவிட்ட வன்முறைகளும் ஒடுக்குமுறைகளும் கொஞ்சநஞ்சமா? துர்க்மான் கேட் போன்ற பகுதிகளில் இஸ்லாமியர் மீது நடந்த தாக்குதல்களை மறக்க முடியுமா? இறை நம்பிக்கையின் காரணமாக இஸ்லாமியர் குடும்பக் கட்டுப்பாடு செய்து கொள்ள மறுக்கின்றனர் என்று இந்துத்துவவாதிகள் சொல்கிற அதே பொய்யை சொல்லிக் கொண்டு, திருமணமாகாத இஸ்லாமிய இளைஞர்களையும் தூக்கிப்போய் இனவிருத்தி நரம்பை அறுத்துவீசிய கொடுமையும் நடந்தது. இது சஞ்சய் காந்தியின் கன்ணசைவிலேயே நடந்தது.
அரசியல் சட்டம் குடிமக்களுக்கு வழங்கியுள்ள அனைத்து உரிமைகளும் ரத்து செய்யப்பட்டன. உயிர் வாழ்தலும் கூட அரசின் கருணையின்பாற்பட்டதாய் மாற்றப்பட்டிருந்தது. ஆட்கொணர்வு மனுவை தாக்கல் செய்யும் உரிமையும் மறுக்கப்பட்டது. பேச்சைக் குறைப்பீர் உழைப்பை பெருக்குவீர் எனச் சொல்லி உழைக்கும் மக்களின் எல்லா கோரிக்கைகளும் பின்தள்ளப்பட்டன. தொழிலாளி வர்க்கம் போராடிப் பெற்ற உரிமைகள் யாவும் மறுக்கப்பட்டன. அமெரிக்க விமான நிலையத்தில் அண்டர்வேருடன் நிற்க வைக்கப்பட்டபோதும் அவமானப்படாத அளவுக்கு தோல் தடித்துப்போன இன்றைய ஜார்ஜ் பெர்னாண்டஸ் ரோஷத்தோடும் போர்க்குணத்தோடும் வாழ்ந்த காலம் அது. ரயில்வே தொழிலாளர்களின் ஆற்றல்மிக்கத் தலைவராய் அப்போதிருந்த அவரை கேட்டுப் பாருங்கள், தொழிலாளிகள் மீது நடந்த ஒடுக்குமுறைகளின் வன்மையை அவர் கூறக்கூடும்.
இந்த கும்பலின் அட்டூழியங்களுக்கு எதிரான தலைவர்களையும் அமைப்புகளையும் கண்காணிக்கவும் உளவுசொல்லவும் பணிக்கப்பட்டிருந்த உளவுத்துறை, அந்த வேலையையும் செய்யாமல் சஞ்சய்காந்தியின் பைஜாமாவுக்கு நாடா கோர்த்துக் கொண்டிருந்த விசயத்தை நாடறியும். மாருதி கார் ஊழல் மன்னன் என்று வர்ணிக்கப்பட்ட அந்த சஞ்சய் காந்தியின் விரலசைப்புக்கு பணிந்து போகுமளவுக்கு உளவுத்துறை துணிச்சலற்றுக் கிடந்தது. அவசரநிலை எதிர்ப்பாளர்களில் ஒரு பிரிவினர், உயிர்ச்சேதம் விளைவிக்காத டம்மி குண்டுகளை ரயில்பாதைகளின் நெடுகவும் வெடிக்க வைத்து அரசை எச்சரித்தார்கள். இந்த தொடர் குண்டுவெடிப்பில் ஒன்றைக்கூட, அப்போது மிகவும் சிறப்பாக செயல்பட்டதாக தாங்கள் பாராட்டும் உளவுத்துறை கண்டுபிடிக்கவில்லை தெரியுமா? குண்டுசத்தம் கேட்டபின் குறட்டையிலிருந்து விழித்துக்கொண்ட அந்த உளவுத்துறை பரோடா டைனமைட் வழக்கு என்ற ஒன்றை நடத்தியது. அதிலும் இன்னார்தான் குற்றவாளி என்று நிரூபிக்கவில்லை.
உளவுத்துறையால் இந்திய மக்களுக்கு விளைந்த நன்மை என்று ஏதேனும் இருக்குமானால், அது, சட்டத்தையெல்லாம் வளைத்து ஐந்தாண்டுக்கொருமுறை தேர்தல் என்பதை ஆறாண்டுகாலமாக மாற்றிக்கொண்ட இந்திராவிடம் தவறான அறிக்கை கொடுத்து அவரை ஓராண்டுக்கு முன்பாகவே தேர்தலை நடத்தத் தூண்டியதுதான். இப்போது தேர்தல் நடத்தினால் ஜெயித்துவிடுவீர்கள் என்று இந்த உளவுத்துறை கொடுத்த அறிக்கையை நம்பித்தான் எமர்ஜென்சியை விலக்கிக்கொண்டு இந்திரா தேர்தலை நடத்தி மண்ணைக் கவ்வினார் என்பதையாவது தாங்கள் தெரிந்து வைத்திருக்க வேண்டும். கருணாநிதி மீதான தனிப்பட்ட விரோதகுரோதங்களுக்காக எம்.ஜி.ஆர். எமர்ஜென்சியை ஆதரித்த தவறைச் செய்தார். எமர்ஜென்சியைக் கொண்டுவந்ததற்காக இந்திய மக்கள் தனக்கு வழங்கிய தண்டனையை வேறுவழியில்லாமல் ஒப்புக்கொண்டார் இந்திரா.
பெருந்தலைவரும் - இந்திராவின் துவேசமும். (இரண்டாம் பாகம்)
Sunday, 28 June 2015
சாமான்யன் சக்கரவர்த்தியான வரலாறு - நெப்போலியன்
1769 ஆம் ஆண்டு ஆக்ஸ்ட் 15ந்தேதி பிரான்ஸின் கோர்சிக்காவில் ஒரு ஏழ்மையான் குடும்பத்தில் பிறந்தார் நெப்போலியன் 13 பிள்ளைகளில் ஒருவர். சிறு வயதிலேயே பயம் என்றால் என்னவென்று அறியாதவனாக வளர்ந்தார் நெப்போலியன். அரசின் சலுகை பெற்று வியந்நாவிலும் பாரிசிலும் உள்ள இராணுவப் பள்ளியில் கல்வி பயின்றார். கணிதம், வரலாறு, புவியியல் ஆகியவை அவருக்குப் பிடித்தப் பாடங்கள். பள்ளியில் தனிமையை விரும்பிய நெப்போலியன் பொறுப்புணர்ச்சி மிக்கவராக இருந்தார். 16 வயதில் பள்ளிப் படிப்பை முடித்து பிரெஞ்சு இராணுவத்தின் ஆர்ட்டிலரிப் பிரிவில் சேர்ந்தார். டுலால் நகரில் நடைபெற்ற யுத்தத்தில் மிகச்சிறப்பாக செயல்பட்டதற்காக நெப்போலியன் படைத்தளபதியாக பதவி உயர்வு பெற்றார். 1796ல் இத்தாலியில் ஆஸ்திரிய சாடினியப் படைகளை வெற்றிகரமாக முறியடித்தப் பிறகு நெப்போலியனுக்கு தேசிய அளவில் புகழ் கிடைத்தது. பின்னர் பாரிஸில் ஆட்சிக்கவிழ்ப்பில் ஈடுபட்டு வேறு இருவருடன் சேர்ந்து ஆட்சியைக் கைப்பற்றினார்.
(தகவல் உதவி - நன்றி திரு.அழகிய பாண்டியன், ஒலி 96.8 வானொலி சிங்கப்பூர்)
Saturday, 27 June 2015
இந்தியாவும், இந்திராவும், நெருக்கடி நிலையும்! (பாகம் மூன்று)
ஜூன் 25 பின்னிரவு தொடங்கி 26 அதிகாலைக்குள்ளாக ஜெயபிரகாஷ் நாராயணன், மொரார்ஜி தேசாய், மதுதந்தவதே, ஜோதிர்மாய் பாசு, வாஜ்பாய், அத்வானி, முலயாம் சிங், லாலு என நாடு முழுவதும் 677 தலைவர்கள் கைது செய்யப்பட்டிருந்தனர். இந்த கைது விவகாரமோ நெருக்கடிநிலை பிரகடனம் செய்யப்பட்ட விஷயமோ ஊடகங்கள் வழியாக மக்களுக்கு தெரிந்துவிடக் கூடாதென்பதற்காக பெரும்பாலான செய்தித்தாள் நிறுவனங்கள் செயல்பட்டு வந்த பகதுர் ஷா சபர் மார்க் பகுதியில் மின்விநியோகம் துண்டிக்கப்பட்டது. தில்லியில் 34 அச்சகங்கள் மூடி சீல் வைக்கப்பட்டன. செய்தித்தாள்களை கடைகளுக்கு விநியோகிக்கும் ஏழாயிரம் பேர் சிறையிலடைக்கப்பட்டனர்.
அடுத்து வந்த நாட்களில் கருத்து சுதந்திரம் கடும் அச்சுறுத்தலுக்குள்ளானது. பத்திரிகைகள் கடும் தணிக்கைக்கு உட்படுத்தப்பட்டன. மத்திய அரசின் தணிக்கை அதிகாரிகள் மனம்போன போக்கில் செய்திகளை நீக்கவும் திருத்தவும் அதிகாரம் பெற்றிருந்தனர். எதிர்த்து எழுதும் பத்திரிகைகளுக்கு அரசின் விளம்பரங்கள் நிறுத்தப்பட்டன. நெருக்கடி நிலையை எதிர்த்த இதழ்கள் பறிமுதல் செய்யப்பட்டன. பஞ்சாபில் உருது இதழ்கள் தீயிட்டுக் கொளுத்தப்பட்டன. பத்திரிகையாளர்கள் கைது செய்யப்பட்டனர். இங்கிலாந்தின் டெய்லி டெலிகிராப், அமெரிக்காவின் நியூஸ்விக் ஆகிய இதழ்களின் செய்தியாளர்கள் நாட்டைவிட்டு வெளியேற்றப்பட்டனர். கருத்துரிமையைப் பாதுகாக்கும் பொருட்டு 1966ல் உருவாக்கப்பட்ட பிரஸ் கவுன்சில் ஆஃப் இந்தியா கலைக்கப்பட்டது. அரசின் கட்டுப்பாட்டிலிருந்த வானொலியும் தொலைக்காட்சியும் இந்திராவின் ஜால்ராக்களாக மாறிவிட்டிருந்தன.
ஜனநாயகத்தின் மற்றொரு தூணாக கொண்டாடப்படுகிற நீதித்துறையும் தப்பவில்லை. அதிகாரத்திற்கும் முறைகேடுகளுக்கும் துணை போகாதிருக்கும் ஜக்மோகன்லால் சின்ஹாக்களும் வி.ஆர்.கிருஷ்ணய்யர்களும் இருக்கிற நீதித்துறை இந்திராவைப் பொறுத்தவரை அநீதித்துறையே. எனவே அதை வெறுக்கவும் தன் கட்டுப்பாட்டின் கீழ் அத்துறையை வீழ்த்தவும் இந்திராவுக்கு நூறு நியாயங்களிருந்தன. அதன்பொருட்டு அவர் நீதிமன்றங்களின் அதிகாரங்களைக் குறைக்கும் ஏராளமான சட்டத் திருத்தங்களை கொண்டுவந்தார். சட்டத்தின் ஆட்சியை நிலைநிறுத்த மனசாட்சியோடு செயல்பட்ட நீதிபதிகள் கடும் அச்சுறுத்தலுக்காளாயினர். மொத்தத்தில் சட்டத்திற்கு மேலாக தன்னை நிறுவிக் கொண்டார் இந்திரா.
மிசா, இந்திய பாதுகாப்புச் சட்டம் ஆகியவற்றின் கீழ் நாடு முழுவதும் 1,11,000 பேர் சிறையிலடைக்கப்பட்டிருந்ததாக பத்திரிகையாளர் வி.கிருஷ்ணா ஆனந்த் தெரிவிக்கிறார். இவர்களில் 39 எம்.பி.களும் அடக்கம். 1976 ஜனவரி 31 அன்று தமிழ்நாட்டில் திமுக ஆட்சி கலைக்கப்பட்டது. இக்கட்சியின் முக்கியத் தலைவர்கள் அனைவரும் கைதுசெய்யப்பட்டு சிறையில் தொழுநோயாளிகளோடு சேர்த்து தங்க வைக்கப்பட்டனர். 24 மணிநேரமும் லாக்அப்பிலேயே வைத்திருப்பது, கடுமையாகத் தாக்குவது, மருத்துவ உதவியை மறுப்பது, குறைந்தளவே உணவளிப்பது, உணவில் வேப்பெண்ணையை கலந்து தருவது, தாகத்திற்கு தண்ணீர் கேட்டால் வாய்க்குள் சிறைக்காவலர்கள் சிறுநீர் கழிப்பது என காலனியாட்சியிலும் காணாத சித்திரவதைகள் கட்டவிழ்த்துவிடப்பட்டன.
இப்படியான கைதுகளும் சித்திரவதைகளும் எதிர்க்கட்சியினருக்கு மட்டுமல்ல, எந்தவொரு இயக்கத்திலும் தொடர்பு கொண்டிராத எளிய மக்களுக்கும் நேர்ந்த கொடுமைகள் என்பதற்கு உதாரணம்தான் கேரள மாணவர் ராஜன், மங்களூர் மாணவர் உதயசங்கர் ஆகியோரின் மரணம். கடும் சித்திரவதை காரணமாக கன்னட நடிகை சிநேகலதா, திமுக தலைவர்கள் சிட்டிபாபு, சாத்தூர் பாலகிருஷ்ணன், மார்க்சிஸ்ட் கட்சியின் ராபின் கலிதா, போன்றவர்கள் அகால மரணமடைந்தனர். மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட் இயக்கத்தின் பூமிய்யா, கிஸ்தே கவுடு ஆகியோர் தூக்கிலிடப்பட்டனர். காவல்துறையின் வரம்பற்ற அதிகாரம் மக்களின் உயிர் குடிக்கும் எமனாய் இந்த மண்ணை ஆக்கிரமித்திருந்தது.
பெருந்தலைவரும் - இந்திராவின் துவேசமும் (முதல் பாகம்)
Friday, 26 June 2015
இந்தியாவும், இந்திராவும், நெருக்கடி நிலையும்! (இரண்டாம் பாகம்)
இந்திரா காந்தி கொண்டு வந்த எமர்ஜென்சியின் மோசமான விளைவுகள் தென்னிந்தியாவில் அதிகமாக உணரப்படவில்லை. இந்திரா தேர்தலில் தோற்றதும்தான் விஷயம் எல்லாம் வெளியே வர ஆரம்பித்தது. அப்படி வந்தவற்றில் முக்கியமானது ராஜன் கொலை வழக்கு.
ராஜன் கேரள மாணவன். கம்யூனிஸ்ட் அனுதாபி. போலீஸ் ஸ்டேஷன் மேல் தாக்குதலில் ராஜன் என்ற பேருடைய ஒருவன் ஈடுபட்டான் என்று யாரோ இன்ஃபார்மர் போலீசுக்கு செய்தி கொடுத்திருக்கிறார். வேறு ஒரு கல்லூரி கலை நிகழ்ச்சியில் கலந்து கொண்டு திரும்பி வந்து ஹாஸ்டல் வாசலில் இறங்கிய ராஜனைத் தூக்கிக் கொண்டு போய்விட்டார்கள். சித்திரவதை முகாமுக்குள் கொண்டு போகப்பட்ட ராஜனை அவன் நண்பர்கள், குடும்பத்தினர் யாரும் அதற்கப்புறம் பார்க்கவே இல்லை. ராஜன் கைதுக்கு ரெக்கார்டுகளே இல்லை போலத் தெரிகிறது.
ராஜனின் அப்பா ஈச்சர வாரியர் சாதாரண ஆள் இல்லை. அன்றைய முதல்வராக இருந்த அச்சுத மேனன் போலீசிடமிருந்து தப்பி ஒளிந்து கொண்டிருந்த காலத்தில் அவரை இவர், இவர் குடும்பத்தினர் பல நாட்கள் ஒளித்து வைத்திருந்திருக்கிறார்கள். வாரியர் ஒரு கல்லூரியில் பேராசிரியர். அன்றைக்கு எம்.பி., அமைச்சர் லெவலில் இருந்த பலரை அவருக்கே நேரடியாகத் தெரியும். வயலார் ரவி போன்றவர்கள் நெருங்கிய நண்பர்களாம். அன்றைய உள்துறை அமைச்சர் கருணாகரனின் நெருங்கிய நண்பர்களுக்கு இவர் நெருங்கிய நண்பர். நெருக்கடி நிலை காலம் முழுவதும் மனு மேல் மனு கொடுத்திருக்கிறார். ஒரு கட்டத்தில் கருணாகரன், அச்சுத மேனன் போன்றவர்கள் தன் உயிரை வாங்கும் எதிரியாக இவரைப் பார்க்க ஆரம்பித்திருக்கிறார்கள்.
நெருக்கடி நிலை முடிந்ததும் கோர்ட்டில் ஹேபியஸ் கார்பஸ் போடப்பட்டிருக்கிறது. அப்போது முதல்வராகிவிட்டிருந்த கருணாகரன் தனக்கு இப்படி ஒரு கைது நடந்ததே தெரியாது என்று சொல்லி இருக்கிறார். அது பொய் சாட்சி என்று தீர்ப்பாகி அவர் ராஜினாமா செய்ய வேண்டி இருந்தது. ராஜனை கைது செய்த ஜெயராம் படிக்கல் போன்ற அதிகாரிகளுக்கு முதலில் தண்டனை கிடைத்தாலும் (ஜஸ்ட் ஒரு வருஷம் சிறைத் தண்டனை) அது பின்னால் தள்ளுபடி ஆகிவிட்டிருக்கிறது. பின்னால் கருணாகரன் பல முறை முதல்வராகி சவுக்கியமாகத்தான் இருந்திருக்கிறார்.
தன் நினைவுகளை ஈச்சர வாரியர் எழுதி இருக்கிறார், குளச்சல் மு. யூசுஃப் மொழிபெயர்ப்பு. படைப்பு என்ற விதத்தில் ஒன்றும் பிரமாதம் இல்லை. ஆனால் உண்மை சம்பவத்தின் குரூரம் முகத்தில் அறைகிறது. இவ்வளவு தொடர்புகள் உள்ள ஒரு பெரிய மனிதருக்கே இந்த கதி என்றால் அரசு எந்திரம் ஒரு சாதாரணனுக்கு எதிராக செயல்பட்டால் என்னாகும் என்ற எண்ணம் முதுகெலும்பை உறைய வைக்கிறது.
இதில் மிகப்பெரிய கொடுமை, இந்த நிகழ்வை நியாயப்படுத்தி எடுக்கப்பட்டு, சக்கை போடு போட்ட திரைப்படங்கள்தான்! இந்த சம்பவத்தை மையமாக்கி ‘ஆவநாழி’ என்ற மலையாள படம் வெளிவந்தது. டி. தாமோதரன் எழுத ஐ.வி. சசி இயக்கிய படம். ஜெயராம் படிக்கலாக [இன்ஸ்பெக்டர் பல்ராம்]மம்மூட்டி நடித்திருந்தார். அது பெரும் வெற்றி பெற்று ஜெயராம் படிக்கலுக்கு மீண்டும் ஒரு சமூக இடத்தைப் பெற்றுத் தந்தது. அந்தப் படம் தமிழில் (சத்யராஜ்நடித்து) “கடமை கண்ணியம் கட்டுப்பாடு” என நடிகர் கமலஹாசனின் சொந்த தயாரிப்பில் வெளியிடப்பட்டது.
தொடரும்...
Thursday, 25 June 2015
பெருந்தலைவர் - சமூக சீர்திருத்தப் போராளி
9 ஆண்டுகளே தமிழ்நாட்டில் முதல் அமைச்சராக இருந்த காமராஜரின் புகழை எவராவது மறைத்து விட முடியுமா? அவர் ஒரு முதலமைச்சரைப் போல செயல்படவில்லை. சமூக சீர்சிருத்தப் பேராளியாகத்தான் செயல்பட்டார். சாதி ரீதியாக அடிமைப் பட்டவர்களை கல்வி மூலம் மேலே கொண்டு வந்தார். அப்படித்தான் பெரியார் காமராஜரை பாராட்டினார்.
பசியினால் பள்ளி வர முடியாதவர்களை, விரும்பாதவர்களை பல திட்டங்கள் மூலம் வரவழைத்தார்.
ஊழல் என்பதை அண்டவிடவில்லை என்பது ஆச்சரியமல்ல. அவரே அதற்கு முன் உதாரணமாக இருந்து அவர் இறந்த பிறகு அவரின் இரண்டு வேஷ்டி இரண்டு சட்டைகளைத்தான் தமிழ்நாட்டிற்கு சொத்தாக விட்டுச் சென்றார்.
இன்று வரையிலும் தமிழ்நாட்டில் அவர் உருவாக்கிய மாற்றங்களைப் போல செய்ய வாய்ப்புள்ளதா? இல்லை எவருக்கேனும் செய்யத்தான் மனம் வருமா?
ஆரம்ப பள்ளிக்கூடங்களை இனி எந்த கிராமத்திலும் திறக்க தேவையதில்லை. வேண்டிய அளவுக்கு திறந்தாகி விட்டது. அந்த எண்ணிக்கை முடிவுக்கு வந்து விட்டது. இனி அடுத்த கட்ட கல்விக்கூடங்களை திறக்க நாம் பாடுபட வேண்டும் என்றாரே?
சாதிகளை ஒழிக்க பெரியார் பேசிக்கொண்டிருந்த போது தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட, சமூகத்தில் ஒடுக்கி வைக்கப்பட்ட அத்தனை மனிதர்களையும் கல்வி மூலம் மேலே கொண்டு வந்து நிறுத்தினாரே பெருந்தலைவர்.
தமிழ்நாட்டில் திமுக முதல் முதலாக ஆட்சியைப் பிடித்தது.
"நாம் வெற்றிவிழா கொண்டாடக்கூடாது. மாபெரும் தலைவர் காமராஜர். அவர் தோற்ற நேரத்தில் நான் விழா கொண்டாடுவது முறையல்ல" என்று அண்ணா விழா கொண்டாட்டங்களை நிறுத்தினார்.
இதற்கு மேலும் காமராஜர் குறித்து அண்ணா தன் தம்பிமார்களுக்கு சொன்ன வார்த்தை "நான் உங்களைத் தான் வளர்த்தேன். ஆனால் காமராஜர் தான் தமிழ்நாட்டை வளர்த்தார்" என்றார்.
நேரு இறந்த போது "அவர் சவ ஊர்வலம் முடியும் வரைக்கும் எவரும் அடுத்த பிரதமர் குறித்து பேசக்கூடாது" என்று அனைவரையும் அடக்கி வைத்தவர் காமராஜர். இந்திரா காந்தி இது குறித்து பேசிய போது கூட "உனக்கு ஒன்னும் தெரியாது. நீ பேசாமல் வீட்டில் போய் இரு" என்றார்.
இந்திராவை பிரதமராக கொண்டு வந்ததும் காமராஜர் தான்.
எமர்ஜென்சி காலத்தில் கூட இந்திரா காந்தி கைது செய்ய ரொம்பவே பயந்து யோசிக்க வைத்த ஆளுமை கொண்டவர் காமராஜர்.
இந்தியாவும், இந்திராவும், நெருக்கடி நிலையும்! (முதல் பாகம்)
நீண்ட நேரம் இந்திரா காந்தி ஆலோசனை நடத்தினார்.இறுதியில், "ராஜினாமா செய்வதில்லை" என்று தீர்மானித்தார். (ஆனால் எதிர்க்கட்சித் தலைவர்கள், "இந்திரா காந்தியை பதவியை விட்டு விரட்டும் வரை ஓயப்போவதில்லை" என்று அறிவித்தனர். அவரை ராஜினாமா செய்யும்படி வற்புறுத்தி ஜுன் 29_ந்தேதி நாடு முழுவதும் போராட்டம் நடத்தத் தீர்மானித்தனர். போராட்டத்தை நடத்துவதற்காக, மொரார்ஜி தேசாய் தலைமையில் போராட்டக்குழு அமைக்கப்பட்டது.)
பிறகு ஜனாதிபதி மாளிகைக்கு சென்று ஜனாதிபதி பக்ருதீன் அலி அகமதுவை சந்தித்தார். உளவுத்துறையிடம் இருந்து வந்துள்ள தகவல்களை ஜனாதிபதியிடம் தெரிவித்தார்.
Monday, 22 June 2015
எனது பேருந்து பிரயாணங்கள் (ஆரம்பம்)!
அது என்னவோ தெரியவில்லை சிறு வயதிலிருந்து இன்று வரை எனக்கு தனியாக பிரயாணிப்பது என்றால் ரயில் பயணத்தை விட பேருந்து பயணத்தையே விரும்புவேன். குழந்தை பிராயத்தில் பயணித்த அனுபவங்கள் பெரிதாக நினைவில் இல்லை. ஆனால் எனது பள்ளிப் படிப்பின் ஆரம்பமே பள்ளிப் பேருந்தில்தான் தொடங்கியது. மதுரையில் 1976ல் தவிட்டு சந்தைக்கும் தெற்குவாசலுக்கும் இடைப்பட்ட ஒரு திருப்பத்தில் (சரியாக இந்திராகாந்தி தாக்கப்பட்ட இடம்) அரசமரத்து நிழலில் பள்ளிப் பேருந்தின் நிறுத்தம் உண்டு. எதிர் சந்தில்தான் வீடு என்றாலும் பேருந்து வருவதற்கு அரை மணி நேரம் முன்பு அங்கு இருக்க வேண்டும் என்பது வீட்டு பெரயவர்களின் உத்தரவாக இருக்கும். இப்பொழுது போலெல்லாம் பெரியவர்கள் உத்தரவை அப்பொழுது உதாசீனப்படுத்தி விட முடியாது. பெரியவரகள் யாராது வந்து ஏற்றி விடுவார்கள்.
ஒவ்வொரு சனிக்கிழமையும் பள்ளி அரைநாள். வீட்டுக்கு வரும்பொழுதே துணிகள் எல்லாம் பிரயாணத்திறகு கட்டி வைக்கப்பட்டிருக்கும். விருதுநகர்தானே பாட்டி வீடு சனிக்கிழமை மதியானம் கிளம்பி போனால் அதிக பட்சம் ஒரு மணி நேரத்தில் விருதுநகர் போய் விடலாம்! மதுரை பெரியார் பேருந்து நிலையத்தில் இருந்து தான் அப்பொழுது அனைத்து பேருந்துகளும் கிளம்பும். அரசு பேருந்து என்றால் ஒரு மணி நேரம், தனியார் பேருந்து என்றால் முக்கால் மணி நேரம்! (இப்பொழுது தான் கொடுமைக்கென்று ஒன்றரை மணி நேரம் ஆக்குகிறார்கள்!) இரண்டாவது சனிக்கிழமை கண்டிப்பாக பள்ளி விடுமுறை என்பதால் வெள்ளி சாயந்திரமே கிளம்பி விடுவோம். ஞாயிறு இரவுதான் வீடு திரும்பல்! இது வாராவாரம் நடக்கும் கூத்து! அந்த சமயங்களில் சன்னல் இருக்கைக்கு அண்ணன் தம்பிகளுடன் சிறு யுத்தமே நடக்கும். சில நேரங்களில் சன்னல் இருக்கைகள் ரத்தக்காவு குடுத்த பின் தான் கிடைக்கும். பெரிய கொடுமை என்னவெனில் அவ்வளவு சிரமப்பட்டு சன்னல் இருக்கை வாங்கி பேருந்து கிளம்பிய சில நிமிடங்ளில் தூங்கி விடுவோம்!
ஐந்தாம் வகுப்பிலிருந்து பள்ளிப்பேருந்து வசதி வீட்டில் மறுக்கப்பட்டு மிதிவண்டி வாங்கி குடுக்கப் படட்து. ஆனால் வெளியூர் பேருந்துகளில் செல்லும் போதெல்லாம் சன்னல் இருக்கை தகராறு தொடர்ந்து கொண்டு தானிருந்தன! ஒரு குறிப்பிட்ட வயதிற்கு பின் ஒபபந்தங்கள் போடப்படும். அதாவது போகும்போது பாதி தூரம் எனக்கு மீதி தூரம் உனக்கு என்று! அதன் பிறகு +1 முடிக்கும் வரை பள்ளிக்கு சைக்கிள் பயணம்தான். +2 சென்ற பிறகு மோட்டார்சைக்கிள் வாங்கிக் குடுத்தார்கள். (ஒரு பெரிய போராட்டததிற்கு பின்னர்!) சில மாதங்கள் அதில் சென்றது பெருமையாக இருந்ததென்றாலும் நகரப் பேருந்துகளில் வந்த உடன் படித்த மாணவர்கள் அதில் பயணம் செய்யும் பிற பள்ளி மாணவிகளைப் பற்றி பேசுவதைக் கேட்ட பொழுது " ஆகா குமரா மிக அருமையான அனுபவங்களை இழந்து கொண்டிருக்கிறாயடா" என இளமனது அடித்துக் கொண்டது! மறுபடி சிறு போராட்டத்திற்கு பின் புது வண்டியை வீட்டில் நிறுததி விட்டு தினம் நகரப் பேருந்து பிரயாணம்.
தினம் திருவிழாவாக கொண்டாடிய பேருந்து அனுபவங்கள் அவை! சரியாக சொல்வதென்றால் 1991-92 காலக்கட்டம். அண்ணா நகர் டெர்மிணல்சிலிருந்து கிருத்துவ மிஷன் மருத்துவமனை வரை. மதுரையின் பிரபல பெண்கள் காண்வென்டான புனித ஜோசப் பள்ளியின் பேருந்து நிறுத்தமும் எங்கள் பள்ளி பேருந்து நிறுத்தமும் ஒன்றாக இருந்தது சத்தியமாக எங்கள் தவறில்லை! தினம் தினம் தினம் தீபாவளி என்று பாடாத குறைதான். பெண்களிடம்எல்லை மீறியதில்லை ஆனால் அவரகள் ரசிக்கும் விதத்தில் சேட்டடைகள் கண்டிப்பாக செய்திருக்கிறோம்! மனதில் பட்டாம்பூச்சிகள் பறந்த பேருந்துக் காலங்கள் அவை! வீடு இருந்தது அண்ணா நகராக இருந்தாலும் பள்ளி முடிந்தபின் கே.கே நகர், தபால் தந்தி நகர், மகாத்மா காந்தி நகர் என்று தினமும் ஒவ்வொரு பெண் பிள்ளைகளை பாதுகாப்பாக வீட்டில் விட்டு வரவேண்டிய தலையாய கடமை எங்களுக்கு இருந்தது! எல்லாருடைய பெயர், பிறந்த தேதி சாதகங்கள், மனப்பாடமாய் மனதில் இருந்தன!! 1990கள் வரை 25 பைசாவில் இருந்த குறைந்தபட்ச பேருந்து கட்டணங்கள் இன்று 5 அல்லது 6 ரூபாய் ஆகி விட்டன! தனியார் நகரப் பேருந்து வசதி உள்ள ஊர்களி்ல் மட்டும் 3 ரூபாய் கட்டண வசதி உள்ளது!
அதன் பிறகு கல்லூரி காலம் மூன்று வருடங்கள் வேறு வழியில்லாமல் மோட்டார் சைக்கிளில் கடந்தது! படிப்பு முடிந்த பின் திருப்பூரில் வேலை மூன்று வருடங்கள் ரயில் பயணங்களிலும், மோட்டார் சைக்கிளிலும் கடந்தன. அதன் பிறகு 1997ல் மறுபடியும் மதுரையில் குடும்பத் தொழில். அப்பொழுதெல்லாம் வாரத்தில் நான்கு நாட்கள் வெளியூர் வசூலுக்கு அனுப்பி விடுவாா்கள். அதற்கு பெயர் லையணுக்கு செல்வதென்று சொல்வார்கள். பழங்காநத்தம், ஆரப்பாளையம், அண்ணா பஸ்நிலையம் என மூன்று பேருந்து நிலையஙகள் மதுரையில் அப்பொழுது. பெரும்பாலும் தினம் ஒரு பேருந்து நிலையத்தில் பேருந்து ஏற வேண்டியிருக்கும். அப்பொழுது காலையிலேயே மனதில் அழுத்தம் ஏறியிருக்கும் முதல் நாள் இரவே வீட்டில் பெரியவர்கள் சொல்லி விடுவார்கள் இவ்வளவு வசூல் ஆகியிருக்க வேண்டுமெனறும், இவ்வளவு ஆர்டர் பெற்றிருக்க வேண்டுமென்றும். போட்டி வியாபாரிகளும் சில நேரம் நம்முடன் பயணிப்பார்கள். சிரித்து பேசி டீ, காபி, வடை, சில நேரம் பிரியாணி கூட வாங்கி கொடுத்து நமது வாடிக்கையாளர்களைப் பற்றிய ரகசியங்கள், அவர்களுக்கு நாம் போடும் விலை போன்ற விசயங்களை நம் வாயிலிருந்து கறந்து விடுவார்கள் அண்ணாச்சிகள்! உளறிக் கொட்டிவிட்டு கடையில் பெரியவர்களிடம் வாங்கிக் கட்டிக் கொளவதுமுன்டு!
தொழில் அனுபவங்கள் எப்படி இருந்தாலும் பேருந்தில் வழக்கமாக வரும் கல்லூரிப் பெண்களைப் பார்த்த உடன் மனதுக்குள் வெள்ளை தேவதைகள் இறக்கை கட்டி பறப்பதை தவிர்க்க முடியாது. மதுரையிலிருந்து கிளம்பும் போது ஒவ்வொரு திசையில் பிரயாணிக்கும் போதும் ஒவ்வொரு கலரில் தேவதைகள் மனதில் நாட்டியமாடும். பின்னர் முக்கியமாக சிவகாசி வசூல் முடித்து ஸ்ரீவில்லிபத்தூருக்கு மாலையில் பேருந்து ஏறுவது, திருச்சி வசூல் முடித்து மாலையில் திண்டுக்கல் பேருந்து ஏறுவது, உடுமலை வசூல் முடித்து பொளளாச்சி, பொள்ளாச்சி முடித்து பாலக்காடு என எல்லாமே மாலையில் கல்லூரி விடும் நேரங்கள் தான்! அது ஒரு சேரனின் "ஆட்டோகிராஃப்" காலம் என்றுதான் சொல்ல வேண்டும்!
இன்றும் பேருந்தில் பிரயாணித்துக் கொண்டுதானிருக்கிறேன் ஆனால் பழைய அளவுக்கு சுவாரஸயங்கள் இல்லை. காரணம் பல! முதல் விசயம் குடும்பஸ்த்தனாகிப் போனது! பிறகு சாலையோரப் புளிய மரங்கள் அகற்றப்பட்டது! பிறகு அவசர மனிதர்கள். முனபெல்லாம் பேருந்தில் சுவாரசியமாக மக்கள் பேசுவார்கள். நாம் பேசும் கருத்து அவர்களுக்கு பிடிக்கவில்லை என்றால் மறுத்துப் பேசுவார்களேயன்றி கோபப்படமாட்டார்கள். இன்று பக்கத்து இருக்கை மனிதர்களிடம் பேசவே பயமாய் இருக்கிறது. இருக்கையை பகிர்ந்து கொள்ளவே மக்களுக்கு விருப்பமில்லை தற்பொழுது! உடம்பை விறைப்பாக வைத்துக் கொண்டு அமர்ந்து கொள்கிறார்கள். அவர்கள் இடத்திலும் சேர்த்து நாம் அமர்ந்து விடுவோமாம். நிறைய பேர் அருகில் இருப்பவரிடம் பேசுவதற்கு கவுரம் பாா்க்கிறார்கள். சிலர் இவர் பேசுவாரோ மாட்டாரோ என சந்தேக்த்தில் பேசாமல் இருந்து விடுகின்றனர். அதையும் மீறி பேசினால் சினிமா, விளையாட்டு, சாமி, சொந்த ஊர், நாட்டு நடப்பு என எதைப் பற்றி பேசினாலும் சன்டை வந்துவிடுகிறது.
பல நாட்களுக்கு பின்னர் சமீபத்தில் மதுரையிலிருந்து கமுதிக்கு பயணிக்கும் வாய்ப்பு கிட்டியது. மானாமதுரை மட்டும் வித்தியாசமாக புதுமையாக இருந்தது. அபிராமத்திலிருந்து கமுதி வரை பேருந்து பயணமும், பயணிகளும் பழைய மாதிரியே இருந்தனர். மகிழ்ச்சியாக இருந்தது. சாலையோர புளிய மரங்களை எண்ணுவதும், பறவைகளை வேடிக்கை பார்ப்பதும், குளம் குட்டைகளை பார்ப்பதும், காட்டு வேலை நடப்பதை பார்ப்பதும் தான் பேருந்து பிரயாணத்தின் சுவாரசியங்கள். தற்பொழுது பொட்டல் காடுகளில் நிறைந்து கிடக்கும் பாலிதீன் பைகளையும், சீமைக் கருவேலைகளும் தான் உள்ளன. முன்னர் எல்லாம் நாட்டுக் கருவேல மரங்கள் குடை போல் அழகாக காட்சி அளிக்கும். பிரயாணத்தின் போது நல்ல நிழல், குளிர்ந்த காற்று தரும். இப்போதுதான் இவைகளை எல்லாம் பார்க்க முடியவில்லையே! பிளாட் போட்டவர்களின் விளம்பரங்களும், பிளாட் போட்ட கல்லும்தான் உள்ளன! பிரயாணிகளைப் போலவே பஸ் ஊழியர்களும் அவசர கதியாகிப் போயினர். மரியாதையான பேச்சு மட்டுமல்ல, கணிவான பேச்சு கூட கிடையாது. பயணிகளை இலவசமாக பயணிப்பவர்கள் போலவே நடத்த ஆரம்பித்து விட்டனர்.
முன்னரெல்லாம் பேருந்துகளில் பெண்களுக்கு பாதுகாப்பும், மரியாதையும் இருந்தன. இப்பொழுதெல்லாம் பெண்களுக்கு பேருந்து பிரயாணம் என்பது சிம்ம சொப்பனமாகவே உள்ளது! இருப்பினும் இன்றளவும் பேருந்துகளையும், பிரயாணிகளையும், சாலைகளையும் ரசித்துக் கொண்டுதானிருக்கிறேன். முன்பு போல் பட்டாம் பூச்சிகள் பறப்பதில்லை, தேவதைகள் நடனமாடுவதில்லை, சிறு குழந்தைகளையும், பள்ளிச் சிறார்களின் குறும்புப் பேச்சுகளையும், கல்லூரி மாணவ, மாணவிகளின் இளமைப் பேச்சுகளையும் ரசித்துக் கொண்டுதானிருக்கிறேன். விற்பனைப் பிரதிநிதிகளின் புலம்பல்கள், கணவர்களின் பெறுமல்கள் என இப்பொழுதும் பேருந்து பிரயாணங்கள் எனக்கு சவராசியமாகத்தான் போய்க் கொண்டிருக்கி்ன்றன. கைபேசி உரையாடல்களை கேட்டுக் கொண்டு வந்தாலே கலகலப்பாக இருக்கத்தான் செய்யும்.
ஆனால் பேருந்து பயணங்கள் எப்பொழுதுமே எனக்கு இப்படி கலகலப்பாக இருந்ததில்லை! நான் பார்த்திருக்கும் பல கோர விபத்துக்கள் இன்று வரை என் மனதை விட்டு அகன்றதில்லை. இரண்டு முறை பர்சை பறி குடுத்திருக்கிறேன். பல முறை சன்டை போட்டிக்கிறேன். பெண்களிடம் கேலமாக நடந்து கொள்ளும் ஆண்களையும் பார்த்திருக்கிறேன், ஆண்களிடம் தவறாக நடக்கும் பெண்களையும் பார்த்திருக்கிறேன். வசூலுக்கு போகும்போது வழக்கமாக ஒரே பேருந்தில் ஏறக்கூடாதென்பது வீட்டு பெரியவர்கள் போட்ட முதல் சட்டம். மீறியதால் பண்த்தை பறி கொடுக்கவேண்டிய சூழலுக்கு ஆளானதும் உண்டு! பிறிதொரு சமயம் வயதான பெண்மணியிடம் தங்கச் சங்கிலியை பறித்து ஓட முயன்றவரை பிடித்ததால் தோளில் கத்தி வெட்டுப் பட்ட தழும்பும் உண்டு!
முன்னால் பிரதமர் இந்திராகாந்தி அவர்கள் சுடப்பட்டது தெரியாமல் விருதுநகரில் இருந்து பேருந்து ஏறி திருமங்கலம் கடந்து இறக்கி விடப்பட்டு ரயில் பாதையோடு மதுரைக்கு வீடு வரை நடந்தது ஒரு அனுபவம்! கமுதியில் கடைசி பேருந்தை தவற விட்டு பணப் பையுடன் மாட்டு வண்டியில் மானாமதுரை வரை பிரயாணம் செய்தது! பொள்ளாச்சி பேருந்து நிலையத்தில் தீபாவளி சமயத்தில் பேருந்து கிடைக்காமல் உறங்கியது! அதே போல் கண்ணனூரில் ஒரு முறை! மனிதனின் உண்மை முகத்தை பேருந்தில் அவன் தனியாக பிரயாணிக்கும் போது கண்டுவிடலாம் என்பது என் அபிப்பிராயம்! பலதரப்பட்ட தொழிலாளிகள், கூலி வேலைக்கு செல்லும் சிறுவர்கள், திருவிழாவிற்கு பலூன் விற்க செல்பவர், முறுக்கு விற்பவர், வடை விற்கும் மூதாட்டி என பலரின் கதையை கேட்கும் அனுபவமும் எனக்கு கிடைத்திருக்கின்றன!
சபலமில்லாத மனிதர்களே உலகில் இல்லை என்பதே பேருந்து பிரயாணங்களில் நான் கண்டது. சிலருக்கு பெண் சபலம், சிலருக்கு மண், சிலருக்கு பண சபலம், சிலருக்கு உணவில் சபலம்! தின் பண்டங்களை கூட வீட்டுக்கு தெரியாமல் வாங்கி அவசர அவசரமாக பேருந்தில் முழுங்குபவர்களையும் கண்ட பாக்கியம் உண்டு. பேருந்து பயணத்தின் மிகப் பெரிய இம்சை தூங்கி தோளில் விழுபவர்களும், குறட்டை விடுபவர்களும் தான். ஆனால் சொன்னால் நம்ப மாட்டீர்கள் தமிழகத்ததை போல் மூலை முடுக்குக்கெல்லாம் பேருந்து வசதி வேறு மாநிலங்களில் கிடையாது. வேறு மாநிலங்களில் போல் நமக்கு ரயில் வசதி கிடையாது. இனி அடிக்கடி பேருந்து பிரயாணங்களில் சந்திப்போம் மக்களே!!