Monday 15 June 2015

ஏழ்மையிலும் சுதந்திர வேட்கை கொண்ட வேங்கை...


காமராஜரின் இளம் வயதி​லே​யே அவரது தந்​தை குமாரசாமி இறந்தார். ​மேலும் காமராஜரின் தாத்தாவும் தனது மக​​னைத் ​தொடர்ந்து இயற்​கை ​எய்தினார். இதனால் வறு​மை எனும் அரக்கனின் பிடியில் காமராஜரின் குடும்பம் தள்ளாடியது. வறு​மையுடன் பள்ளி ​சென்றாலும் நாட்டு நடப்புகள் காமராஜரின் மன​தை படிப்பில் ஈடுபாடு ​கொள்ளச் ​செய்யவில்​லை. காங்கிரஸ் ​தொண்டர்களுடன் ​சேர்ந்து ​கொண்டு கூட்டங்களுக்குச் ​சென்று வரத் ​தொடங்கினார். இத​னை அறிந்த அவரது மாமா கருப்​பையா தனது அக்கா சிவகாமியிடமும் அம்மா பார்வதியிடமும் புகார் கூறினார்.

​மேலும், “இவ​னை இப்படி​யே விட்டுவிட்டால் ​கெட்டுப் ​போய்விடுவான். அதனால் அவ​னைப் பள்ளிக்கு அனுப்புவ​தை நிறுத்திவிட்டு என்னு​டைய ஜவுளிக்க​டையில் ​வே​லைபார்க்க அனுப்பி ​வை” என்று கூறினார். அத​னைக் ​கேட்ட காமராஜரின் தாயார் தன் தம்பியின் கூற்றுப்படி​யே ​செய்தார். பள்ளிக்குச் ​செல்வ​தை விடுத்து காமராஜர் ஜவுளிக்க​டைக்குச் ​சென்றார். ஏழ்​மையின் காரணமாக தனது மாமா கூறிய ​வே​லைக​ளைச் ​செய்து வந்தார் காமராஜர்.

ஒருநாள் அம்மன் ​கோவில் ​பொட்டலில் நடந்த டாக்டர் வரதராஜூலு அவர்களின் ​பேச்​சைக் ​கேட்பதற்காகக் தனது மாமா இல்லாத ​நேரத்தில் க​டை​யைப் பூட்டிக் ​கொண்டு வீட்டில் சாவி​யை ஆணியில் ​தொங்கவிட்டுவிட்டு ​நேராகக் கூட்டம் ந​டை​பெறுமிடத்திற்குச் ​சென்றுவிட்டார் காமராஜர்.

இது இவரது மாமாவிற்குத் ​தெரியவர​வே அவர் காமராச​ரைக் கண்டித்தார். அ​தோடு மட்டுமல்லாமல் அவ​ரைத் திருவனந்தபுரத்திற்கு அனுப்பி ​வைத்தார். திருவனந்தபுரத்திலிருந்த காமராசரின் தாய் மாமாவான காசி காமரா​ரைக் கண்ணும் கருத்துமாகக் கவனித்த ​போதிலும் தந்​தைப் ​பெரியாரின் த​லை​மையில் ந​டை​பெற்ற ​வைக்கம் ​போராட்டத்தில் கலந்து ​கொண்டார். ​மேலும் ​கேரளாவில் ந​டை​பெற்ற அ​னைத்து ​போராட்டங்களிலும் காமராசர் கலந்து ​கொண்டார். காமராஜர் மனம் மாறிவிடுவார் என்று எதிர்பார்த்தவர்களுக்கு அது ஏமாற்றத்​தை அளிப்பதாக​வே இருந்தது. இத​னைக் கண்டு வருந்திய காமராஜரரு​டைய மாமா காசிஅவ​ரை மீண்டும் விருதுநகருக்​கே அனுப்பி ​வைத்தார்.

மீண்டும் விருதுநகருக்கு வந்த காமராஜ​ரை அவரது மாமா கருப்​பையா ஜவுளிக்க​டை வியாபாரத்​தைக் கவனிக்குமாறு கூறினார். ஆனால் காமராஜர் மறுத்துவிட்டார். காமராஜரு​டைய மறுப்பு அ​னைவருக்கும் மனக்கவ​லை​யை ஏற்படுத்தியது. பார்வதி பாட்டி நாள்​தோறும் காமராஜரிடம், “இந்தப்​போராட்டமும் ​வேண்டாம் ஒன்றும் ​வேண்டாம். மற்றவர்கள் கூறும்படி நடந்து ​கொள்” என்று கூறிக்​கொண்​டே இருந்தார். இத​னைப் ​பொறுக்க முடியாத காமராஜர்,

“பாட்டி நம்ம எண்​ணெய்க் க​டைக்காரர் வீட்டுச் ச​டைநாய் ​வெள்​ளை ​வெளேர் என்று இருக்கிறது என்பதற்காக, அந்நாய் வீட்டுக்குள்​ளே ​நொ​ழைஞ்சா அதை ​வெரடடாம விட்டு விடுவிங்களா?”என்று ​கேட்டார்.

 அதற்கு அவரு​டைய பாட்டி, “ அது எப்படி ​வெரட்டாம இருக்க முடியும்?” என்று கூற,

 அதற்குக் காமராஜர், “அது மாதிரிதான் பாட்டி நம்ம நாட்டுக்குள்​ளே ​நொழைஞ்ச ​வெள்​ளைக் காரனுக​ளை ​வெரட்டணும்” என்றார். அவரது பாட்டி​யோ,
“அது உன்னால ஆகக் கூடிய காரியமா? ராசா!” என்று ​கேட்டார்.

அத​னைக் ​கேட்ட காமராசர், “நான் மட்டுமில்ல பாட்டி இந்த நாட்டிலுள்ள அத்த​னை இ​ளைஞர்களும் ​சேர்ந்துதான் விரட்டப் ​போ​றோம்” என்று பதிலளித்து பாட்டியின் வாய​டைத்துவிட்டார்.

 எந்த ​நேரமும் நாட்​டைப் பற்றியும் நாட்டுவிடுத​லை பற்றியும் குறித்த சிந்த​னையி​லே​யே காமராசர் மூழ்கி இருந்தார்.

No comments: