Thursday 4 June 2015

கல்வி என்ன சாதிக்கிறது சமுகத்தில்?!

சில நாட்களுக்கு முன் நடந்த சம்பவம்:
தஞ்சையை சேரந்தவர் அகிலாண்சேுவரி (32 வயது). இவர் அம்மாவட்டித்திலேயே ஓர் ஆரம்ப சுகாதார மையத்தில் மருத்துவராக பணிபுரிந்திருக்கிறார். இவரை மயிலாடுதுறை அரசு மருத்துவருக்கு திருமணம் செய்து குடுத்தனர் பெற்றோர். 50 சவரன் நகை, வெள்ளி பாத்திரங்கள், சொகுசு கார் வாங்க பணம் என அமர்க்களமாகவே கட்டிக் குடுக்கப் பட்டார். திருச்சி பெல் நிறுவணத்தில் வேலை பார்த்து ஓய்வு பெற்று நல்ல ஓய்வூதியம் பெற்று சொத்து சுகத்தோடு உள்ள தந்தைக்கு ஒரே மகள் வேறு!

புகுந்த வீடு அவர்கள் கனவு போல் இல்லை! பெண்ணின் சம்பள பணத்தை முழுக்க உருவிக் கொண்ட மாமனார் மாமியார் மற்றும் கணவர் இவரை மேற்கொண்டு தந்தையிடம் பணம் பெற்று வர நிரப்பந்தித்திருக்கின்றனர். மூன்று வயதில் மகள் வேறு. இவர்கள் தொல்லை தாங்காத பெண் மருத்துவர் அவர் பிறந்த வீட்டுக்கு குழந்தையுடன் சென்று விட்டார். மேற்படிப்புக்காக குழந்தையை பிறந்த வீட்டில் விட்டுவிட்டு சென்னையில் பெண்கள் விடுதியில் தங்கியிருந்தார். டாக்டர் கணவர் மீண்டும் அவரது பிறந்த வீட்டு்க்கு நேரில் சென்றும் இவருக்கு தொலைபேசியிலும் ஓயாமல் தொந்தரவு தந்ததால் தூக்கு மாட்டிக் கொண்டதாக கூறப்படுகிறது!

கல்வியின் லட்சனம்
பாதிப்பை ஏற்படுத்தியவர் பாதிக்கப் பட்டவர் இருவருமே மருத்துவர்கள். ஒருவருக்கு கல்வி பெண்களை மதிக்கவோ, மனித நேயமோ, புருச லட்சனமோ கற்றுத்தரவில்லை. அவரின் மனதில் சமூகமும் பெற்றோரும் வளர்த்த நஞ்சை அது அப்புறப் படுத்தவில்லை! ஒரு அரக்கனையே அவன் கற்ற கல்வி உருவாக்கியிருக்கிறது! இன்னொருவருக்கு அதே கல்வி தன்னம்பிக்கையை குடுக்கவில்லை. கல்வி, அரசு வேலை, சமூக அந்தஸ்த்து எதுவுமே அவரை காக்கவில்லை! சமுகத்தில் காலங்காலமாக நிலவி வரும் அவலங்களைக் கூட அவரது கல்வியின் துணையால் எதிர் கொள்ள முடியவில்லை. மருத்துவர் பட்டம் அவருக்கு தன்னம்பிக்கை குடுக்கவில்லை.

சொந்தக்காலில் நிற்க முடியும், சட்டரீதியாக பிரச்சினைகளை சந்திக்க முடியும் என்பது போன்ற நல்ல தீர்வுகளை குடுக்க முடியாத கல்வி அவரை காப்பாற்றவில்லை! இருவருக்குமே அவர்கள் கற்ற கல்வி வறட்டு கவுரவத்தையும், சமூகத்தில் போலி அந்தஸ்த்தையும், சமூகம் குறித்த அச்சத்தையுமே வளர்த்திருக்கிறது! 1200/1200 மதிப்பெண்கள் சமூகத்தில் எந்த மாற்றத்தையோ விழிப்புணர்வோ ஏற்படுத்தப் போவதில்லை என்ற நிதர்சனத்தையே இந்த சோகச் சம்பவம் புரிய வைக்கிறது!!!

No comments: