Wednesday 10 June 2015

போராட்டக் களமும் நிர்வாகமும்

உலக அளவில் மிகச்சிறந்த போராட்டக்காரர்களாகவும் ராசதந்திரிகளாகவும் இருந்தவர்கள் சிறந்த நிர்வாகிகளாக இருந்ததில்லை! இதற்கு நிறைய உதாரணங்கள் உண்டு...

மண்டேலாவால் சிறந்த நிர்வாகியாக ஜொலிக்க முடியவில்லை. அவர் கடைசி வரை சிறந்த போராட்ட வீரராகவே அடையாளப்படு்த்தப்பட்டார்.

இரண்டாம் உலகப்போரில் நேசநாடுகளின் வெற்றிக்கு வழிவகுத்த மிகச் சிறந்த ராசதந்திரியாக அடையாளப்படுத்தப்பட்ட இங்கிலாந்து பிரதமர் சர்ச்சில் போர் முடிந்த அடு்த்த தேர்தலில் தோற்கடிக்கப் பட்டார். அவரது உள்நாட்டு நிர்வாகம் அந்த லட்சனத்தில் இருந்தது!

இதை நன்கு அறிந்திருந்த சே குவேரா அவர்கள் காஸ்ட்ரோ தனக்கு சுதந்திர கியூபாவில் பதவி அளித்த போதும் திருப்திப் படாமல் போராடச் சென்றார்.

தமிழகத்தில் முன்னர் சிறந்த ராசதந்திரியாக அறியப்பட்ட ராசாசியால் சிறந்த நிர்வாகியாக முடியவில்லை! அதே போல் போராட்டங்களால் தலையெடுத்த  திமுக இன்னொரு சாட்சி. இப்போது ஆம் ஆத்மி!!

எனக்குத் தெரிந்து போராளியாகவும் இருந்து ராசதந்திரியாகவும் சிறந்த நிர்வாகியாகவும் ஒருங்கே உலகளவில் அறியப்பட்டவர்கள் இருவரே. இருவருமே பச்சைத் தமிழர்கள்.

ஒருவர் நான் பெரிதும் மதிக்கும் ஐயா பெருந்தலைவர் காமராசர் அவர்கள்! சுதந்திர போராட்ட வீரர், காங்கிரசின் அகில இந்திய தலைவர், தமிழக முதல்வர், கிங் மேக்கர் என் எல்லா துறைகளிலும் சாதித்தார். போராளி, சிறந்த நிர்வாகி, ராசதந்திரி என எல்லா பரமாணங்களிலுமே பிரகாசித்தார் பெருந்தலைவர். இதில் மிக முக்கியமான விசயம் இவை எல்லாவற்றிலும் நேர்மையாக இருந்தார் ஐயா.

இன்னொருவரும் நான் பெரிதும் மதிப்பவரே. அவர் தமிழீழத் தலைவர் பிரபாகரன் அவர்கள்.

No comments: